Serial Stories நீ காற்று நான் மரம்

நீ காற்று நான் மரம்-23

23

 

கோவிந்தனை கல்லூரி அலுவலகத்தில் பார்த்த போது லேசாக அதிர்ந்த ராமசாமி , இப்போது அவர் கையாலேயே தன் மகளுக்கு டிசி வாங்க வேண்டும் என்பதை ரசிக்கவில்லை.

“நான் வெளியே இருக்கிறேன்….நீ எல்லாம் முடித்து விட்டு வா….” என வெளியே சென்று அமர்கிறார்…”

நகரில் பெரிய மனிதர்களுள் ஒருவரும், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருமான தாராவுடைய தந்தை ராமசாமி, இந்த விவகாரத்தில் ஓரளவாவது கல்லூரியை ஆதரிப்பார் என நினைத்த சேர்மன் ,

அவர் நேர் எதிர் பாதையில் பயணித்து கோவிந்தனின் வேலையை பறித்தது உள்ளூர் வாசிகளின் வெறும் வாயை மெல்ல அவலாக அமைந்தது என நினத்தார்.

இதனால் ராமசாமி மேல் கோபம் ஏற்பட , இதனை சரி செய்ய கோவிந்தனை வேலைக்கு வைத்தார்..

தாராவின் டிசி விவகாரம் நேற்றே தெரிந்து இன்று கோவிந்தனை விட்டு அவருக்கு செட்டில் பண்ண ,வேண்டுமென்றே ஏற்பாடு செய்தவரும் அவரே….

கோவிந்தன்

“பெருமாளே….நீ என்னென்ன நினைக்கிறாய்….நடத்துகிறாய்….நானும் என் குடும்பமும் யாருக்கும் மனத்தளவில் கூட தீங்கு நினைக்கவில்லை.”

“நான் இதில் ஒரு கருவி….அவ்வளவே….”

என நினைத்து டிசி வேலை முடித்து கொடுத்து தாராவை அனுப்புகிறார்..

” தேங்க்ஸ் அங்கிள்…

அப்பா தவறாக புரிந்து கொண்டுவிட்டார்…”

“அவருக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்….”

“மோகனையும் கேட்டதாக சொல்லவும் ..அவன் என்னை ஒரு மாதமாக தவிர்த்து விட்டான்…நான் வருகிறேன்…” டிசி எல்லாம் வாங்கிச் சென்று விட்டாள்..

“ஆவதும் பெண்ணாலே….அழிவதும் பெண்ணாலே ….என சரியாய் தான் சொல்கிறார்கள்… “என நினைத்துக் கொண்டிருந்த கோவிந்தனை சேர்மன் கூப்பிட்டார்..

“நீங்க இங்க வந்த வேலை முடிந்தது….”

“மதியமே மெஸ் கணக்கு பார்க்க வேண்டும்…பாதி நாள் அங்கே, பாதி நாள் இங்கே இருக்க வேண்டும்…”

“மாணவ மாணவியருக்கு தரமான உணவு கிடைக்க வேண்டும்..”

“அதே சமயத்தில் நமக்கும் அதிக அளவு கையை கடிக்க கூடாது….”

“அதற்கு நம்பிக்கையான ஒருவர் தேடிக் கொண்டிருந்தேன்…நீங்க கிடைச்சீங்க…வேலை ஆரம்பியுங்க “

என சொல்லி அனுப்பி விட்டார்…

இரவு வீட்டில் வந்து இதையெல்லாம் சொன்ன போது ருக்குவும் தனமும் நிம்மதி அடைந்தனர்..




கோவிந்தனிடம் ருக்மணி,

“அம்மா ஒரு யோசனை சொன்னா…..”

“இங்கேயிருந்து மூவரும் வேலூருக்கு போவதற்கு பதில் அங்கேயே வீடு மாறிப் போகலாமே என….”

“அதுவும் தவிர சில வேண்டாத நினைப்பை வீடு மாற்றம் சரி செய்யுமே….”

