karthikai deepangal Serial Stories

கார்த்திகை தீபங்கள்-16

16

குருபரன் பூந்தளிரை அழைத்து போன அறை கரஸ்பான்டுடையது .வாசலில் தயங்கி நின்றவளின் தோளை ஆதரவாக அணைத்து உள்ளிழுத்து போனவன் , அங்கிருந்த சுழல் நாற்காலியில் அவள் தோள்களை அழுத்தி அமர வைத்தான் .அனுராதா வாசலில் வந்து நின்றாள் .

” இந்த பள்ளிக்கூடத்தின் ஹெட்மாஸ்டர் அனுராதா மதினி .இதன் கரஸ்பான்டன்ட் நான்தான் பூந்தளிர் .ஐயா அவருடைய சொத்துக்களை நிர்வகிக்கும் பதவிகளை இப்படித்தான் குடும்பத்து ஆட்களை இரண்டிரண்டு பேராக சேர்த்து கொடுத்திருப்பார் .அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக இருக்கட்டுமென நினைத்து இப்படி செய்வார் .இதோ இந்த பள்ளி பொறுப்பை  படித்தவன் என்பதால் ஹெட்மாஸ்டர் பதவியை முருகேசன் அண்ணனுக்கும்  படிக்கவில்லையென்றாலும் நிர்வகிக்கும் திறமை எனக்கு உண்டென கரஸ்பான்டனட் பதவியை எனக்கும் கொடுத்திருந்தார் .அண்ணன் தனது வேலையை தன் மனைவிக்கு கொடுத்துவிட்டான் .நான் ….” என்றவன் நிமிர்ந்து அனுராதாவை உற்று பார்த்தபடி …

” எனக்கு அதிக படிப்பறிவு இல்லாத்தால் நிறைய படித்த என் மனைவிக்கு இந்த பள்ளிக்கூட கரஸ்பான்டன்ட் பதவியை கொடுக்கிறேன் ….” என்றான் .பேனாவை திறந்து பூந்தளிர் கையில் கொடுத்து  பைலை பிரித்து ” இங்கே கையெழுத்து போடு …” என்றான் .கை நடுங்க தடுமாறி நின்ற பூந்தளிரின் கையை பேனாவோடு சேர்த்து அழுத்தி பிடித்து ” ம் ….” என மிரட்டி கையெழுத்திட வைத்தான் .

” சுந்தரம் ….” எனக் கத்தி பியூனை வர வைத்தான் .” உடனே எல்லா வாத்தியார்களையும் வரச்சொல் “

ஐந்தே நிமிடங்களில் எல்லோரும் வந்துவிட , அவர்களுக்கு அந்தப் பள்ளிக்கூட புது கரஸ்பான்ட்ட்டை அறிமுகம் செய்தான் .இனி அவர்கள் அனைவரும் புது மேடம் சொன்னதைத்தான் கேட்க வேண்டுமென அனுராதாவை ஓரக் கண்ணால் பார்த்தபடி சொன்னான் .அனுராதா  முகம் சுருங்க அங்கிருந்து வெளியேறினாள் .உடல் பதற , படபடப்பாக அமர்ந்திருந்த மனைவிக்கு ஆதரவாக அவளருகில் ஒரு சேரை இழுத்து போட்டு அமர்ந்தவன் எல்லோரையும் போய் வேலையை பார்க்குமாறு அனுப்பி வைத்தான் .

” ஏன் இப்படி செய்தீர்கள் …? “

” உனக்கும் அனுராதா மதினிக்கும் என்ன பிரச்சினை …? “

” இந்த ஏற்பாடெல்லாம் செய்து முடிப்பதற்காகத்தான் என்னை ஒரு வாரம் கழித்து பள்ளிக்கு வரச் சொன்னீர்களா …? “

” படிக்கும் போது உங்கள் இருவருக்குமிடையே இருந்த பிரச்சனையை விடு .அதன் பிறகு வேறென்ன பிரச்சினை …? “

” இங்கே வைத்து ஒருநாள்…
நான் அண்ணன் மகனை கூட்டி வந்த போது ….”

