Serial Stories பாதரஸ பற​வைகள்

பாதரஸ பற​வைகள் -17

17

சாயங்கால நேர குளிர்ச்சியில் செடிகளுக்கு மத்தியில் அழகிய பூவாய் மலர்ந்திருக்கும் அபிராமியைச் சுற்றி சிவாவும் ராகவனும் அமர்ந்திருந்தார்கள். யார் பேச்சினை முதலில் ஆரம்பிப்பது என்ற தயக்கம்.

என்ன அபிராமி வரச்சொல்லிட்டு இப்படி பேசாம இருந்தா என்ன அர்த்தம் ராகவனின் கேள்விக்கு ஒரு முடிவிற்கு வந்தவளைப் போல பேச்சை ஆரம்பித்தாள் அபிராமி

பின்னே வந்து இரண்டு வாரம் முழுசா இருக்குமா ? அதுக்குள்ளே ராதிகாமேல ஒரு விருப்பம் விழுந்து அதை செயல்படுத்த காய் நகர்த்த அரம்பிச்சிட்டீங்க ஆனா இவரானால் வருஷக்கணக்கா காத்திருந்தாலும், 

இரு இரு நீ என்னைக் காதலிக்கிறேன்னு தெரிஞ்சிக்கவே இத்தனை வருடங்கள் ஆயிற்றே, கையில் ஒரு சயனைடு பாட்டிலோடு சுத்தற ஒரு பொண்ணை காதலிக்கிறேன்னு சொல்லவே ஒரு தைரியம் வேணுமே அதுயிருக்கு அய்யாவுக்கு சிவா காலரைத் தூக்கிவிட, அவர்கள் இருவரின் சீண்டலை ரசித்தபடி தானும் ராதிகாவும் எப்போது இப்படி மனம்விட்டு பேசப்போகிறோம் என்று ஒரு தவிப்பை படரவிட்டது. 

அய்யாவுக்கு அத்தனை நாள் காத்திருக்க வேண்டாம் என்றால், வேற ஏதாவது பக்கம் போகலாமே அதான் அந்த விஜி தயாராக இருக்காளே ?!




இப்போ ஏன் அவளை இழுக்கிறே எனக்கு இந்த அபிராமியே போதும் அம்பிகையே ஈஸ்வரியேன்னு காலிலேயே விழுந்து கிடக்க நான் தயார் சிவா சொல்ல

விளையாட்டு போதும் பாட்டியும் லட்சுமி அக்காவும் ரொம்ப சீரியஸா பேசிகிட்டு இருக்காங்க சிவா

ம்…எனக்கும் தெரியும் இந்தபிள்ளையாண்டான் நேத்து ராத்திரி கண்ணுல தண்ணிவைச்சிட்டு கிடந்தான் நான்தான் அபயஅஸ்தம் கொடுத்தேன் என்று ராகவன் சிரிக்க, 

அபிராமி உனக்கு படிப்பும் முடியப்போகிறது இதுக்கு மேல உன்னை வீட்டுலே வைச்சிக்கிட்டு என்னால பாதுகாக்க முடியாதும்மா உன்னையும் உன் சொத்தையும் ஒருத்தர்கிட்டே ஒப்படைக்கணும், வயசான காலத்திலே ஓடியாடி என்னால மாப்பிள்ளை பார்க்க முடியாது நம்ம பக்கத்து வீட்டு லட்சுமி இருக்கிறாளே அவளோட அக்கா பையன் அதான் அந்த மாடிவீட்டு தம்பி சிவாவோட தங்கியிருக்கானே ராகவன் அவனைப் பத்தி நீ என்ன நினைக்கிறே ? லட்சுமிக்கு உன்னை அவனுக்கு பண்ணி வைக்கணும் என்று கொள்ளை ஆசை. எனக்கும் பிடிச்சிருக்கு, உனக்கும் பிடிச்சிருந்தா உடனே பேசிடலாம் இன்னும் கொஞ்ச நாள்ல அவனோட அம்மா இங்கே வர்றாங்களாம். எனக்கு இதுதான் சரின்னு படுது அபிராமி. 