கோவிந்தனுக்கும் அது சரியாகவே பட்டது…

20 வருஷம் முன் இங்கே ராமசாமி ஜவுளிக்கடையில் வேலைக்கு சேர்ந்த போது குடித்தனம் வந்தது…இந்த பகுதியிலேயே மூணு நாலு வீடு மாறியாச்சு…இந்த வீடு தான் 7வருஷமா இருந்தது…

“போக்குவரத்து செலவு மிச்சமாகுமே…முரளியும் அவங்க பள்ளியில் சேர்த்து விடலாம் அடுத்த வருஷம் …”கணக்கு போட்டதில் வீடு மாறுவது சரிதான் என தோன்றியது…

தனம் பாட்டி ,

” நான் விஜிக்கு போன் போடுகிறேன்…அந்த பக்கம் வீடு கிடைக்குமா என…”

” அம்மா …நேத்து விஜிக்கு போன் பண்ணி இவர் வேலைக்கு சேர்ந்ததை சொல்ல நினைத்தேன்..’

“வீணா, அவ அப்பா ரெண்டு பேரும் சரியா பேசலை நு கவலைல சொன்னா….”

“நானும் அந்த சமயத்திலே எப்படி இவருக்கு வேலை கிடைச்ச தகவல் சொல்றதுனு அப்புறம் பேசறேன் நு வெச்சிட்டேன்..”

“நான் பேசறேன்…”

போன் போட்டு குடு…”

” ஹலோ ….யார் வேணும்..”

போனில் வீணா….

“அடி என் செல்லமே…உன் குரலை கேட்டு எவ்வளோ நாளாச்சு…”

” தனம் பாட்டி நீயா….” “எங்கேருந்து பேசறே..” ஊர்லேந்தா???…”

“இல்லடி இப்போ பேட்டைலேந்து…” ராணிப் பேட்டை…கல கல வென தனம் சிரிக்க….

” அம்மா…சீக்கிரம் வாயேன்….தனம் பாட்டி ராணிப் பேட்டைக்கு வந்திருக்காளாம்…” கத்தி விட்டு…

“சொல்லு பாட்டி….இங்கே மனசே சரியில்லே. யாருக்கும்..உனக்கு தெரியுமா….நடந்ததெல்லாம்..”

“நான் வந்து ஒரு மாசமாச்சு…மாப்பிள்ளைக்கு உங்க காலேஜ்ல யே வேலை கிடைச்சுடுத்து…”




“ஒ..அது தான் மோகனும் அங்கிளும் காலேஜ்லேந்து வெளில போனாங்களா….”

“நான் மோகாவுக்குத் தான் திரும்ப ஏதோ பிரச்சனை என பயந்து மூட் அவுட்டாயிட்டேன்…”

” ஏண்டி …மோகாவுக்கு ஏதாவது ஆனா உனக்கென்ன டீ.????..” பாட்டி வம்புக்கிழுக்க ஆரம்பித்தாள்…

” ஆமாம் செய்யறது எல்லாம் செஞ்சுட்டு இப்போ பழியை எம் மேல போடறே…”

“நீ சரியான திருட்டுப் பாட்டி….” வீணா குரலில் செல்ல கோபமும் வெட்கமும்.

“அடிப் பாவி பொண்ணே..

உன்னை மாதிரி உன் கூட இன்னும் நாலு பேருக்கும் தான் மோகா,முள்ரி கதை எல்லாம் சொல்லி இருக்கேன்…”

“அது என்ன நீ மட்டும் அந்த கூட்டத்துல ஆண்டாளா???…

“அவ ரங்கனையே நினைச்சா…நீ மோகனையே நினைக்கிறே…”

” ஆமாம் பாட்டி இவனுக்காக வேண்டிக் கிட்டு தினமும் நான் பூ பறிச்சு அந்த கிருஷ்ணனுக்கு பூஜை செய்யறேன்..”

“என செல்லமே….உனக்கு ஒரு குறையும் இருக்காது…பகவான் சோதனை பண்ணா அடுத்தது ஏதாவது பெருசா குடுப்பான்…”

“தைரியமா இரு…” “சரி…நீ இங்கேயும் வெளில சுத்த ஆரம்பிச்சுட்டயா???

