Serial Stories நெஞ்சம் மறக்கவில்லை

நெஞ்சம் மறக்கவில்லை -7

7

பார்த்திருந்த காட்சியினால் மிகவும் குமைந்து போயிருந்தாள் பார்வதி. ஆனந்தனுக்கு தன் மகளை மணமுடிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தாள். ஆனால் அதில் இப்போது பெரும் மாற்றம் வந்து விட்டதே ஆனந்தன் அந்தப் பெண் மலரின் மீது ஈடுபாடு கொண்டதை அவளும் கவனித்துதான் இருந்தாள்.

எப்போதும் வேலையே கதியென்று இருந்தவன் இந்த முறை எதிர் வீட்டையே கண்காணிப்பதைக் கண்டுதான் இருந்தாள். இயல்பிலேயே துஷ்டகுணம் கொண்ட பார்வதி கொண்டவள்தான்.

பார்வதி கணவனை இழந்தவள் சொத்துக்குக் குறைவில்லையென்றாலும், தனிக்கட்டைதான். ஆனந்தனின் அம்மாவிற்கு தூரத்து உறவு. எனினும் அடிக்கடி சென்னைக்கு வரும்போது, பார்வதி வீட்டில் வந்து தங்குவதுதான் வழக்கம்.

பாவம் எத்தனையோ பெண்கள் புகுந்த வீட்டிலும் சரி, பிறந்த வீட்டிலும் சரி என்றுமே சுகப்படவில்லை, அதற்கு பார்வதி ஒரு சரியான உதாரணம் என்று சொல்லலாம். ஏழ்மையான குடும்பம் என்றாலும், அழகில் அதிரூப சுந்தரியாய் பிறந்தவள் தான் பார்வதி, ஆனால் வெறும் அழகு சோறு போடுமா என்ன? வறுமையிலும் பட்டினியின் கொடுமையிலும் வாழ்ந்தாலும் அவளின் வனப்பு மட்டும் குறையாமல் இருந்தாள். அவள் அழகில் மயங்கி 56வயதான கிட்டப்பா அவளை மணந்தார். எதிர்த்துப் பேச வழியில்லை, எப்படியோ வறுமையென்னும் கோரப்பிடிக்குள் இருந்து விடுதலை கிடைத்தால் போதும் என்ற கணிப்பில் திருமணம் செய்து கொண்டாள்.

ஆனால் 56வயதான அவரால் 20வயதே நிரம்பிய அந்த சின்னப்பெண்ணின் ஆசைகளை நிறைவேற்றிட முடியவில்லை, மாறாக மனைவியின் மேல் சந்தேகம் கொண்டு, தினம் தினம் சித்ரவதை செய்தார். எப்படியோ கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் அந்த வகைகளில் இருந்தும் பார்வதிக்கு விடுதலை கிடைத்தது. கிட்டப்பாவின் மரணத்தின் மூலம்.

அவளை விரட்டி விரட்டி துரத்தி வந்த வறுமை அரக்கன் ஓடிவிட்டாலும், தனிமையென்ற நரகத்தினுள் அவள் விழுந்து விட்டாள்.யாராவது அவள் வயதில் சந்தோஷமாயிருந்தால் அந்த இன்பம் தனக்கு கிடைக்கவில்லையே என்று பொறாமை தீயில் கருகுவாள். அவர்களின் நிம்மதியைக் கெடுத்தால்தான் அவள் மனம் நிம்மதியாகும். அப்படி ஒரு கொடூர புத்தி அவளிடம் மட்டுமல்ல, தனிமை கூட சில நேரங்களில் மனிதனுக்கு பல்வேறு நேரத்தில் பாடம் கற்றுத் தருகிறது.

பார்வதி தன்னை ஒரு கொடுங்கோல் அரசியைப் போல் எண்ணிக் கொண்டாள். அதன்படி, அடுத்தவர்களின் மகிழ்வைக் கெடுக்கும் குணம் அவளை அறியாமல் ஒட்டிக் கொண்டுவிட்டது. அந்த வகையில் அன்று கோவிலுக்குப் போய் விட்டு வரும் போது வீடு திறந்தே கிடக்க எங்கே போய் தொலைத்தான் ஆனந்தன். இந்த கேள்வியோடு மாடிப்படி ஏறியேறினாள்.




புத்தக அறையில் திறந்தருந்த கதவு வழியே மலர் ஆனந்தனின் அணைப்பில் இருந்த நிலையைக் கண்டு வாயடைத்துப் போனாள். ஆனால் உடனே படியிறங்கியவள் எதுவும் அறியாமல் அப்போதே வருபவள் போல் உள்ளே நுழையவும், மலர் அரக்கப்பரக்க ஓடி வரும் நேரம் அவள் முகம் பூவென மலர்ந்து,முற்றிலும் சிவந்து இனம் புரியாத சந்தோஷத்தை அதில் கண்டதும், அவளையும் அறியாமல் மனதிற்குள் காரணமில்லாமலே மலரின் மேல் வன்மம் எழுந்தது. எப்படியும் இந்த நெருக்கத்தை உடைத்தே தீர வேண்டும் எனும் வெறி அவளுள் உண்டானது. அதை உடனேயே செயல்படுத்த திட்டமிட்டாள்.