பாட்டி…இப்போதான் படிப்பையே முடிச்சிருக்கேன் கொஞ்சநாள் போகட்டுமே 

அப்படி என்னதான்டி செய்யப்போறே ? நான் நல்லா கதியா இருந்தாலும் பரவாயில்லை என்நிலைமை இன்னைக்கோ நாளைக்கோன்னு இருக்கு அதுக்குள்ளே உன்னை ஒருத்தன் கையில் பிடிச்சிக் கொடுத்துட்டா நான் நிம்மதியா கண்ணை மூடுவேன். வேண்டான்னு சொல்லாதேம்மா தாடையைப் பிடித்து கண்களில் நீரோடு பாட்டி கெஞ்ச அபிராமி ஏதும் பேசாமல் இன்னும் பத்துநாள் பரிட்சை முடிஞ்சிடும் அது வரைக்கும் எனக்கு கொஞ்சம் டைம் கொடு என்று அப்போதைக்கு அந்த விஷயத்தை தள்ளிப் போட்டாள்

பாட்டி இப்படி நேரா வந்து பேசுவாங்கன்னு நான் நினைக்கலை சிவா. இப்போ நான் மறுக்க வலுவான காரணம் வேண்டும். அதைவிட நம்ம விஷயத்தை பாட்டிகிட்டே சொல்லிடலாமே சிவா. நிச்சயம் எனக்கு நல்லவேலை கிடைக்கும். இருந்தாலும் உத்தியோகம் புருஷ லட்சணம் இல்லையா. இப்படி வீடியோ கேமிராவும் கையுமா அடுத்தவனுக்கு உழைக்கிறதைக் காட்டிலும் நீங்க ஏன் சொந்தமா ஒரு ஸ்டுடியோ வைக்கக் கூடாது. 

எனக்கும் அந்த யோசனை இருக்கு அபி. ஆனால் முன்பணம் வேண்டும். அப்படியிப்படி மிச்சம் பிடிச்சி இப்பத்தான் ஒரு வேல்யூவான கேமிராவை சொந்தமா பேசி வைச்சிருக்கேன் அடுத்தது ஸ்டியோதான். ஆனா கொஞ்சம் தாமதமாகும், பேங்கில் லோன் ஏற்பாடு செய்திருக்கிறேன் அதுக்கு சுரிட்டி கையெழுத்து கேட்கிறாங்க. அநாதை நான் எனக்கு யாரு சூரிட்டி கொடுப்பாங்க. அதனால் கொஞ்சநாள் தள்ளிப்போடு எனக்காக ஒரு இரண்டு வருடம். சிவா அபிராமியிடம் கெஞ்ச

என்பெயரில் பணம் இருக்கு சிவா அதையெடுத்து நீங்க ஏன் ஸ்டூடியோ தொடங்கக்கூடாது. நீங்கதான் என் லைப்புன்னு ஆனபிறகு பணம் எனக்குப் பெரிசா தெரியுமா என்ன ?

இல்லை அபி அது சரியா வராது. எனக்கு நீ மட்டும் போதும், அந்தப் பணம் உன்னைப் பெற்றவங்க உனக்காக உன் பாதுகாப்பிற்காக சேர்த்து வைச்சது கடைசிவரையில் அதை நான் தொடமாட்டேன். என்னால் சம்பாதிக்க முடியும் அதை நீ நம்பறயில்லை.

நம்பிக்கை இல்லைன்னு யார் சொன்னது சிவா, இப்போ ராகவன் மூலமா முளைச்சிருக்கிற பிரச்சனை எப்படி சமாளிக்கிறது ?

அவர்தான் ராதிகாவை கல்யாணம் செய்துக்கப்போறாரே அவங்க அம்மா கூட அதற்கு ஒப்புக்கிட்டாங்க. நேத்து நைட்டு ராகவன் அவங்க அம்மாவோட பேசினான் அவங்க வந்ததும் இந்தப் பிரச்சனை முடிந்துவிடும். 

