Serial Stories மாற்றங்கள் தந்தவள் நீதானே

மாற்றங்கள் தந்தவள் நீதானே -16

அத்தியாயம்-16

“ஐயோ…எனக்கு மன்னிப்பே கிடையாதா? நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்குறேங்க…என்னை மன்னிச்சிட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்களே.” தேவானந்தனின் காலைக்கட்டிக்கொண்டு அழுதாள் மோகனா.

“வெளி உலகத்துக்கு வேணுன்னா நீ எனக்கு மனைவியா இருக்கலாம். ஆனா என்ன பொறுத்த வரை நீ ஒரு கொலைகாரி. எங்க குடும்பத்தில இரண்டு உயிர் போறதுக்கு காரணமானவள் நீ..  இந்த ஜென்மத்துல என்னால உன்னை மன்னிக்கவே முடியாது. அதற்காக நான் தொட்டுத் தாலிக்கட்டின உன்ன வீட்டை விட்டு விரட்டர அளவுக்கு கேவலமானவனுமில்லை. இப்பவும் நீ என்னுடைய மனைவிதான். வெளி உலகத்துக்கு என்ன அடையாளப்படுத்திக்கவாவது  அந்த பதவியை நான் உனக்கு கொடுத்தே ஆகணும். ஆனால் அந்த உரிமை ஒரு எல்லைக்குள் தான் இருக்கணும்.




படுக்கையை பகிர்ந்துகிறவள் மனைவியாகத்தான் இருக்கணும் என்கிற அவசியமில்லை. என்று சொன்னவன் அவளின் முகத்தை நிமிர்த்தி நான் என்ன சொல்றேன்னு உனக்கு புரியுதா? நான் உன்னை எந்த இடத்தில் வச்சிருக்கேன் என்பதாவது உனக்கு புரியுதா? அமைதியா உட்கார்ந்து ஒரு நிமிடம் யோசிச்சு பாரு உனக்கு எல்லாமே புரியும். என்றவாறு அறைக் கதவை அறைந்து சாத்தி விட்டு வெளியில் சென்றான். சற்று நேரத்தில் கார் ஸ்டார்ட்டாகும் சத்தம் கேட்டது.

தலைகவிழ்ந்து அமர்ந்திருந்த அவளின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கட்டுப்படுத்தவே முடியாத கண்ணீரை வழித்து வழித்து வீசினாள்.

மூன்று மாதங்களாக அளவுக்கதிகமாக அன்பைப் பொழிந்தவன் அதையெல்லாம்  பொய்யாக்கி விட்டு உனக்கும் எனக்கும் ஒன்றுமே இல்லை என்று சொல்கிறானே? கொண்டதே கோலம் கண்டதே காட்சி என்று அவனுடைய அன்பில்  மயங்கி கிறங்கி கிடந்தேனே?

இப்பவும் அவன் தொட்டால் என் மனதும் உடலும் நெகிழ்கிறதே ஏன் ? என்னால் அவனை வெறுக்க முடியவில்லை. நான் அவ்வளவு பலவீனமானவளா என்ன? கடவுளே தெரியாமல் செய்த தப்புக்கு எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? அவன் என்னை கொலையே பண்ணினாலும் அவனை விட்டுவிட்டு என்னால போக முடியாது. காரணம் நான் அவன் மேல வச்சிருக்கிற அன்பு உண்மையானது. இந்த நிமிஷம் வரை அவனை என்னால் வெறுக்கவும் முடியவில்லை மறக்கவும் முடியவில்லை. இதற்கெல்லாம் ஒரே வழி சாவு ஒன்றுதான் என்று நினைக்கிறேன்.

என்று எண்ணியவுடன்  அவளின் முகத்தில் பளிச்சென்று ஒரு ஒளி பரவி மறைந்தது. சரி நான் எடுத்த முடிவு சரியான முடிவு தான். வாழும் போது என்னை புரிந்துக் கொள்ளாதவர் நான் செத்த பிறகாவது என்னை மன்னித்து ஏற்றுக் கொள்ளட்டும். நான் உயிரோடு இருக்கும் காலம் வரை என்னை பார்க்கும்போதெல்லாம் அவருக்கு என்னைப் பற்றிய தவறான எண்ணங்கள் தான் தோன்றும் அதை எப்படி நான் சரி பண்ணுவது என்று தெரியவில்லை. விலகிப்போகவும்  முடியவில்லை என்னுடைய நிலைமை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது. நான் ஒரு துரதிர்ஷ்டசாலி ஆசைப்பட்டவன் கிடைச்சும் அவன் கூட வாழ முடியாத துர்பாக்கியசாலி.

கடவுளே என்ன சொல்லியும் என் கணவன் என்னை புரிந்து கொள்ளப் போவதில்லை என்னை மன்னிக்கவும் போவதில்லை தற்கொலை என்பது ஒரு கோழைத்தனம் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.




