gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள்-52 (புகழ்த்துணை நாயனார்)

வாழ்வின் அனைத்து நிலையிலும் எல்லாமே ஈசனே என்று வாழ்கிறவர்கள். சிவனை பற்றிக்கொண்ட பின்பு நன்மையாக நடந் தாலும் நன்மையல்லாததாக இருந்தாலும் எத்தகைய பாதிப்பையும் உள்வாங்காமால் இயல்பாகவே இறை வனை வணங்கும் பேறை பெற்றவர்கள். அத்தகைய பேறை பெற்ற நாயன்மார்களில் ஒருவர் புகழ்த்துணை நாயனார்.




55. Pugazhthunai Nayanar || புகழ்த்துணை நாயனார் - YouTube

ஸ்ரீ வில்லிப்புத்தூரில் தோன்றிய இவர் ஸ்ரீ வில்லிப்புத்தூராரை மனதில் நினைத்து பூஜித்துவந்தார். ஐந்தெழுத்து மந்திரத்தை இடை விடாது உச்சரித்து மகிழ்பவர். சிவகாம முறைப்படி  சிவனாகிய எம்பெருமானை வழிபட்டு வந்தார். ஒரு முறை அந்த ஊரில்  கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. நாளடைவில் மக்கள் வயிற்றுப் பசி தீர  உணவை தேடி அலைந்தார்கள். எல்லோரும் உணவை தேடி அலைய புகழ்த்துணையார் மட்டும் ஈசனுக்கு பூஜை செய்ய வேண்டுமே என்று எம்பெருமானைத் தேடி வந்தார்.




 

 

ஒருமுறை புகழ்த்துணையார் சிவனுக்கு பூஜை செய்யும் போது தள்ளாமையால் கையிலிருந்த குடத்தை தவறவிட்டு லிங்கத்தின் மீதே விழுந்தார். விழுந்த வேகத்தில் அவர் தலையில் காயம் உண்டாகவே எம்பெருமான் இவருக்கு உறக்கத்தை அளித்தார். உறக்கத்தில் இவர் கனவில் எழுந்தருளிய எம்பெருமான் மக்கள் கடும்பஞ்சத்தில் வெளியேறிய போதும் என்னை நினைத்து எனக்காக பூஜை செய்யும் உன் பக்தியை நினைத்து அன்றாடம் உனக்கு எமது பீடத்தில்படிக்காசு அருளுகிறேன் என்று கூறினார். பஞ்சம் நீங்கும் வரை யாம் இதை அருளுகிறோம் என்று எம்பெருமான் சொன்னதைக் கேட்டு கண் விழித் தெழுந்த புகழ்த்துணை நாயனார் அருகிலிருந்த பீடத்தில் பொற்காசு கண்டு எம்பெருமானின் அருளை நினைத்து மகிழ்ந்தார்.

எம்பெருமான் சொன்னதற்கேற்ப அனுதினமும் பீடத்தில் பொற்காசு பெற்று சிவத்தொண்டு புரிந்து வந்தார் புகழ்த்துணை நாய னார். பஞ்சம் நீங்கும் வரை பொற்காசுகள் பெற்று சிவபெருமானுக்கு பூஜைகள் செய்தவர் பஞ்சம் நீங்கி வளமை ஆன போதும் எம்பெருமானை இடைவிடாது வணங்கிவந்தார். ஆண்டுகள் பல சிவனடியார்க்கு தொண்டு செய்து இறுதியில் சிவபெருமா னின் பாதத்தை சரணடைந்தார்.

புகழ்த்துணையார் நாயனாரின் குருபூஜை ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தன்று கொண்டாடப்படுகிறது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!