Serial Stories நீ காற்று நான் மரம்

நீ காற்று நான் மரம்-28

28

கல்லூரி வளாகத்தில் இருந்த மிகப் பெரிய, புதியதாக கட்டப்பட்டுள்ள குளிர் சாதனம் பொருத்தப்பட்ட மண்டபம்,

முதலில் மோகன் -வீணா திருமணத்துக்கு கொடுக்கப்பட்டது.

”  சேர்மன் சார்….நீங்க ஏதோ எங்க குடும்பத்திற்கு போன ஜென்ம உறவு போல…அதான் இப்படி அசத்தறீங்க “என்றார் ரகோத்தமன்.

“ரகோ சார்…”

“நான் அவ்வளவா படிக்காதவன்..”

“ஏதோ இருக்கும் பணத்தில் நல்லது செய்யலாம்..”

“அதே நேரத்தில் நல்ல பணமும் பண்ணலாமுன்னு தான் இந்த கல்லூரிகள் ஆரம்பித்தேன்..”

“நீங்க மோகன் மாதிரி நல்ல மாணவர்களை சென்னை செல்லாமல் இருக்க இந்த ஸ்காலர்ஷிப் முறை பத்தி சொல்லி, ஆரம்பித்து வைத்தீங்க..”

“அப்புறம் தான் நல்ல நல்ல மாணவர்கள் சேர்ந்து கல்லூரிக்கு நல்ல ரிசல்ட் கிடைக்க ஆரம்பித்தது. “

“உங்க அறிவுரை மூலம் குழுமம் ஒவ்வொரு படியா முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில் ,

டாக்டர்.வில்லியம் டெய்லர் ஆரய்ச்சிக் கூடமும்,

அது உலக அளவில் ஒரு 20 விஞ்ஞானி களுடன் நிகழ்த்தும் சாதனையால் கல்லூரியின் பேர் பிரபலமாகி விட்டது.

இப்போ நான் போய் கூப்பிட்டால், இந்திய அளவில் எந்த பெரிய மனிதர்களும் நம் கல்லூரிக்கு வரத் தயாராக இருக்கிறார்கள்.

அதனால் தான் ஆறு மாதம் முன்னால் திருமண ஏற்பாடு என சொன்னவுடனே நான் தீர்மானித்து விட்டேன்..”

“உங்க குடும்ப கல்யாணத்துக்கு புது மண்டபம் தயாராக்கி விட்டேன்.” இது பின்னாடி நமது விழாக்களுக்கும் உதவுமே..” என்றார் சேர்மன்.

“மோகன்-வீணா திருமணத்தின் முன் நாளே மண்டபம் களை கட்ட ஆரம்பித்து விட்டது.




முறைப்படி, வீணா குடும்பத்தினர் கல்யாணத்துக்கு முன் தினக் காலையிலேயே போய் தயாராக இருக்க,அதற்கு முன் இரவே போய் விஜி தலைமையில் விஜியின் தாய் வழி குடும்பத்தினர் மண்டபம் முழுக்க இழை கோலம் , ரங்கோலி எல்லாம் போட்டு அசத்தி விட்டனர்.

மோகன் குடும்பம் தனம் பாட்டி தலைமையில் வந்து சேர மேளங்கள் முழங்க ஆரத்தி எடுத்து வரவேற்க, வீணா மோகனை மேலிருந்து கீழே பார்த்து, தன் பார்வையில் அப்படியே விழுங்கினாள்.

மோகனுடன் சுமார் பத்து ஆண்டுகளாக விளையாட்டாக ஆரம்பித்த நட்பு…, பின்னர் ஏற்பட்ட ‘பப்பி லவ்’ ,

உரிமை எடுத்துக் கொண்டு அவனுடன் அவ்வப்போது போட்ட,  போட்டுக் கொண்டிருக்கும் ,  போடப் போகும் சண்டைகள்…..

இவற்றை எண்ணி இரவு முழுக்க தூக்கம் வரவில்லை வீணாவுக்கு.

