Entertainment Samayalarai

இடியாப்பம் அச்சு வைத்து லேயர் பரோட்டா!

இடியாப்ப அச்சில் சுவையான லேயர் பரோட்டா செய்யலாம் தெரியுமா? என்ன இடியாப்ப அச்சுல பரோட்டாவா! ஆச்சரியமா இருக்குல்ல வாங்க அதை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

இன்று பெரும்பாலோரின் விருப்பமான உணவாக  இந்த பரோட்டா உள்ளது. ஆனால் பரோட்டா சாப்பிட வேண்டும் என்றால் ஹோட்டலுக்கு சென்று தான் சாப்பிட வேண்டும். வீட்டில் அதை செய்வது  கொஞ்சம் கடினம் தான். அதிலும் லேயர் பரோட்டா செய்வதென்றால் மாவை அடித்து பிசைவது போன்ற வேலைகள் அதிகம். எனவே இதை சாப்பிட நினைத்தால் கடைகளில் வாங்கி சாப்பிட்டு விடுகிறார்கள். இந்த சமையல் குறிப்பு பதிவில் இடியாப்பம் அச்சு வைத்து லேயர் பரோட்டா சுலபமாக செய்வது எப்படி என்பதை தெரிந்துகொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்

மைதா -1  கப்

எண்ணெய்- 8 ஸ்பூன்

உப்பு-தேவையான அளவு

தண்ணீர்- தேவையான அளவு




செய்முறை விளக்கம்

  • இந்த பரோட்டா செய்வதற்கு முதலில் ஒரு பவுலில் ஒரு கப் மைதா மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கால் டீஸ்பூன் உப்பு சேர்த்த பிறகு அடுப்பில் தண்ணீர்  வைத்து, தண்ணீர் கொதி நிலைக்கு வரத் தொடங்கியதும் அடுப்பை அணைத்து விடுங்கள்.

  • இந்த தண்ணீரை நாம் எடுத்து வைத்திருக்கும் மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி ஒரு கரண்டி வைத்து கலந்து கொள்ளுங்கள். தண்ணீர் அதிக சூடாக இருக்கும் எனவே கவனமாக கலந்து விடவும். மாவு தண்ணீருடன் கலந்த பிறகு வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் போதே மாவை பிசைந்து விடுங்கள். இதற்கு மாவை அடித்து பிசைய வேண்டும் என்று அவசியம் இல்லை. அப்படியே பிசைந்து விட்டால் போதும்.

  • அடுத்ததாக ஒரு அகலமான தட்டில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தட்டு முழுவதும் எண்ணெயை பரப்பி விடுங்கள். இடியாப்ப அச்சில் பிசைந்து வைத்த மாவை சேர்த்து  அதை இந்த எண்ணெய் தேய்த்த தட்டில் இரண்டு சுற்றுகள் வரை மாவை இடியாப்பம் போல சுற்றி விடுங்கள். இப்படியாக அந்த தட்டில் எத்தனை பரோட்டாகளை இடியாப்ப அச்சு வைத்து சுற்றி வைக்க முடியுமோ அப்படி வைத்து விடுங்கள்.




  • அதன் பிறகு இந்த மாவில் மேலே எண்ணெய் தேய்த்த பிறகு ஒரு தட்டு போட்டு பத்து நிமிடம் இந்த மாவை அப்படியே அந்த எண்ணெயில் ஊற விடுங்கள். பத்து நிமிடம் கழித்து இந்த பரோட்டாவை தட்டில் இருக்கும் எண்ணையிலே லேசாக தட்டி எடுத்து சப்பாத்தி தேய்க்கும் கல்லில் போட்டு கை வைத்து லேசாக அழுத்தினாலே போதும் அழகான பரோட்டா கிடைத்து விடும்.

வீட்டு குறிப்பு

  • அடிக்குற வெயிலில் மொத்தமாக இட்லி மாவில் உப்பு போட்டால் மாவு சீக்கிரம் புளித்து போகும். இது தான் எங்களுக்கே தெரியும் என்கிறீர்களா? அதுமட்டுமில்லை, ப்ரிட்ஜில் வைக்கும் மாவில் வெற்றிலையை காம்பு நீக்காமல் போட்டு வையுங்கள். அப்படி செய்தால் மாவு சீக்கிரம் புளிக்காது. குறிப்பாக வெற்றிலையின் காம்பு மாவினுள் அழுத்தி இருக்க வேண்டும்.

  • புடவையில் வைத்து தைக்கும் சின்ன கலர் ஜமுக்கியை ரப்பர் பந்தில் வைத்து குண்டூசியால் பந்து முழுவதும் குத்தி அதை டேபிள் மேல் பேப்பர் வெயிட்டாக வைக்கலாம். அல்லது கண்ணாடி அலமாரியிலும் வைக்கலாம். பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!