Serial Stories உயிராய் வந்த உறவே

உயிராய் வந்த உறவே-11

11

“நல்ல கொழுந்து இலையாக பறித்தாயிற்று.சின்ன துண்டு கொட்டை பாக்கு வைத்து மையாக அரைத்து கையில் வைத்துக் கொண்டால் ரத்தச் சிவப்பில் பிடிக்கும் தெரியுமா?” சொன்னபடி பார்வதி வாணி முன் நீட்டிய மூங்கில் தட்டில் மருதாணி இலைகள் இருந்தன.

“என்ன இது?”

“மருதாணி இலை செல்லம். அரைத்து தருகிறேன். இரவு படுக்கச் செல்லும் முன் கைகால்களில் வைத்துக்கொள்”

வாணிக்கு ஆயாசமாக இருந்தது.அலங்காரம் செய்து கொள்ளும் நிலைமையிலா நான் இருக்கிறேன்? “இப்போது எதற்கிந்த அலங்காரம்?” எரிச்சலாய் கேட்டாள்.

பார்வதி அவளை ஒரு மாதிரி பார்க்க ஊரிலிருந்து வந்திருந்த பார்வதியின் உறவு பெண் ஒருத்தி முகவாயில் கை வைத்து ஆச்சரியப்பட்டாள்.

“என்ன இது இந்த பொண்ணு இப்படி கேக்குது?”

“அது ஒன்னும் இல்லை பெரியம்மா.அவள் சிட்டியில் வளர்ந்த பெண்.அவளுக்கு மெஹந்திதான் தெரியும். இந்த மருதாணில்லாம் புரியாது.நீங்க போங்க நான் பார்த்துக்கிறேன்”

பார்வதி அந்த பெண்ணை அனுப்பிவிட்டு வாணியின் முகவாய் தொட்டு நிமிர்த்தினாள்.” நாளை  உனக்கு திருமணம்மா. அதற்காகத்தான் இந்த மருதாணி” உச்சந்தலை கொட்டாய் 

இப்பேச்சு வாணியின் உடலை நடுக்கியது.நீர் திரையிட்ட விழிகளுடன் பார்வதியை நிமிர்ந்து பார்க்க அவள் தோள் வருடினாள். “தேவையில்லாமல் மனதை குழப்பிக் கொள்ளாதே செல்லம்.முகத்தை கொஞ்சம் சிரித்தாற் போல் வைத்துக்கொள்” உறவினர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை” 

இவர்கள் உறவினர்களுக்கு பதில் சொல்வதற்காக நான் பிடிக்காத இந்த திருமணத்தில் சந்தோசம் காட்ட வேண்டுமா? வாணிக்கு உடனே அங்கிருந்து ஓடிவிட வேண்டும் போல் ஒரு வேகம் உண்டானது. ஓடிவிடலாம்தான். அப்படி இங்கே எதுவும் காவல் இருப்பது போல் தெரியவில்லை. ஆனால் அதன் பிறகு…? நினைக்கவே பயமாக இருந்தது. மிகுந்த குற்ற உணர்ச்சியாகவும்…

முதல் நாள் பத்திரிக்கை வைத்துவிட்டு வந்தவர்கள் அதைப்பற்றிய எந்த ஒரு செய்தியையும் வீட்டில் பகிர்ந்து கொள்ளவில்லை. “என்னாச்சுங்க?” பார்வதியின் ஒற்றைக் கேள்விக்கு “ஒரே அதிர்ச்சி.வியர்வை குடம் குடமாக கொட்டி ஆறாக ஓடி எங்க காலெல்லாம் தண்ணீர். கழுவிட்டு வந்தோம்” ஓரக் கண்ணால் வாணியை பார்த்தபடி நீட்டி முழக்கினான் விபீசன். அங்கே இருக்க பிடிக்காமல் இடம் பெயர்ந்தாள் வாணி.

இப்போதோ அன்றே கொஞ்சம் பொறுமையாக அங்கிருந்து என்ன நடந்தது என்று கேட்டிருக்கலாமோ என்று மனது அரித்துக்கொண்டே இருந்தது.