ரகசியப் பேச்சுக்கள், அதில் ஊருக்கு ஒன்றும் தெரியாத நல்லவனாக இருக்கும் மோகன்,

இவளுக்கு மட்டுமே இவள் மட்டுமே அறிந்த ,  முதலில் ‘மொக்க ராசா’வாக பட்டப் பெயரெடுத்தவன்,

பின்னர் முன்னேறி ‘திருட்டு’ மோகா”வாக, ” ‘படவா மோகா”வாக ,

ஏன் சில நேரங்களில்…

‘ரவுடி மோகா..’வாக வும் தன் பேச்சின் மூலம் இவளை அசர வைத்தான்…  இவளிடம் செல்லத் திட்டு வாங்கிக் கொண்டான்.




ஆமாம், பேச்சு மட்டுமே….

ஒரு முறை இருவரும் ஜலகண்டேஸ்வரர் கோயில் போய் வரும் போது ,  கோட்டை வளாகத்துப் புல் தரையில் உட்கார்ந்து பேசி விட்டு போகலாம் என வீணா சொல்ல, சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்க, புல்லைப் பிய்த்து போட்டுக் கொண்டிருந்த மோகனின் கையை வீணா பிடிக்க,

“வேண்டாம் வீணா.., கிளம்புவோம்..”

“உன்னைப் பார்த்தால் நான் என்னை மறந்து விடுகிறேன்.நான் முன் போல இப்போது அவ்வளவு நல்லவன் இல்லை…”

“உன் ஸ்பரிசம், உன் வாசம் பட்டாலே அந்த இரவு முழுக்க தூங்காமல், உன்னையும் என்னையும் இணைத்துக் கனவு கண்டு, அடுத்த நாளும் ஆராய்ச்சியும் உன்னைப் பற்றி தான் ஆரம்பிக்கிறது.” என சொல்லி அழைத்து வந்துவிட்டான்.

இப்போது வீணாவின் அழகை மோகனும் அள்ளிப் பருகிக் கொண்டிருக்கிறான்..

“இன்னும் ஒரு நாளில் முறைப்படி வீணா என்னவளாகப் போகிறாள்.. ,”

“என்னுடனே காலம் முழுக்க கழிக்கப் போகிறாள்….”

“எனக்கே எனக்கு..” என்ற நினைப்பே ஒரு பெருமிதத்தை கொடுத்தது மோகனுக்கு

எட்டு வருடம் முன் “பொண் குழந்தைனாலே அழகு தான்”  என அம்மா சொன்ன போது ஆதங்கப் பட்டவன்,

இப்பொது ஒரு பெண்ணின் காலடியில் ஆயுசு முழுக்க அடிமையாக கூட இருக்க தயாராகிறான்.

அவளது அழகு நாளுக்கு நாள் மெருகு கூடிக்கொண்டே போவது போல இருந்தது அவனுக்கு.

” ஏண்டிம்மா வீணா…”

ஏண்டா மோகா ..”

“ஏதோ பார்க்காதவாளை பார்க்கிறாப்பால பாத்துண்டே இருக்கீங்க…”

“என்ன பழைய நினைப்பா பேராண்டி…” என்றாள் தனம்.




ஒவ்வொருவராக உள்ளே போய் விட வீணா மோகன் மட்டும் வாயிலிலேயே நின்று கொண்டு இருப்பதை அப்போது தான் இருவருமே உணர்கின்றனர்.

வீணாவுக்கு அப்போது ஏற்பட்ட உணர்வு தான்…. “ஒரு வேளை வெட்கமோ..??”

தலை குனிந்து உள்ளே ஓடுகிறாள்.

விரதத்துக்கு தயார் செய்யப்பட்டான் மோகன் .

ஜாதகரணம் நாமகரணத்துக்கு அதே நேரத்தில் தயார் ஆனாள் வீணா…

வீணா வுக்கு சிறிய வயதிலேயே வைக்கப்பட்ட

‘கோதை’ என்ற பேரை ரகோத்தமன் காதில் முணுமுணுத்தார்.

வீணாவும், மோகனும் முறையே மணப் பெண், மணமகன் ஆக்கப்பட்டனர்.

”  நிறைய தட்டு வைத்து வித விதமாக அலங்கரித்து மோகன் திருமண நிச்சயதார்தத்தை நடத்த வேண்டும்….” என்ற ருக்மணியின் நெடு நாள் ஆசை நிறை வேறிக் கொண்டு இருக்கிறது.

பொது வழியில் காதலர்களைப் பார்த்தாலே சிறுவயது முதல் ஒரு எரிச்சல் அவளுக்கு.

