Serial Stories குறளி வசியம்

குறளி வசியம்-6

6

இந்தக் கதையை தொடர்ச்சியாக வாசித்து வரும் வாசகர்களுக்கு ; குறளி குறித்த சில தகவல்கள் ;. இந்தத் தகவல்கள் , கதையை மேற்கொண்டு தடையில்லாமல் நீங்கள் வாசிப்பதற்கு உதவியாக இருக்கும்..

குறளியின் தோற்றம் பற்றி பல கருத்துக்கள் நிலவுகிறது .. ‘சிவன் மற்றும் பத்ரகாளி’ சேர்க்கை சக்தி குறளி என்றும் , முழுவதுமான சிவ சக்தி தான் ‘குறளி’ என்றும்  , “வேறு வேறு” விதமான கருத்துக்கள் உண்டு.

குறளியின் உருவம் பற்றி பார்க்கப்போனால் , உள்ளங்கையின் அளவை விட சிறிது மிகுதியான உயரத்தில் இருக்கும்.  குறளி ஆனது, எவரது கண்களுக்கும் தெரிவது கிடையாது. இது முழுக்க முழுக்க மாய சக்தியாகும்.

இது நல்ல சக்தியா , என்று நீங்கள் என்னிடம் கேட்டால் , “நிச்சயமாக இல்லை”  என்பதுதான் என்னுடைய பதில். இது ஒரு” தீய சக்தி” “மாய வித்தைகளில் பலே கெட்டிக்காரன் குறளி”.

குறளியை கட்டுபவர்கள், அதற்கு சளைக்காது வேல கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் .  கொடுத்த வேலையை வினாடி நேரத்திற்குள் செய்து முடிக்கும் குறளி   உடனே வந்து அடுத்த வேலையைச் சொல் என்று நின்று கொள்ளும்.

“உளுந்தம் பயரின் வாசம், குறளியின் இருப்பை நமக்கு உணர்த்தும் ” எவருக்கும் அடங்காத இந்த மகா மாயாவியான குறளின் கதைகள் ஏராளம் . அப்படிப்பட்ட குறளியை வைத்து இதுவரை எந்த ஒரு கண் கட்டையும் செய்யாதவர் ஐயர். அவர்தான் இப்பொழுது குறளியை வசியம் செய்யும் எண்ணத்திற்கு வந்திருக்கிறார் .

அய்யருக்கு தெரியாத விஷயம் இல்லை. . அவருக்கு குறளியின் புத்திகள் அனைத்தும் தெரியும். எனவே, குறளியை வசியம் செய்வதற்கு தேவையான விஷயங்களை தயார் செய்ய ஆரம்பித்தார்  .தன் மனைவிக்கு துணையாக வீட்டு வேலைகள் செய்து கொண்டிருப்பதற்கு, குறளியை வீட்டில் விட்டுச் செல்லலாம் என்பது ஐயரின் மன எண்ணம் .

இது விஷயம் கோமளத்தம்மாளுக்கு தெரியக்கூடாது . நாமும் நம்முடைய ஆசையை நிறைவேற்றிக் கொண்டது போல் ஆகிவிடும் . ஆனால்  “இந்தக்  குறளியை கட்டி நம்மால் சமாளிக்க முடியுமா ” ?  ” என்ன செய்துவிடும் இந்தக் குறளி ” ,  எந்த இடத்தில் அடித்தால் , எந்த இடத்தில் அது அடங்கி உட்காரும் , என்பது எனக்கு நன்றாகத் தெரியும் . ”  காளியின் மகா மந்திர உச்சாடன தகடு இருக்கும்பொழுது இந்த குறளியால்  என்ன கிழித்து விட முடியும்”.

அந்த தகடை நான் கையில் எடுத்தாலே போதும் ; என் முன் மண்டியிட்டு அமர்ந்து ; ‘ ஓ ‘ என்று ஓலமிட்டு அழுகும்  , என்னவோ தெரியவில்லை எனக்கு அதை வசியப்படுத்தி பார்த்துவிட வேண்டும் .

தேவாங்கு வகைகளில் ‘அழுகுனி தேவாங்கு’ என்று ஒன்று உண்டு .  .பொதுவாகவே தேவாங்குகள் அசிங்கமாக தான் இருக்கும் . அதிலும் இந்த ‘ அழுகுணி தேவாங்கு ‘ கண்ணால் காண முடியாத அளவிற்கு சகிக்க முடியாததாக இருக்கும் .

உடனடியாக அய்யர் அந்த தேவாங்கை தேடி அலைய ஆரம்பித்தார்.  வெகுவிரைவில் அது அவரிடம் சிக்கிக் கொண்டது . அதனுடைய கண்களில் எப்பொழுதும் நீர் வழிந்து கொண்டே இருக்கும் . அதனால்தான் அதற்கு ‘ அழுகுணி தேவாங்கு ‘ என்று பெயர் . அதனுடைய ‘ கண் பூலையை ‘ சிறிய மை குப்பி போன்ற அமைப்பில் சேமித்துக் கொண்டார் ஐயர் .




