Serial Stories பாதரஸ பற​வைகள்

பாதரஸ பற​வைகள்-24 (நிறைவு)

24

அ ராதிகாவும் ராகவனும் அறைக்குள் நுழைந்தார்கள். அபிராமி இப்போ உனக்குத் தேவலைன்னா நாம வீட்டுக்குப் போகலாமா ?!

போகலாம் எனக்கு இப்போ ஒண்ணும் இல்லை இந்தமாதிரி ஏதும் இக்கட்டா நடந்திடக்கூடாதுன்னுதான் நான் அன்னைக்கே விஜிகிட்டே சொன்னேன். ஆனா அவ கேட்கலை இப்போ அவளோட நிலைமையும்.




வினை விதைத்தாளே அதன் பலனை இப்போ அனுபவிக்கிறா அடுத்தவாரத்தில டிஸ்ஜார்ஜ் பண்ணிடுவாங்களாம். அம்மாவோட மருத்துவமனையில்தான் இருக்கா. சீக்கிரம் வீட்டுக்கு வந்து மட்டும் எங்கே மாறப்போறா? அவ தன்னோட குணங்களை நிச்சயம் மாற்றிக்கொள்ளப் போவதில்லைன்னு இன்னமும் தேளாத்தான் கொட்டப்போறா ?! நான் பரவாயில்லை அம்மாதான் பாவம். ராதிகாவின் கவலை அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது.

சரி அழாதே ராதிகா இதெல்லாம் விதி முடிஞ்சிப் போச்சு இனிமே பேசி பயனில்லை நானிருக்கிறேன் அப்படியெல்லாம் விட்டுடமாட்டேன். நமக்குன்னு ஒரு தொழில் தொடங்கியாச்சு பர்ஸ்ட் புரோஜெக்ட் வெற்றிகரமாக போயிட்டு இருக்கு இதுக்குமேல என்ன வேணும். நடந்ததையே நினைக்க வேண்டாம் ராகவின் ஆறுதல் அவளை சமாதானப்படுத்தியது.

அந்த காம்பெளண்ட் வீடு அந்த இரண்டு ஜோடிகளையும் ஆரத்தி கரைத்து வரவேற்றது இதுக்கு மேல இந்தப் பிள்ளைகளுக்கு எந்தப் பிரச்சனைகளும் வரக்கூடாது. ராதிகாம்மா நீங்க சீக்கிரமா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க ஏற்கனவே நிறைய கஷ்டங்களை அனுபவிச்சிட்டாங்க போதும் இனிமே இந்த வீட்டுலே ஒரு நல்லது நடக்கணும் பாட்டியும் மற்றவர்களும் அதையே சொல்லு. என்னடா சிவா கடைசியிலே உனக்கும் வீட்டுச் சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணியாச்சு.

ஆமாமா இவருக்கு சமைச்சிப்போடத்தான் நான் இத்தனை படிச்சேனாக்கும் அபிராமி புன்னகையோடு சொல்ல அதென்னடி அப்படி சொல்லிட்டே சிவா எம்பேரன் அடியே பேரன் பொண்டாட்டி இந்த வீட்டை ஆளப்போறவன்டி அவன் பகைச்சிக்காதே பாட்டி அபிராமியின் காதைப் பிடித்து ஆட்டினாள். 

பழைய கலகலப்புக்கு மீண்டதைப் போலிருந்தது அனைவருக்கும் எல்லாருக்கும் இன்பம் அக்கூட்டில் உள்ள பாதரஸ பறவைகள் தன் இணைப்பறவைகளை இன்பமாய் பார்த்து ரசித்து காதல்பார்வைகளில் விழுங்கிக்கொண்டு இருந்தது நாமும் அதை ரசித்து வாழ்த்துவோம்

 முற்றும்




What’s your Reaction?
+1
7
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!