Serial Stories யுகம் யுகமாய்..! 

யுகம் யுகமாய்..!-15 (நிறைவு)

15

கிரகணப் போர்வையில் நிலவு ஒளிந்து முகம் காட்ட மேகமலை மௌனமலையாய் காலத்தின் சாட்சியாய் நின்று கொண்டிருந்தது. 

மலையுச்சியில் நிழலாய் உருவங்கள். அட! யாரது இக்கிரகண வேளையில்? பூபாலன் குழலியோடு அந்தரங்கமாய் உரையாடுகிறானோ? குரூர விழிகளிரண்டு மின்னி மறைந்தன. 

“அரசே! அவசரம்! அவசியம் தாங்கள் இவ்விடத்தை விட்டு அகல வேண்டும். போர் மேகம் மலையாய்ச் சூழ்ந்து விட்டது! ராணியாரை நான் பத்திரமாகக் கரை சேர்த்து விடுகிறேன்!”

பன்னகப் பிடாதி நாழிகை நேரத்தில் நகர்த்தினான் காய்களை.

“என் ஆருயிர் நண்பா! என் உயிர் பத்திரம். அது அதி உன்னதம்!”  நம்பிக்கை பொய்க்கப் போவதறியாது நகர்ந்தான் பூபாலன்.

“ப்ருத்வி! டோண்ட் கோ! இவன்.. இந்த அங்கத் என்னைக் கொன்று விடுவான்!”

“ஹேய் வர்ஷ்! ஹி இஸ் அவர் ஃப்ரெண்ட். “

“நம்பாதே ப்ருத்வி. இவன் அங்கத் இல்லை. பூபாலனும், சோணைக் குழலியுமான நம்மை இந்தப் பிறப்பிலும் சேர விடாது செய்யப் பிறப்பெடுத்து வந்திருக்கும் பன்னகப் பிடாதி இவன்.

” வர்ஷா!”

“இவன் தான் யௌவன காந்தியைக் கொன்றான்!”

“வர்ஷா!”

“இவன் தான் என்னை.. ஐயோ! கன்னங்கரிய நாகம் படமெடுத்துச் சீறுகிறதே!”

“என்னை விட்டு விடு பன்னகா! உனக்கு உயிர்பிச்சை தருகிறேன்!” ஆக்ரோஷமாய்க் கூக்குரலிட்டாள் சோணைக்குழலி. 

டாக்டர் லைலா அன்சாரி கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்தார். சுற்றிலும் வந்தனா, ராஜசேகர், டெய்ஸி, திருமுருக பாண்டியன் மற்றும் ப்ருத்வி.

“இல்லையே. அவன் என்னை உயிரோடு விட வில்லையே!”

வர்ஷா முணங்கினாள்.

“காத்திருந்தவன் என்னை விட்டு என் மகளை விட்டு காதல் சொல்லப் போயும் போயும் உன்னிடம் வந்து விட்டார் எங்கள் இளவரசர். நானும் உன்னை எப்படி யெல்லாமோ தடுத்துப் பார்த்தேன். நீயோ கோலமிட்டுக் கொண்டே இருந்தாய். உன்னை விட உன் ராஜ குருவுக்குத் தெரியும் என் தந்திரம் பற்றி. கிரகணம் வரை வெளிச் செல்லாதே என அறிவுறுத்த வில்லையா அவர்? என் மகளின் வாழ்வைக் குலைக்க வந்த சதிகாரியே! இன்றுடன் உன் வாழ்க்கை அஸ்தமித்தது. இதோ உன்னைத் தன் இரையாக்கப் போகும் ராஜ நாகம். கிரகணம் அங்கல்ல. உனக்குத் தான் சோணைக் குழலி! உனக்குத் தான்!”

வர்ஷா பன்னகப் பிடாதியாய் குரலெடுத்துக் கத்தினாள்.

பின் குழலியாய் மாறிச் சபதமிட்டாள்.

“கிரகணப் போர்வையில் சர்ப்பத்தால் சதி புரிந்து சங்கமத்தைக் கலைத்தவனே! இதே கிரகணப் போர்வையில் உன்னை அழித்து எங்கள் காதலைக் காப்பாற்றிக் கொள்ளப் பிறப்பெடுப்போம். இது சத்தியம்!” 

தீண்டிய நாகத்தின் விடம் தலையேறும் முன் நிலமதிர சத்தியம் செய்தாள் சோணைக் குழலி.

“நானும் உன்னைத் தடுக்கவென்றே பிறப்பெடுப்பேன்! இதுவும் சத்தியம்!” பன்னகப் பிடாதியின் குரல் கிரகண இருட்டைக் கிழித்துக் கூறு போட்டது.

