Entertainment News palace அரண்மனைகள்

தமிழ் நாட்டு அரண்மனை- 4 (மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை)

திருமலை நாயக்கர் அரண்மனையானது அரசர் திருமலை நாயக்கரால் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

வளர்ச்சி, அபிவிருத்தி, முன்னேற்றம்,… எந்தத் துறையை எடுத்தாலும் நாளுக்கு நாள் ஏராளமான மாற்றங்கள் மற்றும் புதுமைகள்! என்னதான் சொல்லுங்கள், எனக்கென்னவோ நம்மை விட நமது முன்னோர்கள் துறைசார் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாகவும், அறிவியல் மற்றும் கலைகளில் தேர்ச்சி பெற்று விளங்கியதாகவுமே தெரிகிறது. எனது கருத்து உங்களுக்கு புதுமையாக இருக்கலாம். ஆனால் இன்றைய அறிவியல் உலகம் நினைத்தாலும் படைத்திட முடியாத, ஆயிரம் அல்ல, கோடி கட்டிடக்கலை வல்லுனர்கள் சேர்ந்தாலும் சாதிக்கமுடியாத அற்புதப் படைப்புக்களை வெறுமனே மூளை, மனிதவளம் மற்றும் இயற்கையை அடிப்படையாகக் கொண்டு வரலாறு செய்த நம் முன்னோர்கள் நம்மை விடத் தேர்ந்தவர்கள் என்றால் மிகையில்லை.

ஆம், திராவிட, இஸ்லாமிய மற்றும் மேற்கத்திய கட்டிடக்கலை மூன்றையும் கலந்து இதுதான் தென்னிந்தியாவின் மாபெரும் பொக்கிஷம் எனக் கருதுமளவு கலை நயம் சொட்டச் சொட்ட மன்னன் திருமலை  திருமலை நாயக்கர் அரண்மனையை கட்டியுள்ளார்.

மதுரையில் திருமலை நாயக்கர் அரண்மனை தென்னிந்திய அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோயிலின் தெற்கே 2 கிமீ தொலைவில் இந்த அரண்மனை அமைந்துள்ளது.




சொக்கநாத நாயக்கர் கடத்திய பொருட்கள்:

மதுரை நாயக்கர்கள் 1545 முதல் 1740 வரை இந்த ராஜ்யத்தை ஆட்சி செய்தனர். திருமலை நயாக்கர் (1623-1659) மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் பல்வேறு கட்டடிடங்களை எழுப்பி இருந்தார். அப்போது மதுரை நகரம் இந்திய மற்றும் ஐரோப்பிய வர்த்தகர்களுக்கு ஒரு வர்த்தக நகரமாகத் திகழ்ந்தது. அரண்மனையை கட்டுவதற்கு திருமலை நாயக்கர் ஒரு இத்தாலிய கட்டிடக் கலைஞரை பணியில் அமர்த்தியதாக நம்பப்படுகிறது. மன்னர் திருமலை நாயக்கின் பேரன் சொக்கநாத நாயக்கர் அரண்மனையை இடித்து, திருச்சியில் தனது சொந்த அரண்மனையை கட்டும் பொருட்டு நகைகள் மற்றும் மரத்தூண்கள் ஆகியவற்றை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் இப்போதிருக்கின்ற முற்றம், சொர்க்கவிலாசம், ஆடல் மண்டபம், அவற்றோடுகூடிய சில கட்டுமானங்கள் போன்றவை ஆரம்பத்தில் இருந்த திருமலை நாயக்கர் அரண்மனையின் நான்கில் ஒரு பங்குதான் என்பது கசப்பான உண்மை. திருமலை நாயக்கரின் பேரன் சொக்கநாத நாயக்கர் இவ்வரண்மனையின் பெரும்பாலான பகுதியை அழித்தது மட்டுமல்லாமல், அங்கிருந்த விலைமதிக்கமுடியாத பொக்கிஷங்களை இடமாற்றிவிட்டதாகவும் சொல்லப்படுகின்றது.

எனினும், சென்னை மாகாண ஆளுநர், லார்ட் நேப்பியர், 1866-72 ஆம் ஆண்டில் ஓரளவிற்கு அரண்மனையில் பராமரத்துப் பணி செய்தார். மேலும் பல ஆண்டுகளுக்கு முன்னர் பராமரத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இன்று நுழைவு நுழைவாயில், மெயின் ஹால் மற்றும் டான்ஸ் ஹால் ஆகியவை பாதுகாப்பான நிலையில் உள்ளன.

 

அரண்மனையின் பிரம்மாண்டம்

திரும்புகிற பக்கமெல்லாம் மண்டபங்களும் அதனைத் தாங்கியவண்ணம் தூண்களும் கண்ணுக்குப் புலப்படுகிரவரையும் பரந்திருந்தன. எண்ணிக் கணக்கெடுக்க முயன்றால் தோற்றுப்போகுமளவு கண்களையே எமாற்றுமாறு செறிந்திருந்த தூண்களின் மொத்த எண்ணிக்கை 248 என்கிறது குறிப்பு! ஒரு ஊரே வந்து வாழக்கூடிய இடப்பரப்பில் ஒரு மன்னர் வாழ்ந்திருக்கிறார் என்றால், நாயக்கர்களின் பலத்தை நீங்களே அனுமானித்துக்கொள்ளுங்கள் வாசகர்களே!