பாட்டியோட தீர்மானம் ராகவனோட முடியாது சிவா. எப்படியும் எனக்கு கல்யாணம் பண்ணியே தீரணுன்னுங்கிற முடிவில் இருக்காங்க ராகவன் இல்லைன்னா அடுத்து வேறொருத்தரை பார்க்க தொடங்கிடுவாங்க எத்தனை காரணம் காட்ட முடியும். 

அதுக்காக….

சீக்கிரம் முடிவு எடுக்கணும் சிவா.




சிவா நான் பாரினில் விஷியூவல் கம்யூனிகேஷன் படிச்சேன். இங்கே சொந்தமா விளம்பரக் கம்பெனி வைக்கத்தான். என் ஸ்டூடியோக்கு விளம்பரம் படம் எடுக்கவும் எடிட்டிங் தொடர்பான வேலைகளைப் பார்க்கவும் ஒரு நம்பிக்கையான ஆள் தேவை யாரோ ஒரு ஆளை வேலைக்கு எடுப்பதற்கு பதில் நான் பணம் போடறேன் நீ உழைப்பை போடு பார்ட்னர்ஷிப்பில் வேலையை ஆரம்பிப்போம். 

ராகவா….

இது நட்புக்காக வந்த ஆபர் இல்லைடா உனக்கு அதற்கான தகுதியும் இருக்கு, உனக்குன்னு ஒரு தொழில் வந்த பிறகு நீ அபிராமியோட பாட்டிகிட்டே பேசறதுக்கும் எந்த தடையும் இருக்காது என்ன சொல்றே?

சிவாவின் கண்களில் கண்ணீர் அபிராமி கூட இலேசாக கசிந்தாள். 

இதுக்கும் மேல என்ன சொல்லணும் பெரிய சிக்கல் தீர்ந்து போச்சே.  அடுத்து அம்மா வருவதற்குள் சீக்கிரம் ராதிகாவிடம் பேசி அவ சம்மதத்தை வாங்கணும். எல்லாம் முடியும் வரையில் அந்த விஜிகிட்டே ராதிகா சிக்காம பார்த்துக்கணும். அதுக்கும் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன் என்னோட மனசில இருக்கிற எல்லாத்தையும் ராதிகாவுக்கு புரியறாமாதிரி ஒரு கடிதத்தில் எழுதி வைத்திருக்கிறேன் என்று தன் சட்டைப்பையில் மடித்துவைத்திருந்த காகிதத்தைக் காட்டினான் ராகவன். 

எல்லாம் நல்லபடியாய் முடியும் என்று அந்த இளம் நெஞ்சங்களின் எதிர்பார்ப்பை குலைக்கும் வகையில் விஜியும் மதனும் அபிராமிக்கு எதிராக திட்டம் தீட்டிக் கொண்டிருப்பதை அறியாமல் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார்கள். 

அந்தக் கிணற்றடியின் தனிமைதான் ராதிகாவிற்கு அப்போதைய தேவையாய் இருந்தது. அருகில் துணி உலர்த்தும் கல் அவளைப் போல் எத்தனை பளுவைத் தாங்குகிறது, வெண்மையை பறைசாற்ற 

தன்மீது அழுக்கைப் பூசிக்கொள்கிறது. அப்படித்தான் ஒவ்வொரு பெண்ணும் தன் குடும்பத்தின் பலனுக்காக தன் மீது கறையைப் பூசிக்கொள்கிறாள்.  ராதிகாவும் ஒரு காலத்தில் அப்படித்தானே இருந்தாள். தன் கணவனின் தவறான செயல்பாடுகள் வெளியே தெரியக் கூடாது என்பதற்காக தன்னையே மாய்த்துக் கொள்ளவும் துணிந்தாளே ? ஆனால் அதன் பலன் என்னவோ பூஜ்ஜியமாகித்தான் போனது. 

