Serial Stories மாற்றங்கள் தந்தவள் நீதானே

மாற்றங்கள் தந்தவள் நீதானே -12

அத்தியாயம்-12

அன்று இரவு தேவானந்தன் வீட்டிற்கு வரும்போது இவள் அதி சீக்கிரமாகவே தூங்கியிருந்தாள். தூங்கி விட்டாள் என்று சொல்லமுடியாது தூங்குவதுபோல் பாவனை பண்ணிக் கொண்டு படுத்திருந்தாள். அவன் நேராக வந்து அறையை திறந்து விளக்கைப் போட்டான் அவளிடம் எந்த அசைவும் இல்லை. மோகனாவின் அருகில் வந்து அவளை அசைத்து எழுப்பினான் அவள் பிடிவாதமாக கண்களை இறுக்க மூடிக்கொண்டு படுத்திருந்தாள். ‘மோகனா…மோகனா’ அவன் குரல் மிகவும் இளக்கத்தோடு வெளிவந்தது. அவள் கண்களை திறக்கவே இல்லை மதியம் அவன் பேசியதுதான் மனதில் தோன்றியது. மீண்டும் எழுப்பினான் அவள் மரக்கட்டையாக கிடந்தாள். அதன் பிறகு சற்று நேரம் அமைதியாக இருந்தவன் கதவை வேகமாக அறைந்து சாத்திவிட்டு வெளியேறினான்.




இவளுக்கு தெரியும் அவனுடைய அறைக்குத்தான் போகிறான் என்று போகட்டுமே எனக்கு என்ன வந்தது மனைவி என்பவள் வெறும் உடலை ரசிக்கவும் அனுபவிக்க மட்டுமே பிறந்தவள் என்ற நினைப்பு. என்னதான் படித்திருந்தாலும் ஒரு பெண்ணோட மனச புரிஞ்சுக்க முடியாதா ஜென்மங்கள் என்று மனதுக்குள் நினைத்த அடுத்த நிமிடமே அழுகை அடைத்துக் கொண்டு வந்தது.

அடுத்த நாள் காலையில் எழுந்தபோது அவன் வீட்டிலேயே இல்லை சின்ன மாமனார்தான் இவளை அழைத்து தேவானந்தன் ஒரு எமர்ஜென்ஸி  கேஸ்  அட்டென்ட் பண்ண ஆஸ்பிட்டல்ல டாக்டர் இல்லையாம். டாக்டரை கையோடு கூட்டிட்டு போகனுன்கிறதுக்காகா  காலையிலேயே போயிட்டான். நீ எழுந்தவுடன் உன்கிட்ட சொல்ல சொன்னான் என்று சொன்னார்கள். அப்படி என்ன பெரிய கேஸ் போனில் சொன்னால் டாக்டர் வந்துட போறார். என்று எண்ணினாள் ஆனால் சில மணி நேரத்திலேயே அவனிடமிருந்து போன் வந்தது எடுத்து ஹலோ என்றாள். மறுமுனையில் அவன் நான் டெல்லி போகணும் எனக்கு இரண்டு செட் டிரஸ் எடுத்து வை வரதுக்கு ஒரு வாரம் பத்து நாள் ஆகலாம் என்று சொல்லிவிட்டு அவளுடைய பதிலுக்காக காத்திராமல் போனை பட்டென்று வைத்து விட்டான்.

இந்த மூன்று மாத காலத்தில் அவளை விட்டுவிட்டு அவன் வெளியூருக்கெல்லாம்  போனதில்லை. ஒரே ஒரு முறை மதுரைக்கு போனான். அதுவும் இவளை அழைத்துக் கொண்டுதான் போனான். அங்கு போயிட்டு வந்ததிலிருந்துதான் எல்லாமே தலைகீழாக மாறிப்போனதே. அன்றிலிருந்துதான் இவளிடம் அவன் முகம் கொடுத்துக்கூட பேசவில்லை.

அதன் பிறகு வந்த நாட்களில் ஒவ்வொரு நாளும் மிகவும் தாமதமாகத்தான் வீட்டுக்கு வந்தான். இவளோடு ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்த்தான்.




வெளியிலேயே சாப்பிட்டு விட்டு வந்துவிட்டேன் என்று முகத்தை திருப்பிக் கொண்டு சொல்லுவான். இவளும் இரவு உணவை தவிர்த்துவிட்டு பசி வயிற்றோடு வந்து படுத்துக்கொள்வாள்.

