Serial Stories காதல் இளவரசி

காதல் இளவரசி – 26

26TH CHAPTER

 

நன்றாக உறங்கி முடித்து சலனமில்லாமலும் அதிக ஆர்ப்பாட்டமும் இல்லாமல் பொங்கி வரும் அலைகளை ரசித்தவாறு கண்ணாடித் தடுப்பின் வெளியே பார்வையைப் பதித்திருந்தாள் பத்மினி. என்னடி இன்னும் கடலையே உற்றுப் பார்த்துகிட்டு இருக்கிறே ஆவி பறக்கும் காப்பி கோப்பையோடு அங்கு வந்திருந்த உத்ராவினைக் கண்டதும் உடல் சோர்வையும் மீறி உற்சாகமாய் சிரிப்பு வந்தது?

 

மூணுநாலு நாளா அங்கேயே இருந்திட்டேன் இல்லை அதுதான் விட்டுப்பிரிஞ்சது கஷ்டமாயிருக்கு இன்னொரு டிரிப் போயிட்டு வரலான்னு பாக்குறேன்

 

விளையாட்டுக் கூட அப்படி சொல்லாதே பத்மினி அன்னைக்கு நீ என்கிட்டே கோவிச்சிகிட்டு காணாம போனபிறகு, உன்னைக் கண்ணாலே பார்க்கிற வரைக்கும் என் மனசு பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். உனக்கு என்னாச்சோ ஏதாச்சோங்கிற பயம் என்னைப்போட்டு அறுத்து எடுத்துடுச்சி. 




 

அந்தக் கவலையிலேதான் பரத் கூட அவுட்டிங் போனீங்களாக்கும்….உத்ராவின் மூக்கைச் செல்லமாய்த் திருகினாள் பத்மினி உண்மையா எனக்கு உன் மேலயும் பரத் மேலயும் எந்தக் கோபமும் இல்லை, முதல்நாள் விருந்துக்குப் போகும் போதே பரத் உன்னை லவ்வுற விஷயத்தை என்கிட்டே சொல்லிட்டார். எனக்கு பரத் மேல இன்ட்ரஸ்ட் இருந்தது பட் அது காதல் இல்லை, ஒரு குடும்ப வட்டத்திற்குள்ளே சிக்கிக்கொள்ள எனக்கு விருப்பம் இல்லை உத்ரா. நிறைய ரகசியங்களை அடக்கியிருக்கிற இந்த கடல் மேலதான் எனக்கு காதல் நீ எப்படி உன்னோட காதலை தேடிப் போனீயோ அதே போலத்தான் நானும் ஒரு சேன்ஞ்க்கு கடல்ல நீந்தலான்னு போனேன். ஆனா அன்னைக்கு இருந்த நிலைமை கொஞ்சம் தடுமாற வைச்சது உண்மைதான்.

 

என் வாழ்க்கையைப் பற்றி நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் பெற்றோர் இருந்தும் கவனிக்கப்படாத பிள்ளைகள் எல்லாம் அநாதைகள்தான் நானும் அப்படித்தானே, அன்னைக்கு பரத் என்னைத் திட்டியது அடிச்சது எல்லாமே என் மேலுள்ள அக்கறைன்னு அப்பறம் புரிஞ்சது. உன்னையும் கஷ்டப்படுத்திட்டேனேன்னுதான் உங்களைப் பார்க்க நான் வந்தேன் .அப்போ ப்ரியன் மட்டும்தான் அங்கே இருந்தான். நீங்க இரண்டு பேரும் வெளியே போயிருக்கிறதாகவும், அவனுக்கும் ஏதோ வேலையிருக்கு கொஞ்சம் நேரம் கண்ட்ரோல் ரூமில் இருக்கமுடியுமான்னு கேட்டுகிட்டான். ஆனால் அவன் பேசிய போது பரத்மேல அவனுக்கு இருக்கிற பொறாமை உணர்வு எட்டிப்பார்த்தது பரத் நல்லவன் இல்லை அவனால நிறைய பொண்கள் சீரழிஞ்சிப் போயிருக்காங்கன்னு என்னனென்னவோ சொன்னான். உத்ராவின் நிலைமையும் இனிமேல் அவ்வளவுதான்னு நிறைய பேசினான். எனக்கு இருந்த மனநிலையிலே எதையும் யோசிக்கத் தோணுலை அவன்போன பிறகு நான் கண்ட்ரோல் ரூமில் தனியா இருந்தேன் அப்போ எதிர்பாரா விதமா அவனோட கணிப்பொறியை இயக்கும் போது அதிலே சில பெண்கள் படம் போட்ட போல்டர் இருந்தது அதில் நீரஜாங்கிற பெயர் என்னை ஈர்த்தது.

