Entertainment தோட்டக் கலை

பஞ்சகாவ்யம் உரம் பற்றி.. ?

கீழ்க்காணும் இடுபொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு அங்கப் பொருள் பஞ்சகாவ்யம் என்றழைக்கப்படுகிறது.




  • பசு மாட்டுச் சாணம் – 7 கிலோ

  • பசு மாட்டுக் கோமியம் – 10 லிட்டர்

  • தண்ணீர் – 10 லிட்டர்

மேற்காண்பவற்றை ஒன்றாகக் கலந்து மண்பானையில் 15 நாட்கள் வரை வைத்திருந்து, பின்பு பின்வருவனவற்றைச் சேர்க்க வேண்டும்.

  • பசும்பால் – 3லிட்டர்

  • பசுவின் தயிர் – 2 லிட்டர்

  • பசு நெய் – 1 லிட்டர்

  • இளநீர் – 3லிட்டர்

  • நாட்டு வெல்லம் – 3 கிலோ

  • வாழைப்பழம் – 12 எண்கள்

இவற்றை காலையிலும் மாலையிலும் நன்றாகக் கலக்க வேண்டும்.

அடுத்த 25 நாட்களில் பஞ்சகாவ்யம் தெளிப்பதற்குத் தயாராகிவிடும். இதனை 3 சதக் கரைசலாக (100 மி.லி. நீரில் 3. மி.லி. பஞ்சகாவ்யம்) ஒரு மாத இடைவெளியில் பயிருக்குத் தெளிக்கலாம். பஞ்சகாவ்யத்தில் பயிருக்குத் தேவையான நுண்ணுயிரிகளும் பூச்சிநோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் காரணிகளும் நிறைந்துள்ளன.குறிப்பாகத் தோட்டத்தில் வேலை பார்க்கும்போது கை, கால்களில் காயம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் கையுறைகள்,  காலணிகள் அணியவேண்டும். தோட்டத்திற்கு அதிக செலவு செய்வதைத் தடுக்க இயற்கை கழிவுகள் மறுசுழற்சி முறையில் உரங்களாக மாற்றிக் கொடுக்கலாம். …




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!