மனது ஆயிரம் எண்ணங்களைக் கொண்டது. ஒவ்வொரு மனிதனுக்குள் எத்தனையோ சிந்தனைகள் பிறக்கின்றன. நல்ல நீராய் நினைவுகளை ஊற்றினால், அது நலமாகும்,மாறாய் கெடுதல் என்ற வெந்நீர் மற்றவர்களை அழிப்பதோடு தன்னையும் அழித்து விடும் அல்லவா?

இதை உணராத பார்வதி தன் மனதில் அந்த இளஞ்ஜோடிகளிடம் தன்னுடைய வஞ்சத்தை தீர்க்க தக்க நேரத்தை எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டு இருந்தாள்.

சூரியன் தன் கதிர்களை மெல்ல மெல்ல பிரிந்து விட்டான். முற்றிலும் பாதி விடிந்தும் விடியாத காலை நேரம், மஞ்சள் நிற உடையில் அழகான பூவைப் போல வாசலில் பூக்கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் மலர்.

மலர்…!! ஆனந்தன் அருகில் வந்து நின்று அழைத்தான். ஒன்றோடு ஒன்று இணைந்தபடி இருந்த ரோஜாப்பூக் கோலம் அவனைப் பார்த்து சிரித்தது. அவன் கையில் சிறு சூட்கேஸ் முளைத்திருந்ததைக் கண்டாள் மலர். தனிமையாய் ஒதுங்கியிருந்த வீட என்பதால், அவர்கள் பேசிக் கொண்டு இருப்பதை யாரும் பார்க்க இயலாது. பார்வதியின் வீட்டு மாடியில் இருந்து பார்த்தால் மட்டும் அவர்கள் இருக்கும் இடம் தெளிவாய்த் தெரியும்.

ஆனால், பார்வதி தூங்குவதை ஊர்ஜிதம் செய்தபிறகே, வெளியே வந்தான் ஆனந்தன்.
ஆனால் நினைப்பது எல்லாம் உண்மையாகி விடுவது இல்லையே. யார் உறங்கிவிட்டார்கள் என்று ஆனந்தன் எண்ணினானோ அவள் இவர்கள் இருவரும் பேசுவதை கவனித்தபடி நின்றிருந்தாள். மலர்! நான் இன்று ஊருக்குப் போகிறேன்.

ஏன்? இத்தனை சீக்கிரம்! அவள் குரல் சற்றே பிசிறடித்தது. நான்கு நாட்கள் கூட முழுதாய் தங்காத பாட்டி வீட்டில் கடந்த பத்து நாட்களாய் அவள் இருக்க ஒப்புக் கொண்டதற்கு அவன்தானே காரணம்! கண்களில் நீர் திரண்டது.சில நாட்கள் பழகியவன் பிரியப் போகும் வேதனையில் மனம் புலம்பியது. அவளுக்கே சற்று வினோதமாகத் தான் இருந்தது.




ஏய் ? பைத்தியம் ஏன் அழுவுறே? நான் கூடிய சீக்கிரமே வருவேன் இது சத்தியம் மலர். அதுவரையில் என்னை மறக்காமல் எனக்காக காத்திருப்பாய? என்று கேட்டுவிட்டு அணைத்தவன் அவள் இதழ்களை மென்மையாய் சிறைப்பிடித்தான்.
நீண்ட நிமிடம் கழித்து அவளை விடுவித்தவன்.

இது அட்வான்ஸ் தான் கூடிய சீக்கிரமே உன்னை முழுமையாய் என்னுடையவள் ஆக்கிக் கொள்வேன் மலர் வரட்டுமா? என்று அவள் கன்னம் தட்டிப் புறப்பட்டான்.

தன்னையும் அறியாமல் கை அசைத்தவள் அவன் புள்ளியாய் மறையும் வரை
இமைக்காமல் பார்த்தாள். ஆனந்தனின் நினைவுகளை அசை போட்டபடியே?!

ஏற்கனவே சிவந்திருந்த விரல்களை மேலும் சிவப்பாக்க மருதாணி இட்டுக் கொண்டு இருந்தாள். வீட்டுத் தோட்டத்தில் பறித்தது என்று பக்கத்து வீட்டு மாமி தர அதை பதமாய் அரைத்து பீங்கான் கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஹாலில் அமர்ந்து மருதாணி இட்டுக் கொண்டிருந்தாள்.

மனதில் இருக்கும் ஆணின் மேல் எந்தளவு ஆசை இருக்கிறதோ? அதே அளவு மருதாணியும் சிவக்கும் என்று பாட்டி காலையில் சொன்னது நினைவிற்கு வர, மனதிற்குள் ஆனந்தனை எண்ணியபடியே வைத்து முடித்தாள்.

விரல்களை விரித்து அழகுப்பார்த்தாள் ஆனந்தனின் சிரித்த முகம் தெரிந்தது. பார்வதி ஆண்ட்டி கிரீல் கேட்டைத் திறந்து வரும் சப்தம் கேட்டது. தன் வாழ்வின் திசையை மாற்றப்போவதை உணராமல் பார்வதியை இன்முகத்தோடு வரவேற்றாள் மலர்.




What’s your Reaction?
+1
17
+1
20
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!