Serial Stories நெஞ்சம் மறக்கவில்லை

நெஞ்சம் மறக்கவில்லை-6

6

தொடர்ந்து வந்த சில நாட்களில் சில நிமிடங்கள் மட்டும் அவன் பார்வையில் பட்டு
மறைந்து விடுவாள் மலர். அவனைக் காணும் போதெல்லாம் உடலில் குளிர் போல பரவசம் பரவியது. காரணம் பயமா வெட்கமா என்ற இனம் புரியாத திகைப்பு அவளுள். முதன் முதலில் ஒரு ஆணின் ஸ்பரிசம், அவன் தொட்ட இடத்தைப் பார்த்தாள். அந்தக் கைகளில் இருந்த அழுத்தம்
சற்றே வலித்தாலும் பிடித்திருந்தது.

மனதிற்குள் பட்டாம்பூச்சி சிறகடித்தது அவள் படித்தது. ஆண் பெண் இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளிதான். அங்கும் நட்போது பையன்களின் ஸ்பரிசம் கெண்டிருக்கிறாள். ஆனால் அவர்கள் தொட்டுப்பேசும் போது இல்லாத உணர்வு, ஆனந்தன் தொடும் போது மட்டும் ஏன்? தன் மீது அவன் விரல் பட்டதும் மனமும் உடலும் காற்றில் பறப்பது போல் மிதந்ததே ஏன்?

காரணம் புரியாமல் போனாலும் அவனின் அருகாமையும் தொடுதலும் பிடித்துதான் இருந்தது. பாட்டி,,,, பாட்டி,,,,

என்னடீம்மா? பசிக்குதா? சாப்பாடு தயாராக இன்னும் கொஞ்ச நேரம் பிடிக்கும்.

அதில்லை பாட்டி! போராடிக்குது தம்பியும் விளையாடப் போயிட்டான்.

டி.வி பார்க்க வேண்டியதுதானே?

பிடிக்கலை, நீ வாயேன் நாம் லைப்ரரி வரை போயிட்டு வரலாம்.

நான் சமையல் பண்ண வேண்டாமா? நீ பார்வதி ஆன்ட்டி வீட்டுக்குப் போய் புக் இருந்தா வாங்கிப் படி…!

சரி பாட்டி நான் போயிட்டு வரேன். துள்ளலோடு நடந்தவள் பார்வதி வீட்டு வாசலில் காண்டஸாவைக் கண்டதும் ஒரு கணம் திரும்பி நடந்துவிடலாமா? என்றெண்ணியவள் உடனேயே மனதை மாற்றிக் கொண்டாள்.




நான் ஏன் பயப்பட வேண்டும்? வீராப்புடன் சென்றாலும் அவனைக் காணும் ஆவலே உள்ளூர இருந்தது,

ஆன்ட்டி, குரல் கொடுத்தவாறே உள்ளே நுழைந்தவள் ஹாலில் நடுநாயகமாய் வீற்றிருந்த அவனைப் பார்வையில் வாங்கிக் கொண்டாள். மெல்லிய கொலுசு சப்தம் அவனையும் உசுப்பி இருக்க வேண்டும். நீயா ? புருவம் சுருக்கினான். இங்கே வா! என்பது போல் சைகை செய்தான்.

எங்கே ஒரு வாரமா ஆளையே காணோம்! அப்படியே பார்த்தாலும் மின்னல் மாதிரி
உடனே மறைஞ்சுப் போயிடுரே ஏன்?

எனக்கு பயமா இருக்கு?

ஏன்? நானென்ன பேயா பூதமா? இல்லை என் முகம் அத்தனை மோசமா? பார்த்தாலே பயப்படுவதற்கு?

ஆன்ட்டி இல்லை?

கோயிலுக்குப் போய் இருக்காங்க?

அப்படின்னா நான் அப்புறமா வர்றேன். திரும்பி நடந்தவளை மலர் என்று அழைத்தான். உண்மையை சொல்லு நீ என்னைப் பார்க்கத்தானே வந்தே?

இல்லையே போராடிக்குது. ஏதாவது புத்தகம் வாங்கிப் போகலாமின்னு வந்தேன்.