ஆனா எனக்கு வேற வழி தெரியல என்று எண்ணியவள் கடகடவென்று ஒரு பேப்பரை எடுத்து கணவனுக்கு மன்னிப்பு கடிதம் எழுதினாள்.

கடிதத்தை மடித்து அவனுடைய ரீடிங் டேபிள் மேல் வைத்தாள். அப்பா அம்மாவுக்கு தன்னுடைய செல்லில் இருந்து மெயில் ஒன்றை அனுப்பினாள்.

அப்பா என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை எனக்கு ஏனோ என்னையே பிடிக்கல என் கணவர் ரொம்ப நல்லவர் அவர் கூட வாழுற  தகுதி எனக்கு இல்லை. நான் இறந்த பிறகாவது அவருக்கு ஒரு நல்ல பெண்ணை பார்த்து நீங்கள் திருமணம் செய்து வைக்கணும். உங்களுடைய மகனாக அவரை நீங்கள் மதித்து நடத்தனும். அடுத்த முறையாவது உங்களுடன் எல்லோருடனும்  சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையோடு என் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் அன்புள்ள மோகனா.

எப்படியும்  இந்த மெயிலை அப்பா இரவு வந்துதான் பார்ப்பார். அதற்குள் என் கதை முடிந்திருக்கும் என்ற தீர்மானத்தோடு கீழே இறங்கி வந்தாள். வாசலில் போலிஸ் ஜீப் நின்றிருந்தது. கேட்டை திறந்து கொண்டு ஒரு போலீஸ்காரரும் உள்ளே வந்துகொண்டிருந்தார்.

“ஹலோ வீட்ல யாருங்க வீட்டில யாரும் இருக்கீங்க…”

“சார்…சொல்லுங்க சார்?’

“அம்மா மிஸ்டர் தேவானந்தன் உங்களுக்கு என்ன உறவும்மா?”

“அவர் என்னுடைய கணவர் சார் என்ன ஆச்சு ஏதாவது பிராப்ளமா?”

“அவர்க்கு ஆக்சிடெண்ட் ஆயிருச்சும்மா ஹாஸ்பிடல்ல இருக்கார்.”

“ஐயோ என்ன சொல்றீங்க அவருக்கு என்ன ஆச்சு எப்படி…எப்படி ? நான் உடனே அவரை பார்க்கணும்.”

படபடப்பாக பேசியபடி வாசலை விட்டு வெளியே இறங்கினாள் மோகனா.

“கொஞ்சம் சீரியஸ்தான் 24 மணி நேரத்துக்கு அப்புறம் தான் எதுவா இருந்தாலும் சொல்ல முடியுமுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க… நீங்க நேர்ல வந்தீங்கன்னா நல்லா இருக்கும்.




வீட்டு நம்பருக்கு கால் பண்ணினோம் போன் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது. அதான் நேரடியா வந்தோம். கொஞ்சம் எங்க கூட வர முடியுமா? “

“வாங்க போகலாம்…”  அடுத்த நிமிடம் அவள் ஜீப்பில் ஏறினாள்.

ஹாஸ்பிடலுக்கு போன பிறகுதான் தெரிந்தது அவன் Icu வில் இருப்பது காரை வேகமாக ஓட்டி கொண்டு வந்திருக்கிறார் சிக்னலை கவனிக்கவில்லை போல குறுக்கே வந்த தண்ணி லாரி மீது கார் படு வேகமாக மோதி இருக்கிறது. போர்ஷா மோதியதில் கார் இரண்டு முறை உண்டு கவிந்திருக்கிறது.

ஐயோ கடவுளே அவருக்கு ஒன்னும் ஆயிடக் கூடாது அப்பாவுக்கு கால் பண்ணி விஷயத்தை சொன்னாள். பைவ் மினிட்ஸ் வந்துடுறேம்மா மாப்பிள்ளைக்கு எதுவும் ஆகாது கவலைப்படாதே என்றார். உலகில் இருக்கும் அத்தனை கடவுளையும் வழங்கினாள்.

அழுது புலம்பியபடி வந்த அப்பா அம்மாவை நேரில் பார்த்தவுடன் ஓடி சென்று கட்டி தழுவிக்கொண்டு அழுதாள்.

“அம்மா அப்பா அவருக்கு ஒன்றும்  ஆகக் கூடாது அவருக்கு ஏதாவது ஒன்னுன்னா நான் உயிரோடு இருக்க மாட்டேன்”.

“மாப்பிள்ளைக்கு ஒன்னும் ஆகாது மா நாங்க இருக்கிறோம் கவலைப்படாதே எவ்வளவு செலவானாலும் அவரை நாங்கள் காப்பாத்துறோம்.”