“ஏய் எல்லோரும் வந்தாயிற்றா?” வீட்டிற்குள் இருந்த உறவினர்களை பார்த்து உற்சாக கூச்சலிட்டபடி வந்தான் விசாகன்.

இதோ இவன் தான் இப்போதைய அவளுடைய நிலைமைக்கு காரணம். இவனை மட்டும் சந்திக்காமல் இருந்திருந்தால்…? வெளிப்படுத்த வழியின்றி உள்ளே கனன்று கொண்டிருந்த வாணியின் கோபம் உற்சாகமாய் வீட்டிற்குள் வந்து நின்றவனின் மேல் வடிந்தது.

“எதற்காக இப்படி கூச்சல் போடுகிறாய்? இது என்ன குடித்தனம் நடத்தும் வீடா? இல்லை வேறு ஏதாவதா?” அவனுக்கு மேல் கத்தினாள்.

அவளை திரும்பிப் பார்த்த விசாகனின் கண்களில் சூரிய கோள்.

” எதற்காக இப்படி கூப்பாடு போடுகிறாய்?”

“கூப்பாடு போடுவது நானா நீயா? உன் இடத்தில் நீ சிவனே என்று இருந்திருந்தால் எனக்கு இந்த நிலைமை வந்திருக்காதே”

“நான் எப்படி இருக்க வேண்டும் என்று கூறுவது உன் கட்டுப்பாட்டில் இல்லை. நன்றாக நினைவில் வைத்துக்கொள் இந்த வீட்டில் உன்னை விட எனக்கு உரிமை அதிகம்”

‘யாருக்கு வேண்டும் இந்த ஓட்டை வீட்டில் உரிமை? எல்லாவற்றையும் நீயே தலையில் ஏற்றிக்கொள். என்னை விட்டு விடுங்கள். நான் போகிறேன்”




 

“போயேன் யார் உன்னை பிடித்து வைத்திருக்கிறார்களாம்?” சொன்னதோடு விசாகன் வாணியின் கையை பற்றி இழுத்து போய் வாசலுக்கு வெளியே தள்ளினான் “போ”

எப்போதும் சுற்றம் உறவுகளோடு கலகலப்பாக இருக்க விரும்பும் விசாகன், இப்போது வாணிக்காக சுந்தர்ராமனை திசைதிருப்பவென அங்கே கல்லூரியில் இருந்து போக்கு காட்டி விட்டு அண்ணனின் திருமணத்தற்கு தாமதாக வந்திருந்தான். அந்த அளவில் தன்னை பெரிய தியாகியாக நினைத்திருந்தவனுக்கு உள்ளே வந்ததும் வாணி பேசிய பேச்சு அதிக கோபத்தை கொடுத்திருந்தது.

சுற்றிலும் உறவினர்கள் வேடிக்கை பார்க்க வாணி அவமானத்தில் குறுகினாள். “நீ என்னடா என்னை போகச் சொல்வது ?நான் போக மாட்டேன். தள்ளுடா”அவனை ஒதுக்கி விட்டு மீண்டும் வீட்டிற்குள் நுழைய முயன்றாள்.

“என்னது டாவா? எவ்வளவு திமிர்?” விசாகன் அவளை தள்ள முயல மாணிக்கவேலும், விபீசனும் ஓடி வந்தனர்.

“என்ன இது சின்னக் குழந்தைகள் போல..?” இருவரையும் அதட்டி பிரித்தனர்.

“இரண்டு பேருக்குமே இன்னமும் வயதுக்கேற்ற பக்குவம் வரவில்லை. சின்னப்பிள்ளை போல் சண்டை …” உறவினர்களை சமாளித்து அனுப்பினர்.

“உள்ள வாடா செல்லம்” மாணிக்கவேல் வாணியின் தோள் தொட்டு அழைக்க, “அப்பா அவள் என்னை எல்லோர் முன்பும் மரியாதையில்லாமல் பேசினாள். நீங்கள் அவளை கொஞ்சி கொண்டிருக்கிறீர்களே? என்னை விட இவள்தான் முக்கியமா?” தொண்டை நரம்பு புடைக்க கத்திய விசாகனை இழுத்துக் கொண்டு வீட்டின் பின்புறம் போனான் விபீசன்.

