Serial Stories மாற்றங்கள் தந்தவள் நீதானே

மாற்றங்கள் தந்தவள் நீதானே -15

அத்தியாயம் -15

அலை அடித்து ஓய்ந்ததும் என்பார்களே அதுபோல எல்லாமே முடிந்து போனது  எதிர்பார்த்ததற்கு மாறாக கழற்றி வைத்திருந்த தங்கச்செயினை காணவில்லை எங்கு தேடியும் கிடைக்கவில்லை இறுதியில் போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்தார்கள். வீட்டிற்கு யார் யார் வந்தார்கள் என்று போலீஸ் விசாரணை பண்ணினார்கள். ஏம்மா  நீங்க ரெண்டு பேர் தானே விளையாடிட்டு இருந்தீங்க? யார் யார் வந்தாங்க சொல்லுங்க? போலீஸ்காரர்கள் இவர்களை அழைத்து விசாரித்தபோது இவள்தான்  நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு கூறினாள்




“சார்… அரண்மனையில் இருந்தானே அந்த பையன்தான் வந்து சாப்பாடு வச்சுட்டு போனான். என் தங்கச்சி கவனிக்கலை ஆனா நான் அவனைப் பார்த்தேன். என் ரெண்டு கண்ணாலயும் பார்த்தேன். என்று அழுத்தம் திருத்தமாக சொல்ல,

சற்று நேரத்தில் அந்த பையனை அழைத்து வந்தார்கள். அந்த பையனை சுட்டிக்காட்டியபடி கூறினாள்

“இவன்தான் சார் இவனேதான்” என்றவள் சுற்றுமுற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு அன்னைக்கி அரண்மனையி கரண்ட் கட்டானப்போ என்னுடைய ட்ரெஸ்சைக்கூட இவன் உருவிட்டான் சார். என் அப்பா அம்மாவுக்கு தெரிந்தா கோபபடுவாங்கன்னுதான் நான் அவங்கக்கிட்டக்கூட சொல்லல சார். என்று சொல்லிவிட்டு அவன் முகத்தை கூர்ந்து  பார்த்தாள்.

அவனுடைய கண்கள் கலங்கி இருந்தன போலீஸ்காரர்கள் அடித்திருப்பார்கள் போல கன்றிப்போய் இருந்த முகத்தை உயர்த்தி அவளை பார்த்தான். அந்தப் பார்வையில் வேதனை கலந்த ஒரு வலி தெரிந்தது. அது மட்டுமல்லாமல் விரல்களைச் திறந்து திறந்து மூடி அழுகையை கட்டுக்குள் கொண்டு வருவது போல செய்து கொண்டிருந்தான். அவனை மேற்கொண்டு பார்க்க பிடிக்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அந்த இடத்தை விட்டு வெளியில் வரும்போது

“இந்த வயசுல பொம்பள புள்ளைக்கிட்ட தப்பா நடந்துக்க பார்க்கிறியா?”

அவனை அடிக்கிற சத்தமும் அதை தொடர்ந்து அவன் கதறிய கதறலும் கேட்டது.  மனசு கஷ்டமா இருக்கு ஆனா திருடினால் தண்டனையை அனுபவிக்கவேண்டியதுதான். பாவம் அம்மா…அப்பா ஆசையாக வாங்கிக் கொடுத்த நகையை தொலைத்துவிட்டேன்னு எவ்வளவு அழுவ  அழுதாங்க அதைப் பார்க்கும்போது இவன் அழுவது ஒன்னும் பெருசா தோணல. அதன் பிறகு அந்த பையன் என்ன ஆனான் என்று தெரியவில்லை. அத்தோடு அப்பாவின் நண்பரிடம் சொல்லிக் கொண்டு அடுத்த நாளே கிளம்பி சென்னைக்கு வந்துவிட்டார்கள் மோகனா குடும்பத்தினர்.

அந்த நிகழ்ச்சி அவளை அடிக்கடி நினைவு படுத்தும் மனதை கஷ்டப்படுத்தி கொண்டிருந்தது பல நாட்கள் அந்த ஊரையும் அந்த அரண்மனையில் நினைத்துப் பார்ப்பாள். உடனே அடிப்பட்ட அவனுடைய முகம் தான் கண்முன்னே வரும் ஒரு வேளை நகையை அவன் எடுக்காமல் கூட இருக்கலாம்  கிடைக்காமல் இருந்திருக்கலாம் அவசரப்பட்டுட்டோமோ? அப்படி என்ற குற்ற உணர்வு தோன்றத்தான் செய்தது. அடுத்த நிமிடமே தன்னிடம் அவன் நடந்துக்கொண்ட நிகழ்ச்சியை நினைத்தவுடன் அந்த குற்ற உணர்வு விலகி சென்றுவிடும்.




