Serial Stories குறளி வசியம்

குறளி வசியம்-3

மாடனுக்கு குமட்டிக்கொண்டு வந்தது,  இதைவிட கொடூரமான காட்சிகள் எத்தனையோ அவன் பார்த்திருக்கிறான். ஆனால், இந்தக் காட்சியை ஏனோ அவன் மனதை பிசைந்தது.

“டேய் மாடா”, கம்பீரமாக வந்தது குடுகுடுப்பைக்காரனின் குரல். ” அவளை எரித்து விடு “என்று கூறிவிட்டு கையில் இருந்த கருவை தன் பையில் போட்டுக் கொண்டான்.
மயான கரையை விட்டு வெளியேறும் நோக்குடன் நடக்க ஆரம்பித்தான். ஆனால், அவனால் நடக்க முடியவில்லை. எண்ணிலடங்கா சக்திகள் அவனை பின்னாலிருந்து பிடித்து இழுப்பது போல் இருந்தது.

கண்ணுக்குத் தெரியாத அந்த சூனிய சக்திகளுடன் அவன் போராட ஆரம்பித்தான். அவன் போராட்டம் வீணாகத்தான் போனது. அவனால் ஒரு அடியை கூட எடுத்து வைக்க முடியவில்லை.

திடீரென்று ரவுத்திரம் வந்தவன் போல் சத்தமாக பேச ஆரம்பித்தான். ” இந்தக் கரு குறளிக்கு சொந்தம், நான் இதை குறளிக்கு அர்ப்பணிக்க எடுத்துச் செல்கிறேன். இதை தடுக்கும் தைரியம் யாருக்கு இருக்கிறது “. “குறளி குறளி அபயம்” ஆவேசம் வந்தவன் போல் அதீத குரலெடுத்துக் கத்தினான். ஒட்டுமொத்த மயானமும் அதிர்ந்தது.




மறுநாள் எப்பொழுதும் போல் பொழுது புலர்ந்தது. பாலம்மாளின் உடலை எரியூட்ட மாடன் பட்ட பாடு சொல்லி முடியாது.  விடிந்து உறவினர் வரும்பொழுது முழுவதும் எரிந்து இருக்கவேண்டுமே…

கருவோடு வந்தவளை அதை களவாடிக் கொண்டு ” வெந்து போ ” என்று சொன்னால், ” வெந்து போகவா ” செய்கிறாள். மறுநாள் உறவினர்கள் வந்தபோது முழுவதும் எறியாமல் கிடந்த உடலைப் பார்த்து நொந்து போனார்கள்.

பாலம்மாளின் ஆன்ம சாந்திக்காக அவர்கள் அடுத்து பார்க்கச் சென்றது கிருஷ்ண ஐயரைத்தான்.

மனைப் பலகையில் அமர்ந்தபடி சோளியை உருட்டிப் போட்டு பார்த்தார் ஐயா்.  விரல்களை நீட்டியும் மடக்கியும் கணக்கு போட்டுப் பார்த்தார். பாலம்மாளின் ஆன்ம சாந்தி அடையவில்லை என்பது நன்றாகத் தெரிந்தது.. இதன் காரணத்தை ஐயர் உணர்ந்துகொண்ட பொழுதும் அதை உறவினர்களிடம் தெரியப்படுத்தவில்லை.

அவளுடைய ஆன்மா சாந்தி அடைய என்ன செய்ய வேண்டுமோ அந்த பரிகாரங்களை மட்டும் செய்யச் சொல்லி அனுப்பி வைத்தார்.

நேற்று இரவு ஊர் மயானத்தில் ஏதோ ஒரு தவறு நடந்திருக்கிறது என்று கிருஷ்ணய்யருக்கு நன்றாக தெரிந்தது. மாந்திரீக வித்தைகளை பயன்படுத்தும்பொழுது  சுய விருப்பு வெறுப்பு இல்லாமல் பொதுநல நோக்கில் செயல்பட வேண்டும். சொந்தத் தேவைக்காக ஒரு அரிசியை கூட சம்பாதிக்கக் கூடாது. அப்படி பெறுவது ஆனாலும், அது மக்கள் அந்தக் கலையை மதித்து தரும் பொருளாக இருக்க வேண்டும்.

ஆனால், நேற்று ஊருக்குள் ஏதோ துர் மந்திர உருவேற்ற நடந்திருக்கிறது. மயான கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தார் ஐயர்.

ஐயர் மயான கரைக்கு வருவது தெரிந்ததுமே ,  ,அவர் நெருங்குவதற்கு முன்னரே , நெடுஞ்சாண்கிடையாக கீழே விழுந்து வணங்கினான் ‘ மாடன்’ .