” அது எனக்கு தெரியும் .ப்யூனிடம் கேட்டு தெரிந்து கொண்டேன் .அதற்கெல்லம் சேர்த்துத்தான் மதினிக்கு இந்த பதிலடி ….வேறு என்ன .. ?”

” வேறென்ன அவ்வளவுதான் .” பூந்தளரின் பார்வை அறை வாசலில் விழ ஆரம்பித்து விட்ட சூரிய கீற்றுகளில் இருந்த்து .

” இங்கே …என்னை பார் பூந்தளிர் .என் முகத்தை பார்த்து பேசு ….” பூந்தளிரின் முன் மேசையில் சரிந்து அவள் கண்களுக்குள் பார்த்தான் .தன் முகத்திற்கு வெகு அருகாமையில் இருந்த அவன் முகத்தில் பார்வையை பதித்தும் , பதிக்க முடியாமலும் பூந்தளிரின் விழிகள் படபடத்து அங்குமிங்கும் அலைந்தன.

குருபரன் தீவிரமாக பேசுவதற்காகத்தான் அவள் முகம் முன் குனிந்தான் .ஆனால் இப்போது பட்டாம்பூச்சியாய் மாறி படபடக்கும் மனைவியின் கருவண்டு விழிகள் அவன் பொறுப்பை ஆவியாக்கி ஒரு வித போதையை அளித்தது .நீண்டு வளைந்து படபடத்துக் கொண்டிருக்கும் அந்த இமை மயிர்களை தொட்டு தடவ அவன் விரல்கள் விழைந்த்து .

ஏதோ சொல்ல முடிவெடுத்து இமை படபடப்பை குறைத்து கணவன் முகம் பார்த்த பூந்தளிரின் இதயம் இப்போது படபடக்க ஆரம்பித்து விட்டது .என்ன பார்வை இது …அப்படியே எதிரிலிருப்பதை பிய்த்து திங்கும் பார்வை .தொண்டையை செறுமி கணவனை அந்த மோனத்திலிருந்து மீட்டாள் .

” ம் …சொல்லு …” என்றான் .அவன் விழி மயக்கம் குறைந்திருந்தாலும் அந்த அடிமனதை ஆணியடிக்கும் பார்வை , அப்படியேதான் அவள் முகத்திலேயேதான் இருந்த்து .

” இவ்வளவு பெரிய பொறுப்பை என் கையில் கொடுத்து விட்டு , என் மூஞ்சிக்கு நேரா மூஞ்சை வச்சிட்டிருந்தா நான் என்ன வேலை பார்க்கிறது …? ” எப்படியோ அவன் முகத்தை பார்க்காமலேயே பேசி முடித்துவிட்டாள் .

” சரி நீ இப்போது வேலையை பார் .ஆனால் எனது கேள்விக்கு நீ நாளையோ …மறுநாளோ பதில் சொல்லியே ஆக வேண்டும் ….” அவன் இருக்கைக்கு மீண்டு விட , நிம்மதி  பெருமூச்சொன்றை அவன்றியாமல் வெளியேற்றிவிட்டு
இப்போதும் அவனது வருடும் பார்வையை மாற்ற , ஒரு பைலை பிரித்து அவன் முன் வைத்தாள் .

” இதை கவனியுங்கள் .நம் ஸ்கூலுக்கு ஆரம்பத்தில்  பிப்த் ஸ்டான்டர்டு வரை அப்ரூவல் வாங்கியிருக்கிறோம் .பிறகு ஸ்டூடென்ட் ஸ்டென்த் கூட ..கூட …” பேசியபடி அவள் விரித்து வைத்த பைலை பார்த்த குருபரன் ” ஓவ் …” என அலறினான் .

