Serial Stories நெஞ்சம் மறக்கவில்லை

நெஞ்சம் மறக்கவில்லை-10

10


இரண்டு நாட்களாக மகளின் போக்கில் நிகழ்ந்த மாறுதல்களை மகேஸ்வரி கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்.மகளின் முகம் சிறிது வாட்டம் கொண்டாலும் என்னவோ ஏதோ என்று தாயின் மனம் பதறியது.

மாலையில் பள்ளியில் இருந்து அருணும், ஆர்த்தியும் வந்தார்கள். அக்கா நாளையிலேயேிருந்து அரைப் பரீட்சை ஆரம்பமாகுது,காலையிலே சீக்கிரமா எழுந்து படிக்கணும்.
அருண், ஆர்த்தி நான் உங்ககிட்டே கொஞ்சம் பேசணும்.

என்னக்கா..

மலர் வசந்தி அக்கா வந்து கூறிய விவரம் அனைத்தையு கூறினாள். நீங்க இரண்டு பேரும் இன்னும சின்னக் குழந்தைகள் இல்லை, வளர்ந்திட்டீங்க, வீண் விடையாட்டை விடுத்து , பொறுபபை உணர்ந்து படிக்கணும் சரியா?

அக்கா அப்படின்னா நீ எங்க எல்லாரையும் விட்டுட்டு அங்கே போகப் போறீயா?

ஆமாண்டா,,,

நீ கவலைப்படாதேக்கா, நான் எல்லாரையும் பார்த்துக்கறேன் அப்பா பழைய மாதிரி நம்ம கூட இருக்கணும். ஆனா நீயும் எங்களுக்கு முக்கியம் அக்கா, எங்களுக்காக உன்னை ரொம்பவும் நீ வருத்திக்க வேண்டாம்.




அருணின் அந்தப் பேச்சு மலரை வியப்படைய செய்தது. இத்தனை நாள் அவனை சிறுவன் என்றே நினைத்திருந்தாள். ஆனால், இன்று அவனின் பேச்சில் ஒரு பண்பட்ட தோரணை தெரிய மலர் அசந்துதான் போனாள்.

பிள்ளைகள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு இக்குடும்பத்தின மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்துவதை கண்ட தாய்க்கு தன் வளர்ப்பு சோடை போகவில்லை என்ற சந்தோஷம் உண்டானது.இரவு மற்ற பிள்ளைகள் தூங்கியதும் கணவருக்கும் உணவு தந்து மருந்துகளைத் தந்தபின் மகளின் அறைப்பக்கம் நகர்ந்தார் மகேஸ்வரி.

மலர் தூங்கிட்டியா?

தூக்கம் வரலைம்மா சும்மாதான் படுத்திருக்கேன்.மகேஸ்வரி கட்டிலின் நுனியில் அமர்ந்தவர் மெல்ல அழத் துவங்கிட, மலர் பதறிப் போனாள்.

என்னம்மா இது சின்னப்பிள்ளையாட்டம்?

மலர்ம்மா என்னைப் பொறுத்தவரை இந்தக குடும்பம்தான் உலகம் நீங்க எல்லாரும் தான என் உயிர், உங்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னா என்னாலே தாங்க முடியாது,உங்கப்பாவுக்கு நடந்த விபத்தில் முதுகுத் தண்டு பாதி உடைஞ்சி படுத்தப படுக்கையா இருக்கமிண்ணு டாக்டர் சொன்னப்பவே நான் பாதி செத்துட்டேன். இப்போ உன்னையும் வசந்தாவையும் இத்தனை தூரம் அனுப்பணுமின்னு நினைக்கும் போது எனக்கு பயமா இருக்குடி,மலர் தாயின் கரங்களை அழுத்திப் பிடித்தாள். அம்மா நானும் அக்காவும் சின்னப் பிள்ளைங்க இல்லை, எங்களுக்கும் உலகம் தெரியும், என்ன படிப்பு முடிச்சு மூணுவருடம் கழிச்சு செய்யப் போறதை இப்பவே செய்யறேன். அவ்வளவு தானே உங்களையெல்லாம் நினைச்சவுடனே பார்க்க முடியாதுங்கற கவலையைத் தவிர வேற எந்தக் கவலையும் எனக்கில்லை, இந்த ஒரு வார்த்தை போதும் டீ என் தங்கமே! உன்னைப் பெத்த வயிறு குளிர்ந்திடுச்சு.




