Serial Stories நீ காற்று நான் மரம்

நீ காற்று நான் மரம்-30

30

‘முரளிக்கு ஆபத்து’  என தாராவின் குரல் கேட்டவுடன் மோகன் முதலில் உணர்ச்சி வசப்பட்டான்..

கொஞ்சம் தெளிவு பெற்று, “என்ன ஆச்சு??, எங்கே இருக்கான்??எப்படி இருக்கான்..?” என கேட்டான்.

எல்லோரும் இவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“தாரா ஏதாவது விளையாட ஆரம்பித்து விட்டாளோ…” என வீணா கவலைப் பட ஆரம்பித்தாள்.

“துரோணருக்கு பிள்ளைப் பாசத்தை கிருஷ்ணர் உபயோகித்தது போல மோகனின் தம்பிப் பாசத்தை தாரா பயன் படுத்துகிறாளோ…” என சந்தேகிக்க ஆரம்பித்தாள்.

”  முரளி வேலூர் மருத்துவமனையில் இருக்கிறானாம்..நான் முதலில் போகிறேன்..நீங்க பின்னால் வாங்க…”என வண்டியை கிளப்பிய மோகனை,

ரகோத்தமன்நிறுத்தி, “நானும் வருகிறேன்” என அவன் பைக்கின் பின் புறம் மோகனை உட்கார வைத்து ஒட்டிப் போகிறார்.

” நாங்க போய் தகவல் சொல்றோம்..”

“நீ அப்புறம் இவங்களை அழைத்து கொண்டு நம் காரில் வா”

வீணாவிடம் சொல்லி விட்டு ரகோத்தமன் செல்கிறார்.

மருத்துவ மனையில் வெளியே இப்போது தாரா காத்திருக்கிறாள்.

” பயப்படாதே மோகன்…”

“முரளி திருவலம் பாலத்தில் டைவெர்ஷன் பலகையை பார்க்காமல் இடித்து பாலத்தின் மேலிருந்து தூக்கி எறியப்பட்டிருக்கிறான்..”

“நானும் அப்பாவும் திரும்ப வந்து கொண்டிருக்கும் சில நிமிடங்களுக்கு முன்னர் தான் இது நடந்திருக்கிறது..”

“கூட்டத்தை பார்த்து விட்டு கீழே பார்த்தால் நம்ம முரளி.”

“உடனே டிரைவரும் நானும் இறங்கி தூக்கி வர அதற்குள் அப்பா 108க்கு போன் பண்ணி இருக்கிறார்.”

“முரளி விழுந்த இடத்தில் நிறைய மூட்டைகள் சிதறிக் கிடந்தன…”

“அதனால் பெரிய அளவில் காயம் இல்லைனு நினைக்கிறேன்.

கைலாஷ் , மது , ரசிகா யாரும் போனை எடுக்கவில்லை.அதனால் தான் உனக்கே போன் போட்டேன்..உன்னை டிஸ்டர்ப் பண்ண கூடாது என முதலில் உனக்கு கால் பண்ணலை..”

இதற்குள் வீணா தகவல் கொடுக்க மது , ரசிகா, கைலாஷ் முதலானோர் வந்து சேர்ந்து விட்டனர் .

தாரா வின் இந்த செயலை நினத்தும் , முரளியின் நிலைமையையும் கேட்டதில் மோகனின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வந்து கொண்டிருந்தது.

டாக்டர் ஒருவர் வந்த போது மோகனை தாரா அறிமுகப்படுத்த,

“ஓ..மோகனின் தம்பியா முரளி….மோகன் சார்..நீங்க வேலூரின் பெருமை சார்…”என ஆரம்பிக்க,

” சார் …என் தம்பி எப்படி இருக்கான்…சொல்லுங்க ” என இடை மறித்தான்.

மோகனை தனியே கூட்டிப் போகிறார்..




“இப்போது மயக்க மருந்து கொடுத்திருக்கிறோம்,

வலி தெரியாமல் இருக்க..”

“அதிக காயங்கள் தெரியவில்லை…”

“எக்ஸ் ரே ஸ்கேன் எல்லாம் எடுத்து பார்த்து முடிவு செய்யலாம்.”

“பேஷண்ட் விழுந்த இடத்தில் சில மூட்டைகளில் விழுந்ததால் அவை உடல் காயம் பெரியதாக இல்லை..””ஆனால்…..” “ஆம்புலன்ஸ் டிரைவர் அந்த முட்டைகளில் மருத்துவ கழிவு இருந்திருக்கலாம்” என்றார்.

அரசுக்கு தகவல் கூறி இருக்கிறோம்…அவர்கள் அவற்றை ஆராய்ந்து அப்படி கழிவு இருந்தால்….அது பாதித்தால் முரளிக்கு என்ன வேணுமானாலும் நடக்கலாம். பார்க்கலாம்…நீங்க இப்போ தைரியமாக இருங்க…”

தைரியம் சொல்லி விட்டு மோகனை மீண்டும் பயமுறுத்தி விட்டார்.

அதற்குள் வீணா, இவர்கள் குடும்பத்தினரை அழைத்து வந்து விட்டாள்..

” நான் தான் தாரா…” என்றாள் வீணாவிடம்.