கணவன் விபத்தில் இழந்தான் என்பதுதான் அனைவருக்கும் தெரியும் பெண்பித்தனாய் அவன் அலைந்ததும், தங்கையின் மேலேயே ஒரு பார்வையை வைத்ததால் தாய் வீட்டுப் பக்கமே அவள் வராமல் தவிர்த்ததும், ஒரு கல்யாணமான பெண்ணின் தொடுப்பினால் நடந்த விபத்து அல்லவா அது ! கடைசியில் அவனின் மிச்சமாய் பிள்ளையும், கைம்பெண் பட்டமும், இந்தக் குட்டிப் பயல் மட்டும் இல்லையென்றால் என் நிலைமையென்ன, அவனுக்காகவாவது ஒரு வேலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்

இன்னும் எத்தனை நாளைக்குத்தான் விஜிக்கு சுமையாகவே இருப்பது. அவளும் சின்னப்பெண் என் அளவிற்கு வலிகள் தாங்கியிருக்கவில்லை அவளுடைய இல்லறமாவது நன்றாய் அமைய வேண்டும் என்று வேண்டுதல்களையும் வைத்தபடி அடிக்கும் வெய்யிலின் வெப்பம் கூட உரைக்காமல் அமர்ந்திருந்தாள். 

அந்த நேரத்தனிமைதான் அலாதியானாது. எல்லாரும் கைவேலையாக இருக்கும் சமயம் நான்கு மணிக்கும் மேல் பாதிபேர் கிணற்றடிக்கு வந்து விடுவார்கள். இருப்பது மூன்று பேர் விருந்து சமையலா சமைக்கப் போகிறாள் என்று அம்மாவும் அவளை தொந்தரவு செய்வது இல்லை ஆனால் இதே நேரங்களில் அதே வெய்யிலின் வெப்பத்தை சுமந்தபடி மொட்டைமாடியில் ராகவன் அவளை கவனிக்கிறான் என்பதை அவள் அறியத்தான் இல்லை, அறிந்தபோது மனதை பயம் கவ்வவே செய்தது.

அதிலும் அவன் பேசிய முதல் நாள், விஜியின் சுடு வார்த்தைகளில் தவித்து வெளிவந்த கண்ணீருக்கு ஆறுதலாய் மருந்திடுவது போலல்லவா அவனின் பேச்சு இருந்தது. விஜி என்ன நினைப்பில் சொன்னாளோ ஆனால் ஒரு அந்நியன் அதிலும் இளைஞன் கணவனை இழந்து ஒரு கைப்பிள்ளையோடு இருக்கும் சிறு பெண் இருவரும் இணைந்து பேசுவது மற்றவர்களின் கண்களுக்கு தவறாகவே படும் அது யாருக்கும் நல்லது இல்லையே எனவே அவள் ராகவனின் பார்வைகளைச் சந்திக்கும் போது கூடுமானவரையில் ஒதுங்கியே போனாள். குரங்கை நினையாதே மருந்தை அருந்தும் போது என்பதைப்போல அவனை மறுக்க மறுக்க மனம் முழுவதும் ராதிகாவையும் அறியாமல் வியாபிக்கத் தொடங்கிப் போனான் ராகவன். இந்த மாற்றம் ராதிகாவிற்கு பெரும் பயத்தைத் தந்தது. 

ஒருவேளை ராகவனின் பார்வைகளுக்கு காரணம் அவள் நினைப்பதைப் போல இருந்தால் எத்தனை அருமையான பெண் நீ அண்ணாக இருந்தாலும் அவன் செய்தது தவறு அண்ணி ச்சீ அவனே போன பிறகு அந்த உறவு முறை சொல்லி அழைப்பதில் என்ன புண்ணியம் வந்துவிடப்போகிறது. ஒரு குழந்தையின் பிறப்பிற்கு பிறகு வாழ்க்கை முடிந்து போய்விடப்போவதில்லை உனக்கு விருப்பம் இருந்தால் நானிருக்கிறேன் அண்ணனின் அத்தனை சேவைகளையும் உனக்கு நான் செய்கிறேன் நீ ஒப்புக்கொண்டால் என்று சேலைத்தலைப்பில் கைவைத்த கொழுந்தனின் வக்கிரப் பார்வையில்லை இது அதற்கு பயந்துதானே அங்கிருந்து அம்மாவின் வீட்டுக்கு ஓடி வந்தாள்.




