Beauty Tips அழகு குறிப்பு

முக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை திரெட்டிங் செய்ய சில டிப்ஸ்!…

பெண்களின் முகத்திற்கு அழகு தருவதில் புருவங்களுக்கும் முக்கிய பங்குண்டு. சில பெண்களின் புருவங்கள் மிக அடர்த்தியாக இருக்கும். சிலருக்கு அடர்த்தி குறைவாக இருக்கும். இவ்வாறு இரண்டு அமைப்பு கொண்ட புருவத்தினரும் அதனை சீர் செய்து அழகாக்கிக் கொள்வது அவசியம்.




அடர்த்தியான புருவங்கள் உள்ளவர்கள் அழகு நிலையங்களில் செய்யப்படும் திரெட்டிங்கை செய்துகொள்ளவும்.

அடர்த்தி குறைவாக உள்ளவர்கள் தினமும் சிறிதளவு விளக்கெண்ணெயை புருவத்தில் தடவி வந்தால் புருவ ரோமங்கள் அடர்த்தியாக வளரும். வட்டமான முகமுடையவர்கள் வளைவாக திரெட்டிங் செய்யக்கூடாது. புருவத்தின் நுனியில் வளைக்க வேண்டும். இதனால் மேலும் முகம் வட்டமாகத் தெரியாமல் அழகாகக் காட்சி அளிக்கும்.

சதுரமான முகம் உள்ளவர்கள் புருவத்தின் நடுவில் வளைவாக திரெட்டிங் செய்துகொண்டால் முகம் வட்டமாகக் காட்சி தரும். நீளமான முகம் கொண்டவர்கள் திரெட்டிங் செய்துகொள்ளும்போது, புருவத்தின் கடைசியில் சிறிது வளைத்து செய்ய வேண்டும். இப்படி செய்தால் முகம் பார்ப்பதற்கு வட்டமாக, அழகாகத் தெரியும்.

நீளவட்ட முகமுடையோர் கவனமாக திரெட்டிங் செய்தல் வேண்டும். புருவத்தின் கடைசியிலும் இல்லாமல், முதலிலும் இல்லாமல் சற்றே நகர்த்தி, லேசாக வளைத்து திரெட்டிங் செய்ய வேண்டும். இதனால் முகம் நீளவட்டமாகத் தெரியாமல் அழகாகக் காட்சியளிக்கும்.முக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை திரெட்டிங் செய்யுங்கள். அழகாகத் திகழுங்கள்.




What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!