மலர் தாயின் மடியில் முகம் புதைத்துக் கொண்டாள். காட்டன் புடவையில் அம்மா பூசிய மஞ்சளின் வாடையும் கலந்து வர அதை அனுபவித்தபடியே அம்மாவின் அன்பான வருடலில் மற்ற எண்ணங்களையெல்லாம் மறந்த நிலையில்!

கருப்பு நிற இரும்புக் கதவுகளைத் திறந்ததும் உள்ளே நுழைந்தது காண்டஸா கார்! ராஜனும் அவனுடன் இன்னுமொரு இளைஞனும் இறங்கினார்கள்.

செம்மன் பாதையில் செடிகள் மரியாதையோடு அணிவகுக்க இருவரும் நடந்தனர். அண்ணா நீ என்னைப் பற்றி இன்னமும் அண்ணிகிட்டே சொல்லலையா?

சொல்லியிருக்கேன் ஆனந்த் வா ஆபீஸ் ரூமில் இருப்பாங்க ,

காலை நேரம் ஆதலால், தனித்தனி பிரிவுகளில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. நண்டும் சிண்டுமாய் பிள்ளைகள் கோரஸாய் கத்திக்கொண்டு, இருக்க பாதி அழுக்கும் வெள்ளைமாய் நிறைய துணிகள் வெளுக்கப்பட்டு இருக்க, நடுநாயகமாய் தேசியக் கொடி கம்பத்தில் பறக்க விடப்பட்டு இருந்தது.

உணவுக் கூடத்தைக் கண்டு, பின்னர் ஆபீஸ் ரூமை அடைந்தார்கள். வசந்தி அலுவலக அறையில் காத்திருந்தாள். அவர்கள் இருவரையும் கண்டதும் பொதுவான ஒரு புன்னகையைத் தவழவிட்டாள் வசந்தி.
வசந்தி இது என் தம்பி ஆனந்தன்!

இவனுடைய கம்பெனியில்தான் உன் தங்கை மலருடைய வேலைக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன். சரி உங்க வீட்டில் ஒத்துக்கிட்டாங்களா வசந்தி?

நான் நேத்து பேசிட்டேன். ஒப்புக்கிட்டே மாதிரிதான், நீங்க மற்ற ஏற்பாடுகளை கவனிக்கலாம். இருங்க கூல்டிரிங்ஸ் வாங்கிட்டு வரச் சொல்றேன்.

அதெல்லாம் வேண்டாம் அண்ணி.

அண்ணியா?

அவஸ்தையாய்ப் பார்த்தாள் வசந்தி.

அண்ணா எல்லா விஷயத்தையும் என்கிட்டே சொல்லிட்டான்.

எதார்த்தை உணர்ந்து நீங்க எடுத்த முடிவு உண்மையிலேயே அற்புதம்! என்னலான எல்லா உதவிகளையும் நான் உங்களுக்கு செய்கிறேன்.




நன்றி.. என் தங்கையை நீங்க பார்க்க வேண்டாமா?

அவங்களுக்கு ஏபிசிடி கூடத் தெரியலைன்னாலும் பரவாயில்லை நான் சமாளிச்சிக்கிறேன்.

கவலைப்படாதீங்க, அவளோட பயோ டேட்டா இதுதான். அந்தப் பேப்பரை வாங்கிப் பார்த்தான் ஆனந்த், பரவாயில்லையே டைப்பிங் ஷார்டன்ட் எல்லாம்தெரியுமே ஆனா கல்லூரிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திட்டாங்க ஏன் அண்ணி? வேணுமின்னா அவங்க படிக்கட்டும் நான் அவங்க செலவை ஏத்துக்கறேன்.

வேண்டாம் ஆனந்தன்! மலர்ச்செல்வி அதற்கு ஒருகாலும் ஒப்புக்கொள்ள மாட்டா? ஏன்னா அவளுக்கு சுயமரியாதை அதிகம்.

சரி உங்க விருப்பம். சரி நான் கிளம்பறேன் அண்ணி, எனக்கு வெளியே கொஞ்சம் வேலையிருக்கு, அண்ணா நீ அண்ணி கூட போய் அவங்களைப் பார்த்திட்டு வந்திடு,

சரிடா

வர்றேன் அண்ணி, எனக்கு அவசரமான வேலையிருக்கு நான் உங்களை அப்புறமா சந்திக்கிறேன்.

அவன் அவர்களிடம் விடைபெற்று திரும்பும் சமயமும் மலர் ஆசிரமத்தில் நுழையும் சமயமும் சரியாய் இருந்தது. அந்நேரம் பள்ளியில் மணியடிக்கவும், பிள்ளைகள் நடுவில் வரிசையாய் ஓடிவர ஆனந்தன் அவர்களுக்கு வழிவிடுவது போல் அருகே இருந்த மரத்தின் பின்புறம் ஒதுங்கியவன் அவ்விடம் கடந்து செல்லும் மலரைக் கண்டுவிட்டான்.