வீட்டுக்கு தெரியாமல் ஓடிப் போய் ,சம்பிரதாயம் எல்லாம் காற்றில் பறக்க விட்டு உடல் சுகத்தை முன்னிட்டு உள்ளம் ஒன்றிப் போவதாய் நினைத்து ஓரிரு வருடங்களில் அலுத்து போகும் ஜோடிகளுக்கு இடையில் வீணா-  மோகன் நிலையாக சுமார் எட்டு வருடத்துக்கும் மேலாக பொறுத்துக் கொண்டு இருந்தனர் என்பதே ஒரு பெருமை அவளுக்கு.




ராணிப்பேட்டையின் பழைய தோழிகள், திருக்கோவிலூர் நண்பிகள்,  வேலூரின் தற்போதைய நட்புகள் என அனைவரும் தங்கள் வீட்டு திருமணம் போல உதவ வந்த போது தான் எல்லோருக்கும் தெரிய வந்தது…, ருக்மணியின் உதவும் குணம்.

“அம்மா, இதையும் சீர் வரிசையில் வைக்கச் சொன்னான் அண்ணா..” என முரளி கொடுக்க,

“எல்லோரும் ஏதோ அபூர்வமாக பார்க்க,  அது ஒரு சிறு பிள்ளைகள் விளையாடும் ” கலைடெஸ்கோப்.”

” இவ்வளவு நாள் எனக்கு கூட தெரியாமல் ஒளித்து வெச்சிருக்கான் கள்ளன்.” என்றான் முரளி.

“இதில் ஏதோ சங்கதி இருக்கு…. வீணாவுக்கும், மோகனுக்கும் இடையே….” என அனைவரும் நினைக்கும் போது..

வீணா வந்து தட்டுகளைப் பார்த்து அதில் ருக்குவிற்கு தன் மேல் இருக்கும் ஆசையின் அளவை அறிந்தாள்.

இதில் ஒட்டாமல் தனியாக ஒரு தட்டில்

இந்த சிறு பிள்ளையின் ‘கலைடெஸ்கோப்’ இருக்க…

ஆவலில் அதை எடுக்க…,

‘அது மோகன் அண்ணாவின் ஸ்பெஷல் …ஏழெட்டு வருஷமா பாதுகாத்து வெச்சு உன்னிடம் சீர் கொடுக்கிறான்.. ” என்றான் முரளி.

வீணா..உள்ளே பார்க்க,

கலர் கலரான கண்ணாடித் துண்டுகள் உள்ளே பிரிச வடிவ கண்ணாடியில் பின்னால் ஜொலிக்கப் போகும் இவர்கள் வாழ்க்கை போல இருப்பதாக தோன்றியது…

மோகன் அவள் காதில் ,

” இதில் இருக்கும் கண்ணாடித் துண்டுகளை பார்க்கும் போது எல்லாம், எங்க வீட்டில் இருக்கும் போது நடந்தது நினைவுக்கு வருதா.??”

“உன் அடி பட்ட விரலை நான் பார்க்க…, உன் கையை முதலில் பிடித்த போது, உன் அப்பா வர நீ சட்டென கையை உதறிக் கொண்டு போனாயே நினைவிருக்கா??”

“அப்போ உடைந்த கண்ணாடி வளையல் துண்டுகளை சேகரித்து வைத்து இதை அடுத்த மாதம் செய்தேன்..”

“எனக்கு மட்டுமே பார்க்க வைத்திருந்தேன்.”

“இனி இருவரும் ஒருவராக ஆகப்போகிறோமே..”

“அதான் இங்கே வைத்தேன்.”

வீணாவுக்கு மோகன் தன் கையை முதன் முதலில் பிடித்ததும், அப்பாவுக்கு இவர்கள் விஷயம் தெரிய

காரணமான நிகழ்ச்சியும் நினைவுக்கு வர அவளது தாமரைக் கன்னங்கள் மேக் அப் இல்லாமல் மீண்டும் சிவந்தது.

சட்டென நிதானத்துக்கு வந்த வீணா…

” ஆண்ட்டி..எப்படி பார்த்து பார்த்து சீர் வெச்சிருக்கீங்க..”

“இதுல உங்க பிள்ளை குரூப்ல டூப் போல இதை வெச்சிருக்காரே..”

