Serial Stories நீ காற்று நான் மரம்

நீ காற்று நான் மரம்-29

29

தாரா பற்றிய கேள்வி வந்த போது தாராவின் அப்பா உள்ளே நுழைந்ததை,

சிசி டிவியில் பார்த்து எல்லோரும் அதிர்ச்சி அடைந்த வேளையில்,

வாசலில் வரவேற்று கொண்டிருந்த கோவிந்தன்..

” வாங்க சார்…ரொம்ப சந்தோஷம் நீங்க வந்தது” என்றார்.

” ஆமாம் ஐயரே…நான் தான் புத்தி பிசகி ஏதேதோ செய்து விட்டேன்..”

” நான் அப்போது அப்படி நடந்து கொள்ளாமல் இருந்தால்

ஒரு வேளை மோகன் எனக்கு கூட மாப்பிள்ளை ஆகி இருக்கலாம்..”

என்றவருக்கு ஒன்றும் பதில் சொல்லாமல் வரவேற்று உள்ளே உட்கார வைக்கிறார்.

“இவரைப் போன்ற சிலர், வாழ்க்கையை முழுக்க வியாபாரமாகத்தான் நினக்கின்றனர்..” என எண்ணிக் கொண்டார்.

அடுத்த நாள் தாரா வை பார்க்க முக்கிய வேலையாக சென்னை போக வேண்டும் என சொல்லி விட்டு மதிய உணவு உண்டு சென்றார்.

மாலை, வீணா-  மோகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடந்து கொண்டிருக்கிறது.

திடீரென

அங்கிருந்த டிவியில், டாக்டர்.வில்லியம் டெய்லர்

விசி முறையில் தோன்றி இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

முரளியின் முயற்சியால் ஒரு இசைக் குழுவினர் இசை நிகழ்ச்சி நடத்தினர்.

முரளி கேட்டுக் கொண்டதன் பேரில்

” நீ காற்று நான் மரம் ,

என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்” பாடல் படப்பட,

முரளி, மோகனை ‘நீ காற்று நான் மரம்’ என கை காட்ட,

வீணா மோகனை, ‘நீ காற்று நான் மரம்’ என கை காட்ட, மோகன், வீணாவை ‘இனி நீ தான் காற்று’ என சொல்ல,

வீணா,

” நீ சுவாசம், நான் தேகம்…

என்றும் உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்..” என்ற வரியை அவன் காதில் முணுமுணுக்கிறாள்.




“அது நாளை இரவு தான்..”

என மோகன் சொல்ல,

” சீ…நீங்க ரொம்ப மோசம்ப்பா…”

என சொல்லி அவன் கன்னத்தை கிள்ள,

கேண்டிட் கேமரா அதை படம் பிடித்து,

அடுத்த சில நொடிகளில்

சிசி டிவி மூலம் ஒளிபரப்பிக் கொண்டிருக்க,

” பாத்தியா…நீ திருக்கோவிலூர் பஸ் ஸ்டாண்டில் கிள்ள ஆரம்பித்து ,

இப்போது வரை என்னை கிள்ளிக் கொண்டிருக்கிறாயே.” என்றான் மோகன்.

“நீ தான் பதிலுக்கு என் நெஞ்சத்தை தினமும் கிள்ளறயே….”

” அப்படியா…உன் நெஞ்சத்துக்கு நாளை இரவு நான் மருந்து போடறேன்” என கிசு கிசுக்க,

” ரவுட்ட்ட்டி மோகா…”

“இத்தனை பேர் எதிரிலேய என்னை

இப்படி அலைக்கழைகறயே.”

“உன்னிடம் தனியே மாட்டினால் நான் அவ்வளவு தான்…” என பேசி முகம் சிவக்க,

இருவரும் அடுத்த நாள் கனவோடு அன்றிரவு உறங்கப் படுத்து, பாசாங்கு செய்து எழுந்தனர் .

காலையில் முரளி,

“அண்ணா, எனக்கு தொலைக் காட்சியில் மதியம் ஒரு மணிக்கு ரெக்கார்டிங்..

மாங்கல்ய தாரணம் ஆன உடன் கிளம்பி சென்னை சென்று ஒளிப்பதிவு முடிந்தவுடன் இரவு,

வீணாவையும், உன்னையும் உள்ளே அனுப்பி வைக்க நான் வந்துடுவேன்..” என்றான் கண்சிமிட்டிக்கொண்டே.