இவள் சந்தேகப்பட்ட மாதிரியே இரண்டு வருடத்திற்கு பிறகு அந்த நகை பற்றிய விஷயம் வெளியில் வந்ததும். அதை அவன் எடுக்கவில்லை என்பது உறுதியானது. இரண்டு மூன்று நாட்கள் அதையே நினைத்து சாப்பிடாமல் கூட கிடந்தாள். தப்பு பண்ணிவிட்டோம் தப்பு செய்யாத ஒருத்தனை மாட்டி விட்டு விட்டோமே என்று மனதுக்குள் ஒரே உறுத்தல்

என்ன பண்ணுவது காலங்கள் சில காயங்களை மாற்றிவிடும் என்பார்களே அப்படித்தான் தன் மனதைத் தேற்றிக்கொண்டு அந்த நிகழ்விலிருந்து வெளியில் வந்தாள் மோகனா.

அதன் பிறகு அது பற்றிய சிந்தனைகள் எதுவும் இல்லாமல் இயல்பு நிலைக்கு வந்தாள். ஆனால் அரண்மனை என்ற சொல்லைக் கேட்டாலே அவனுடைய ரத்தக்கரை படிந்த முகம்தான் நினைவுக்கு வரும்.

இதுவும் கடந்து போகும் என்பது போல போகப்போக அந்த சம்பவத்தை   மறந்து போனாள் மோகனா.

வெகு நாட்களுக்குப் பிறகு அப்பா…வேலை நிமித்தமாக அந்த ஊருக்கு போக வேண்டும் என்று சொல்லவும் முதலில் தயங்கிய மோகனா பிறகு வருவதற்கு சம்மதித்தாள்.

அப்பாவும் பெண்ணும் சுமார் ஒரு வார காலம் அந்த ஊரில் தங்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம். அதனால் இவர்களுக்கு தங்குவதற்கு ஒரு வீடு ரெடி பண்ணி கொடுத்திருந்தார்  பிசினஸ்காக இவர்களை அழைத்த நண்பர். ஒருநாள் தன் தகப்பனிடம் ஷாப்பிங் போய்விட்டு வருவதாக சொல்லிவிட்டு அந்த வீட்டு வேலைக்கார பெண்ணை அழைத்துக்கொண்டு அந்த அரண்மனைக்குச் சென்றாள் மோகனா.

“உள்ளே போகக் கூடாதும்மா பர்மிஷன் வாங்கினால் தான் போகமுடியும்.” என்று கூட வந்த அந்தப் பெண் சொல்ல

“யார் கிட்ட பர்மிஷன் வாங்கனுன்னு கேட்டு சொல்லு நான் அதுக்குள்ளே போய் பாக்கணும்.” என்றாள் பிடிவாதமாக.

“சரி வாங்க அந்த காவல் காக்கிறவர் எனக்கு சொந்தக்காரங்கதான். நான் உங்களை கூட்டிட்டு போறேன்.” வேலைக்கார பெண் இவளை அழைத்து சென்று காவலாளியிடம் பர்மிஷன் வாங்கிக் கொண்டு வந்தாள்.

“நான் வரலைம்மா நீங்க போய் பார்த்துட்டு வங்க நான் இங்கே உட்கார்ந்திருக்கேன்.” என்று அந்தப் பெண் வெளியில் வராந்தாவில் அமர்ந்து கொள்ள, இவள் மட்டும் அந்த அரண்மனையில் கால் வைத்து உள்ளே சென்றாள். பல வருடங்களுக்கு முன்பு பார்த்த அதே இடம் அப்படியேதான் இருந்தது ஏதும் மாற்றமில்லை சில இடங்களில் மட்டும் வண்ணங்கள் மாற்றி மெழுகூட்டியிருந்தார்கள்.