சற்று நேரத்தில் அவனுடைய ஹாஸ்பிடல் இருந்து சில டாக்டர்ஸ் இங்கே வந்தார்கள்.

தலையில் அடிபட்டு இருக்கு அதுல ஒரு ஆபரேஷன் பண்ணணும் என்று டாக்டர்ஸ் இவளிடம் வந்து ஒரு சைன் வாங்கிட்டு போனார்கள் அழுகை…அழுகை என்று துவண்டு கிடந்தாள் மோகனா கடவுள் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது

மூன்று மணி நேர ஆபரேஷன் சக்ஸஸ் ஆக முடிந்தது அதன் பிறகு 24 மணி நேரத்திற்கு பிறகு ஆப்ரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே வந்த சீஃப் டாக்டர் மோகனாவை அழைத்து உன் கணவனை காப்பாற்றி விட்டேன் என்று சொன்னார்.

சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனாள் இனி அவருக்கு எந்த குறையும் இருக்காது என்று டாக்டர் வாக்குக் கொடுத்த பிறகு முதல் முறையாக ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.

எல்லாமே சுமூகமாக இயல்பாக நடந்தது என்று சொல்லலாம் இயல்புநிலைக்குத் திரும்பிய தேவானந்தனை பார்க்க கோதண்டமும் அவர் மனைவியும் சென்றார்கள்.  மோகனா வர மறுத்தாள்.

“அப்பா முதல்ல நீங்க போய் பாருங்க அவர் எப்படி இருக்கிறார் என்று சொல்லுங்க அதுக்கு அப்புறமா நான் போறேன்.”மகளின் மனநிலையை  புரிந்து கொண்ட கோதண்டம் தன் மனைவியோடு சென்று அவனை பார்த்தார். அவன் இவர்களைப் பார்த்தவுடன் கேட்ட முதல் கேள்வியே மோகனா எங்கே? என்றுதான் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் இருவரும் தவிக்க

“நீங்க போயிட்டு மோகனாவை அனுப்புங்க…” என்றான். திரும்பவும் ஒருமுறை சொன்னான்




“அங்கிள்…பிளீஸ் என் மனநிலையை புரிந்து கொள்ளுங்கள். நான் மோகனாவை பார்க்கணும்.” பதிலேதும் பேசாமல் இருவரும் வெளியில் வந்து மோகனாவிடன் விஷயத்தைச் சொன்னார்கள். அவளுக்கு ஒரே ஆச்சரியம் எதற்காக கூப்பிடுகிறார் ஒருவேளை சாகுறதுக்குள்ள டைவர்ஸ் பண்ணுன்னு என்று கடுமையான வார்த்தையால் என்னை வேதனைப்படுத்த போறாரோ?  இல்ல எதுக்கு நீ இங்க வந்தே?  உங்க அப்பா அம்மா கூட போயிடு அப்படின்னு சொல்ல போறானோ? என்று பலதும் நினைத்து கலங்கியபடி உள்ளே சென்றாள் மோகனா.

ஆனால் இவள் பயந்தமாதிரி அங்க ஒன்னும் நடக்கலை. மாறாக இவளை பார்த்தவுடன் அருகில் வருமாறு அழைத்தான். இவள் அச்சத்தோடு அருகில் செல்ல…வேதனையோடு கண்களை மூடித் திறந்தான். பிறகு அவளை மீண்டும் அருகில் வருமாறு சைகை செய்தான்.

“சாரி மோகனா உங்கிட்ட சண்டை போட்டுட்டு போனதாலதான் எனக்கு இது நடந்தது என்று நினைக்கிறேன். என் மேல் எதாவது கோவமா இருந்தா மன்னிச்சிடு கொஞ்ச நாள் போனா இயல்பு நிலைக்கு வந்துடுவேன்னு நெனைக்கிறேன். எல்லாத்தையும் சொல்றேன் இனிமே உன்ன ரொம்ப கஷ்டப்படுத்த மட்டேன். ஏன்னா உன்னை ரொம்ப படுத்திட்டேன். சாரி…” என்றவனின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது. மோகனாவுக்கு என்ன பேசுவது என்று புரியாமல் விக்கித்துப்போய் நின்றாள். என்னதான் பேச நினைத்தாலும் வார்த்தைகள் வரவில்லை அமைதியாகவே இருந்தாள் அதிகமாக அவன் விழித்திருக்கும் போது அந்த அறை பக்கம் வருவதை தவிர்த்தாள். அவன் தூங்கின பிறகு வந்து அவன் கை கால்களை அமுக்கி விடுவது அவன் பெட்டைக் சரிசெய்வது என்று சிறு சிறு வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாள். சுமார் ஒரு வாரத்திற்கு பிறகு வீட்டிற்கு போகலாம் என்று டாக்டர் கூறினார்.




What’s your Reaction?
+1
18
+1
29
+1
2
+1
0
+1
1
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!