Beauty Tips அழகு குறிப்பு

பற்கள் மஞ்சள் கறை படிந்துள்ளதா?2 நிமிடத்தில் வெள்ளையாக, பளபளவென மாற்றிவிட முடியும்

ஒருவரின் சிரிப்பு மட்டும்  தான் பார்த்தமாத்திரத்திலே கவரக் கூடியது.அதற்காக உங்களது பல்லில் மஞ்சள் நிறம் படிந்திருக்கிறது என்ற காரணத்தினால், செயற்கையாக கிடைக்கும் பற்பசைகளை வாங்கி வைத்து, பற்களை தேய்த்து கொண்டே இருந்தால், மஞ்சள் நிறம் நீங்கி விடாது.  ஒரு சிலருக்கு பற்கள் வெண்மையாக இருக்கும். ஒரு சிலருக்கு பற்கள் கொஞ்சம் மஞ்சள் நிறத்தில், பழுப்பு நிறம் கலந்த படி தான் இருக்கும். அது இயற்கையானது. வெள்ளையாக மாற்ற வேண்டும் என்று, எதையாவது போட்டு பற்களில் தேய்த்து கொண்டே இருந்தால், பல்லின் மேல் இருக்கக்கூடிய எனாமல் நீங்கிவிடும். அதன் பின்பு பல் கூச்சம் ஏற்பட்டுவிடும். அதன்பின்பு பல் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும்.

முடிந்தவரை பல்லின் வெண்மைக்கு நீங்களே செயற்கையான முறையில் பற்பசைகளை வாங்கி பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுங்கள். சரி, குறிப்பை பார்த்து விடுவோம்.




தேவையான பொருட்கள்

பேக்கிங் சோடா-1/4 ஸ்பூன்

மஞ்சள் தூள் -1 ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் -1 ஸ்பூன்

 

பயன்படுத்தும் முறை

  • ஒரு பௌலில் மூன்றையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் போல தாயார் செய்து கொள்ளுங்கள்.

  •  பின்பு டூத் பிரஷ் கொண்டு பல் துலக்க வேண்டும். பின்னர் தண்ணீர் கொண்டு கொப்பளிக்கலாம். இப்போது பற்கள் வெண்மையுடன் மாறி இருப்பதைப் பார்க்கலாம்.

  • இப்படியாக வாரம் இரண்டு முறை செய்தால் கூட பல்லின் நிறம் வெள்ளையாக மாறும். ட்ரை பண்ணி பாருங்க. இந்த குறிப்பையும் கூட தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது. நான்கிலிருந்து ஐந்து  முறை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.

  • ஆனால் தினமும் தேங்காய் எண்ணெய் கொண்டு 5 நிமிடம் வாய் கொப்பளிக்கவும். இது ஈறுகளுக்கு வலிமை தருவதோடு பற்களின் கறைகளை போக்க கூடியது.




What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!