ரொம்ப நாட்கள் அடியில் கிடந்த பைல் …அதனால் வண்டு , தேள்னு ஏதாவது அடைஞ்சி கிடக்கோ …பூந்தளிர் பதட்டத்தோடு பைலை தூக்கி புரட்டி பார்த்தாள் .

” தளிர் உனக்கு என் மேல் நிறைய கோபமிருப்பது தெரியும் .அதை குறைக்க என் கன்னத்தில் நாலு அறையாவது அறைஞ்சிடு .ஆனால் இந்த தண்டனை மட்டும் கொடுக்காதே …” பூந்தளிருக்கு புரியவில்லை .

” இங்கே பார் …இந்த வெள்ளைக்காரன்  எழுத்துக்கு பயந்துதான் , நான் காலேஜ் பக்கமே போகாமல்
பள்ளிக்கூடத்தோடு ஓடி வந்தேன் .திரும்ப என்னை இப்படி பள்ளிக்கூடத்தில் உட்கார வைத்து இந்த பாஷையை  காட்டி கொடுமை படுத்துகிறாயே .இது நியாயமா ? “

பூந்தளிர் அடக்க முடியாமல் சிரித்துவிட்டாள் .புன்னகையோடு அவள் சிரிப்பை பார்த்தவன் ” ம் …இதுதான் சரி .ரொம்பவும் யோசித்து மண்டையை குழப்பிக் கொள்ளாமல் இது போல் எப்போதும் இயல்பாக இரு ” என்றுவிட்டு எழுந்தான் .




” இங்கே நீ பார்த்துக் கொள்வாய்தானே .எதுவும் தேவையென்றால் ஒரு போன் …உடனே வந்து நிற்பேன் ….” கட்டைவிரலை உயர்த்தி காட்டி வாழ்த்தியவன் வாசல் வரை போய்விட்டு நின்று திரும்பி அவளை பார்த்தான் .தன் போனை எடுத்து அவள் அந்த பதவிக்குரிய இருக்கையில்  கம்பீரமாக அமர்ந்திருப்பதை ஒரு போட்டோ எடுத்தான் . ம் …என அதை பார்த்து திருப்தி பட்டுக் கொண்டான் .

நிமிர்ந்து அவளை பார்த்தவன் தன்னையே அவள் பார்த்தபடி இருக்க கண்டு அறை வாசலிலிருந்து அகல காலடியில்  மூன்றெட்டில் அவள் இருக்கையை நெருங்கினான் . ” அப்போதிருந்து இது என்னை இம்சித்துக் கொண்டிருக்கிறது ” என முணுமுணுத்தபடி தனது இரண்டு கை கட்டை விரல்களாலும் அடர்ந்து , நீண்டிருந்த அவள் இமை மயிர்களை வருடினான் .மென்மையாக …பிறகு அழுத்தமாக .

” குரு அடி விழுவதற்குள் தப்பிச்சு ஓடிடுடா …” தனக்கு தானே பேசியபடி விநாடியில் வெளியேறி மறைந்தும் விட்டான் .பூந்தளிர்தான் கதகதப்பேறி காந்திக் கொண்டிருந்த தனது இமைகளை வைத்துக் கொண்டு வேலைக்குள் இறங்க முடியாமல் ரொம்ப நேரம் தவித்துக் கொண்டிருந்தாள் .

,—————————-

” மாமா அவர் நம் பள்ளிக்கூட கரஸ்பான்ட்டா என்னை இருக்க சொல்கிறார் ….” குருபரன் தந்தையிடம் இதுபற்றி சொன்னானோ …என்னவோ ..தானே சொல்லி விடலாமென நினைத்து சொன்னாள் பூந்தளிர் .

” தெரியுமேம்மா .குரு என்கிட்ட கேட்காமல் எந்த வேலையும் செய்ய மாட்டான் ….”