‘ எழுந்திரி மாடா” மிகக்கவனமாக அய்யர் அருகே செல்லாமல், போதிய தொலைவிலேயே  எழுந்து நின்றான் மாடன்.

” நேற்று இங்கே என்ன நடந்தது ”  நேரடியாக வந்தது ஐயரிடம் இருந்து கேள்வி.

” நீங்க என்ன கேக்கறீங்கன்னு, எனக்கு ஒன்னும் புரியல சாமி “.

” அப்படியா ” நான் கேட்பது உனக்கு புரியவில்லையா? ” எங்கே நல்லா என்ன பாரு “,           ” அது எப்படி நான் கேக்குறது உனக்கு புரியாமல் போகும் “. ” என்ன நல்லா பாரு “.

பள்ளிக் குழந்தை பாடத்தை ஒப்பிப்பது போல் நடந்து இரவு நடந்தது அத்தனையும் மாடன். ஒன்றுவிடாமல் அய்யரிடம் ஒப்புவித்தான்.

‘ போதும் மாடா போதும் ‘  ‘ உனக்கு எப்பொழுதுமே என் மீது விசுவாசம் அதிகம்தான் ‘ என்று சிரித்தபடி கூறிவிட்டு ,அவன் முகத்திற்கு நேரே ஒரு முறை கையை வீசி ஆட்டினார் ஐயர் ,.பிறகு தான் வந்த வழியே திரும்பி நடக்கலானார்.

மாடனுக்கு ஏதோ ஓர் வித்தியாசமான சக்தி தனக்குள் வந்து விட்டு விலகிச் சென்றது போலிருந்தது . ஐயர் வந்தார் பார்த்தேன் ,வணக்கம் சொன்னேன், இப்பொழுது ஐயர் திரும்பிப் போய்க் கொண்டிருக்கிறார். என்ன நடந்தது இங்கே? தலையை சொறிந்தபடி சென்றான் மாடன்.




ஐயருக்கு இப்பொழுது எல்லா விவரங்களும் தெளிவாக தெரிந்திருந்தது.
அதர்வண வேதத்தின் குறிப்பிட்ட அந்த பகுதியில் 40வது ஸ்லோகத்தை பரீட்சித்துப் பார்க்கும் முயற்சியில் ஏதோ ஒரு குடுகுடுப்பைக்காரன் இறங்கி இருக்கிறான் . .ஆனால், குறளி வசியத்திற்கு எண்ணத்திற்கு இவ்வளவு மெனக்கெடுவேனேன் மனதிற்குள்  லேசாக சிரித்துக் கொண்டார்.

அடுத்து வந்த நாட்களில் ஊருக்குள் என்ன நடக்கிறது என்பதை கூர்ந்து கவனித்தார். ஆனால் அடுத்த 21 நாட்களுக்கு சொல்லும்படியாக எதுவும் நடக்கவில்லை. இயல்பாக வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.

என்ன ஒரே ஒரு விஷயம், ஊர் நாட்டாமை அவரை தேடி வருவது நின்று போயிருந்தது. அதிலிருந்து இந்த விஷயத்தில் நாட்டாமைக்கும் தொடர்பு இருக்கும் என்ற தன்னுடைய சந்தேகத்தை தன் மனதிற்குள்ளே உறுதிப்படுத்திக் கொண்டார் அய்யர்.

சரியாக 21வது நாள் ஊர் முழுவதும் அல்லோல பட்டது .ஊர் மக்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு மொட்டை பாறையை நோக்கி  ”  திரள் திரளாக ”  சென்று கொண்டிருந்தனர்.

“யாருனே தெரியல பா “,

“ஆளப்பார்த்தா உள்ளூர் காரனாட்டம் இல்ல”,

போலீசுக்கு தகவல் கொடுத்தாச்சா?

” ஆச்சி ஆச்சி ” இந்நேரம் அவுங்களும் வந்து கொண்டுதான் இருப்பார்கள்.

“எனக்கு என்னமோ இது மனுஷங்க பண்ண வேலை மாதிரி  தெரியல”.

“அதான் போலீஸ் வாராங்க இல்ல அவங்க சொல்லுவாங்க யார் பண்ண வேலை அப்படின்னு”,

“நீ வா அந்த ஆள நமக்கும் அடையாளம் தெரியுதானு ஒரு தடவை பார்த்துட்டு வந்துடலாம்”.

திரளாக சென்று கொண்டிருந்த கூட்டத்தின் இடையே அய்யரும் கலந்து கொண்டு மொட்டை பாறை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்.

(தொடரும்……)




What’s your Reaction?
+1
5
+1
7
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!