 

யாரோ எங்கேயோ இந்த பெயரைச் சொல்லிப் பேசியதைப் போல நினைவு நான் அதை உயிர்ப்பித்தேன் அப்போதான் ப்ரியனும் இன்னொருத்தனும் அந்தப்பெண்ணை மயக்கப்படுத்தி நாசமாக்கியது தெரிந்தது. டாக்குமெண்ட் ஹிஸ்டரியில் முதல் நாள் நள்ளிரவு அந்த பைல் ஓப்பன் செய்து பார்த்ததற்கான அடையாளமும் இருந்தது. அப்போ ப்ரியன்தான் மோசமானவன்ங்கிற எண்ணம் எனக்குள்ளே உதித்தது. பரத் மேல அவன் ஏன் அத்தனை மட்டமான பொய்களைப் பரப்பினான்ங்கிறதும் புரிந்தது உடனே உங்க இரண்டுபேர்கிட்டேயும் சொல்லலான்னா உங்க போன் நாட் ரீச்சபிள். நான் என் மொபைலில் அந்த வீடியோ போட்டோஸ் எல்லாம் எடுத்த பிறகு தான் ப்ரியன் அங்கே வந்தான்

 

கடவுளே அதுக்குப்பிறகு

 

அதெல்லாம் நிறைய படங்களில் காட்டலையா நீயே கெஸ் பண்ணிக்கோ, என்னை அடையவும் அவன் சில திட்டங்கள் போட்டு இருந்திருக்கான். பட் அந்த சூழ்நிலையிலே அவனால என்னை ஏதும் பண்ணமுடியலை ஒரு பாலிதீன் கவர்ல என்னைக் கட்டி கடல்ல போட்டுட்டான். அங்கேயும் ஒரு வித்தியாசமான அனுபவம்தான்




கடவுளே என்று நெஞ்சின் மேல் கைவைத்துக் கொண்டாள் உத்ரா

 

ரொம்ப பயப்படாதே உத்ரா…நம்மோட முடிவை நாம தான் எழுதணும் ப்ரியன் என்னைக் கட்டி கடலில் போடணும் நினைச்சது என்னவோ கொலை செய்யத்தான் ஆனா அவன் தேர்ந்தெடுத்த இடம்தான் தப்பு இங்கே இந்த தப்பு மட்டும் இல்லை இவனும் பரத்தோடு இன்னொரு நண்பனும் சேர்ந்து அவனுக்கு துரோகம் செய்யறது தெரியவந்தது. நம் நாட்டோட கனிம வளங்களை கொள்ளையடிக்கிறது வெளியுலகிற்கு தெரியக்கூடாதுன்னு கிளவரா பவளப்பாறை மீட்புன்னு ஒரு ஐடியாவைக் கண்டுபிடிச்சி அதிலே பணக்காரனான பரத்தை கூட்டு சேர்த்துக்கொண்டு கடலுக்கு அடியில் சுரங்கம் அமைத்து அதில் யுரேனியத்தை கைப்பற்றறாங்க

 

எப்படி ?