கேட்கும் கேள்விக்கு நாக்கை பிடுங்குவது போல் பதில் சொல்ல வேண்டும் என்று பதில்களை மனதிற்குள் வரிசைப்படுத்திக் கொண்டு வாணி தயாராக இருந்தாள். மாணிக்கவேலோ எதுவுமே நடவாதது போல் சொம்பு நிறைய தண்ணீர் கொண்டு வந்து அவள் கையில் கொடுத்தார்.”முதலில் தண்ணீரை குடிடாம்மா. மற்றதெல்லாம் பிறகு பேசலாம்” 

சை…என்ன மனிதர் இவர்! சலித்தபடி கொஞ்சம் தண்ணீர் அருந்தியவளுக்கு கோபம் வெகுவாகவே குறைந்திருந்தது. ஆங்காங்கு தலை நீட்டி பார்த்த உறவினர் பார்வைகளுக்கு எரிச்சல் மண்ட கிணற்றடியில் வந்து அமர்ந்து கொண்டாள்

“அவளுக்கு உடம்பு முழுவதும் திமிர் அண்ணா.அவளை எதற்காக நாம் தாங்க வேண்டும்? உங்களுக்கென்ன  தலையெழுத்து இவள் கூடவெல்லாம் குடும்பம் நடத்த வேண்டுமென்று? இவள் உங்களுக்கு பொருத்தம் கிடையாது. இந்த திருமணத்தை நிறுத்தி விடுங்கள்” விசாகனின் குரல் காற்றில் மெலிதாக காதில் வந்து விழுந்தது.

வீட்டில் அந்தப் பக்கம் அண்ணன் தம்பியை சமாதானப்படுத்துகிறான் போலும்.போடா டேய் நீ சொல்லித்தான் இந்த திருமணம் நிற்கப் போகிறதாக்கும்? அலட்சியமாக நினைத்தவளின் நடு நெஞ்சில் ஊசியாய்  சொருகியது விபீசனின் குரல்.

“உன் எண்ணம்தான்டா தம்பி எனக்கும்.வேறு வழியில்லாமல்தான் இந்த திருமணத்திற்கு சம்மதித்திருக்கிறேன்”

வாணிக்கு காதுகள் இரண்டும் அடைத்துக் கொண்டன. உச்சந்தலையில் மிகப்பெரிய பாறாங்கல் ஒன்று ஏறி அமர்ந்து கொண்டு அவள் மூளையை இம்சித்தது.கொய்ங்கென்று ஒரு மாதிரி சத்தம் காதுக்குள் கேட்டபடி இருந்தது.

அப்பாவிற்காக.. அத்தைக்காக.. அம்மாவிற்காக.. என்று யார் யாரையோ அடுக்கிக் கொண்டிருந்த விபீசனின் பேச்சுக்கள் எதுவும் அவள் காதில் விழுந்து மனதில் பதியவில்லை.

நள்ளிரவு தாண்டி ஒரு மணி நேரம் கடந்து விட்டது.இது வரையும் ஆங்காங்கே முணுமுணுப்பாய் கேட்டுக் கொண்டிருந்த சத்தங்கள் எல்லாமே அடங்கி விட்டது. கிளம்பலாம். கண்ணில் துருத்திய கண்ணீரை சபித்தபடி ஹேண்ட் பேக்கை மட்டும் தோளில் போட்டுக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள் வாணி.

“மேடம் எங்கே கிளம்பிட்டீங்க?” காம்பௌன்ட் கேட்டை நெருங்கிய போது நிதானமாக கேட்டு நின்றான் விபீசன்.

லேசாக மூக்கை உறிஞ்சிக் கொண்டவள் “என் அப்பாவிடம் போகிறேன்” என்றாள்.

சுளீரென்று அவள் கன்னம் எரிந்தது. அடித்தானா ?என்னையா ? 