அரண்மனையை சுற்றி பார்த்துவிட்டு கடைசியாக அந்த படிக்கட்டில் பாதி தூரம் ஏறியவள் அதற்குமேல் மேலே போக பிடிக்காமல் திரும்பவும் கீழே வந்தாள். அந்த இடம் பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தியது. மீண்டும் அவனை இங்கே பார்த்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற முடிவோடுதான் அங்கு வந்தாள். செய்யாதா தப்புக்காக அவன் தண்டனை அடைந்தான் என்று எண்ணும்போதே மனசு வலித்தது. அதற்கு காரணம் இரண்டு வருடங்களுக்குப் பிறகு அந்த நெக்லஸை எடுத்த நபர் யார் என்று போலீஸ் கண்டுபிடித்து விட்டது. அதை எடுத்தது ரூம்பாய்தான். அந்த ரூமை கிளீன் பண்ணுவதற்காக வந்த அவன்தான் நகையை எடுத்திருக்கிறான். அதை அவன் இரண்டு வருடத்திற்கு பிறகு அவன் ஒரு கடையில போயி அதை அடமானம் வைக்கும் போது சந்தேக கேசுலே போலீஸ் பிடித்து விசாரித்ததில் தான்தான் அங்கு எடுத்தேன் என்பதே சொல்லிவிட்டான்.

இவளின் பெற்றோருக்கு தகவல் சொல்லப்பட்டு இவர்கள் அம்மா அப்பா இருவரும் சென்று அந்த நகை பெற்றுக் கொண்டு வந்தார்கள். வீட்டில் இரண்டு நாட்கள் அதே பேச்சிதான்.

“பாவம் அந்த பையன் எந்த தப்பும் செய்யாதா அவன் மேல பழியைப்போட்டுட்டாளே நம்ம பொண்ணு. அந்த பையன் வாயை திறந்து நான் திருடலன்னு ஒரு வார்த்தைக்கூட சொல்லலையாமே போலிஸ்காரர் சொல்லி சொல்லி ஆதங்கப்படுகிறார்.”

“அவன் நல்லவந்தான். நான்தான் அந்த நல்லவனை புரிந்துக்கொள்ளாமல் பழியைப்போட்டுட்டேன். அவன் ஏன் அடியை வாங்கிட்டு அப்படியே இருந்தான்? அம்மா…அப்பா…நான் மிகப்பெரிய தப்பை பண்ணிவிடேன். என்று மோகனாவின் மனது உறுத்தோ உறுத்தென்று உறுத்தியது. தவறு செய்து விட்டோமே என்ற எண்ணம் மனதில் தீராத ரணத்தை ஏற்படுத்தியது.




கனத்த இதயத்தோடு மெல்ல கீழே இறங்கி வந்தாள். அவன் எங்காவது இருந்தால் அவனிடம் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தோன்றியது. வெளியில் வந்து வேலைக்காரப் பெண்ணிடம் உதவி கோரினாள். எப்படியாவது  வாட்ச்மேன்கிட்ட கூட்டிட்டு போ… நான் அவர் கிட்ட ஒரு விஷயம் கேட்கணும் என்றாள். அவளும் அவ்வாறு செய்யவே இந்த அரண்மனையின் காவலாளியிடம் சென்று ஒரு பதினைந்து இருபது வருடத்துக்கு முன் இங்க வேலை பார்த்த ஒரு பையனை உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டாள்.

அவர் அப்பப்ப ஆள் மாறி கிட்டே இருப்பாங்கம்மா நீங்க கேட்கிற ஆளு பெயர் என்னம்மா?

“பெயர் தெரியாதுங்க ஆனா ஒரு 15 வருஷத்துக்கு முன்னாடி நான் இந்த இடத்துக்கு வந்த போ அந்தப் பையன் தான் இங்க வேலை செஞ்சுகிட்டு இருந்தாரு. இந்த அரண்மனையை பார்த்துட்டு இருந்தாரு அவருடைய அப்பாவும் அவரும் மாறி மாறி பார்த்துகிறதாதான் சொன்னாங்க வயசு ஒரு பதினாறு பதினேழு இருக்கும்.”

அவர் உதட்டைப் பிதுக்கினார் எனக்கு தெரியல நான் இங்க வந்து மூணு வருஷம்தான் ஆகுது. அதுக்கு முன்னாடி இருந்தவங்களை  எனக்கு தெரியும். நீங்க சொல்ற 15 வருஷத்துக்கு முன்னாடி இருந்த அந்த பையனை எனக்கு தெரிய வாய்ப்பில்லை என்று ஒரேடியாக மறுத்துவிடவே சோர்ந்த முகத்துடன் அரண்மனையை விட்டு வெளியே வந்தாள் மோகனா. அன்றிலிருந்தே அவனை எப்படியாவது பார்த்துவிட வேண்டும். அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற உந்துதல் அதிகரித்த வண்ணமிருந்தது. ஆனால் அது கணவன் என்ற உருவத்தில் வருமென்று அவள் நினைத்துப்பார்க்கவே இல்லை.




What’s your Reaction?
+1
12
+1
16
+1
0
+1
1
+1
0
+1
1
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!