” ஆனால் நீங்கள் மட்டும் அவரிடம் கேட்காமல் பெரிய பெரிய வேலைகளை செய்வீர்களா மாமா …? “

” உங்கள் கல்யாணத்தை சொல்கிறாயா …? ” பொன்னுரங்கம் உடனடியாக கணித்தார் .

” ம் …விரும்பாத திருமணத்திற்கு பிள்ளையை கட்டாய படுத்தலாமா …? “

” உன்னை விரும்பவில்லை என்று சொன்னானா …? “

பொன்னுரங்கத்தின் ஒவ்வொரு கேள்வியும் குத்தூசியாக இலக்கை துளைத்தது .இந்த கேள்வியில் பூந்தளிர் விழித்தாள் .

அப்படி சொன்னானா …ஆமாம் சொன்னானே …” ஆமாம் …அப்போ சொன்னார் ….”

” இப்போ …? “




திரும்ப விழித்தாள் .அவன் வருடிய இமை மயிர்கள் கனத்து அவளுக்கு அறிவுறித்தின .

” எல்லாம் சரியாகி விட்டதுதானே …பிறகென்ன …? இங்கே பாரு தாயி நீ தேவையில்லாதவற்றை யோசிக்காமல் இந்த பள்ளிக்கூடத்தை முறையாக்கி எழுப்பி கொண்டுவரும் ஙேலையை மட்டும் பாரு . ஒரு ஊரில்  சாதிகள் பேசாத இரண்டு முக்கியமான  இடங்கள் ஒன்று கோவில் , அடுத்தது பள்ளிக்கூடம் .நம் ஊரில் இந்த இரண்டு இடங்களும் சாதிப் போர்வைக்குள்தான் சுருண்டு கிடந்த்து .நாம் அதனை வெளியே இழுத்து வருவோம் .பள்ளிக்கூட பிள்ளைகளுக்கு முதலில் சம சாதியை சொல்லிக் கொடு .அது பிறகு நம் ஊர் முழுவதும் பரவட்டும் …”

எவ்வளவு உயர்ந்ந மனிதர் இவர் …? பூந்தளிர் நெகிழ்ந்து நின்ற போது ” ரெண்டு பேரும் புரட்சி பண்றீகளாக்கும. …? ” என்றபடி வெற்றலை தட்டோடு வந்தாள் சொர்ணத்தாய் .கணவருக்கு வெற்றலையை மடத்து தரத் துவங்கினாள் .

” ஆமான்டி …பூந்தளிர்  போல் ஒரு மருமகள்கிடைத்தால் எவ்வளவு பெரிய புரட்சி வேண்டுமானாலும் பண்ணலாம் தெரியுமா …? “

” ம்க்கும் பெரிய இவதான் .இவளுக்கு என்ன தெரியும்னு அனுகிட்ட இருந்து பள்ளிக்கூடத்தை பிடுங்கி இவகிட்ட கொடுத்தீங்க ? “

” இவளுக்கு என்ன தெரியும்னு போகப் போகத்தான் உனக்கு தெரியும் சொர்ணா ..” மாமனார் உடனடி ஆதரவளித்தாலும் மாமியாரின் பேச்சில் மனம் வாடிய பூந்தளிர் அங்கிருந்து நகர்ந்தாள் .

என்னை விட அந்த அனு இவர்களுக்கு உசத்தியாக தெரிகிறாளா …? அவளை பற்றி முழுவதும் தெரிந்தால் இப்படி பேசுவார்களா …? மனம் வாடியது. அப்போது  அறைக்குள்ளிருந்து வெளியே வந்த பொன்னியன் முகம் மிகவும் வாடியிருந்த்து .

” பொன்னிக்கா ஏன் உங்க முகம் ரொம்ப டல்லா இருக்கு …? “

” அதெல்லாம் ஒணணுமில்லை பூவு .லேசாக தலைவலி ….”

