gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/மகாபாரதத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்களின் பெற்றோர்கள் யாவர்?

மகாபாரதம் நடந்து முடிந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகியிருந்தாலும், அதில் உள்ள கதாபாத்திரங்கள் கால வெள்ளத்தில் அழியாமல் உயிர்ச்சித்திரங்களாக இன்றும் இருக்கின்றன. பெயர்கள்தான் வேறாக இருக்கும் என்பார்கள். மகாபாரதத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்களின் பெற்றோர்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்:




வசுதேவர் மற்றும் தேவகி மகன் கண்ணன் (வளர்ப்பு பெற்றோர்கள் நந்தகோபன்,யசோதை)

வசுதேவர் மற்றும் ரோகினியின் மகன் பலராமன்.

உக்கிரசேனர் மற்றும் பத்மாவதி மகன் கம்சன்

பிரகத்ரதன் மற்றும் இருமனைவியர் மகன் ஜராசந்தன்

சாந்தனு மற்றும் கங்கை மகன் தேவவிரதன்(பீஷ்மர்)

பராசரர் மற்றும் மச்சகந்தி(சத்தியவதி) மகன் வியாசர்

சாந்தனு மற்றும் சத்தியவதி மகன் சித்ராங்தன், விசித்திரவீரியன்

வியாசர் மற்றும் அம்பிகை மகன் திருதராஷ்டிரன்

வியாசர் மற்றும் அம்பாலிகை மகன் பாண்டு

வியாசர் மற்றும் பணிப்பெண் சிவை மகன் விதுரன்

திருதராஷ்டிரன் மற்றும் காந்தாரி குழந்தைகள் துரியோதனனையும் சேர்த்து நூறு சகோதரர்கள்,துச்சலை என்ற சகோதரி.




வியாசர் மகன் சுகதேவர்

குந்தி மற்றும் சூரியதேவன் மகன் கர்ணன்

குந்தி மற்றும் எமதர்மன் மகன் தர்மன்

குந்தி மற்றும் இந்திரன் மகன் அர்ச்சுனன்

குந்தி மற்றும் வாயு தேவன் மகன் பீமன்

மாத்ரி மற்றும் அசுவினி தேவர்கள் மகன் நகுலன்,சகாதேவன்

விருத்தக்ஷத்ரன் மகன் ஜயத்ரதன்

சுபலன் மகன் சகுனி

சகுனி மகன் உள்ளூகன்

பிருகத்ரதன் மகன் ஜராசந்தன்

நரகாசுரன் மகன் பகதத்தன்

அர்ச்சுனன் மற்றும் சுபத்திரை மகன் அபிமன்யு

பீமன் மற்றும் இடும்பி மகன் கடோத்கஜன்

பரத்வாஜர் மகன் துரோணர்

துரோணர் மற்றும் கிருபி மகன் அசுவத்தாமன்

சதானந்தர் மகன் கிருபன் மகள் கிருபி.

பிரசதனன் மகன் துருபதன்

துருபதன் மக்கள் பாஞ்சாலி, திருஷ்டத்யும்னன், சிகண்டி

கண்ணன் மற்றும் ருக்மணி மகன் பிரத்யும்னன்.

கண்ணன் மற்றும் சாம்பாவதி மகன் சாம்பன்.

அதிரதன் மற்றும் ராதை கர்ணனின் வளர்ப்பு பெற்றோர்கள்

கர்ணன் மற்றும் விருசாலி மகன் விருசசேனன்,விருசகேது.

விராடன் மக்கள் உத்திரன், உத்திரை.

அபிமன்யு மற்றும் உத்திரை மகன் பரிக்சித்து.

அர்ச்சுனன் மற்றும் நாககன்னி மகன் இராவான்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!