“ப்ருத்வி! இதே செட்டப் இன்றிரவு இந்த மலை உச்சியில் உன்னால் செய்ய முடியுமா? வர்ஷாவை மீட்டுக் கொண்டு வருவது உன் கையில் தான் இருக்கிறது.”

“யெஸ் டாக்டர்! அங்கத் அங்கு வரணுமா?”

“யெஸ். அவன் தானே கதையின் வில்லனே!”

“ஆனால் அவனை யவனிகா ஹீரோவாகப் பார்க்கிறாளே டாக்டர்?”

“ஸோ வாட்? இங்கு ஒன்றை புரிந்து கொள்ளணும். வர்ஷா தான் சோணைக் குழலி. ப்ருத்வியாகிய நீ பூபாலன். டெய்ஸி மே பீ.. யௌவன காந்தி. இந்த அங்கத் தான் பன்னகப் பிடாதி. அந்த குரு…?”

“நாடி வந்த நன்னாளில் 

நலம் பயக்கும் நற்றோலை

ராச னிவன் குணமலையில்

ராணி சோணைக் குழலியம்மை

இணை விட்டான் இடும்பையதில்

இவன் சூழ்ந்த கிரகணத்தில்

அகம் தொட்டாள் தோழியவள்

அன்ற லர்ந்த காந்தியவள்

குலம் களைந்த பன்னகத்தான்

கூடி டுவானிப் பிறப்புதனில்

இனம் கண்டு விரட்டிவிட்டால்

இப்பி றப்பில் சேர்வீரே!

உரைத்த குரு உளவறிந்து

உரைத்தார் ஆதி ஓலைதனில்

மறைந்த பொருள் மறைபொருளாய்

மாறி மேகமலை சேர்ந்ததுவே!

திருமுருகப் பாண்டியன் தன் வேட்டியில் மடித்து வைத்திருந்த நாடியை எடுத்துப் படித்தார். 




“என்றோ கிடைத்து விட்டது என் பேரன் ப்ருத்வியின் நாடி. நடந்த நிகழ்வறிந்து நடக்கப் போவதற்கு நிழலாய்க் காத்திருந்தேன் முற்பிறவியில் ராஜகுருவாய் ஓலையில் எச்சரித்து விட்டவன் இப்பிறவியில் இதோ அருகிருந்தே உன்னைக் காப்பாற்ற வந்திருக்கேன் ப்ருத்வி!”

“தாத்தூ!” ப்ருத்வி தாத்தாவை இறுக்கக் கட்டிக் கொண்டான்.

“ஆக.. குரு இவர் தான்! இன்று என்ன நாள் மிஸ்டர் திருமுருக பாண்டியன்?”

“அதே சந்திர கிரகணம் டாக்டர்!”

“தென் கோ அஹெட்! டெய்ஸி! நீ தான் அங்கத்தை அங்கு கூட்டி வர வேண்டும். இட்ஸ் மை ரெக்வெஸ்ட்!”

நானா? நானா வர்ஷாவின் முற்பிறவித் தோழி? எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?”

அன்றலர்ந்த காந்தி என்றால் மலர் என்றல்லவா பொருள்? டெய்ஸி என்பதும் ஒரு பூவின் பெயர்தானே?

“அட….ஆமாம்! நீங்கள் சொல்வதைப் பார்த்தால் போன பிறவியில் நான் வர்ஷாவை  காப்பாற்றாமல் விட்டுட்டேன் போல. இப்போ அதே தப்பைத் திரும்பச் செய்ய மாட்டேன். அவளைக் கொன்ன அந்தப் பன்னகப் பிடாதியை..”

“ரிலாக்ஸ்! இவன் அங்கத்!”

“இருந்தாலும் அவன் தானே மறுபிறப்பெடுத்து..”

“அவனுள் இருக்கும் அரக்க குணம் மட்டும் தான் அந்த பன்னகப் பிடாதி. அது அழிந்தாலே அங்கத் சாதாரணமானவன் தான்!” டாக்டர் எடுத்துரைத்தார்.

மலை உச்சிக்குச் சற்று அடிப்பகுதியில் வர்ஷாவும் ப்ருத்வியும்  மெய்மறந்து அணைப்பில் கட்டுண்டு இருக்க  மேகத்தை மறைத்த நிலவு எட்டிப் பார்த்து வெட்கத்துடன் தன் முகத்தை மறைத்து மறைத்து விளையாடியது.. கிரகண விடம் சற்று உயரத்தில் டெய்ஸியுடன் வந்து கொண்டிருந்தது.

“ஹேய் டெய்ஸி! என்ன சாலமனை விட்டுட்டு என்னைக் கூட்டி வந்திருக்க? எனி ப்ளான்?”