என்னதான் மன்னராக இருந்தாலும் கலைக்கு அவர்கள் கொடுத்திருக்கும் முக்கியத்துவமும், அவர்களது கலாரசனையும் அவர்கள்பால் பெரிய மரியாதையை உண்டுபண்ணாமலில்லை. நாம ஒரு டிசைன குடுத்தா, அத நம்ம டிசைன்தானான்னு நமக்கே புரியாத அளவு கட்டிக் கடாசுற கொத்தனாருங்கள பாத்த நமக்கு, இவ்வளவு நுணுக்கமான கட்டிடக்கலைய அட்சரம் பிசகாம எப்பிடி கட்டி முடிச்சாங்கங்கற உண்மைய நெனச்சாலே, புல்லரிக்குது!

தூண்கள்:
18 ஆம் நூற்றாண்டில் இந்த அரண்மனையின் பகுதியாக இருந்த பல கட்டமைப்புகள் இடிக்கப்பட்டன அல்லது அருகிலுள்ள தெருக்களுடன் இணைக்கப்பட்டன. திருமலை நாயக்கர் மஹால் அதன் பெரிய தூண்களுக்கு புகழ் பெற்றது. தூண் உயரம் 82 அடி மற்றும் அகலம் 19 அடி.

ரங்க விலாசம், ஸ்வர்க விலாசம்:
இந்த அரண்மனை இரண்டு பெரிய பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது, அவை ஸ்வர்க விலாசம் மற்றும் ரங்க விலாசம் ஆகும். அரச குடியிருப்பு, தியேட்டர், சன்னதி, அடுக்கு மாடி குடியிருப்பு, கவசம், குளம் மற்றும் தோட்டம் இந்த இரண்டு பகுதிகளிலும் அமைந்து இருந்தன. நடன மண்டபம் அரண்மனையின் முக்கிய இடமாகும். இங்கு தினமும் நடன நிகழ்ச்சிகளை திருமலை நாயர்க்கர் கண்டு கழித்துள்ளார்.

சுண்ணாம்பு கட்டிடம்:

திருமலை நாயக்கர் கட்டிடம் சுன்னம் எனப்படும் சுண்ணாம்பு மற்றும் மென்மை மற்றும் பளபளப்பான தோற்றத்தை பெறுவதற்காக முட்டையின் வெள்ளை கலந்த கலவையால் கட்டப்பட்டது.

அருங்காட்சியகம்

தொல்பொருள் ஆய்வு மையம் இவ்வரண்மனையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முன்பு, நாயக்கர் மஹால் ஆயுதக் களஞ்சியமாகவும், தொழிற்சாலையாகவும் இன்னும் பல்வேறு அரச அதிகாரிகளின் வாசஸ்தலமாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இப்பேர்ப்பட்ட கலைப் பொக்கிஷம் நாளடைவில் அழிந்துபோகும் அபாயத்தை கருத்தில் கொண்டு, தமிழக அரசு இம்மொத்த அரண்மனையையும் தொல்பொருள் ஆய்வு மையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, இப்போது சீரிய முறையில் பாதுகாத்து வருகிறது.

அதன் பேராய், சொர்க்கவிலாசத்தை அடுத்ததாக நாயக்கர் காலத்தில் ஆடல் கலை மண்டபமாக விளங்கிய அரங்கு தற்போது அருங்காட்சியகமாகப் பாவிக்கப்பட்டு வருகிறது. தொல்பொருள் துறையினால் கண்டுபிடிக்கப்பட்ட சிற்பங்கள், ஓவியங்கள், வரலாற்றுச் சுவடுகள், இப்படிப் பல்வேறு பொருட்கள் அங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அனாலும் அத்தனைக்கும் மகுடமாக இன்றும் இந்த ஆடல் மண்டபம் அழகியல் ஊறிய அரங்கமாக விளங்குகிறது.

ஒலியும், ஒளியும்:

இந்த அரண்மனை நகரின் கிழக்குப் பகுதியில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து சுமார் 2 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. திருமலை நாயக்கரின் பெருமைகளை விளக்கும் வகையில் தினமும் ஒலியும், ஒளியும் நிகழ்ச்சி நடக்கிறது. தினமும் மாலை 6.45 மணி முதல் 7.35 மணி வரை ஆங்கிலத்திலும், இரவு 8 மணி முதல் 8.50 மணி வரை தமிழிலும் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த அரண்மனை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். நுழைவு டிக்கெட் விலை ரூ .10 ஆகும்.

இன்றுவரை அதன் பொலிவு இழக்காமல் மதுரை மக்களுக்கும், வெளியூர் மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகளுக்கும் காட்சியளித்து வருகிறது.




What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!