ஒருவேளை இவனும் பசுத்தோல் புலியாக இருந்துவிட்டால், நல்லது கெட்டதற்கு சகுணத்தடையாக தெரியும் தான் மற்றவர்களின் கண்களில் உடலின் சதை மட்டும் செழிப்பான குணமாய் தெரியவே 

வீட்டிற்குள்ளேயே சுருங்கியும் போனாள். அவளின் உலகம் அடுப்படியும், ராஜாக்குட்டியும் ஆகிப்போனேதே ?!

ராகவனின் பார்வை அவளுக்குள்ளும் ஏன் சலனத்தை ஏற்படுத்த வேண்டும் இத்தனைக்கும் பல வார்த்தைகளை அவன் பிரயோகிக்கவில்லை மாறாக பார்வைகளை வீசுகிறான். நான் இருக்கிறேன் என்று அந்தப் பார்வைகளாலேயே ஆறுதல் தருகிறான். அந்த கதகதப்பில் புதைந்து கொள்ளத்தான் இந்த வெக்கம் கெட்ட மனதும் அலைகிறது. ரவி என்னையும் மீறி என்னுள் புகுந்தது உண்மை. ஆனால் இது நிலைக்காதே ? 

அபிராமிக்கு ராகவனைக் கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்றுதானே பேச்சு நேற்று கூட லட்சுமி அக்கா அம்மாவிடம் வந்து இன்னும் நாலைந்து நாளில் ராகவனோட அம்மா அதான் எங்க அக்கா வர்றா ? அப்பவே அபிராமியைப் பார்த்து நிச்சயம் மாதிரி வீட்டோட வைச்சிடலான்னு பிரியப்படறோம் அன்னைக்கும் உங்க சமையல்தான் விருந்து சாப்பாடும், ஒரு ஸ்வீட்டும் பண்ணி அசத்திடணும் எத்தனையாகுன்னு முன்னாளே சொல்லிடுங்க என்று சந்தோஷமாய் பேசிவிட்டு போனார்களே ?  நீ சமையல்காரி என்று சொல்லாமல் சொல்லி கரண்டியைத் திணித்துவிட்டு போகிறபோது நான் வீட்டக்காரியாக நினைக்கலாமா ? 

முதல் திருமணம் அம்மாவின் விருப்பப்படி எங்கே நாத்தியின் அசட்டுப் பிள்ளைக்கு தன் பெண் பலியாகிவிடுவளோ என்ற பயத்தில் சரியாக விசாரிக்காமல் அவளும் ஏமாந்து என்னையும் ஏமாற்றி ஆனால் அந்தத் திருமணத்தில் எந்த எதிர்பார்ப்புகளும் எனக்கு இல்லையே ? கொலுப்பொம்மையைப் போல அலங்கரித்து நமஸ்கரிக்கச் சொன்னவர்களுக்கு எல்லாம் நமஸ்கரித்து எல்லாம் முடிந்து வேடம் கலைத்த வேஷக்காரியாய் அலைந்திருக்கும் போது இப்போது என் மனம் உண்மையில் விழுந்திருப்பது ராகவனின் விழியிடம்தானே ஆனால் கடலின் ஆக்ரோஷமான அலைகளின் நுரைகளுக்கு எல்லாம் ஆயுள் இருப்பதில்லை அதைப் போலத்தான் என் நிலையும். தன்னையும் மீறி அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. 

ராதிகா அம்மாவின் குரலில் கலைந்து வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு உள்ளே நுழைந்தாள். நான் துணியை காயப்போட்டு வர்றேன் ராஜாகுட்டி தூங்கறான் நீ பாத்துக்கோ என்று. துணிகளை உலர்த்த போக அம்மா மாடியேறி போக  ஒரு தீர்கமான முடிவோடு காத்திருந்தான் ராகவன். ஆன்ட்டி என்று தன் பின்னால் நிற்கும் ராகவனை வியப்பாய் பார்த்தாள் ராஜம்.




What’s your Reaction?
+1
6
+1
7
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!