 

பவளப்பாறைகளை அழிக்கிற மீனுக்காக நாம ஒரு ஊசி மருந்து கொண்டு வந்தோமே ! அதை செலுத்தியதும் அந்த மீனை அழிக்கறதோ இல்லை கடலோட குறிப்பிட்ட பகுதியிலே வெப்ப மட்டத்தை உயர்த்தி யுரேனியத்தை உருக்கி அவங்க ரெடி பண்ண சுரங்கத்தில் சேமிச்சு வைக்கிறாங்க. இதை நான் அங்கே அந்த சுரங்கத்தில் தான் கண்டுபிடிச்சேன் அதுமட்டுமல்ல உத்ரா நாம முதல்நாள் சைட் சீயிங்போனோமே அப்போ நம்மளை ஒரு திமிங்கலம் துரத்தியதே நினைவிருக்கா அது உண்மையானது இல்லை அதுவும் இவங்களோட செட்டப்தான்.

 

பாலிதீன் பையோட முடிச்சு சுரங்கத்தில் ஏதோஒரு மூலையில் விரிசல் விட எனக்கு சுவாசிக்க கொஞ்சம் மூச்சுவிட முடிந்தது. ஆனா அதுக்குள்ளே என்னைக் நோக்கி அந்த திமிங்கலம் வர ஆரம்பிச்சிட்டது. அவ்வளவோதான் திமிங்கலத்திற்கு இன்னைக்கு நான் ப்ரைதான்னு நினைச்சிட்டு இருந்தேன் வெகு அருகில் இருந்த என்னை அது கண்டுக்கவே இல்லை, ஏதோ மயக்கம் செலுத்தப்பட்டதைப் போல அது ஒரு உள்ளடுக்கு அறைக்குள் போச்சு அங்கே நல்ல அனல் ….. நம்ம கன்ட்ரோல் ரூம் போலஅங்கேயும் சில கணிப்பொறிகள் அப்பறம்

 

உன்னோட டிடெக்டிவ் மூளை உயிர்பெற்று இருக்கும் நீ உடனே செட் வேகத்திலே போயிருக்குமே, தனியா போய் மூக்கை உடைச்சிகிட்டு ….

 

கரெக்ட்டா கழுகுக்கு மூக்குல வேர்த்தாமாதிரி உடனே உனக்கு வேர்த்துடுமே பரத் உத்ராவுக்கும் உனக்கும் கல்யாணம் ஆகிறவரைக்கும் அவ என்னோட சொத்துதான் என்ன உத்ரா

 

கரெக்ட்…..

 

நல்லாயிருந்தா பெபிகால் போட்டு ஒட்டிக்கிறது இல்லைன்னா, கத்திரிக்கோல் மாதிரி வெட்டிக்கிறது உங்க கூட்டத்திலே நானும் சேர்ந்து கொள்ளலாமா ? என்று சிரிப்புடன் உள்ளே நுழைந்தான் அலெக்ஸ்

 

வாங்க அலெக்ஸ் இரண்டு பெண்களும் சேர்ந்துகிட்டு என்னை ஓட்டுறாங்க நீங்க வந்தது எனக்கு பெரிய ப்ளஸ்

 

ஆமாம் ஆமாம் அப்படியே ஓட்டிட்டாலும் என்ன மிஸ்டர் அலெக்ஸ் உங்க தோளில் ஒருத்தங்க ஒட்டிட்டே இருப்பாங்களே அவங்களை இறக்கி வைச்சிட்டு வந்திட்டீங்களா ?

 

அடக்கடவுளே பத்மினி அவ ஏஞ்சல் வேதாளம் இல்லை என் முதுகுகிலேயே தொங்கிகிட்டு இருக்க ….. கூட்டிட்டு வரும்போது தலைசாய்ந்து சோமாலியா பட்டினியில கிடந்தாமாதிரி இருந்த பொண்ணு கொஞ்சம் சாப்பாடும் ஓய்வும் வந்ததும் என்ன போடு போடுது…




இவ சாப்பிடறது இவளோட பேச்சுகே பத்தாது இப்போதான் காபி உள்ளே போயிருக்கு அடுத்து கொஞ்சம் ஏமாந்தா நம்ம இரண்டுபேரையும் கூட முழுங்கிடுவா பரத் கிண்டலடிக்க கையிலிருந்த டம்ளரால் நொட்டென்று தலையிலேயே அடித்தாள் பத்மினி…!

