gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள்-62 (வாயிலார் நாயனார்)

வாயிலார் நாயனார் மனதால் இறைவனை மானசீகமாக வழிபட்டு நீங்காத இன்பமான சிவபதத்தைப் பெற்ற வேளாளர் ஆவார்.இறைவனை வழிபாடு செய்யும் முறைகளை மனம், மொழி, மெய் என மூன்று வகைகளாகப் பிரிப்பர்.




இதில் மெய் எனப்படும் உடலால் வழிபாடு செய்வது முதல்நிலை என்பர்.

மொழி எனப்படும் இரண்டாவது நிலையில் இறைவனைப் போற்றி பாடுவது ஆகும்.




முதல் நிலையைவிட இரண்டாவது நிலை சிறந்தது ஆகும்.

மனம் எனப்படும் மூன்றாவது நிலையில், மனதால் மானசீகமாக இறைவனை வழிபடுவதைக் குறிக்கும்.

இறைவனை வழிபாடு செய்யும் மூன்று முறைகளில் மனதால் வழிபாடு செய்வதே சிறந்தது.அவ்வாறு மனதால் இறைவனை வழிபாடு செய்து அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக உள்ளார் வாயிலார் நாயனார்.

பண்டைய தொண்டை நாட்டில் ( சென்னை முதல் வடவேங்கடம் வரை ) திருமயிலாபுரியில்(சென்னையில் உள்ள மயிலாப்பூரில்) வேளாளர் மரபில் அவதரித்தார். திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி நாயனார் தொன் மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் என்று கூறியிருப்பதால் இவரது காலம் 8 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகத் தெரியவருகிறது. இவரைப்பற்றிய தகவல்கள் அதிகம் கிடைக்கப்பெறவில்லை. இவர் சிறுவயது முதல் கபாலீஸ்வரரை முழு முதற்கடவுளாகப் போற்றி அவர் மீது அன்பும், பக்தியும் கொண்டு அவரை வழிபட்டு வந்தார். சிவபெருமானையே எப்பொழுதும் மனத்திலே வைத்துத் தொழுது ஏதும் பேசாமல் சிவ பூஜையை மேற்கொண்டார். இவர் மௌன விரதம் பூண்டு சிவனாரை வழிபட்டதால் ‘வாயிலார்’ என அழைக்கப்பட்டார்.




பெரியபுராணத்தில் ஞானநெறி- Dinamani

குருபூஜை: 

மானசீகமாக மனதால் சிவ வழிபாட்டை நெடுங்காலஞ்செய்து சிவபதத்தை அடைந்த வாயிலார் நாயனாரின் குருபூஜை மார்கழி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் அவர் அவதாரம் செய்த ஸ்தலமும், முக்தியடைந்த ஸ்தலமும் ஆன சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது.

இந்த கோயிலில் கற்பகம்பாள் சந்நிதிக்கு எதிரில் வாயிலார் நாயனாருக்கு வடக்குப் பார்த்தபடி தனி சந்நிதி அமைந்துள்ளது. இவரது குருபூஜை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!