ஒரு சில நாட்களில் போதையோடு தள்ளாடியபடி வருவான். இவளோ முகம் சுளித்தபடி திரும்பிப் படுத்துக் கொள்வாள். வலுக்கட்டாயமாக அவளை திரும்பி படுக்குமாறு சொல்லி டார்ச்சர் படுத்துவான். குடி போதையில் கட்டித் தழுவும் போது இவள் கண்ணீரோடு சகித்துக் கொள்வாள்.

இப்படியாகத்தான் பத்து நாட்கள் ஓடியது. அம்மாவும் அப்பாவும் ஒரு முறை இவளை பார்க்க வந்தார்கள்.

“என்னம்மா ரொம்ப ஒல்லியான மாதிரி தெரியுறே ஏதாவது விசேஷமா என்றாள் அம்மா.”

“அதெல்லாம் ஒன்னுமில்லேம்மா… புடவை கட்டுனதால உங்களுக்கு அப்படி தெரியுது.” என்று எதையோ சொல்லி சமாளித்தாள்.

முன்பானால் அவன் எப்போ வருவான் என்று காத்திருப்பாள். தளர பின்னிய ஜடையும், தலை நிறைய மல்லிகைப் பூவும், வெயிட் லெஸ்சான புடவையும் கட்டியிருந்தால் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். லேசான அலங்காரத்தைதான் அவன் எப்பொழுதும் விரும்புவான்.

தளர பின்னிய சடை,  தலை நிறைய மல்லிகைப்பூ, லேசான உதட்டு சாயம், நைலெக்ஸ் புடவை என்று எளிய அலங்காரத்துடன் அவன் வரவுக்காகக் காத்திருந்தவளை, ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு கண்டுகொள்ளாமலேயே அறைக்குள் நுழைந்து கதவை சாத்தினான்.

இவள் பின்னாலேயே போய் கதவை தட்டினாள்.

“சாப்பாடு வேண்டாம் வெளியில் சாப்பிட்டு விட்டேன்”

என்று குரல் மட்டும் கொடுத்தானே தவிர அறைக் கதவைத் திறக்கவே இல்லை.

இரவு வெகுநேரம் கழித்து தான் கதவை திறந்தான். உள்ளே நுழைந்து கட்டிலில் படுத்துக்கொண்டவளை தோள்களைப் பற்றி உலுக்கினான்.




“ஏய்…எழுந்திரு உனக்கு என்ன பெரிய உலக அழகின்னு நினைப்பா தலை நிறைய மல்லிகை பூ வெச்சுட்டு இருந்தா நான் மயங்கிடுவேன்னு நெனச்சியா? எனக்கு அப்படி ஒரு  ஆசை இருந்தா காசு கொடுத்து எவ கூடவாவது போனாலும் போவேனே தவிர கண்டிப்பா எனக்கு விருப்பம் இல்லாதபோது உன்னைத் தொட மாட்டேன்.”

கூடை நெருப்பை அள்ளி தலையில் கொட்டியதுபோல் இருந்தது அவனுடைய பேச்சு. அன்று முழுவதும் தூங்காமல் அழுது கொண்டே இருந்தாள்.

“அழுவதுதான் உனக்கு சந்தோஷம்னா வேற ரூம்ல போயி அழு…என்ன டிஸ்டர்ப் பண்ணாத எனக்கு தூக்கம் வருது. “

என்று இறக்கமே இல்லாமல் பேசிய அவனுடைய தூக்கம் கெட்டு விடக்கூடாது என்பதற்காக தன் அழுகையை அடக்கிக் கொண்டு சுருண்டு கிடந்தாள் .

இவ்வளவு கஷ்டத்தையும் பொறுத்துக் கொண்டு அந்த வீட்டில் அவனோடு இருக்கிறாள் என்பது அவன் மேல் கொண்ட அன்பால் தானே தவிர வேற வழியே இல்லை என்ற சூழ்நிலையால் அல்ல.

இன்று அவன் வரட்டும் அவனிடம் வெட்கத்தைவிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும். நான் என்ன செய்தால் உங்களுக்கு சந்தோஷமாக இருக்கும் என்னை மன்னிப்பீர்கள் என்பதை கேட்டு விட வேண்டும். என்ற முடிவோடு அவன் வரவுக்காக காத்திருந்தான் மோகனா.

இதற்கெல்லாம் காரணமான அந்த நிகழ்வை ஒருமுறை நினைத்துப்பார்த்தாள். நினைத்த மறுநிமிடமே அவள் கண்களிலிருந்து கண்ணீர் உற்றெடுத்து ஓடியது. மனது தானாக பதினைந்து வருடத்துக்கு பின்னோக்கி ஓடியது.




What’s your Reaction?
+1
12
+1
14
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!