 

சரி விளையாட்டு இருக்கட்டும் அலெக்ஸ் உங்க நண்பர் சத்யா என்னானார் ?

 

ம்…இந்த துப்பறியும் சிங்கம் தான் எல்லாத்தையும் பக்காவா கண்டுபிடிச்சி சொல்லிட்டதே இனிமே சட்டத்தின் பிடியில் இருந்து அவங்க தப்பிக்க முடியாதே

 

அப்போ சத்யாவை அரெஸ்ட் பண்ணிட்டாங்களா பரத்…..

 

ம்… உன்னோட வேலை உண்மையில் அபாரம் பத்மினி நான் அந்த இடத்தில் இருந்திருந்தா கூட இத்தனை கிளவரா வேலை பார்த்து இருப்பேனான்னு தெரியலை. அந்தளவுக்கு நீ எனக்கு ஹெல்ப் பண்ணியிருக்கே. உயிரைக் கையில் பிடிச்சிகிட்டு நம்ம நாட்டுக்கு நேர விருந்த பெரிய ஆபத்தில் இருந்தும் எனக்கு துரோகம் செய்தவங்களை அடையாளம் காட்டியும் நீ பண்ணது ரொம்ப பெரிய விஷயம். அதுக்கு நான் பர்சனலா ஒரு நன்றி சொல்லியே ஆகணும்.

 

சரிதான்…. முதல்ல காலை வாரும் படலம் இப்போ நன்றியுரைக்கும் படலமா, பத்மினி கண்ணடித்தாள்.

 

ப்ரியன் என்னானான் ?

 

அவனோட கெடுதலுக்கான செயலுக்கு நல்ல பலனை அனுபவிச்சிட்டான். அந்த சுரங்கத்திற்குள்ளே நான் போறதுக்கு முன்னாடி நடந்ததைப் பற்றி உன்கிட்டே சொன்னேன் இல்லையா உத்ரா அங்கே போய் நான் முதலில் ஆப்பண்ணது கம்யூனிகேஷனைத் தான் கேமிரா உட்பட என்னைப் பொறுத்தவரையில் அங்கே நடப்பதை யாரோ கண்காணிக்கிறாங்கன்னு ஒரு நினைப்பு அதுக்கேற்றாமாதிரி ப்ரியன்தான் அதைக் கண்காணிச்சி இருக்கணும். என்னால அங்கிருந்து யாரையும் தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலையில் நான் என்ன செய்ய முடியும். வருவது வரட்டும் சப்போஸ் அங்கு தப்பு நடந்திருந்தா நிச்சயம் எனக்கு பெரிய ஆபத்து வருன்னு எனக்குத் தெரியும். கண்ணுக்குத் தெரியாத இடத்தில் அநாதையா சாகறதை விட வேறே ஏதாவது வாய்ப்பு கிடைக்குமான்னு பார்த்தேன் அதன்படி ப்ரியனும் வந்தான்.

 

இந்த சதிக்கெல்லாம் காரணம் அவன்தான்னு எனக்கு உறுதியா தெரிந்தது அதுக்கு பிறகு நடந்தைதான் என்னால நம்பவே முடியலை

 

என்னாச்சு

 

ப்ரியனை அதன்பிறகு நான் உயிரில்லாமத்தான் பார்த்தேன். உனக்கு தெரியுமா பரத் இனிப்புக்கு மொய்கிற எறும்புகள் மாதிரி அந்த குட்டி குட்டி மீன்கள் லபக்குன்னு அவனை கூட்டிட்டுப் போச்சு.

 

ஒருத்தன் செத்தது உனக்கு எத்தனை சந்தோஷமா இருக்குல்ல,

 

அவனெல்லாம் சாக வேண்டியவன்தான் பரத் அலெக்ஸ் பேசிவிட்டு இப்போ சத்யாவோட நிலைமை என்னன்னு உங்களுக்குத் தெரியாதே ? என்று தன் கையில் இருந்து மொபைலைக் காட்டினான் அலெக்ஸ்




What’s your Reaction?
+1
16
+1
7
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!