Serial Stories கடல் காற்று

கடல் காற்று-47

 47 

தனது கதையை தொடர்ந்து கொண்டிருந்தான் மலையரசன் .அந்த போட்டோக்களுக்கு நான் உபயோகப்படுத்திக் கொண்டவன் அவளது நண்பன் .இருவரும் ஒன்றாக படித்தவர்களாம் .இரண்டு முறை அவர்களை ஒன்றாக பார்த்ததும் அவனை இதற்கு நான் பயன்படுத்திக் கொண்டேன் .

அந்த போட்டோக்கள் தற்செயலாக எனக்கு கிடைத்ததாக கூறித்தான் என் நண்பனிடம் காட்டினேன். அவன் அலட்சியமாக அதனை தூக்கி கீழே போட்டான் .”என் மனைவியை எனக்கு தெரியும் .அவளை வேறொருவர் எனக்கு அறிமுகம் செய்ய வேண்டியதில்லை .அப்படி ஒருவன் முயல்வானெனில் அவன் முழு முட்டாள் ” என்றான் .

“அந்த வார்த்தைகளில் நான் செத்துவிட்டேன் .அவர்கள் இருவருக்குமிடையே இருந்த காதல் எவ்வளவு ஆழமானதாக இருந்தால் இந்த அளவு ஒரு புரிந்து கொள்ளும் தன்மை இவனுக்கு வந்திருக்கும் .எனக்கே என்னை நினைத்து அருவெறுப்பாக இருந்தது. அத்தோடு அவர்கள் வாழ்க்கையிலிருந்து விலகிவிட நினைத்தேன். அப்போது எனக்கு ராணுவத்திலிருந்து வந்த வேலையை ஏற்றுக் கொண்டு அங்கே போய்விட்டேன் . “

அண்ணன் தான் சொன்னதால்தான் ராணுவத்திற்கு புறப்பட்டு சென்றான் என்று எண்ணியிருந்தேனே ..தன்னை தானே கேலி செய்தபடி அண்ணனை கவனித்தாள் .

” நான் அங்கு போய் சேர்ந்த சில மாதங்களில் ,என் நண்பனையும் அங்கே சந்தித்தேன் .எங்கள் இருவரின் லட்சியமும் ராணுவவீரனாவதுதான் .அதுதான் எங்களுக்கிடையே நட்பினை தந்திருந்த்து .ஆனால் ஆருயிர் மனைவியை பிரிந்து வருவதென்றால் …காரணம் கேட்டபோது , இங்கே கொஞ்சம் செட்டிலாகவும் சில மாதங்களில் மனைவியை தன்னுடன் அழைத்து வைத்துக் கொள்ள போவதாகவும் , அங்கிருக்கும் இரு பக்க உறவினர்கள் யார் முகத்திலும் விழிக்க விரும்பாமல் ஒதுங்கி வாழ நினைப்பதால் ,கிடைத்த நல்ல வாய்ப்பை இழக்க விரும்பாமல் வந்த்தாக கூறினான் .”

” அங்கே உன் மனைவியின் பாதுகாப்பு …? ” பதற்றத்தோடு கேட்டேன் .

” ஏனெனில் இவர்களின் காதல் திருமணத்தில் இரு வீட்டாருமே கடுமையான கோபத்தில் இருந்தனர் .அதிலும் என் நண்பன் வீட்டார் அவன் மனைவியை கொன்றுவிடும்  அளவு ஆத்திரத்துடன் இருந்தனர் .அவளது வீட்டினரோ அவளை இழுத்து போய் அவர்கள் ஜாதியில் வேறொரு திருமணம் முடிக்கும் வேகத்தில் இருந்தனர் .எனவேதான் நான் அப்படி கேட்டேன் .”

மெல்ல சிரித்தபடி கூறினான் அவன் ” அங்கே அவள் பத்திரமாக இருக்கிறாளடா .நீதான் அவளுக்கு பலமான சுவர் அமைத்துவிட்டுதானே வந்தாய் ” என்றான் .

