Serial Stories மாற்றங்கள் தந்தவள் நீதானே

மாற்றங்கள் தந்தவள் நீதானே -11

அத்தியாயம்-11

ஒரு வாரத்துக்கு பிறகு…

காலையில தேவானந்தன் பேசிய பேச்சால் அன்று முழுவதும் மூட் அவுட் ஆகவே இருந்தால் மோகனா .எப்படி பேசிட்டான் இப்படி கூட ஒருவரை வார்த்தையால கஷ்டப்படுத்த முடியுமா? நினைச்சுப் பார்க்கவே கஷ்டமா இருந்தது.

காலையில் என்ன நடந்தது என்றால்…




வீட்டின் கீழ் தளத்தில் அவனுக்கென்று ஒரு தனி அறை இருந்தது. அவனைப் பார்க்க யாராவது வந்தால் அந்த அறையில் அமர வைத்து தான் பேசுவான். உறவுக்காரர்களும் நண்பர்களும் பர்சனலாக ஏதாவது பேச வேண்டுமென்றால் அந்த அறையில் வெயிட் பண்ணு வார்கள் இவன் அவர்களோடு பேசிவிட்டு அவர்களை அனுப்பிவைப்பான். பொதுவாக அந்த அறைக்கு யாரும் போக மாட்டார்கள் ஏனென்றால் அவனுக்கு அப்படி வருவதும் பிடிக்காது. தொழிலாளர்களோ முதலாளியோ தங்கள் தொழிலைப்பற்றி பேசுவது ரகசியம் காக்கப்பட வேண்டும். தன் மனைவியாக இருந்தால் கூட ஷேர் பண்ணுவது தப்பு என்ற கொள்கை உடையவன். தனக்கு மட்டும் தெரிய வேண்டுமே என்ற எண்ணத்தோடு சில பர்சனல் விஷயங்களையும் பேச வேண்டிய சூழ்நிலை இருக்கும் அப்படி இருக்கும் போது அது வீட்டிற்கு மற்றவர்களுக்கு தெரிய வேண்டாம் என்ற எண்ணத்தில் தான் அவன் அந்த தனியறையை பயன்படுத்தினான்.

திருமணமான மூன்று மாதக்காலத்தில் மோகனா அந்த அறைக்கு போனதே இல்லை. அன்று சின்ன மாமனார் கணபதி ஊரிலிருந்து வந்திருந்தார். அவர் ஒரு கடிதத்தை இவளிடம் கொடுத்து இது தேவானந்தனுக்கு வந்த கடிதம் அவனிடம்  கொடுத்து விடும்மா என்று சொல்லவும் ஏதாவது முக்கியமான கடிதமாக இருக்கப் போகிறது என்ற எண்ணத்தில் அதை எடுத்துக் கொண்டு அறைக்குள் சட்டென்று நுழைந்து விட்டாள்.




உள்ளே ஒரு இளம் பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த தன் கணவன் இவளுடைய வரவை பார்த்து முகம் சுளித்தான். பிறகு எழுந்து வந்து இவள் அருகில் இவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? அறைக்குள் வருவதற்கு முன் கதவைத் தட்டிவிட்டு வரவேண்டும் என்ற மேனர்ஸ் கூடவா தெரியாது? நீ பாட்டுக்கு வந்து கதவைத் திறக்கிறே? என்று எரிந்து விழுந்தான்.

வார்த்தைகள் வெளிவராமல் திக்கித்திணறி சாரி என்று தலை குனிந்தபடி நின்றாள் மோகனா. முதலில் வெளியில் போ..என்ன விஷயமா இருந்தாலும் அப்புறம் வந்து பேசிக்கலாம் என்று சொன்னவன் அவள் கையில் வைத்திருந்த கடிதத்தை கூட பார்க்கவில்லை படாரென்று கதவை சாத்திவிட்டான்.

முகம் சுண்டிப்போன மோகனா நேராக மாமனாரிடம் வந்தவள் மாமா அவர் ரொம்ப பிசியா இருக்கிறாராம் அப்புறமா வந்து பார்க்கிறேன் சொன்னார் இருந்தாங்க… கடிதத்தை அவரிடம் கொடுத்துவிட்டு பட்டென்று முகத்தை திருப்பிக்கொண்டாள். அவளுடைய முகத்தை பார்த்த  மாமனார் எதையோ கேட்க வாயை திறக்க இவள் அங்கு நிற்காமல் விறுவிறுவென்று நடந்து தன் அறைக்கு வந்து கதவை தாழிட்டுக் கொண்டாள். பீரிட்டு  வந்த அழுகையை ஒரு மூச்சு அழுது தீர்த்தாள். மனைவி மட்டுமே வேண்டும் அவளோடு சந்தோஷமாக இருக்க வேண்டும். ஆனால் அவளுக்கு எந்த உரிமையும் இல்லை என்று ஒதுக்கிவைக்கும் இந்த சமுதாயத்தை நினைத்து வேதனைப்பட்டாள். இப்படியெல்லாம் பேசிய அவன் முகத்தை  இனிமே ஏறிட்டு பார்க்க கூடாது அவனாக வலிய வந்து பேசற வரைக்கும் நாம  போய் பேசக்கூடாது என்ற  முடிவுக்கு வந்தாள்.




What’s your Reaction?
+1
16
+1
11
+1
1
+1
0
+1
0
+1
2
+1
3
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
MUTHURAVI
MUTHURAVI
1 year ago

ROMBA CHINNA UD

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!