சரி அந்த மேலறையில் புத்தகம் இருக்கிறது போய் எடுத்துக் கொள். மேற்கொண்டு ஏதும் பேசாமல் தலைகவிழ்ந்து கொண்டான் ஆனந்தன். அவன் சட்டென பேச்சை முறித்துக் கொண்டது மலருக்கு ஏமாற்றமாய் இருந்தது. இன்னும் பேச்சை வளர்க்காமல் விட்டோமோ என்று தன்னையே நொந்து கொண்டாள். அவன் மேற்கொண்டு நிமிர்ந்து பாராமல் போகவே
பூனைப் பாதம் வைத்து படியேறி அந்த புத்தக அறையை அடைந்தாள்.

புத்தக அறை நன்கு விசாலமாய் இருந்தது. வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்களுகுகு நடுவில் விரல்களை நீட்டி எதையோ தேடினாள். மனம் ஆனந்தனிடம் நின்றது. எதையும் தேர்வு செய்ய முடியாமல் எண்ணம் சண்டித்தனம் செய்தது.

செய்யும் வேளையில் ஈடுபாடு இருந்தால் தானே திறம்பட செய்ய முடியும். தன் முதுகிற்குப் பின்னால் உஷ்மணமான மெல்லிய மூச்சுக்காற்று படருவதை உணர்ந்தாள். திடுக்கிட்டு திரும்பிட, வெகு அருகாமையில் மார்பின் குறுக்கில் கைகளைக் கட்டியபடி நின்றிருந்தான ஆனந்தன்.

புத்தகம் தேர்வு செய்து விட்டாயா?

இல்லை,,,,

ஏன்?

குழப்பமாயிருக்கு?

நான் உதவட்டுமா? மெளனித்து நின்றாள் மலர். இரண்டு எட்டு வைத்து முன்னாடி வந்தான் ஆனந்தன். இப்போது தொட்டு விடும் தூரத்தில் அவன் கம்பீரமும், ஆண்மையில் ஒன்று சேர்ந்த ஆண்மகன்.

மலர் என்னை உனக்குப் பிடிச்சிருக்கா?

ம்…

எனக்கும் கூடத்தான் உன்னைப் பார்த்ததில் இருந்தே பித்துபிடித்தாற் போல் தான் இருக்கிறேன். ஏன் என்று புரியவில்லை அந்தளவிற்கு நீ என்னை ஈர்த்து விட்டாய்.




நிஜமாகவா ! விழிகள் விரியக் கேட்டாள்.

சத்தியமாக ! இந்தக் கண்கள் என்னைச் சிறைப்பிடித்து விட்டன.

நான் வரட்டுமா?

ஏன்?

நேரமாகிறது. பாட்டி தேடுவாங்க. அவனைக் கடந்து நகர முற்பட்டவளை கரம் பற்றி இழுக்க, அந்த இழுப்பைக் கூட தாங்காத அவளின் பூவுடல் அவன் மேல் சரிந்தது. தன் மேல் சரிந்தவளை வெகு இயல்பாய் தாங்கிக் கொண்டவன் படர்ந்து விரிந்திருந்த மார்பில் அவளின் மூச்சுக் காற்று மோத கழுத்திலும் நெற்றியிலும் இதழ்களை அழுந்தப் பதித்தான்.

இன்ப வேதனையில் முனகியவளை காற்றுக் கூட போக முடியாத அளவிற்கு இறுக்கமாய் அணைத்தான். அவன் கைகள் மலரின் இடுப்புப் பிரதேசத்தில் ஊர்ந்தது?! ஆனால் வாய் மட்டும்
ஐ லவ் யூ மலர் என்று முனகியது.

அந்த மோன நிலையில் இருந்த அவர்களை வாசலில் இருந்த காலிங்பெல் கலைத்தது. நிமிர்நது அவன் முகத்தைப் பாராமல் விடுவிடுவென்று ஓடினாள். ஆனந்தன் புன்னகையுடன் அவள் பின்னேயே வர, பார்வதி சித்தி அவளை ஏதோ துருவித் துருவிக் கேள்விக் கேட்டுக் கொண்டிருக்க ஆனந்தன் மெல்ல நழுவினான்.




What’s your Reaction?
+1
20
+1
18
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!