” லவ் பண்றதுனா என்னண்னா” என்று கேட்டவன் என்னை இப்படி கிண்டல் செய்கிறான், என நினைத்துக்கொண்டே,

“காசி யாத்திரை” கிளம்ப முரளி குடை பிடிக்க,

ரகோத்தமன் வழி மறித்து வீணாவை கல்யாணம் செய்து வைக்கிறேன் .நீங்க காசிக்கு போக வேண்டாம் என கேட்டுக்கொள்ள, நமக்கும் வீணா வை விட்டால் வேறு யாரும் இல்லை என சொல்ல,

“மாப்பிள்ளைக்கு டிக்கட் கிடைக்கலயாம் ..அதான் திரும்பிட்டார்..” என திரேதா யுகத்து ஜோக் ஒன்றை ஒரு பெரியவர் சொல்லி தானே சிரிக்க,

“என்ன மோகன் பயந்து திரும்பிட்டே….”

எதிரே தாரா வருகிறாளா????”

என அசந்தர்ப்பமாக கைலாஷ் கேட்க, வீணா அவனை முறைக்க…

ரசிகாவும் மதுவும் அவனை நாலு அடி போட்டனர்.




வீணாவும் மோகனும் ஊஞ்சலில் உட்கார வைக்கப்பட்டு,பிடி சுற்றல் நிகழ்ச்சி முடிந்து, விளக்குகள் சுற்றி வர,.

“தனம் பாட்டி வீட்டில் ஊஞ்சலில் வீணா உட்கார்ந்து, ‘மோகா’ கதை கேட்டுக்கொண்டே அவனை மனத்தில் நுழைத்தவள், இப்போது அவன் பக்கத்தில் இந்த ஊஞ்சலில் உட்கார வைத்து அவன் இல்லத்தில் நுழைய அச்சாரம் போடுகிறோம்”

என நினைத்து கொள்கிறாள்.

“வாழ்க்கையே ஊஞ்சல் போல இப்படியும் அப்படியும் மெதுவாக அசைந்தால் நன்றாக இருக்கும்…வேகமாக அசைந்தால் சில சமயம் தள்ளி விட்டு விடும்.”

“அதனால் சுக துக்கம் வரும் போது மிதமாக எடுத்துக் கொண்டு, அதிக மாக கொண்டாடாமல் இருக்க வேண்டும் என சொல்லாமல் சொல்ல இந்த ஊஞ்சல் நிகழ்ச்சி , ஒரு வேளை திருமணத்தில் இணக்கப்பட்டதோ??” என மோகன் நினைக்கிறான்.

அடுத்தடுத்த சடங்குகளில் மோகன் ஈடுபட,

‘ஆண்டாள் கொண்டை’யுடன் பிறந்தவீட்டு கூறைப் புடவையில் ஊஞ்சலாடிய வீணா, மடிசார் புடவையில்

ரகோத்தமன் மடியில் உட்கார ,

மோகன் வீணா கழுத்தில் தாலி யின் முதல் முடிச்சு போட, மற்றவர்களால் மீதி இரண்டு முடிச்சு போடப்பட, வீணா கண்களில் கர கரவென கண்ணீர் வழிந்தது..முகமெல்லாம் சிரிப்பு..”

“என்ன பிராஜக்ட் சக்சஸா மோகன்- வீணா” ,என ரசிகா கிண்டலடிக்க,

“அது எப்படி செய்வது? என எனக்கும் சொல்லிக் கொடு …”என மது சொல்ல, ரசிகா அவனை செல்லமாக முறைக்கிறாள்.

வீணா காலில் மெட்டி அணியப்பட , மோகனுடன் ஏழு முறை அக்னியை வலம் வந்து மோகனின் மனத்தரசி, இப்போது ஊரறிய இல்லத்தரசியாக

ஆகிறாள்.

அனைவரும் நிதானமாக பெரு மூச்சு விட்டு விட்டு கொண்டனர்..

விக்னம் எதுவும் இல்லாமல் திருமணம் நடந்தேறியதற்கு அந்த விக்னேச்வரரை நினக்கின்றாள் ருக்மணி..

மதியம் சாப்பிட்டு முறைப்படி மோகனுடன் அவன் வீட்டுக்கு கிரஹபிரவேசம் செய்து அனைவருக்கும் திரட்டுப்பால் கொடுக்க,

விஜி தலைமையில் அன்று இரவின் முக்கிய நிகழ்வுக்கு மோகனின் அறை அலங்கரிக்கப்படுகிறது…

கைலாஷின் போனுக்கு மூன்று முறை தாராவிடமிருந்து போன் வருகிறது….அவன் எடுக்கவில்லை.




ரசிகா, மதுவுக்கும் போன் வர அவர்களும் எடுக்காமல் இருக்க,

மோகனுக்கு அறியப்படாத எண்ணிலிருந்து போன் அழைக்க மோகன் எடுக்க,

“மோகன்…நான் தாரா.. பேசறேன்…முரளிக்கு ஆபத்து…” என சொல்ல

“ஆ……என்ன ஆச்சு…. “முரளிக்கு என்ன ஆச்சு…??? மோகன் கத்த அவர்கள் வீடே அதிர்ச்சியில்…




What’s your Reaction?
+1
3
+1
9
+1
1
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!