“இது இங்கே வேணாம்..நான் எடுத்து வெச்சிக்கறேன்.” என்று எடுத்து அவ்விடத்தை விட்டு அகல,

” அது என்னடி.., உங்க மோகா என்னவோ காதில் சொல்வானாம்…நீ அதை எடுத்துப் போயிடுவியாம்.

எங்க காலத்துலேல்லாம் இந்த ரகசியமெல்லாம் தெரியாது..”என்றாள் தனம்.




“ஏய் பாட்டி…என்னை இப்படி திருட்டுத் தனமா ஆக்கினதே நீ தான்….”

” நீ பேசின பேச்சு தான்…” என வீணா பாட்டியை அடிக்கப் போக,

பாட்டி போய் “மோகா..காப்பாத்துடா..

என்னை இந்த ராட்சசியிடமிருந்து…”

என மோகன் பின்னால் ஒளிய,

குடும்பமே இந்த நிகழ்வின் இனிமையில் சிரித்து கொண்டு இருந்தனர்.

நிச்சயதாம்பூலம் தட்டு மாற்றி, பத்திரிக்கை வாசித்து முடிக்கப் பட,

முரளி தலைமையில் வீணா, மோகனின் நண்பர்கள் தயார் செய்து வைத்த வேடிக்கை விளையாட்டுகள் ஆரம்பமாகின.

மோகன், வீணா  இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருக்குமாறு உட்கார வைக்கப்ப்ட்டனர்.

இருவர் கையிலும் V, மற்றும்,M போட்ட அட்டைகள் கொடுக்கப்பட்டன.

கேள்வியை கேட்க மதுவும் , ரசிகாவும் தயாராகின்றனர்.

“முதலில் மற்றவரின் கை பிடித்தது வீணா வா??? மோகனா??”

இருவரும்…M காட்ட… “அடப்பாவி …மோகா…”

இது தனம்..

அடுத்தது,

“முதலில் கடிதம் எழுதியது யார் ???”

இருவரும் V

என காட்ட,

இப்போது விஜி,

“அடிப்பாவி வீணா…”

இது எப்போ..எனக்கு தெரியாம..??” என சொல்லி சிரிக்க,

” துண்டு சீட்டில் மட்டுமே கடிதம் எழுதுபவர் யார் ??

இருவருமே சிரித்துக் கொண்டே M என காட்டுகிறார்கள்.

முதல் முதல் மோகன் வீணாவை பார்த்த போது வீணா போட்டிருந்த உடையின் நிறம்..

இருவரும் சட்டென V காட்டி, வயலெட் என் கின்றனர்.

“யார் கன்னத்தை யார் முதலில் கிள்ளியது…??”

இருவரும் ஒன்றும்

சொல்லாமல் தலை குனிய,

இது போல நிறைய அந்தரங்க கேள்விகள் ஒன்றொன்றாக வர ,

இருவரும் திகைக்க,

“நாம பறிமாறிக்கொண்ட கடிதங்களை படித்து விட்டு தான் கொடுப்பாங்களாம் மதுவும், ரசிகாவும்” என மோகனின் குரல் மைக்கில் வர இருவருமே திகைக்க …,

அந்த திசையில் மோகன் குரலில் மிமிக்ரி பண்ணது முரளி..

மதுவும் ரசிகாவும் சிரிக்க,

மீண்டும் ரசிகா,

“கடைசி கேள்வி…

இது கைலாஷ் தயாரித்தது..”

“மோகன் தாராவை தீ விபத்தில் காப்பாற்றிய போது ,

தாரா எந்த கலர் உடை

அணிந்திருந்தாள்….?? என நண்பர்கள் அனைவருக்கும்

தெரிந்த கேள்வியை கேட்க, வீணா V காட்டி வயலெட் என சொல்ல,

பதட்டத்தில் மோகன் ,

M காட்ட,

எல்லோரும் சிரிக்க,

“நான் மெரூன் நு நினைச்சேன் “என மோகன் மழுப்ப,

” திருட்டு மோகா..” என வீணா கையில் இருக்கும் அட்டையால் மோகனின் முதுகில் போட்டுக் கொண்டிருக்க,

தாரா பேர் கேட்ட அதே வேளையில்

மெதுவாக இவற்றை கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார் தாராவின் அப்பா ராமசாமி…




What’s your Reaction?
+1
5
+1
6
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!