Serial Stories குறளி வசியம்

குறளி வசியம்-2

 ‘ஏன்னா ‘ இன்னைக்கும் நாட்டாமை வந்துட்டுப் போகிறார் போல,

‘ஆமாண்டி’  நானும் பட்டும்படாம எவ்வளவோ எதார்த்தமா சொல்லிப் பாத்துட்டேன், கேட்க மாட்டேன் என்கிறார்.

” ஏன்னா” உங்களுக்கு குறளி வசியம் பண்ண தெரியுமா?

“என்னடி கேள்வி இது? அச்சுபிச்சு தனமா இருக்கு” என் குருநாதர் அருளால்  எனக்கு அந்தக் கலையும் தெரியும்.

‘ பிறகு ஏன் நாட்டாமை வீணா அலைய விடுறேல்?’.

‘அவரு குறளி பொம்மை தேடுகிறார்’  ‘அதற்கு நான் உதவனும்னு நினைக்கிறார்’.

‘ ஏன்னா குறளி பொம்மை வேறு குரளி வசியம் வேறா?’.

“இதோ, பார் கோமளா” மாந்திரீகத்தில் ஆயிரத்து எட்டு வகைகள் இருக்கு, ஒன்னு ஒன்னையும் விளக்கமா சொல்ல முடியாது .அவர் நோக்கம் சரியில்லை. அதனால் எனக்கு உதவிட எண்ணம் இல்லை, அவ்வளவுதான் இந்தப் பேச்சை இத்தோட விடு.

கிருஷ்ண அய்யரும், கோமளத்தம்மாளும்,  விவாதம் செய்த அதே நாளில் அந்த ஊர் மயானக் கரையில் அந்த குடுகுடுப்பைக்காரன் நுழைந்து இருந்தான்.

“மணி இரவு 12 நடுநிசி”  6 மாத கர்ப்பிணியான ‘பாலம்மாளின்’  உடல் குடுகுடுப்பைக்காரன் வரவிற்காக எரியூட்ட படாமல் எவருக்கும் தெரியாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

உற்றார் உறவினர்கள் வந்து கொள்ளி வைத்துவிட்டு போனபோதும், ‘வெட்டியான் மாடன்’      சிதையில் ‘ தீ ‘மூலாமல் பார்த்துக் கொண்டான்.  நாட்டாமையிடம் இருந்து அவனுக்கு கணிசமான பணம் கைமாறி இருந்தது.

வாங்கிய பணத்தில் குடித்த சாராயம் மூக்கு முட்ட நின்றது.
சுடுகாட்டில் இருந்த ஏதோ ஓர் சமாதியின் மேல் கவிழ்ந்த விரித்துப் படுத்துக் கிடந்தான்.

“கிரீச்” என்ற ஒலியுடன் மயானக் கரையில் கதவு திறந்தது.  சத்தத்தால் கவரப்பட்ட மாடன் தடுமாறி எழுந்து நின்றான் . குடுகுடுப்பைக்காரன் மயானக்கரைக்கு வந்தான்.

தன்னுடைய இரு கைகளையும் கூப்பி “வாங்க சாமி” என்று வணங்கி அவனை வரவேற்றான் மாடன்.

”  என்ன  மாடா சௌக்கியமா”?,

“நிறைய சாராயம் குடித்து விட்டாய் போலிருக்கிறது”?.

“சௌக்கியத்திற்கு என்ன குறைச்சல் சாமி” ” சாராயம் குடிக்காமல் இந்த வேலையைத்தான் பார்த்து தொலைய முடிய மாட்டேன் என்கிறது”.

எந்த நேரமும் இந்த சுடுகாட்டில் ஏதாவது வினோதமான சப்தங்கள் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.

முந்தாநாள் இப்படித்தான்; விஷம் குடித்து செத்துப்போன ‘அஞ்சலையை’  கொண்டு வந்து போட்டு விட்டுப் போனார்கள்.

‘ அப்பப்பா’ “பாவி மகள்”  “வெந்து தொலைவேனா என்று விட்டாள்”.  “எரியும் உடலுக்கு அருகே நின்றுகொண்டு ,இரவெல்லாம் ஒரே கூப்பாடு” . நானும் , தடியை சுழட்டி எத்தனை முறைதான் அவளை அடித்து அடக்க ? ‘இதோ’  இப்பொழுது வரை; “என் தலைமாட்டில் இருந்து கொண்டு ஒப்பாரி வைத்து தான் தொலைக்கிறாள்”.




மாடனின் வேலையில் இதெல்லாம் சாதாரணம் , செத்துப் போன எத்தனையோ பேர் அவனுடன் பேசுவதற்கு எவ்வளவோ வழிகளில் முயன்று இருக்கிறார்கள். தங்களுடைய உடலை அவன் எரிக்காமல் தடுப்பதற்கு எவ்வளவோ வேலைகளைச் செய்திருக்கிறார்கள்.