இவள் எங்கே இங்கே? என்ற யோசனையோடு மேலும் அவள் பின்னயே பார்வையை ஓடவிட்டவன் மலர் நேராய் வசந்தியை அடைந்ததும் துணுக்குற்றான். அவர்கள் மூவரும் ஏதோ பேசுவது புரிந்தது. ஆனால், கேட்கவில்லை, ராஜின் செல்போனைத் தட்டினாள்.

ஹலோ

அண்ணா நான்தான்.

சொல்லுடா

டிக்கெட் எடுக்கணும், அண்ணியோட பேரும் அவங்க தங்கை பேரையும் சொல்லேன்.

ஒரு நிமிஷம் … ராஜ் விஷயத்தை வசந்தியிடம் கூறிட, வசந்தி வயது 27 மலர்செல்வி வயது என்று கூறவும் ஆனந்தன் குதிக்காத குறைதான்.

மலரின் மேல் அவன் கொண்ட காதல் உண்மையானது. பரிசுத்தமானது. ஆனால் காரணம் தெரியாமலே திடீரென்று அவனை மலர் வெறுக்கக் காரணமென்ன? சொன்னபடி, பத்து நாட்கள் கழித்து மலரைக் காண ஆவலோடு வந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவளைக் காணாமல் யாரிடம் கேட்பது என்று தவிக்க, வேறு வழியின்றி பார்வதி சித்தியிடமே கேட்டான்.

என்னமோப்பா திடீரென்று அந்தப் பொண்ணு கிளம்பிப்போய்விட்டது. போகும் போது உன்னிடம் இந்த கவரைத் தரச் சொன்னது. சித்தி நீட்டிய கவரை வாங்கியவன் உற்சாகமாய் பிரித்தான். ஆனால் அதிலிருந்த வாசகம் அவனுள் பொங்கிய இன்ப அலைக்கு வெந்நீர் ஊற்றியது போல் இருந்தது.

என்னப்பா அப்படி என்ன லெட்டரில் எழுதியிருக்கு? என்று ஆனந்தனிடமிருந்து வாங்கிப் படித்தவள். பாாத்தியா தம்பி ! அவளுக்கு என்ன திமிர் இருந்தா இப்படி எழுதியிருப்பா? அவளை விட்டா உனக்கென்ன வேற ஆளா கிடைக்காது. விடுப்பா. பார்வதி சித்தி பேசிவிட்டாலும் ஆனநஙமனதால் நிதானமாக முடியவில்லை, அந்த பூட்டிய வீட்டையே கண்டு இருக்க மனம் வரவில்லை என்றாலும்,அந்தமானில் தங்கி இருந்த தன் அண்ணனின் மனைவி விபத்தில் இறந்து விட்ட தகவல் அறியவும் உடனே அந்தமான் சென்று விட்டான்.

அடுத்த வருடம் விடுமுறையின் போது மலர் அங்கு வந்தாலும், பார்வதி வேறு ஊருக்குச் சென்றுவிட்டதால் ஆனந்தனைப் பற்றி அறிய எந்த வாய்ப்பும் இல்லாமல் போனது.

அதன்பிறகு இப்போது தான் அவளைக் காண்கிறான் ஆனந்தன். இடைப்பட்ட காலங்களில் அவள் பிரிவு தந்த வேதனையுடன் கழித்த தருணங்களை அவன் மனம் தானே அறியும் !

இப்போது வேறு ஒரு சூழ்நிலையில் அவள் குறிப்பிட்ட காலம் வரை தன்னுடன் இருக்கப் போகிறாள். அதிலாவது என்மேல் எந்த தவறும் இல்லையென்பதை மலருக்குப் புரிய வைக்கலாம். என்று நினைத்தவன். அதே நேரம் தன்னுடன் தான் அவள் பணியாற்றப்போகிறாள் என்று தெரிந்தால் இந்தப் பயணத்தையே நிறுத்திவிடுவாளே என்றும் அஞ்சினான்.

அதனால் அவள் கண்ணில் படாமல் இருப்பது தான் நல்லது என்று உணர்ந்தவன். டிக்கெட்டிற்கு ஏற்பாடு செய்துவிட்டு, பின் சில விதிமுறைகள் கொண்ட அக்ரிமெண்டையும் தயாரிக்கத் துவங்கினான்.




What’s your Reaction?
+1
17
+1
18
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!