“நத்திங் அங்கத்! யவனிகா வாண்ட்ஸ் டூ டாக் வித் யூ! ஐ திங் ஷி இஸ் வெயிட்டிங் ஃபார் யூ!” கூட்டி வந்து விட்டவள் நகர்ந்து விட்டாள்.

“யவனிகாவா? ஓ.. தட் புவர் ஃபெல்லோ. என்னைப் போய் ஹீரோவா நினைச்சிருக்கா. நான் வர்ஷாவின் வில்லனாச்சே. ஹோ! அது..அது.. யவனிகா இல்லை. வர்ஷாவா? கூட இறுக்கமான அணைப்பில் ப்ருத்வி.. இவனா? அப்போ காத்திருக்கும் நான் பிராந்தா?”

ஆவேசத்துடன் பெரிய பாறாங்கல்லைப் பிரட்டியவன்  அவர்கள் மேல் உருட்டும் நாழிகையில் தான் எங்கிருந்தோ ஊர்ந்து வந்தது அந்த கன்னங்கரிய நாகம்.

“ஆ! கோ..ப்..ரா!” தன் மேல் ஏறிய நாகத்தை ஒரு உதறு உதறியவன் பாறாங்கல் பிறழ அவனும் பிறழ்ந்து உச்சியில் இருந்து விழுந்தான்.

“அங்கத் இப்போ எப்படி இருக்கான் டாக்டர்?”

“நத்திங் டூ வொர்ரி யவனிகா. மேலிருந்து விழுந்ததில் மூளையில் நினைவாற்றலுக்குரிய சில செல்கள் மட்டும் மரணித்து விட்டன. அது மீள்வது கடினம். அவனுக்கு இப்போ தேவை அன்பும் அனுசரணையும் தான்.!” டாக்டர் கூற

“அப்போ என்னைத் தெரியாதா அவருக்கு?”

“உன்னைத் தெரியாதாவா? இங்கே வா! உன் காதை அவன் வாயருகே வைத்துக் கேட்டுப் பார். என்னவோ புலம்புகிறான் பார்!” 




“யவனிகா மை லவ்!” என்றான் அங்கத்.

“டாக்டர் வர்ஷாவுக்கு?”

“டோண்ட் வொர்ரி மிஸஸ் வந்தனா அண்ட் ராஜசேகர். பாறாங்கல் விழுந்த அதிர்ச்சியில் வர்ஷா ப்ருத்வி இருவருமே மயங்கி விட்டனர். இத்தனை நாள் கவுன்சிலிங்கில் அவர்களது முன் ஜென்ம வாசனையை அகற்றி விட்டேன். இனி இவர்கள் வர்ஷாவும், ப்ருத்வியுமே! கல்யாணத்துக்கு எனக்கு இன்விடேஷன் உண்டு தானே!”

தாத்தா பெருமகிழ்வுடன் அவர் கையைப் பற்றிக் கொண்டார்.

“நல்லவேளை உயிர்க்கணக்கு தப்பியது! சோணைக்குழலி போல என் பேரனின் மனைவி வர்ஷாவும் போய் விடுவாளோ என்று பயந்தேன்!” என்றவரின் அதீத சந்தோஷம் அவருக்கே வினையாய் முடிந்தது.

“ஹக்!”

“ஸாரி ப்ருத்வி. யுவர் க்ராண்ட்பா இஸ் நோ மோர்! கார்டியாக் அரெஸ்ட்!”

யுகத்துக்கான வேள்விச் சமித்தாய் தன்னை ஒப்புக் கொடுத்த நாடி ஜோதிடர் திருமுருக பாண்டியன் அங்கு தெய்வமாய்க் காத்து நிற்க மேகமலையில் சோகக் காற்று சுழலென வீசியது.

“ப்ருத்வி! சியர் அப்! தாத்தா எங்கயும் போகலை. நமக்குள் தான் இருக்கார்!” வர்ஷா ஆதரவுடன் உரைத்தாள்.

காலங்கள் ஓடின. யுகம் யுகமாய் ஓடிவந்து பாதம் நனைத்த காதல் அலை தன் இணையுடன் சேரும் அந்நிகழ்வில்  இன்னும் பூரிப்புடன் டெய்ஸி -சாலமன் , யவனிகா – அங்கத் இரு இணைகள். மங்கல மேளம் கொட்ட வர்ஷாவின் சங்குக் கழுத்தில் திருமாங்கல்யம் பூட்டினான் ப்ருத்வி.

ஆ! டாக்டர் வந்து விட்டார்!

“வாருங்கள் வைத்தியரே! தங்கள் வரவும் யுகம்யுகமாய்த் தொடரட்டும்!”

வர்ஷாவும் ப்ருத்வியும் குறும்புடன் கூறிக் கைகுவித்தனர்.

முற்றும்.




What’s your Reaction?
+1
8
+1
11
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!