Serial Stories தொடுவதென்ன தென்றலோ

தொடுவதென்ன தென்றலோ-14 (நிறைவு)

14

ஹோட்டல்‌ வாசலில்‌ காரை நிறுத்திய இளமாறன்‌ அவசர அவசரமாக ஹோட்டலுக்குள்‌ நுழைந்தபோது இவனை பார்த்து விட்டு சதீஷ்‌ ஓடோடி வந்தான்‌.

“சார்‌ இந்த ரூம்‌ தான்‌ சார்‌ பிரச்சனை இப்படி ஆகும்னு நான்‌ கொஞ்சம்‌ கூட எதிர்பார்க்கல சார்‌…அவங்கள உங்க கூட ஒரு முறை பார்த்திருக்கேன் அதனாலதான்‌ பதறியடிச்சுக்கிட்டு உங்களுக்கு கால்‌ பண்ணினேன்‌. இன்ன போலீசுக்கு கூட நான்‌ போன்‌ பண்ணல ரொம்ப சீக்ரெட்டா இருக்கணும்‌ சார்‌

இல்லன்னா ஹோட்டல்‌ பேரு கெட்டுப்போயிடும்‌ எதுவா இருந்தாலும் கொஞ்சம்‌ ரகசியமா முடிச்சுடுங்க…”

“அவனுக்கு என்னாச்சு…? உயிரோட இருக்கானா இல்ல செத்துகித்து போயிட்டானா?”

“ப்ளீஸ்‌ சார்‌ ரொம்ப சத்தமா பேசாதீங்க..அவரை அதோ அந்த அறையில்தான்‌ படுக்க வச்சிருக்கோம்‌. நான்‌ ரொம்ப சீக்ரெட்டா இந்த விஷயத்தை வச்சிருக்கேன்‌…” என்றவன்‌ இளமாறனின்‌ கையை பற்றி தன் இருக்கைகருகில்‌ அழைத்து சென்றான்‌.

“என்ன விஷயம்‌ சொல்லுங்க எனக்கு ஒண்ணுமே புரியல?

“அது வந்து சார்‌ அன்னைக்கு ஒரு பொண்ணு கூட நீங்க வந்தீங்க இல்ல…என்று ஆரம்பித்து சதீஷ்‌ சொன்ன விஷயத்தை கேட்டபோது முகம்‌ மாறிபோனது இளமாறனுக்கு.

“இப்போ போய்‌ பாக்கலாமா?

“வாங்க சார்‌..” என்று அழைத்து சென்று அந்த அறையின்‌ கதவை தள்ளி திறந்த போது,

ராஜராஜன்‌ படுக்கையில்‌ மயங்கி கிடந்தான்‌.

“பாதிமயக்கத்துல இருக்கும்போது ஏதோ பென்டிரைவன்னு திரும்ப திரும்ப சொன்னாரு சார்‌…”

“ம்ம்‌…என்று யோசித்துகொண்டே அவன்‌ பக்கெட்டில்‌ தேடியபோது பர்ஸ்க்குள் பென்டிரைவ்‌ இருந்ததை எடுத்து பாக்கெட்டில்‌ பத்திரப்படுத்திக்கொண்டு வெளியில்‌ வந்தான்‌.

“சதீஸ்‌…மயக்கம்‌ தெளிந்தால்‌ இளமாறன்னு ஒருத்தர்‌ உங்களை தேடிவந்தாருன்னு மட்டும்‌ சொல்லுங்க..அப்புறம்‌ இந்த கண்டிஷன்ல அவனால கார்‌ ஓட்ட முடியாது. கால்டாச்சி அரேஞ்‌ பண்ணி வீட்டுக்கு அனுப்பிவச்சிடுங்க என்று பாக்கெட்டில்‌ இருந்து அட்ரஸ்சையும், பணத்தை எடுத்து சதீஸ் கையில்‌ திணித்துவிட்டு, செம்பருத்தியை தேடிவந்தான்‌.

கண்களில்‌ கண்ணீரும்‌ கையில்‌ கட்டுமாய்‌ அமர்ந்திருந்தாள்‌ செம்பருத்தி. பதற்றத்தோடு அருகில்‌ சென்றவன்‌,

“என்னாச்சுங்க…” இவன்‌ குரலை கேட்ட அடுத்த நொடி நாலே எட்டில்‌ இவன் அருகில்‌ வந்து நின்றாள்‌. அவளை அணைத்து ஆறுதல்‌ படுத்த வேண்டும் என்று மனம்‌ நினைத்தாலும்‌ அவளின்‌ விருப்பமில்லாமல்‌ எதுவும் சாத்தியமில்லை என்பதால்‌ கல்லாய்‌ நின்றான்‌. அவள்‌ உடல்‌ நடுங்குவதை பார்த்தவனுக்கு மனமும்‌ உடலும்‌ நெகிழ்ந்தது. மெல்ல அவளில்‌ கைகளை பற்றி அழைத்துக்கொண்டு காரிடரில்‌ இருந்த இருக்கையில்‌ வந்து அவளை அமரவைத்துவிட்டு தானும்‌ அவள்‌ அருகில்‌ அமர்ந்துக்கொண்டான்‌.

