gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள்-61 (மெய்ப்பொருள் நாயனார்)

திருக்கோவிலூர் என்ற நாட்டை மன்னன் ஒருவன் ஆட்சி செய்து வந்தான். அவருக்கு சிவபெருமான் மேல் அளவு கடந்த பக்தி.

மெய்ப்பொருள் நாயனார் - தமிழ் விக்கிப்பீடியா

நமக்கு பிடித்த மனிதர் ஒருவர் இருக்கிறார் என்றால் , அவரைப்போல உருவத்திலோ அல்லது பாவனைகளிலோ ஒத்து இருப்பவர்களை நாம் காண அல்லது பழக ஆசைக்கொள்வோம் அல்லவா?. அதே போல தான் அந்த மன்னரும், சிவபெருமானின் மேல் இருந்த பற்றால், சிவனடியார்களின் வேடத்தை அல்லது வேடம் தரித்தவர்களை உண்மையானவர்கள் என்று கருதி வந்தார். அதனால் அவரை மக்கள் மெய்ப்பொருளார் என்று அழைத்தனர்.




இப்படிபட்ட மெய்ப்பொருளார், உலகத்தில் தனக்கு உடமையானது எதுவும் இல்லை என்று நம்பியதால், தனது மக்களையும் நாட்டையும் மிகுந்த நேர்மையாய் மிகத்தெளிவாக வழி நடத்தினான். இவரின் மேல் பொறாமைக்கொண்ட முத்தநாதன் என்ற ஒர் அரசன், “மெய்பொருளாரை போரில் வெல்ல இயலாத காரியம். ஆதலால் வஞ்சகத்தாலோ சூழ்சியாலேயோ இவரை வீழ்த்த முடியும்” என்று எண்ணியவன் அதற்கான திட்டத்தை தீட்டினான்.

மெய்ப்பொருள் நாயனார் புராணம் (பாகம்-1) | Meiporul Nayanar part 1

நமது பலம் பலவீனம் நம்மை விட எதிரிக்கு நன்றாக தெரியும். அதே போல மெய்பொருளாரின் பலவீனம் அறிந்த முத்தநாதன், அடியவர் போல் வேடம் தரித்து, இடுப்பில் ஒரு கத்தியை மறைத்து வைத்துக்கொண்டு இரவில் மெய்பொருளாரின் அரண்மனைக்கு வந்தான்.

அடியவர் போல் வேடம் தரித்து வந்த முத்தநாதனை சந்தேகம் கொண்ட காவலாளி தத்தன், தடுத்து நிறுத்தினான். “அடியவரே சற்றுப்பொரும். நீர் அரசரை காண பொழுது புலர்ந்ததும் வாருங்கள். அவர் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார்”

“ம்ம்.. சரியாகப்போய் விட்டது. நான் அரசர்க்கு வேதப்பொருள் கூறும் பொருட்டு வந்துள்ளேன். என்னை தடுக்காதே…”

“அடியவரே அதை காலையில் கூறலாம் அல்லவா?”

“வேதப்பொருளை இப்பொழுதே கூறாவிடில் அப்பொருள் அனர்த்தமாகிவிடும். ஆகவே காலம் தாழ்த்தாதே.. வழியை விடு.. என்னை தடுத்தாய் என்று அரசருக்கு தெரிந்தால்..”

எதுவும் பேசாத காவலாளி அவரை உள்ளே அனுப்பினான். இருந்தாலும் அவனுக்கு போலி அடியவர் மேல் ஒரு சந்தேகம் இருந்தது. ஏனெனில் அடியவர்கள் அடுத்தவர்கள் அஞ்சும் படி நடந்துக்கொள்ள மாட்டார்கள்.




போலி அடியவர், அரசரின் அறைக்குச் சென்றான்.

அடியவரை கண்டதும் மெய்ப்பொருளார் எழுந்து அவரை வணங்கினார். “ அடியவரே இந்நேரத்தில் என்னைக் காண வந்ததன் நோக்கம் என்னவோ?”

போலி அடியவர் முத்தநாதனும், “மெய்ப்பொருளாரே.. இறைவன் உன்னிடத்தில் சமர்பிக்கச் சொல்லி ஆகமப்பொருளின் விளக்க உரையை தந்துள்ளார். அதை உன்னிடம் சமர்பிக்க வந்தேன்” என்றவன், இடையில் சொருகி இருந்த கத்தியை எடுத்து மெய்ப்பொருளாரின் நெஞ்சில் குத்தினான்.

“அடியவரே.. “ என்று இருகைக்கூப்பியவாறு மன்னன் சரிந்தான்.

சந்தேகம் கொண்ட காவலாளி சரியாக அச்சமயம் அங்கு வர.. ஆத்திரம் கொண்ட அவன் தனது உடைவாளை எடுத்து போலி அடியாரை தாக்க வந்த சமயத்தில்,

“தத்தனே.. இவர் அடியவர்.. இவரை ஒன்றும் செய்யாதே” என்றார்.

“மன்னா.. இவன் அடியவரல்ல.. அடியவர் வேடம் தரித்து வந்த வஞ்சகன்”

“இருக்கட்டும். வஞ்சகனாக இருந்தாலும் அடியவர் வேடம் பூண்டவர். ஆகவே.. இவரிடத்தில் உண்மை இருக்கும். ஆகவே.. இவருக்கு தீங்கு ஏதும் நேராதபடி இவரை பாதுகாப்புடன் இவர் நாட்டுக்கு அனுப்பி வைப்பாயாக.. இவர் நல்லபடியாக போய் சேர்ந்த செய்தியானது என் காதில் விழ வேண்டும் “ என்றார்.

காவலாளி தத்தனும் அரசனின் கட்டளைப்படி, வஞ்சகன் முத்தநாதனை நகரின் எல்லை வரை பாதுகாப்புடன் அனுப்பி வைத்து அந்த விவரத்தை மெய்ப்பொருள் அரசனிடம் தெரிவித்தான். மெய்ப்பொருளார் மகிழ்வுடன் தத்தனுக்கு நன்றி தெரிவித்த சமயம், சிவபெருமான் நாயனாருக்கு திருக்காட்சி தந்து “மெய்ப்பொருள் நாயனாரே.. உன்னை தடுத்தாட்கொள்ளவே இத்திருவிளையாடலை யாம் இயற்றினோம். என்னுடம் கைலாயம் வருவாயாக” என்று சிவபெருமானே அவரை சிவபதம் சேர்த்தார்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!