ஒற்றை விரலாட்டி எச்சரித்து நின்றிருந்தானவன் “கொன்னுடுவேன்”

“அடித்தீர்களா ?எவ்வளவு தைரியம்?” குரலை உயர்த்தியவளை வாயை பொத்தி உள்ளே அவனது அறைக்கு இழுத்துப் போனான்.

“ஐந்து வருடங்களுக்கும் மேலாக திட்டம் போட்டு காத்திருக்கிறோம். நீ சுலபமாக திரும்பிப் போவாயா? வாயில் விரலை சப்பிக்கொண்டு பார்த்திருப்போமா நாங்கள்?”

ஐந்து ஆண்டு திட்டமா? வாணியின் தொண்டை பயத்தில் உலர்ந்தது. “சரியான கிரிமினல் குடும்பம்”




“ஆமாம்டி உன் அப்பாவை போல் கிரிமினல்களை சமாளிக்க நாங்களும் கிரிமினல்ஸாக மாற வேண்டியதாயிற்று” 

“அப்போ நாங்கள் நல்லவர்கள் என்ற மார் தட்டல் எதற்கு? அப்பாவிற்கும் உங்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம்?”

“வாணீணீ…” விபீசனின் உயர்ந்த குரலுக்கு நடுங்கி விட்டாள் வாணி.

” உன் அப்பாவை பற்றிய பேச்சு எனக்கு பிடிக்காதது. அப்பா என்ற வார்த்தை கூட இனி நீ உச்சரிக்க கூடாது” உத்தரவு போல் சொன்னான்.

அந்த அதிகாரத்திற்கு வெகுண்டவள் “எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. நிறுத்தி விடுங்கள்” என்றாள்.

விபீசன் ஒரு வேகத்துடன் அவள் முகத்தின் முன் தன் முகத்தை கொண்டு வந்தான்” இங்கே பார்” தன் முகத்தை சுட்டிக்காட்டினான். “இங்கே இளிச்சவாயன் என்று எங்கேயாவது எழுதி இருக்கிறதா?”

காட்டான்… கரடி …எருமை …அசுரன் …ராட்சசன்… இப்படி மனிதரல்லாத பிற உருவங்கள் எல்லாமே உன் முகத்தில் எழுதாமலேயே தெரிகிறது, மனதிற்குள்தான் நினைத்துக் கொண்டாள்.

விபீசன் முகத்தின் முன் கொடுக்கிட்டான் “இங்கே பார் உன் அப்பா என்று தகாத வேலை செய்தாரோ அன்றே உன் வாழ்க்கையை எங்கள் கையில் கொடுத்து விட்டார். இனி அது உனக்கு திரும்ப கிடைக்காது. உனது ஆற்றாமையையும் கோபத்தையும் நீ காட்ட வேண்டிய இடம் உன் அப்பாவிடம்தான்”

“என் வாழ்க்கை என்னிடம்தான். அப்பாவோ அம்மாவோ யாரும் இல்லாமல் என்னால் தனியாக வாழ முடியும். நான் இங்கிருந்து போகத்தான் போகிறேன்”

வாணி பேசிக் கொண்டிருக்கும்போதே விபீசன் அறைக்கதவை மூடி தாளிட்டான்.அதே வேகத்தில் திரும்பி அவளை அணுகினான். தடுமாறியவளின் முகத்தைப் பற்றி தன் அருகே இழுத்து இதழோடு இதழ் சேர்த்தான்.

ஒன்று இரண்டு மூன்று தனக்குள் எண்ணியபடியே வாணி சில நூறுகளை கடந்த பிறகே விடுவித்தான். சாறு எடுத்த கரும்புச் சக்கையாய் கட்டிலில் விழுந்தாள் அவள். “இதற்கு மேலும் என்னால் போக முடியும்.ஆனால் நான் எல்லாமே முறையாக நடக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” கிட்டத்தட்ட அரை மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்தவளை இழுத்துப் போய் அறைக்கு வெளியே தள்ளினான்.




What’s your Reaction?
+1
31
+1
20
+1
3
+1
1
+1
2
+1
2
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!