வீணாவை முதன் முறையாக நேரில் சந்திக்கிறாள்.

வீணாவுக்கு இன்னும் அவள் பேரில் சந்தேகம் இருந்தது ..

” வீணா …பழையதை எல்லாம் மறந்து விடு..”

“அப்பா என்னையும் கூப்பிட்டார் உங்க திருமணத்துக்கு…”

“ஆனால் எனக்கு உங்க எல்லோர் முகத்திலும் முழிக்க பயம்…”

“மோகன் ஒரு பொக்கிஷம், புதையல்….” “அவனை அடைய எல்லோருக்கும் கொடுத்து வைக்காது..”

“நான் விளையாட்டாக அவனை டீஸ் பண்ண ஆரம்பித்து,  ஒரு சமயத்தில் அவன் மேல் பைத்தியமாகவே ஆகிப் போனேன்…”

“சென்னைக்கு மாற்றிப் போனவுடன் மெதுவாக புரிந்தது…. “

“ஒரு தலைக் காதல் ஒன்று சோகத்தில் முடியும், அல்லது குரோதத்தில் முடியும் என.”

“சென்னையின் பல தரப்பட்ட மக்கள் , பல அனுபவங்கள் என்னை மாற்றி விட்டது…”

“யாருக்கு என்ன நிகழ்ந்தால் என்ன???  என்ற மனோபாவத்துக்கு மத்தியில் என்னையும் என் மானத்தையும் முதலாளியின் மகள் என்ற ஒரே காரணத்தால் காப்பாற்றி இருக்கிறான் என நான் புரிந்து கொண்டேன்..”

“அவன் மேல் இருக்கும் எனது காதலை அடிமனத்தில் போட்டு வைத்து புதைத்து விட்டேன். அது மேலே எழும்பாமல் இருக்க சரியான ஆளை தேடிக் கொண்டிருக்கிறேன்..”

“நீ அதிர்ஷ்டசாலி….”

“உனக்கு பொக்கிஷத்தை பாதுகாக்கவும் தெரியும் என அறிகிறேன்..”

“இல்லை என்றால் ஏழெட்டு வருடங்களாகியும் இருவரும் அப்படியே காதலுடன் இருக்கிறீர்களே.”‘

‘மோகன் கன்னத்தை வீணா கிள்ளும் கேண்டி போட்டோ ‘ வை காட்டி,  “கைலாஷ் அனுப்பி வைத்தான் ..” என தாரா சொல்ல…




“தாரா…என்னை மன்னிச்சுக்கோ…” நான் ‘மோகா’  மேல் உள்ள மோக வெறியில் அப்போது உன்னை திட்டி இருக்கலாம். “

என சொல்லி விட்டு இப்போது முரளிக்கு என்னவோ என கவலைப் பட ஆரம்பித்தாள்.

“மோகன் என்ற பொக்கிஷம் எனக்கு கிடைத்து விட்டது..”

“அந்த பொக்கிஷத்தை அனுபவிக்க அனுமதி இன்னும் கிடைக்கவில்லையே ..”

என நினத்தாள்.

மோகன் அங்கு வர,

“தாரா…ரொம்ப தேங்க்ஸ் …முரளியை காப்பாற்றி மருத்துவமனையில் அட்மிட் பண்ணியதற்கு.

நான் ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடு…”

” நான் தான் மன்னிப்பு கேட்கணும்…”

“நாங்க உங்க குடும்பத்துக்கு தேவையில்லாமல் சங்கடங்களை கொடுத்து விட்டோம்..நீ என்னை எல்லாவிதத்திலும் காப்பாற்றி விட்டதற்கு மன்னிப்பு கேட்டு,  நன்றி கூறும் விதமாக/முரளி விழுந்த சமயத்தில் என்னை கடவுள் அங்கே அனுப்பி இருக்கிறார்…”

“அவ்வளவு தான்..” என்றாள் தாரா.

“உன்னை என்றுமே நான் தவறாக நினைத்ததில்லை…”

“அடிப்படையில் எல்லோரும் நல்லவர்களே..”

“சந்தர்ப்பங்கள் ஒருவருக்கு எதிராகவோ, சாதகமாகவோ நிகழும் போது உணர்ச்சிக்கு அடிமையாகி சிலவற்றை செய்கிறோம்..”

“அது நமக்கு அல்லது மற்றவருக்கு பாதகமாக ஆகி விடுகிறது..”

“நீ செய்த உதவி முரளியை காப்பாற்றி விட்டால் போதும் …”

“கடவுள் உன்னை சரியான நேரத்தில் அனுப்பி இருக்கிறார்..அவரே அவனை நல்லபடியாக காப்பாற்றிக் கொடுப்பார்..”

என நம்புவோம்…”

இரவு ஆகி விட்டது ..

டாக்டர் வருகிறார்…

முக்கிய ரிப்போர்ட்ஸ் வந்து விட்டது..  நீங்க மட்டும் தனியே வாங்க என் கிறார் மோகனிடம்.

மோகனை அவரை சந்திக்க தனியறைக்கு செல்கிறான்.

அவர் கையில் முரளியின் பரிசோதனை ரிப்போர்ட்ஸ்..




What’s your Reaction?
+1
5
+1
9
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!