புரியாமல் பார்த்தேன் .” நீ செட் பண்ணி கொடுத்த போட்டோக்கள்தானடா .அந்த நணபரிடம்தான் அவளை ஒப்படைத்த விட்டு வந்திருக்கிறேன் .அவர் மிக மக நல்லவர் .என் மனைவிக்கு மட்டுமல்ல எனக்கும் நல்ல நண்பர் .நீ ஒருவேளை வேறு யாரையாவது அந்த போட்டோக்களில் காட்டியிருந்தால் நான் நம்பியிருப்பேன் . ஆனால் அவரை காட்டியபோது ம்ஹூம் …” இதனை சொல்லும் போது அவன் முகத்தில் சிறு சுளிப்பு இல்லை .காழ்ப்பு இல்லை .சாதரணமாக இந்த பூ அழகாயிருக்கிறது என்பது போல் இயல்பாக சொன்னான்.

நான் உடைந்து போய் அவன் காலடியில் சரிந்து விட்டேன் .அதன்பிறகு அவன் எவ்வளவுதான் என்னை நெருங்கி வந்தாலும் குற்றவுணர்ச்சியுடன் அவனிடமிருந்து விலகிப் போனேன் .அப்போது எதிரி நாட்டு படைகள் நம் நாட்டிற்குள் ஊடுறுவி இருப்பதாக தகவல் வர அதனை கண்டுபிடிக்கும் பணிக்கு அனுப்பிய குழுவில் நாங்கள் இருவரும் இருந்தோம் .

காட்டிற்குள் போகும் போது திடீரென ஓரிடத்தில் ஆணியடித்த மாதிரி நின்ற என் நண்பன் என்னை அழைத்தான் .”டேய் ஒருவேளை எனக்கு எதுவும் ஆகிவிட்டால் என் மனைவியையும் , குழந்தையையும் நீ பார்த்துக் கொள்வாயா ..? என்றான் .அவளை நீ திருமணம் செய்து கொள்வாயா ..? என் குழந்தைக்கு தந்தையாக இருப்பாயா ..? என் மனைவி நல்லவள் யார் யாரோ எப்படி பேசினாலும் எனக்கும் ,உனக்கும் , அந்த நண்பருக்கும்  மட்டும்தான் தெரியும் அவளை பற்றி ..அதனால் நீதான் அவளுக்கு வாழ்வளிக்க வேண டும் ”
என்றான் .

” உளறாதேடா …இதையெல்லாம் நீ எனக்கு சொல்ல வேண்டாம் .உன் மனைவிக்கு களங்கம் ஏற்படுத்தியவனே நான்தான் .அவளை பற்றி நீ எனக்கு சொல்ல வேண்டியதில்லை .இப்போது எதற்கு இந்த பேச்சு .நட ” என்றேன் .

நகராமல் நின்று ” இல்லை எனக்கு இன்று இப்படி நினைக்க தோன்றுகிறது .நீ எனக்கு சத்தியம் செய்து கொடு. எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் என் குடும்பத்தை காப்பேனென்று ” அடம் பிடித்தான் .




வேறு வழியின்றி அவன் கையிலடித்து சத்தியம் செய்தேன் .அப்போது அங்கே தள்ளி ஏதோ சலசலப்பு கேட்க போய் என்னவென று பாரு என என்னை தள்ளினான். நான் சற்று தொலைவு போய் சத்தத்திற்கான காரணத்தை ஆராய்ந்து கொண்டிருக்கும் போது ” மலையரசா …எனக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மறந்துவிடாதே ” என்றபடி பாதங்களை எடுத்து வைத்து நடந்த போது , காதை பிளக்கும் வெடி சத்தத்தோடு உயரே வானில் தூக்கி எறியப்பட்டான் .

