gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/ கிருஷ்ணரின் இரண்டு பெற்றோர்களும் எப்படி இறந்தார்கள் தெரியுமா?

கிருஷ்ணரை பற்றி கூற வேண்டுமென்றால் நாள்முழுக்க கூறிக்கொண்டே இருக்கலாம். கிருஷ்ணரின் மகிமைகளை ஒரு எல்லைக்குள் அடைப்பது என்பது இயலாத ஒன்று. அனைத்து விஷயங்களிலுமே கிருஷ்ணர் மற்ற கடவுள்களை காட்டிலும் வித்தியாசமானவர்தான். பெற்றோர் விஷயம் உட்பட ஏனெனில் கிருஷ்ணருக்கு இரண்டு பெற்றோர்கள் இருந்தார்கள் என்பது நாம் அறிந்ததே.

வாசுதேவர் மற்றும் தேவகி கிருஷ்ணரை பெற்றவர்களாக இருந்தாலும் அவரை வளர்த்து என்னவோ யசோதையும், நந்தபாலனும்தான். மகாபாரதம் முழுக்க கிருஷ்ணரின் பராக்ரமங்கள் மட்டுமே நிறைந்திருக்கும்.  ஆனால் அவரின் குடும்ப வாழ்க்கை மற்றும் சோகங்கள் பற்றிய குறிப்புகள் அவ்வளவாக இருக்காது. இந்த பதிவில் கிருஷ்ணரின் பெற்றோர்கள் எப்படி இறந்தார்கள் என்று பார்க்கலாம்.

குருஷேத்திரம்

கிருஷ்ணர் இறப்பதற்கு முன் இறுதியாக தன் பெற்றோர்களை குருஷேத்திரத்திற்கு அருகில் உள்ள நகரில்தான் பார்த்தார். இந்த இடத்தில்தான் பரசுராமர் சத்ரியர்களை தோற்கடித்த பின் தவம் செய்ததாக கூறப்படுகிறது. பகவத் கீதையில் குறிப்பிட்டுள்ளபடி அந்த சந்திப்பானது மிகவும் உணர்ச்சிகரமானதாக இருந்ததாக கூறப்படுகிறது.

மரணப்படுக்கை

கிருஷ்ணர் தன் வளர்ப்பு தாயான யசோதாவை அவர் மரணப்படுக்கையில் இருந்த போதுதான் பார்த்தார். கிருஷ்ணருக்கு 16008 மனைவிகள் இருந்த போதிலும் அவரின் ஒரு திருமணத்தை கூட தன்னால் பார்க்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டார்.

கிருஷ்ணரின் சத்தியம்

தன் தாயின் மனக்குமுறலை உணர்ந்த கிருஷ்ணர் அவருக்கு ஒரு சத்தியம் செய்து கொடுத்தார். அதன்படி அவரின் அடுத்த பிறவியில் அவர் நிச்சயம் கிருஷ்ணரின் திருமணத்தை பார்ப்பார் என்று கூறினார். கிருஷ்ணர் கூறியபடியே யசோதா அடுத்த பிறவியில் வகுலதேவியாக பிறந்தார். அந்த பிறவியில் கிருஷ்ணரின் மற்றொரு அவதாரமான வெங்கடேஸ்வரரின் திருமணத்தை முன்னின்று நடத்தினார்.




வாசுதேவரின் மரணம்

கிருஷ்ணர் அவரின் பாதத்தில் அம்பு பாய்ந்ததால்தான் இறந்தார் என்று நாம் நன்கு அறிவோம். கிருஷ்ணரின் மரண செய்தி பிருந்தாவனத்தில் வசித்து வந்த வாசுதேவருக்கு தெரிய வந்தது. தன் மகனின் மரணச்செய்தியை கேட்ட வாசுதேவர் அக்கணமே தன் உயிரை விட்டார்.

தேவகியின் மரணம்

இதனை கேளிவியுற்ற கிருஷ்ணரை பெற்ற தாயான தேவகியும் தன் உயிரை விட எண்ணினார். தன் மகன் மற்றும் கணவன் இருவருமே இறந்து துக்கம் அவரை சதியில் ஈடுபட்ட உயிரை விட தூண்டியது.

நந்தபாலன்

கிருஷ்ணரின்  வளர்ப்பு தந்தையான நந்தபாலனின் மரணம் பற்றிய துல்லிய தகவல்கள் இல்லை. ஆனால் இவர் சிவபெருமானின் கணங்கள் என்று அழைக்கப்படும் அவரின் படைகளில் ஒருவராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். கிருஷ்ணரை பற்றி நீங்கள் அறியாத பல தகவல்களை மேற்கொண்டு பார்க்கலாம்.




பாண்டவர்களுடனான உறவு

கிருஷ்ணரை பாண்டவர்களின் குரு, வழிகாட்டி மற்றும் ஆசனாகவே நமக்கு தெரியும். ஆனால் அவர்களுக்குள் நெருங்கிய உறவுமுறை இருந்தது. பாண்டவர்களின் தாயான குந்தி, கிருஷ்ணரின் தந்தையான வாசுதேவரின் சகோதரி ஆவார்.

மறுஉயிர்

கிருஷ்ணருக்கு இறந்தவர்களுக்கு மறுஉயிர் கொடுக்கும் ஆற்றல் இருந்தது. கிருஷ்ணர் தன்னுடைய ஆற்றலை பயன்படுத்தி தனது குருவான சண்டிபணியின் இறந்த மகனுக்கு உயிர் கொடுத்தார். தனக்கு ஞானத்தை வாங்கியவருக்கு கிருஷ்ணர் வழங்கிய விலைமதிப்பில்லாத குருதட்சணை இதுவாகும்.




கிருஷ்ணரின் மரணம்

கிருஷ்ணரின் மரணத்திற்கு பலரின் சாபங்களே காரணமாக இருந்தது. அதில் முக்கியமான இரண்டு சாபங்கள் துருவாச முனிவரின் சாபமும், காந்தாரியின் சாபமும்தான். துருவாசர்தான் கிருஷ்ணரின் பாதங்கள் பலமிழந்தும், பாதுகாப்பு இன்றியும் போகட்டும் என்று சாபம் கொடுத்தார், காந்தாரி வேடனால் கொல்லப்படுவாய் என்று கிருஷ்ணருக்கு சாபமளித்தார்.

கர்ணன் மீதான பாசம்

அர்ஜுனனுக்கு பிறகு கிருஷ்ணர் அதிக பாசம் வைத்திருந்தது கர்ணன் மீதுதான். கர்ணனின் பிறப்பு ரகசியத்தை பற்றி நன்கு அறிந்த கிருஷ்ணர் அதனை கூறுவதன் மூலம் கர்ணனின் மரணத்தை தவிர்க்கலாம் என்று எண்ணினார். ஆனால் துரியோதனன் மீதான நட்பின் காரணமாக கர்ணன் போரில் பங்கேற்றான் தன் சகோதரன் கையால் கொல்லவும் பட்டான். கர்ணன் இறந்தபோது அனைவரையும் விட அதிக சோகத்திற்கு ஆளானது கிருஷ்ணர்தான்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!