அதுபோக ; ‘ புனுகு’ ‘ குங்குமப்பூ ”தானாக இறந்த மாட்டின் கல்லீரல் பை’  ‘அவல்’ ‘ பொரி’ ‘  வெல்லம்”  இதுபோக வசியம் செய்வதற்கு தேவையான பல்வேறு பொருட்களையும் தேடித்தேடி சேகரித்தார் ஐயர் . அந்தப் பொருட்கள் அனைத்தையும் இங்கே நான் குறிப்பிட விரும்பவில்லை நண்பர்களே  . அது இந்தக் கதைக்கு மட்டுமல்ல நம்முடைய சகஜமான வாழ்க்கைக்கும் அவசியமற்றது .

குறளியை வசியம் செய்ய 48 நாட்கள் விரதம் பூஜை வேண்டும். ஆனால், அய்யர் தன் வாழ்நாள் முழுவதும் விரத பூஜையுடன்  வாழ்ந்து வருபவர். ‘ தின சுத்தி’ ‘  நாடிசுத்தி ‘  ‘ அஷ்ட கர்மங்கள் ‘ ‘நியமங்கள்’  என்று அனைத்தையும் தவறாமல் கடைபிடிப்பவர் . எனவே, எந்த நேரத்திலும் அவரால் குறளியை இழுக்க முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது .

ஒரு நீண்ட பெரிய செப்புத்தகட்டில்  குறளியின் சக்கரம் வரைந்து  சிறிய உருளையாக உருட்டி எடுத்துக்கொண்டார் .

சாதாரணமாக ஒரு சிறுதெய்வ ஆவாகனம் என்பது ஏறத்தாழ ” ஆயிரத்தி எட்டு ” முறைக்கும் மேல் மந்திர உச்சாடன ஆவாகனம் செய்ய வேண்டியிருக்கும் . ஆனால் குறளிக்கு ‘108’ முறை மந்திர உச்சாடனம் போதுமானது .  நீங்கள் முழுமையாக 108 முறை மந்திரத்தை உபாசனம் செய்தீர்களானால் , அது உங்களுக்கு உடனடியாக கட்டுப்படும் .

ஆனால் , அதில் தான் வில்லங்கமே  இருக்கிறது . மகா கெட்டிக்கானான குறளி உங்களை மந்திரங்களை ஜெபிக்க அனுமதிக்காது. மந்திர உச்சாடனனத்தின் போது அது செய்யும் மாயங்கள் இருக்கிறதே  ,  ‘அப்பப்பபா’ அந்த “அட்டூழியங்களை ” தாங்கவே முடியாது .

நீங்கள் ‘ பத்து ,  இருபது ‘ முறை கூட மந்திரத்தை உச்சாடனம் செய்திருக்க மாட்டீர்கள். ஆனால், உங்கள் முன்னே வந்து  ‘ ஈ ‘ என்று பல்லை இளித்துக் கொண்டு நிற்கும். ” அதுதான் நான் வந்து விட்டேனே, ” ” எனக்கு வேலை கொடு ” என்று கேட்கும் .   “இட்ட பணி செய்வேன் கட்டளையிடு ”  என்று கைகட்டி நிற்கும் . பொல்லாத மாயாஜாலத்தால் ,  இல்லாத பொருட்களை எல்லாம் , நம் கண் முன்னே கொண்டுவந்து குவித்து காண்பிக்கும் .

எப்பேர்ப்பட்ட  மனவலிமை உள்ளவனும் குறளியின் இந்த மாயாஜாலங்களுக்கு முன்னே மயங்கித்தான் போவான் .” போதும் போதும் ” ,”நீ 108 முறைக்கு மேலேயே என்னை உச்சாடனம் செய்து அழைத்து விட்டாய்  ” என்று கூறி உங்களை நம்ப வைத்து விட முயற்சி செய்யும் . அதன் பேச்சை நம்பி நீங்கள் ‘ உச்சாடணத்தை ‘ பாதியிலேயே கைவிட்டால் உங்கள் ‘ கதி ‘  ‘அதோ கதிதான் ‘.

ஆனால்  ,இந்த எல்லாப் பிரச்சனைகளுக்கும் சரியான தீர்வு அய்யரிடம் இருந்தது . படாதபாடுபட்டு சேமித்து வைத்த பொருள்களுடன் , குறளியைத் தேடி கிளம்பிவிட்டார், ‘ ‘ஐயர்’.

பொதுவாக குறளியை எங்கே காணலாம் என்று தெரியுமா ?
அய்யரை பின் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .

(தொடரும்…..)




What’s your Reaction?
+1
6
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!