அங்கே நிலத்தினடியில் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் மிதித்திருந்திருக்கிறான் .காலை எடுத்ததும் தனக்கு மரணம் என்பதனை உணர்ந்த பின்புதான் என்னை அழைத்து இவ்வளவும் பேசியிருக்கிறான் .சிதைந்து கிடந்த அவனது உடலுக்கு இணையாக என் மனமும் சிதைந்து கூறுகளானது .

நான் எப்படி அவன் மனைவி முகத்தில் விழிப்பேன் ..? இந்த விபரங்களை எப்படி என்னால் அவளுக்கு விளக்க முடியும் ..? குற்ற உணர்வில் கூனிக் குறுகி இந்தப்பக்கம் வரவே கூசிக்கொண்டு, அங்கேயே இருந்தேன் .அவள் அவளது நண்பனுடன் சென்னையை விட்டு அவரது ஊருக்கு சென்றுவிட்டதை அறிந்தேன் .ஆனால் எப்படி அவளை அணுகுவது என தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன் .அவள் நடத்தை மேல் களங்கம் ஏற்படுத்தியவன் நானென்று அவளுக்கு தெரியாதுதான் ்ஆனால் எனக்கு மனசாட்சி இருக்கிறதல்லவா ..?

அப்போதுதான்  பழவேற்காட்டில் உனக்கு வேலை வந்திருப்பதாக எனக்கு போன் செய்தாய் .உன் மூலமாக ஊருக்குள் வரலாமா ..என யோசிக்க ஆரம்பித்தேன் .ஒரு லாங் லீவிற்கு அனுமதி கேட்டுக் கொண்டிருந்தேன் “

ஒரு மாதிரி மரத்த மனநிலையில் தன் அண்ணனின் மறுபக்கத்தை கேட்டுக் கொண்டிருந்த சமுத்ரா இப்போது திடுக்கிட்டாள் .இதில் பழவேற்காடு ஏன் வருகிறது ..? அவள் ஏன் வருகிறாள் …? ஏனோ மனம் கலங்க , எதையோ அவள் உள்ளம் எதிர்பார்க்க தொடங்கியது .

மெல்ல நிமிர்ந்து அண்ணனின் கண்களுக்குள் கூர்ந்தவள் ” சாவித்திரி ..????” எனக் கேட்டாள் .

ஒப்புதலாய் தலையசைத்தவன் ” கடவுள் மிகவும் கறாரானவர் சம்மும்மா .ஏதோ வெறியில் என் நண்பனின் குடும்பத்தை அழிக்க நான் செய்த ஈனச்செயலை அவர் மன்னிக்க தயாரில்லை .அதனால்தான் நான் பின்னிய வலைக்குள்ளே என்னையே நுழைய வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார் .ஆனால் தயக்கத்துடன் அதனை நான் தள்ளிப் போட அவர் அடுத்த ஆணியை நேரடியாக என் உச்சந்தலையில் இறக்கினார் .உன் மூலமாக …”

” நானா …? நான் …என்ன ..? ” சமுத்ரா தடுமாறினாள் .




” என்றைக்கு யோகேஷ்வரன் எனக்கு போன் செய்து உன்னை மணமுடிக்க விரும்புவதாக பேசினாரோ ..அன்றே நான் செய்த பாவம் என்னை விடாமல் துரத்துவதை அறிந்து கொண்டேன் . யோகேஷ்வரனின் நல்ல குணத்தினை அறிந்தவர் என்னை விட வேறு யாரும் இருக்க முடியுமா ..? சந்தோசமாக திருமணத்திற்கு சம்மதித்தேன் .”