இதுபோன்ற, பிசாசுகளின் குதியாட்டம்களுக்கெல்லாம் அவன் அஞ்சாமல் அவனுடைய வேலையை முடித்து தான் ஆகவேண்டும். மாடனுக்கு குடுகுடுப்பைக்காரன் எப்பொழுதும் பிடிக்கும் ,அவன் தரும் தாயத்து தான் பல சமயங்களில் மாடனின் உயிர் காக்கும் கவசம்.  இப்பொழுது, குடுகுடுப்பைக்காரனுடன் மயானத்தில் நடக்க ஆரம்பித்தான் மாடன்.

“சாமி இரண்டு  நாட்களாக இந்த அஞ்சலை படுத்தும்பாடு என்னால் தாங்க முடியவில்லை” .  எந்த நேரமும் என்னை ‘சுற்றி சுற்றி’ வருவது;   “என்னை ஏன் எரித்தாய், என்னை ஏன் எரித்தாய் என்று என்னிடம் கூப்பாடு போடுவதும்” ” என்னால் முடியவில்லை சாமி”  .ஏதாவது தாயத்து இருந்தால் கொடுங்களேன்.

‘ தருகிறேன் மாடா’ ‘ நிச்சயமாக உனக்கு ஒரு தாயத்து தருகிறேன்’. இப்பொழுது வா, பாலம்மாளிடம் போகலாம்.  குடுகுடுப்பைக்காரணை சிதையை நோக்கி அழைத்துச் சென்றான் மாடன்.

எரி மேடையில் விறகுக் குவியல்களுக்கு இடையே அந்த உடல் இருந்தது. மாடனின் வாக்கு பொய் இல்லை என்பது போல்,’ அஞ்சலை’ அந்த உடலின் அருகே மண்டியிட்டு அமர்ந்தபடி, ஆங்காரமாய் உருமி கொண்டிருந்தாள்.

குடுகுடுப்பைக்காரனின் பார்வை பட்டதும், அந்த இடத்தில் இருந்து மாயமானாள். குடுகுடுப்பைக்காரன் சிதையை நெருங்கினான்.

‘நிறைந்த வயிறோடு பாலம்மாளின் உடல் கிடத்தப்பட்டிருந்தது’. அவள் வயிற்றுப் பகுதியை தொட்டு ஆராய்ந்தான் குடுகுடுப்பைக்காரன், “கரு இன்னும் சாகலை”.

” இன்று குறளிக்கு  நல்ல வேட்டைதான்”. தலைச்சன் குழந்தை” அதுவும்,” வயிற்றில் கருவாக உயிரோடு வேறு கிடைத்திருக்கிறது”.

தன்னுடைய தோளில் இருந்த ஜோல்னாப் பையிலிருந்து சில சமாச்சாரங்களை எடுத்து சமாதி மேடையில் விரிக்க ஆரம்பித்தான். நூதனமான அமைப்புடைய கட்டங்களை வரை ஆரம்பித்தான்.

சில ரவுத்திரமான மந்திர உச்சாடனங்கள் ஆரம்பமாயின. அவன் உடல் ஆவேசத்தில் துடிக்க ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் பற்களை இருக்க கடித்தபடி “மாடா” என்று கூவி அழைத்தான். அவன் அருகே வந்து கைகட்டி நின்றான் மாடன்.

” அந்த சவத்தை இழுத்து இப்படி போடு” உத்தரவாக ஒலித்தது குடுகுடுப்பைக்காரர் குரல்.  இப்பொழுது அந்தக் குரலுக்குக் கட்டுப்பட்டு மாடன் மேடைமேல் இருந்த பாலம்மாளின் உடலை இழுத்து குடுகுடுப்பைக்காரன் வரைந்திருந்த கட்டத்தை மத்தியிலே போட்டான்.

குடுகுடுப்பைக்காரன்  கையில்   மிகவும் வித்தியாசமான ஒரு வேர்  வந்திருந்தது, அந்த வேரை கையில் எடுத்து ஒரு சுழட்டி சுழட்டி அவன் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் நீளமாக ஒரு கோடு போட்டான், அவன் கோடு கிழித்த வேகத்தில் வயிறு இரண்டாகக் கிழிந்து என வாய் பிளந்தது.

சுடுகாடு முழுவதும் ‘ஓ’ என்ற இரைச்சல், ஏதேதோ அமானுஷ்ய சத்தங்கள், செத்துப்போன அந்த பிணத்தின் வயிற்றிற்குள் கையைவிட்டு  உள்ளிருந்து துடிப்போடு இருந்த அந்தக் கருவை வெளியே இழுத்தான் அவன்.

வெளிவந்த கருவை தனக்கு உணவாக்க மாட்டானா என்று ஏகப்பட்ட அமானுஷ்ய சக்திகள் அவனை சுற்றி நின்றுகொண்டு ஓவென்று ஊளையிட்டன.

அது ஆறு  மாதக் கருதான். அந்தக் கருவிடம் எந்தவிதமான அசைவும் இல்லை. அதனிடம் முழுமையான உருவம் இல்லை, ஆனால், அந்தக் கருவிற்கு லேசான சுவாசம் மட்டும் இருந்தது.

அதர்வண வேதத்தின் அதிமுக்கியமான பக்கம் ஒன்றை அப்பொழுது, பரீட்சித்துப் பார்க்க அவன்  ஆரம்பித்திருந்தான்.

(தொடரும்……)




What’s your Reaction?
+1
6
+1
9
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!