Serial Stories குறளி வசியம்

குறளி வசியம்- 7

 7

‘ அந்தி சாயும் நேரம் ‘ சூரியன், தன்னுடைய முகத்தை மலைமுகடுகளில் பின்னே மறைத்துக்கொள்ள ஆரம்பித்திருந்தான் .  என்னதான் அவன் தன் முகத்தை மூடிக்கொண்ட போதும் , அந்தி வானத்து பிரகாசம் குறைந்துவிடவில்லை .  காலையில் திருமணம் முடிந்த புது மணப்பெண், மாலை நெருங்கும் வேளையிலே , தோழியரின் சீண்டுதல்களால் ரம்மியமான, அந்த இரவுப் பொழுதை எண்ணி முகம் சிவந்து போவாளே ,! அந்த  கன்னிப்பெண்ணின் ‘ கன்னத்து சிகப்பை ‘ அப்படியே வழித்து பூசிக் கொண்டு விட்டதோ ‘ வானம் ‘  என்று சந்தேகப்படும் விதத்தில்  வானம் வண்ணமயமாய் ஜொலித்தது .

                 மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகள் கூட்டம் கூட்டமாக வீடு திரும்ப ஆரம்பித்திருந்தன . மாடு மேய்க்கும் சிறுவர்கள் அதனை கண்ணும் கருத்துமாக வழிநடத்திய படி வந்து கொண்டிருந்தனர் .

அன்றைய தேதியில் ஆடு, மாடுகள் அதிகம் இருக்கும் கிராமம் வளம் நிறைந்ததாக அனைவராலும் பார்க்கப்பட்டது . அதன் அடிப்படையில் பார்த்தோமானால் ;  ‘சின்னமனூர்’ கிராமம் சகல சௌபாக்கியங்களையும் பெற்று விளங்கிய ஒரு கிராமமாகும் . அங்கு கால்நடைகளின் வளத்திற்கு பஞ்சமில்லை . மேய்ச்சலுக்கு சென்று திரும்பி வரும் மாட்டு கூட்டங்களை பார்க்கும் பொழுது ; “யுத்தத்தில் ஜெயித்து வெற்றியோடு திரும்பி வரும் ‘ அருள்மொழிவர்மனின் ‘ காலாட்படை தான் இதுவோ ” !!! என்று சந்தேகப்படும் அளவிற்கு பெரும் கூட்டமாய் ‘ மாடுகள் ‘ வந்து கொண்டிருந்தன .

”  டேய் சொக்கா ” …” நீ பத்திக்கிட்டு வந்த மாடு அத்தனையும் பத்தரமா இருக்குதா?”

” இருக்குதுங்க அண்ணே.. ” ‘ எல்லாத்தையும் சரி பார்த்து தான் பத்திட்டு வந்தேன் ‘.

‘ இல்லையடா ‘  ‘ எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு ‘   “௭ங்க எல்லாத்தையும் திரும்ப ஒரு தடவை எண்ணு “.

இன்று , ஒன்றாம் வகுப்பு பள்ளி குழந்தையின் புத்தகங்களில்,  மாட்டு கூட்டத்தை படமாக போட்டு , அதில் ‘ எத்தனை மாடுகள் இருக்கிறது’ எண்ணி சொல்லுங்கள் , என்று கேள்வி கேட்டிருப்பார்கள் .  குழந்தைகளும் படத்தில் இருக்கும் மாடுகளை ஒவ்வொன்றாக தொட்டு என்ன ஆரம்பிக்கும் .

ஆனால்  ,இங்கே  ஏராளமான மாட்டுக் கூட்டங்களுக்கு மத்தியில் , ‘ மேய்ச்சலுக்காக ‘ தான் கூட்டி வந்த மாடுகளை சரியாக இனங்கண்டு, அவற்றின் எண்ணிக்கையை சரிபார்க்க , 10 வயதே , ஆன ‘ சொக்கன்’ எடுத்துக்கொண்டது வெறும் ‘ ஐந்து ‘ நிமிடங்கள் தான்.





‘அய்யய்யோ அண்ணே ‘ ‘ ஒன்னு எண்ணிக்க குறையுது ‘ .
உன்ன மாதிரி சின்னப்பயலே நம்பி மாட்ட மேய்ச்சலுக்கு அனுப்பி வச்சாங்க இல்ல ,  அவங்கள சொல்லணும் . ” எந்த  மாட்ட  ‘ டா’ காணும் “.

” கொம்பன் ” ” கொம்பன காணோம் அண்ணே” .

‘ போடா ‘  போ ..இங்கே நான் கொஞ்ச நேரம் இருக்கிறேன் . நீ போய் தேடிப் பார்த்து இழுத்துகிட்டு  வா .

ஆடு மேய்ப்பவர்கள் மந்தையுடன்  திரும்பிக் கொண்டிருந்த அதே நேரத்தில் ;  அதே மந்தையின் பின்புறத்தில் நின்று கொண்டிருந்தார் ஐயர். அவருடைய கண்கள் வட்டம் போட்டு ‘ சுற்றிச்சுற்றி ‘ தேடிக்கொண்டிருந்தது . “குறிப்பிட்ட அந்தக் காளை அவர் கண்களுக்கு சிக்குமா “?  அவருடைய எண்ணம் சிறிதும் வீண்போகவில்லை .

அவருடைய கணக்கு பொய்யாகவும் இல்லை . அந்தச் சிறுவன் காணவில்லை என்று தேடிக் கொண்டு வந்தானே ; அந்த ‘ கொம்பன் ‘ அவன் மட்டும் எந்த ஒரு  மாட்டுடனும் சேராமல் கூட்டத்தில் இருந்து விலகி தனியாக வந்து கொண்டிருந்தது.