“உங்க ஏரியால வீடு கிடைக்குமா பாரு…”

” ஹை….பாட்டி….நீ இந்த ஊருக்கு வந்துடறயா…..”

“நான் இல்ல…. நாங்க….” “மோகா, முள்றீ எல்லாரும்…”நீ வாடகைக்கு வீடு தேடு..”

“விஜி கிட்ட குடு போனை..”

விஜியிடம் தனமும் , ருக்குவும் பேசி விட்டு வைக்கின்றனர்…

இரண்டு நாட்களில் கல்லூரிக்கு வெளியே புதிய நகரில் மூன்று நான்கு வீடுகளை பார்த்துச்

சொல்லி அதில் ஒன்றை கோவிந்தனும் ருக்குவும் முடிவு செய்து பால் காய்ச்சி சாப்பிடுகிறார்கள்..

அடுத்த நாளே….

பயோடெக் துறை தலைவர் மோகனை கூப்பிட்டு…

“மாலை மூன்று மணி நேரம் ஒரு கம்பெனிக்கு ஆராய்ச்சி கட்டுரைகள் படித்து குறிப்பு அனுப்ப வேண்டும்…”

“எனக்கு உன் நினைவு வந்தது….நம் நூலக புத்தகங்கள் , வலை பக்கத்தை உபயோகித்துக் கொள்ளலாம்…” உனக்கும் கட்டுரையை பொறுத்து பணம் கொடுப்பாங்க….”

“சார்… படிப்பதற்கு பணம் எல்லாம் கொடுப்பார்களா….”

“எனக்கு பிடித்த வேலை தான் சார்…உடனே சொல்லுங்க சார்..”

வீட்டுக்கு வந்து புதிய வேலை சம்மந்தமாக சொல்ல…..சந்தோஷம் அனைவரையும் தொற்றிகொள்ள….

அடுத்த வாரம்…7 வருடம் கழித்து அனைத்து பொருட்களையும் எடுத்து புது வீட்டுக்கு குடித்தனம் சென்றனர்..

புது வீட்டில் விஜி ஆரத்தி ரெடி பண்ணி வரெவேற்க,

ரகோத்தமன் குடும்பமும் கோவிந்தன் குடும்பமும் நெடு நாட்கள் கழித்து சந்தோஷமாக இருந்தனர்…

“எல்லோருக்கும் கொஞ்சம் வீடு மாறணுங்கிற போது கஷ்டமா தான் இருந்தது….”என்றார் கோவிந்தன்

“இது நல்லது தானே…முரளியும் அடுத்த வருஷம் இங்கேயே சேர்ந்துக்கலாம்… “என்றார் ரகோத்தமன்.




”  எல்லோருக்கும் ஓகே தான்…எனக்கு மட்டும் பிறந்ததுலேந்து இருந்த இடமாச்சே நு கஷ்டமா இருந்தது அங்கிள்”….முரளி அதே ஒண்ணும் சொல்லலை..” என்றான் மோகன்.

“ஆமாமாமாம்.. முரளி எங்க போனாலும் ஃபிரெண்ட் பிடிச்சுப்பான்….” என்றாள் வீணா….

“அப்போ நானு…” என்றான் மோகன் .

“நீ பிடிக்க மாட்டே …ஆனா உன்னை பிடிக்க மத்தவங்க அலைவாளுங்க…..”

“இந்த வீட்டைச் சுத்தி எந்த வீட்டுலயும் உன் வயசுக்கு ஏத்த மாதிரி எந்த பொண்ணும் இல்லைனு தான் இந்த வீடு பார்த்தேன்..” என சொல்லி வீணா சிரிக்க…

” என்ன அண்ணா.???”.பெரிய பழகின இடம் ,பழகின ஃபிரெண்ட் …???

“பொறந்த பதினாறு வருஷம் கழிச்சு தானே வீணாக்காவும் , நீயும் பாத்துண்டீங்க….இப்போ ரெண்டு பேரும் லவ் பண்ணலயா????”

எல்லோரும் இருக்கும் போது முரளி போட்டு உடைக்கிறான்….




What’s your Reaction?
+1
5
+1
10
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!