மாப்பிள்ளையையும் , சாவித்திரியையும் …எனக்கு தெரியும் ..? ஆனால் ஊருக்கு ..உனக்கு …அவர்கள் உறவு எவ்வளவு மோசமாக சொல்லப்பட்டிருக்கிறது.மாப்பிள்ளை உன்னிடம் நிச்சயமாக சாவித்திரியின் வாழ்வை சொல்லியிருக்க மாட்டார் .அது ஒரு பெண்ணின் வாழ்வை பாதிக்குமென நினைப்பார் . இந்த நிலைமை  உன் வாழ்வை பாதிக்குமென எனக்கு நன்கு தெரியும் .

அதனால் என் தயக்கங்களை தள்ளி வைத்துவிட்டு சாவித்திரியை எதிர் கொள்ள தயாராகி விட டேன் .நீ எனக்கு போன் செய்த பொழுது எனக்கு லீவ் சாங்சன் ஆகிவிட்டது .ஒரே வாரத்தில் கிளம்பி வந்துவிட்டேன் .தனது கதையை குற்றவுணர்வும் ,தயக்கமுமாக சொல்லி முடித்தான் மலையரசன் .

சொல்ல முடியாத உணர்ச்சிகள் தாக்க அசையாமல் அமர்ந்திருந்தாள் சமுத்ரா .அண்ணனை வெறுப்பாளா ..? கணவனை புகழ்வாளா ..?சாவித்திரிக்கு பரிதாப்படுவாளா ..? தன்னையே நோவாளா ..?்புரியாமல் அமர்ந்து விட்டாள் .

அவளருகில் வந்து அவள் தலையை வருடிய மலையரசன் ” நான் இப்போது சாவித்திரியைத்தான் போய் பார்த்து விட்டு வருகிறேன் சம்மு ” என்றான் .

” அண்ணா …? ” எச்சரிக்கையாய் அவனைப் பார்த்தாள் .

” அவள் கணவன் என்னிடம் வாங்கிய சத்தியத்தை பற றி மட்டுமே அவளிடம் சொல்லியிருக்கிறேன் .அவள் என்னை திருமணம் செய்ய மிகவும் மறுத்தாள் . இதனால் அவளது நண்பர் வாழ்வு பாழாகிவிடாதா ..? என உங்கள் வாழ்வை சுட்டிக் காட்டினேன் .அவளுக்கும் , குழந்தைக்கும் பாதுகாவலனாக மட்டுமே இருப்பேன் என உறுதி கொடுத்தேன் . இவ்வளவிற்கு பிறகும் அவள் மனம் மாறவில்லை .எல்லா விசயங்களையும் நன்கு யோசித்துவிட்டு சம்மதமெனில் இங்கே உங்கள் வீட்டிற்கு பின்னால் யாருக்கும் தெரியாமல் குழந்தையுடன் அதோ அந்த பின்வாசலருகே வந்து விடுமாறு சொல்லிவிட்டு வந்தேன் .இதோ ..காத்திருக்கிறேன் …”

பால்கனியில் வந்து நின்று கண்ணகற்றாமல் அந்த வாசலை பார்த்தபடி நிற்கும் அண்ணனை பார்த்து பெருமூச்சு விட்ட சமுத்ரா , சாவித்திரி வந்து விட வேண்டுமென்ற வேண்டுதலுடன் தானும் காத்திருக்க துவங்கினாள் .

மிகப்பெரிய கலவரம் ஒன்றின் ஆரம்பம் அந்த ஊரின் எல்லைக்குள் நுழைந்த்து .பெரிய ..பெரிய படகுகளில் ஊரினுள் நுழைந்த கலவரக்காரர்கள் குவித்து வைக்கப்படிடிருந்த போலீசையும் தாண்டி தங்களது வெறித்தனத்தை ஊர் மீதும் , மக்கள் மீதும் காட்டத் துவங்கினர் .

எங்கே பார்த்தாலும் கூச்சலும் , குழப்பமுமாக அந்த ஊர் பற்றி எரிய துவங்கியது .




What’s your Reaction?
+1
19
+1
9
+1
0
+1
0
+1
1
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!