பூந்தளிருக்கு தான் ஒரு வாரமாக போட்ட காய்ச்சல் நாடகம் நினைவு வந்த்து .ம் …இந்த புருசன்களின் நச்சரிப்பிலிருந்து தப்பிக்கத்தான் எல்லா பெண்களும் தலைவலி , காய்ச்சலிடம் தஞ்சம் புகுந்து கொளகிறார்கள் போல என நினைத்தவள் ” எதுவும் பிரச்சனையா அக்கா ? ” என்றாள் .

” பிரச்சினையெல்லாம் இல்லைம்மா .நாளை கீர்த்தனா ஸ்கூலில் பேரன்ட்ஸ் மீட்டிங்காம் .அங்கெல்லாம் போய் பேச எனக்கு என்ன தெரியும் ..?அவரை போகச் சொன்னால் முடியாதென்கிறார் வேலை இருக்கிறதாம் ….”

பூந்தளிரின் மனதிலிருந்த நெருடல் பெரிதானது .அவளுக்கென்னவோ கதிர்வேலன் பொன்னியுடன் மட்டுமின்றி கீர்த்தனாவுடனும் ஒட்டுதலாக பழகுவது போல் தெரியாது .எட்டு ஆண்டுகள் கழித்து நிறைய சிகிச்சைகளுக்கு பிறகு பிறந்த அழகு மகள் .அவளை தலையில் வைத்து கொண்டாட ஙேண்டாமா …? கதிர்வேலன் எந்நேரமும் ராஜா , ரவியுடனேயே சுற்றிக் கொண்டிருப்பான் .மகளை கண்டு கொள்ள மாட்டான் .




” மச்சானுக்கு மட்டும் அங்கே போய் என்ன பேச தெரியும்கா ..? அதுதான் போக யோசிக்கிறார் போல ்விடுங்க நான் போயிட்டு வர்றேன் …” என பொன்னயை சமாதானப்படுத்தினாள் .

—–+—————

” உங்க அண்ணனுக்கும் , அண்ணிக்கும் ஏதாவது பிரச்சனையா …? ” கேட்டவளை ஏற இறங்க பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டான் குருபரன் .

” இரண்டு பேரும் எப்பவும் நடுவில் ஒரு கோடு கிழித்துக் கொண்டு அதற்கிள்ளேயே இருப்பது போல் தோன்றுகிறது .உங்களுக்கு ஒன்றும்   வித்தியாசமாக  தெரியவில்லையா …? “

” எப்படி நாம் இரண்டு பேரும் இருக்கிறோமே …அது போன்றா …? ” பூந்தளிர் முறைத்தாள் .

” சிலருக்கு தன்னை போலவே அடுத்தவரை நினைக்கும் புத்தி .அதற்கென்ன செய்ய முடியும் …? ” என முணுமுணுக்க பூந்தளிர் விசுக்கென திரும்பி வந்துவட்டாள் .

மறுநாள் கீர்த்தனாவின் பேரண்ட்ஸ் மீட்டிங்கை அட்டென்ட் பண்ணி விட்டு வந்தவள் நேரடியாக பொன்னுரங்கத்திடம் போய் நின்றாள் .

” மாமா …நமக்கென்று இங்கே இவ்வளஙு பெரிய பள்ளிக்கூடம் இருக்கும் போது .நம் வீட்டு பசங்க ஏன் மாமாதினமும் அவ்வளஙு தூரம் கஷ்டப்பட்டு போய் வேறு இடத்தில் படிக்கனும் ” என்றாள் .

” அப்படியா நினைக்கிற …அப்போ நம்ம பசங்களையும் நம்ம பள்ளிக்கூடத்திலேயே சேர்த்துடலாம்னு சொல்றியா …? “

” இல்லை .என் பிள்ளைகளை இங்கே .்இந்த சாதாரண பள்ளிக்கூடத்தில் சேர்க்க நான் ஒத்துக்க மாட்டேன் ” ஆங்காரமாய் கத்தியபடி வந்து நின்றாள் அனுராதா .




What’s your Reaction?
+1
27
+1
20
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!