Serial Stories மல்லிகைப் பந்தல்

மல்லிகைப் பந்தல்-20

(20)

தொடர்ந்து மூன்று நாட்களாக  மாதவியை காணவில்லை. அவள் அந்த முதியோர் இல்லத்தின் ஆண்டு விழாவுக்கான ஏற்பாடுகளில் மும்மரமாக இருக்கின்றாள். அழைப்பிதழ் கொடுக்கவும், சிறப்பு விருந்தினரை அழைக்கவும் என ஓய்வில்லாமல் இருந்தாள். இல்லத்திலும் விழாவுக்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்துக் கொண்டிருந்தன. ஆரம்பத்தில், வெட்கமும் தயக்கமும் காட்டிய அந்த இல்லத்தின் வயதானவர்கள் மெல்ல மெல்ல மிகவும் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் கலைநிகழ்ச்சிகளை ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருந்தனர். 

அவர் மட்டும்தான் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல், உற்சாகம் இல்லாமல் இருந்தார். அவருடைய மனம் பழைய நினைவுகளிலேயே உழன்றுக் கொண்டிருந்தது.  மாதவியிடம் அன்றைக்கு தன் கதையை சொன்னதிலிருந்து லலிதாவின் நினைவும், உமாபதியின் நினைவும் அதிகமாக வருகிறது. அவரை வாட்டி எடுக்கிறது. குற்ற உணர்வில் மனம் உழலுகிறது.

லலிதாவை அம்மாவின் பேச்சைக் கேட்டு சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டேனே. அவளுக்கு பேய் பிடித்திருப்பதாக சொன்னதை எப்படி நம்பினேன்? அவளுடன் பேச முயற்சி செய்திருக்கலாமே. கிட்டே நெருங்கக்  கூடாது மிகவும் உக்கிரமான பேய் என சாமியாடியை வைத்து அம்மா பயமுறுத்தியதை எப்படி நம்பிவிட்டேன்?

எல்லாவற்றிற்கும் பின்னே என் உமாபதியைப் பற்றிய உண்மை ஒளிந்திருந்தது எனக்குத் தெரியாமலேயே போய்விட்டதே. 

லலிதாவையும், உமாபதியையையும் எங்கெல்லாம் தேடி அலைந்தேன்? எங்கே சென்றீர்கள் இருவரும்? நான் என்ன தவறு செய்தேன்? எனக்கேன் இத்தனை பெரிய தண்டனை தந்துவிட்டீர்கள்? எங்கே இருக்கிறார்கள் என்றுத் தெரிந்தாலே போதுமே. என் சொத்து சொகம் எதுவும் எனக்கு வேண்டாமே. எல்லாவற்றையும் விட்டுவிட்டு உங்களோடு ஓடி வந்துவிடுவேனே!

மாதவி யாரோ ஒரு போலிஸ் கமி\னரைத் தெரியும் என்கிறாளே. அவர் மூலம் கண்டுப்பிடித்துவிடலாம் என நம்பிக்கைத் தந்திருக்கிறாளே. இத்தனை வருடங்கள் கடந்தும் என் உயிரின் உயிரை நான் காண்பேனா? 




அவருடைய மனம் இப்படியே அலைக்கழிந்துக் கொண்டிருந்ததே தவிர அங்கு நடக்கும் கலைநிகழ்ச்சிக்கான ஒத்திகையில் மனம் ஈடுபடவில்லை. 

விழாவிற்கான வெளி வேலைகளை முடித்துக் கொண்டு வந்த மாதவி முதலில் அவரைத்தான் வந்துப் பார்த்தாள்.

“என்னப்பா… வில்லுப்பாட்டு எந்தளவுல இருக்கு? ஒத்திகையெல்லாம் முடிஞ்சுட்டா?” என்றாள். 

வீரமணி சிரித்தார் வேதனையாக. “என் மனநிலை சரியில்லை. உனக்கே தெரியும். என்னை விட்டுவிடேன்” கெஞ்சினார். 

“என்னது விட்டுவிடறதா? அதெல்லாம் முடியாது. நீங்க வில்லுப்பாட்டு பாடறிங்க. உங்க க்ரூப் மெம்பர்ஸ் ரொம்ப இன்ட்ரஸ்ட்டா இருக்காங்க. நீங்கதான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.”

“ஃபோலிஸ் கமி\னரை என் விசயமா பார்க்கப் போறதா சொன்னியே என்னாச்சு?” 

பேச்சை மாற்றினார்.

“பார்த்தேனே. எல்லா விவரமும் சொல்லியிருக்கேன். நீங்க தந்த ஃபோட்டோவையும் கொடுத்திருக்கேன். காணாம போனவங்களை கண்டுப்பிடிக்கறதுக்குன்னே சிறப்பா செய்பட்டுக்கிட்டிருக்குற குழு மூலமா ரொம்ப சீக்கிரம் கண்டுப்பிடிச்சு தர்றேன்னு உத்திரவாதம் தந்திருக்கார். நம்ம விழாவுக்கு வர்ற சிறப்பு விருந்தினர்கள்ல அவரும் ஒருத்தர். இன்விடே~ன் கொடுக்கும் போது இந்த வி\யத்தையும் சொல்லிட்டு வந்திருக்கேன். விழாவுக்கு அவர் வரும்போது அவரை நீங்க தனியா சந்திச்சு இன்னும் பேசறதாயிருந்தா பேசலாம்”

வீரமணிக்குள் நம்பிக்கை உதித்தது. “என் லலிதா கிடைச்சுடுவாள்ல? என் உமாபதி கிடைச்சுடுவான்ல?” சிறு குழந்தையாக அவளுடைய கையைப் பிடித்து கெஞ்சினார். 

“கண்டிப்பா கிடைச்சுடுவாங்க. நீங்க பழையபடி உங்க கிராமத்துக்குப் போயி உங்க மனைவி, மகனோட வாழத்தான் போறிங்க. பாருங்க.”

அந்த வார்த்தைகள் அவருடைய கண்களிலிருந்து கண்ணீரை தாரை தாரையாக வழிய வைத்தது.

“நீங்க சொன்னதை நான் செய்துட்டேன். நான் சொன்னதைத்தான் நீங்க செய்ய மாட்டங்கறிங்க?”

‘என்ன என்பதைப் போல் பார்த்தார்’

“வேற என்ன? வில்லுப் பாட்டுத்தான்”

மனம் லேசாகி சிரித்தார். “சரி… இப்பவே உட்கார்ந்து வில்லுப்பாட்டு எழுதறேன்”

உற்சாகமாக சம்மதித்தார். 




What’s your Reaction?
+1
13
+1
9
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!