அவள்‌ கண்களில்‌ இருந்து கண்ணீர்‌ கொட்டியது.




“செம்பருத்தி…அழாதீங்க அதான்‌ நான்‌ வந்துட்டேன்‌ல எதுவும்‌ ஆகாது டென்ஷன்‌ ஆகாதீங்க? எல்லாத்தையும்‌ நான்‌ பாத்துக்கிறேன்‌”.

“அது வந்து என்‌ மேல எந்த தப்பும்‌ இல்லை ப்ளீஸ்‌ என்ன நீங்க புரிஞ்சுக்கணும்‌.” வாய்‌ கெஞ்சிக்கொண்டிருந்தாலும்‌ அவள்‌ கண்களில்‌ பயம்‌ அப்பிக்கிடந்தது.

“நான்‌ உங்களை முழுசா நம்புறேன்‌…தப்பெதுவும்‌ நீங்க பண்ணலன்னு எனக்கு தெரியும்‌. எந்த பிரச்சினையும்‌ வராமல்‌ நான்‌ பாத்துக்குறேன்‌…” என்று ஆறுதல்‌ சொன்னவன்‌, தன்‌ கைக்குட்டையை எடுத்து அவளிடம்‌ கொடுத்து முதலில்‌ முகத்தை துடச்சிக்கோங்க என்றான்‌. எதுவாயிருந்தாலும்‌ கார்ல போகும்போது பேசிக்கலாம்‌…” என்று அவளை அழைத்துக்கொண்டு சதீஷ்யிடம்‌ சொல்லிவிட்டு காருக்கருகே வந்தான்‌.

நல்லவேளை அருகில்‌ இருந்த ஸ்டேஷனில்‌ இவனுக்கு தெரிந்த இன்ஸ்பெக்டர்‌ ஒருவர்‌ இருந்ததால்‌ போன்‌ பண்ணி சில தகவல்களை கேட்டு தெரிந்துகொண்டு காரை ஸ்டார்ட்‌ பண்ணினான்‌. இவளை அழைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியில்‌ வந்த போது அப்பாவிடம் இருந்து கால்‌ வந்தது.

“இளமாறன்‌ எங்க இருக்க? மினிஸ்டர்‌ வந்துட்டார்‌ உன்னை காணலையே எங்கப்பா இருக்க?

“அப்பா…அ…௮வரை ரிப்பன்‌ கட்‌ பண்ண சொல்லுங்க நான்‌ ஒரு ட்ராபிக்ல

மாட்டிகிட்டு இருக்கேன்‌. வரத்துக்கு கொஞ்ச நேரம்‌ ஆகும்‌. அப்புறம் என்னுடன்‌ செம்பருத்தியும்‌ இருக்காங்க…” என்பதையும்‌ சொல்லிவிட்டு போனை கட்‌ பண்ணினான்‌.

செம்பருத்தி முகத்தில்‌ பதற்றம்‌ தெரிந்தது.

“என்னாச்சு செம்பருத்தி ஏன்‌ இப்படி டல்லா இருக்கீங்க?” என்று இளமாறன்‌

கேட்டபோது நடந்த விஷயங்களை சொல்லத்‌ தொடங்கினாள்‌ செம்பருத்தி

கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள்‌ அவள்‌ சொன்னதே பொறுமையோடு கேட்டுக்‌

கொண்டிருந்த இளமாறன்‌ சட்டென்று பதில்‌ சொன்னான்‌.

“எனக்கு எல்லா விஷயமும்‌ முன்பே தெரியும்‌.

“தெ…தெரியுமா?”

