Entertainment palace அரண்மனைகள்

தமிழ் நாட்டு அரண்மனை-7 (சொக்கநாத நாயக்கர் அரண்மனை)

சொக்கநாத நாயக்கர் அரண்மனை

மதுரை நாயக்கர் மன்னர்கள் காலத்தில் கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்ட சொக்கநாத நாயக்கர் அரண்மனை தற்போது ராணி மங்கம்மாள் மஹால் என்று அழைக்கப்படுகிறது. இந்த அரண்மனை திருச்சிராப்பள்ளியில் புகழ்பெற்ற மலைக்கோட்டையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.

 




இராணி மங்கம்மாள் கொலு மண்டபம்

கிபி 1700ல் நாயக்க அரசியான ராணி மங்கம்மாளினால் திருச்சியில்  கட்டப்பட்டது. இது மங்கம்மாளின் கணவரான சொக்கநாத நாயக்கரால் 1666ல் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பகுதியாக உள்ளது. இது திருமலை நாயக்கர் மகாலில்  இருந்து சில பகுதிகளை இடித்து திருச்சிராப்பள்ளிக்கு எடுத்துச் சென்று கட்டப்பட்ட கட்டிடம் ஆகும். பஞ்க்சகாலத்தில் மக்கள் மீது கூடுதல் வரி விதித்து தர்பார் மண்டபம் கட்டக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில்  திருமலை நாயக்கர் மகாலின் ஒரு பகுதியை இடித்துக் கொண்டுவந்து இந்த தர்பார் கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இது திருச்சி மலைக்கு கோட்டைக்கு   அண்மையில் உள்ளது. 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளில் இது நகர மண்டப நிர்வாகத்தினர் கூடுவதற்கான மண்டபமாகச் செயற்பட்டது. 1999 ஆம் ஆண்டில் இது இந்திய அருங்காட்சியகத் துறையால் கையகப்படுத்தப்பட்டது. இங்கு தற்போது திருச்சி அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.

 




திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகம்

தமிழ் நாடு மாநிலம் திருச்சிராப்பள்ளி உள்ள சிங்காரதோப்பு பகுதியில் அமைந்துள்ளது . அருங்காட்சியகம் அமைந்துள்ள ராணி மங்கம்மாள் மஹால் மதுரையை  ஆண்டசொக்கநாத நாயக்கரால்  கட்டப்பட்டது. 1616 இருந்து 1634 வரை பின்னர் 1665 ல் 1731 வரை, இது மதுரை நாயக்கர்களின் தர்பார் ஹாலாக இருந்தது. திருச்சி அரசு அருங்காட்சியகம் 1983ஆம் ஆண்டு இராணுவக் குடியிருப்பு வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 1997-ல் இது டவுன்ஹால் வளாகத்தில் உள்ள நாயக்கர் ராணி மங்கம்மாள் தர்பார் ஹாலுக்கு மாற்றப்பட்டது. இங்கு காட்சிக்காக 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழங்காலப் பொருட்கள், கல்வெட்டுக்கள், கற்சிலைகள், சிற்பங்கள், போர்த்தளவாடங்கள், பெருங்கற்காலப் பொருட்கள், பழங்கால நாணயங்கள் போன்றவற்றைக் காணலாம்.

இங்கு திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகம் (Government Museum, Tiruchirappalli) அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் நிலவியல், விலங்கியல், ஓவியங்கள், மானுடவியல், கல்வெட்டியல் மற்றும் வரலாறு தொடர்பான காட்சிகள் வரிசை படுத்தப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியகத்தில் 2000 பொரு‌ட்க‌ள் உட்புற மற்றும் வெளிப்புற காட்சிகளாக கொண்டுள்ளது. உட்புற காட்சிகளில் சில பெருங்கற்கள் சிற்பங்கள், சிற்பங்கள், கற்கால கல்வெட்டுகள், இசைக்கருவிகள் வாசித்தல், கருவிகள், நாணயங்கள் மற்றும் சோழ சகாப்த நாணயங்கள், ஓவியங்கள் போன்ற வரலாற்றுகால தொல்பொருள்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.




மேலும், இங்கு அரிய வரலாற்று ஆவணங்கள், பனை ஓலைச் சுவடிகள், படிமங்கள்,ஹைதர் அலி பயன்படுத்தப்படுத்திய ஆயுதம் மற்றும் பீரங்கி குண்டுகள், ஆரம்ப நாட்களில் பி.எச்.இ.எல் நிறுவனம், ஸ்ரீரங்கம் மாதிரி, மலைக்கோட்டை மாதிரி மற்றும் தபால்தலை சேகரிப்பு பொருட்கள் ஆகிய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

வெளிப்புற பூங்காவில் கற்களாலான விக்கிரகங்கள், சிற்பங்கள் ஆகியவை உள்ளன. வெளிப்புற பூங்கா 17 ஏப்ரல் 2012 அன்று திறக்கப்பட்டது. பலிகொடுக்கும் பலிபீடம், கல் நந்தி மற்றும் லிங்கங்கள் உட்பட 18 ஆம் நூற்றாண்டு மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளை சார்ந்த சுமார் 45 சிற்பங்கள் உள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் அரிய பூச்சிகள், பறவைகள் மற்றும் பாலூட்டிகள் ஆகியவற்றின் தொகுப்பு இடமாக சூழலியல் பிரிவு உள்ளது.

இந்த அருங்காட்சியகம் முதலில் திருச்சிராப்பள்ளி கண்டோன்மெண்ட் பகுதியில் 1983 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.. பின்பு 1997 -ல் இராணி மங்கம்மாள் மஹாலுக்கு இது மாற்றப்பட்டது. இந்த அருங்காட்சியகம் பொதுப்பணித் துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

 





மேலும், இந்த வளாகத்தில் உள்ள கோட்டை கட்டிடங்களில் வட்ட வருவாய்த்துறை அலுவலகம், திருச்சி மாநகர கோட்டை காவல் நிலையம், திருச்சி 3-ம் எண் சார் பதிவாளர் அலுவலகம், மற்றும் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆன்மீகத்தின் அடையாளமாகவும், வரலாற்று சிறப்புமிக்க இடமாகவும் திகழும் திருச்சி மலைக்கோட்டைக்கு வருகை தரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் மறக்காமல் இந்த இராணி மங்கம்மாள் மஹால் வளாகத்தில் உள்ள அரசு அருங்காட்சியத்தை பார்ப்பதற்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

ஏனென்றால், வாழுகின்ற மக்களுக்கு வாழந்தவர்கள் பாடம்

அருங்காட்சியகம் செயல் படும் நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நுழைவுக் கட்டணம்: பெரியவர்கள்: ரூ.5/- சிறியவர்கள்: ரூ.3/- வெளிநாட்டவர்: ரூ.100/-

 




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!