கூட்டத்திலிருந்து விலகி வருவதோடில்லாமல்  அதன் நடையிலும்  , ஓட்டத்திலும் , ஒரு ‘துள்ளல் ‘ இருந்தது .” ஒரு வினாடி நேரம் முன்னங்கால்களை  இரண்டையும் முன்னே தூக்கி புலியின் பாய்ச்சல் போல எம்பிக் குதித்தது “. “மறுவினாடியே முன்னங்காலை தரையில் ஊனிகொண்டு பின்னங்கால் இரண்டையும் வானத்தை நோக்கி உயர்த்தி சண்டித்தனம் செய்தது ” .அந்த காளையின் செயலை கூர்ந்து கவனித்தோமானால் ; ஜல்லிக்கட்டில் ‘ மாடுபிடி வீரன் ‘ ஒருவனை தன்  முதுகில் இருந்து புரட்டிக் தள்ள ஒரு காளை என்ன முயற்சி செய்யுமோ , அந்த முயற்சியை அது செய்து கொண்டிருந்தது .

‘ கொம்பனை ‘ கண்டதும் ஐயர் முகத்தில் சிரிப்பு படர்ந்தது . ” உளுந்தம் பயரின் வாசம் ‘சர்’ என்று நாசியில் ஏற ஆரம்பித்தது “.

‘வாடா வா ‘ என்று மனதிற்குல்லாகவே குறளியுடன் பேசிக் கொண்டார் .

தன்னுடைய வேட்டி மடிப்பில் இருந்து அந்த ‘ மைக் குப்பியை ‘ வெளியே எடுத்தார் . அந்தக் குப்பிக்கு உள்ளே அவர் ஏற்கனவே சேகரித்து வைத்திருந்த ‘ அழுகுனி தேவாங்கின் ‘ ‘கண் பூழை ‘இருந்தது . நம்முடைய யார் கண்ணுக்கும் ‘ குறளி ‘  தெரியாத போதும், இந்த ‘அழுகுணி தேவாங்கின்’ கண்களுக்கு மட்டும் அவை  தெரியுமாம். .

அழுகுனி தேவாங்கின் ‘ பூளையை ‘ எடுத்து தன்னுடைய இமை மேல் தடவிக் கொண்டார் ‘அய்யர் ‘. “ஐயர் நினைத்தது இப்பொழுது நடக்க ஆரம்பித்தது”.

‘ ஆம் ‘ துள்ளி கொண்டு வந்த ‘ கொம்பன் ‘ மாட்டின்;  இரண்டு கொம்புகளுக்கு மத்தியில் ; நம்முடைய உள்ளம் கைகளை விட சிறிதளவு உயரம் அதிகமான தோற்றத்தில் மாட்டின் இரண்டு கொம்புகளையும் தன் கைகளால் பிடித்தபடி நின்றுகொண்டிருந்தது  “நிச்சயமாய் குறளி தான்” .

‘ பார்த்துவிட்டேன் ‘ “நான் அவனைப் பார்த்து விட்டேன்.’ ‘ இனி நான் அவனை விடப் போவதில்லை ‘ ” ஜெய் காளி ” என்று மனதிற்குள் காளியை கூவி அழைத்துவிட்டு ‘ தடாலென்று ‘  கொம்பன் ‘ முன்னே போய் நின்றார் .திடீரென்று எதிரே வந்த ஐயரைப் பார்த்து மாடு மேலும் ‘ மிரண்டது’ .

தன்னுடைய பார்வையை கூர்மையாக்கி குறளியை உற்று நோக்கினார் ஐயர் . “யாருடா இவன்  என்னை வழிமறித்து இப்படி முழித்துப் பார்ப்பவன்”   என்று தன்னுடைய ரத்த சிகப்பு கோழிமுட்டை விழியை  உருட்டி ஐயரை பார்த்தது  குறளி .

ஐயர் ;  பார்த்த பார்வைக்கு வெட்டியான் மாடனாக இருந்திருந்தால் , இந்நேரம் ஐயரிடம் என்ன கட்டளை சொல்லுங்கள் சாமி என்று காலில் வந்து விழுந்து இருப்பான் . ஆனால், எதிரில் இருப்பது ‘ மாடன் ‘ இல்லையே ” மகா மாயாவி குறளி” அதனிடம் அய்யரின் ” ஜால வித்தைகள்” ஜெயிக்குமா என்ன ?.




குறளிக்கும் , அய்யருக்குமான இந்த  ‘பார்வை யுத்தம் ‘அதிகமாகப் போனால்  2 வினாடிகள் நிலைத்திருக்கும்.சட்டென்று சுதாரித்த ‘ ஐயர் ‘தான் தயார் நிலையில் வைத்திருந்த ‘ அவல் பொரி வெல்லத்தை ‘ குறளியின் முன்னே விரித்து வைத்தார் .

அவல் பொறி வெல்லத்தின் மேலே குறளிக்கு தீராத ஆசை உண்டு. அய்யர் விரித்து வைத்த ‘ பட்சணங்களை ‘ பார்த்தவுடன் தாவி வந்து அதன் மேல் அமர்ந்து கொண்டு அதனை சாப்பிட ஆரம்பித்தது.

கொம்பின் மத்தியிலே அமர்ந்திருந்த ‘குறளி’ கீழே குதித்ததும் கொம்பனும் சாந்தமாகி இருந்தான். இப்பொழுது எந்தத் துடிப்பும்,  துள்ளலும் இல்லாமல் ,தன் இன கூட்டத்துடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தான்.

( தொடரும்……)




What’s your Reaction?
+1
5
+1
6
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!