“ஒரு பொண்ணு என்னை காதலிக்கிறாளாம்‌. பழம்‌ நழுவி பால்ல விழுந்த கதையா இருக்கில்லே! என்றான்‌ ராஜராஜன்‌. உங்களை காதலிக்கறேன்னு என்கிட்ட தான்‌ மொதமொதல்ல சொன்னான். ஆனா அது காதல்‌ இல்ல சும்மா டைம்‌ பாஸ்ன்னு, அவன்‌ சொன்னப்‌ போது எனக்கு ரொம்பவே கோபம்‌ வந்தது எத்தனையோ பெண்களை விரட்டி விரட்டி காதலிச்சு ஏமாத்தி இருக்கான்‌. நண்பன்‌ என்று சொல்லிக்கவே எனக்கு அசிங்கமாதான்‌ இருக்கு. ஆனா உங்க விஷயத்துல அப்படி இல்ல. அந்த பொண்ணு தானாவே என்‌ வலையில்‌ வந்து விழுந்திருக்கா. நெருங்கி போனால்‌  காதல்,‌ கத்தரிக்காய்‌ அப்படின்னு டயலாக்‌ அடிக்கிறாளே தவிர கைக்கு சிக்க மட்றாடா என்று கவலையோடு அவன்‌ சொன்ன போது,

“ஒரு நல்ல குடும்பத்து பொண்ணோட வாழ்க்கையை இவன் கெடுத்துடுவானோன்னு நான்‌ ரொம்பவே பதறிப்போனேன்‌. வேண்டா அந்த மாதிரி ஒரு நல்ல பொண்ணோட வாழ்க்கையில்‌ விளையாடாதே? அது உனக்கு நல்லதில்லை. நீ பழகுற சாதாரண பொண்ணுங்கன்னா அதை ஈசியா எடுத்துப்பாங்க அவ ஒரு நல்ல குடும்பத்து பொண்ணு நாளைக்கு பின்னால ஏதாவது பிரச்சனை அது இதுன்னு வந்தா பாதிக்கப்படுவது நீயும்‌ அந்த பொண்ணும்‌ மட்டுமல்ல இரண்டு குடும்பமும்தான்‌.” என்றேன்‌.




“……………..”

“அவன்‌ எதையும்‌ கேட்கல உங்களுக்காகதான்‌ அவனோடு நான் சண்டை போட்டேன்‌…”

“அந்த பொண்ணு நான்தான்னு உங்களுக்கு எப்படிதெரியும்‌?” என்றாள்‌.

“உங்க போட்டோவை காட்டி இவள்தான்‌ அந்த பொண்ணுன்னு சொன்னான்‌. ஆறு மாதத்துக்கு பிறகு அதே போட்டோவை காட்டி உனக்கு பார்த்திருக்கிற

பொண்ணு இதுதான்னு எங்கம்மா உங்க போட்டோவை காட்டியபோது என் மனநிலை எப்படியிருந்தது தெரியுமா?”

தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தாள்‌. சற்றுநேரம்‌ எதுவும்‌ பேசாமல்‌ காரை ஓட்டிவந்தவன்‌ ஓரிடத்தில்‌ காரை நிறுத்திவிட்டு முன்னாடி வந்து உட்காருங்கள்‌ பேசுவதற்கு சுலபமா இருக்கும் என்றான்‌. மறுப்பேதும்‌ சொல்லாமல்‌ முன்னிருக்கையில்‌ வந்து அமர்ந்தாள்‌.

“இப்போ சொல்லுங்க என்னை கல்யாணம்‌ பண்ணிக்க உங்களுக்கு சம்மதமா?”என்றான்‌.

“இந்த கேள்வியை நான்தான்‌ கேட்கணும்‌. அதாவது நண்பனை காதலித்தவளை நாம எப்படி மனைவியாய்‌ ஏற்றுக்கொள்வது என்ற தயக்கம் உங்களுக்கு இருக்குமே அதனால்தான்‌ அப்படி கேட்டேன்”‌.

“பதின்வயதில்‌ உள்ள பெண்‌ குழந்தைகள்‌ காதல்‌ என்றால்‌ என்ன? என்பதை அறிந்து கொள்ள முடியாத வயதிலேயே காதலில்‌ விழுவது நமக்கு தெரிந்த ஒன்றுதான்‌. அப்படித்தான்‌ உங்க காதலும்‌ அதை காதல்‌ என்று சொல்வதைவிட ஒரு மனிதன்மேல்‌ தோன்றும்‌ நம்பிக்கை என்றே சொல்லலாம்‌. பக்குவமில்லாத வயதில்‌ நல்லது செய்பவர்கள்‌ எல்லாருமே ஹீரோவாகத்தான்‌ தோன்றும்.‌ ஆனால்‌ அவர்களில்‌ உண்மையான மறுப்பக்கம் தெரிய வந்தால்‌ நம்முடைய தோல்வியை மனம்‌ ஏற்றுக்கொள்ளாது. அதுதான்‌ நடைமுறையில்‌ நடக்கிறது.”

“ம்ம்‌…எனக்கு புரியுது…”

“ஒரு விஷயம்‌ நல்லா புரியுது அதாவது வெளி தோற்றத்தை வச்சு எல்லோரையும்‌ நம்பிடுவிங்கன்னு மட்டும் நல்லா புரியுது. ஆனா இப்போ அப்படியில்லை. நல்லது எது கேட்டது ஏதுன்னு புரிஞ்சிக்கிற பக்குவம் உங்ககிட்ட வந்தாச்சு. இல்லேன்னா உங்களை வருத்திகிட்டாவது அவங்கிட்ட இருந்து தப்பிக்கனுன்னு நினச்சிருப்பீங்களா?”

“அந்த மேனேஜர்‌ சதீஸ்‌ மட்டும்‌ ஜூசை மாத்திகொடுக்கலேன்னா இந்நேரத்துக்கு என்‌ வாழ்க்கையே நாசமாயிருக்கும்‌.” கண்‌ கலங்கினாள்‌.

“உண்மைதான்‌ இந்த ஜூஸ்ல மயக்கமருந்து கலந்திருக்கேன்‌. இதை அந்த பொண்ணுகிட்ட கொடுத்துடுங்க அவ என்‌ உட்பிதான்‌ கொஞ்சநேரம்‌ ஜாலியா இருக்கனுன்னு ஜுஸ்‌ பாட்டிலையும்‌ பத்தாயிரம்‌ பணத்தையும்‌ சதீஸ்கிட்ட கொடுத்திருக்கிறான்‌ அந்த ராஸ்கல்‌ ராஜராஜன்‌. இப்படி பல பெண்களிடம் நடந்துகொண்டிருக்கிறான் என்று என்னுடைய நண்பன் ஒருவன் சொன்னபோது ராஜராஜனோடு சண்டை போட்டேன். ‘அம்மா மேல் சத்தியம் பண்ணி சொன்னான் இனிமே இப்படியெல்லாம் நடந்துக்கொள்ள மாட்டேன் என்றான் அதை நம்பியது என் முட்டாள் தனம். நல்லவேளை சதீஸ்‌ ஜூசை மாத்தி அவனுக்கு கொடுத்திட்டு உங்களுக்கு சாதா ஜூஸ்சை கொடுத்ததால நீங்க தப்பிச்சிட்டீங்க…ஆனாலும்‌ அவன்‌ மேல்‌ காதல்‌ இல்லைன்னு நிரூபிக்க உங்க கையை கிழித்துக்‌ கொள்ளணுமா என்ன?”

“இல்ல….அதுக்காக கையை கிழித்துக்கொள்ளவில்லை நீங்க போட்ட ஜெயினை கழட்டிட்டு என்‌ கிட்ட வான்னு சொன்னார்‌. அது என்னால முடியாதுன்னு சொன்னேன்‌. முரட்டுத்தனமா ஜெயினை அறுக்க முயன்றார்‌. அங்கிருந்த கத்தியை எடுத்து என்‌ கையை கிழித்துகிட்டேன்‌. அதற்குள்‌ அவரே மயங்கி சாய்ந்திட்டார்‌.”

சற்றுநேரம்‌ அமைதியாய்‌ இருந்தவன்‌ “வெறும்‌ ஜெயின்தானே கேட்டா கழற்றி கொடுக்க வேண்டியதுதானே?”

“நீங்கதானே சொன்னீங்க நல்லது எது கேட்டது ஏதுன்னு புரிஞ்சிக்கிற பக்குவம்‌ எங்கிட்ட வந்தாச்சுன்னு. கெட்டதுக்காக ஒரு நல்லவரை நான்‌ இழக்க தயாரா இல்லை. ராஜராஜானோடு பழகியது ஒரு கானல்‌ நீர்‌ கனவுபோல. ஆனால்‌ நீங்க அப்படியில்லை. என்‌ சுவாசம்‌. என்‌ நாடி துடிப்பு, என் ரெத்தவோட்டம்‌ எல்லாமே நீங்கதான்‌. மொத்தத்தில்‌ என்‌ வாழ்க்கையே நீங்கதான்‌. இது வெறும் வாய் வார்த்தையில்லை. உள் மனசு வெளிப்படுத்தும் உண்மை.” என்று சொல்லிவிட்டு முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி குலுங்கி அழத்தொடங்கினாள்‌. காரை ஓரங்கட்டிவிட்டு ஒரு நிமிடம்‌ கண்களை இருக்க மூடி திறந்தவன்‌ அடுத்த நிமிடம்‌ அவளை வாரி அணைத்துக்கொண்டான்‌.

“செம்பருத்தி…நீ எனக்கு கிடைத்த பொக்கிஷம்‌ செம்பருத்தி…?”

இருவருக்குகிடையில்‌ இடைவெளி குறைந்துகொண்டே சென்றது.

முற்றும்‌




What’s your Reaction?
+1
25
+1
14
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!