Serial Stories

எங்கே நானென்று தேடட்டும் என்னை 10

தேடல் –10

         டாக்டர் அஷோக் திரிபாதியின் முன்னே அமர்ந்திருந்த விஷ்ணுப்ரியனுக்கு முழி பிதுங்கியது.

          அன்று இரவு தன் கரங்களில் மயங்கி விழுந்தவளை கண்டதும் கோபமும் எரிச்சலும் கூடவே பரிதாபமாயுமிருந்தது.

‘இவளுக்கு இதே வேலையாப்போச்சு! பொசுக்கு பொசுக்குன்னு மயங்கி விழுந்துகிட்டு ! இப்போ திரும்ப டாக்டரை தேடிகிட்டு போகணுமா?  டேய்! விஷ்ணு! உனக்கு ஏண்டா இப்படி? ‘

என்றெண்ணியவன் அவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு  மொபைலை நோண்டினான். நெஞ்சில் ஒரு மலர்க்குவியலைப்போலக் கிடந்தவளை உணர உணர மனம் கிளர்ந்தது.

சாப்பிடுவாளா …? மாட்டாளா… இப்படி தக்கையாய்க் கிடக்கிறாள்.

மிக அருகிலிருந்த கூரான நாசியும் மாசு மருவற்ற சருமமும்

செர்ரிப்பழ இதழ்களும் விஷ்ணு திக்குமுக்காடிப்போனான்.

அவள் தன் தம்பியின் மனைவி என்பதோ

ஒரு குழந்தைக்குத் தாய் என்பதோ

மாற்றான் ஒருவனுக்கு மனைவி என்பதோ எதுவுமே சிந்தையில் இல்லை..

முன்பொருநாள்……..




கையில் ஐஸ்க்ரிமுடன் தன் மீது மோதி நின்று துப்பட்டாவால் சிந்திய ஐஸ்க்ரிமைத்துடைக்க. நெருங்கி நின்று விழியிமை விரித்து ‘ ஸாரி’ சொன்னவள் மட்டுமே தெரிந்தாள். இவள் என்னுடையவள்! எனக்கு மட்டுமே சொந்தமானவள் என்ற எண்ணம் தலைதூக்க இயல்பாக கையணைப்பு இறுகியது.

பூங்கன்னக் கதுப்பில் முத்தமிடத் தோன்றியது.

‘சட்’டென்று தன்னை சமன் செய்து கொண்டவன் வெறுப்பும் எரிச்சலுமாய் தளர்ந்து அமர்ந்து அவளைத் தரையில் கிடத்தி விட்டு தன் மருத்துவ நண்பனுக்கு கால் செய்தான்.

டாக்டர் அஷோக் அவனுடைய நண்பன் தான். அதனால் அவனை அழைத்து விவரத்தைச் சொல்ல. விஷ்ணு இப்போதிருக்கும் இடம் தன் மருத்துவ மனைக்கு பக்கமே என்று கூறி  தன் மருத்துவமனை இருக்குமிடத்தை லொகேஷன் ஷேர் பண்ணினான்.

அட்மிட் பண்ணிய பிறகே மூச்சு விட்டான். அஷோக் திரிபாதியும் அவன் மனைவி சுனிதா ரெட்டியும் காதலர்கள். இரண்டு வீட்டிலும் பலத்த எதிர்ப்பு.சுனிதா வீட்டில் அவளின் ரெட்டி சகோதரர் ஒரு படி முன்னால் போய் அவளுக்கு  மாப்பிள்ளையையே பார்த்து முடிக்க கடைசியில் விஷ்ணுப்ரியன் உதவியோடு சுனிதா எஸ்கேப்பாகி ரிஜிஸ்டர் ஆபிஸில் கல்யாணம் முடித்து

……….இப்போது எல்லாமும் ஞாபகம் வந்தது.

          திருமணத்துக்குப்பின்பு ஒரே முறை ஏர்போர்ட்டில் வைத்து பார்த்தது தான். நண்பர்களுக்கும் பேசித்தீர்க்க நிறைய விஷயங்கள் இருந்தாலும். இப்போது மதுமதியின் நிலைமை எதையும் பேச விடாமல் தடுத்தது.

          “என்னடா! பண்ணி வச்சிருக்கே அந்தப்பொண்ணை? “

“நான் என்னடா பண்ணினேன்.?எப்பப்பாரு அவதான் மயங்கி மயங்கி விழறா? “

     “அண்ணன் மேல அவ்ளோ மயக்கமோ என்னவோ அண்ணிக்கு? “

“அட! சுனிதா! நீ வேறம்மா! அவளுக்கு கல்யாணமாகி குழந்தை கூட இருக்கு. ஆனால் நான் இன்னும்  எலிஜிபிள் பாச்சுலர் தான் “

“அப்போ இந்த மதுமதி யாருடா? “

“நான் ஏற்காட்டுலே புதிசா ஒரு ஸ்கூலை வாங்கியிருக்கேன். அதில் இவள் அட்மின்பிரிவுல இருக்கா. புது ஸ்கூலை ஹேண்ட்ஓவர் பண்ணதிலே கொஞ்சம் குடைச்சல். அதனாலே இவளை ஸ்கூல் வேலையோடு சேர்த்து என் மற்ற பிஸினஸ் அக்கவுண்ட்ஸ்க்கும் உதவி செய்ய சொன்னேன். இங்கே இவளுடைய வீடு ஒன்னு இருக்கு அதை என்னுடைய கம்பெனி கெஸ்ஹவுசுக்கு பேசி முடிக்க இன்றைக்கு  இங்கே வந்தோம். வந்த அன்னிக்கே மயக்கம் போட்டு விழுந்திட்டா “

       சுனிதாவும் அஷோக்கும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள விஷ்ணு

“என்னடா? என்னன்னு சொல்லு. ரெண்டு பேர் பார்வையே வில்லங்கமா இருக்கே! “

” ப்ச்! இல்லை…இவங்களை பரிசோதித்தபோதுதான் தெரிஞ்சுது. பிபி ரொம்பவே எகிறியிருக்கு. அதாவது அப்நார்மல் லெவல். இன்னும் தாமதமாயிருந்தா ரத்த நாளம் வெடிச்சிருக்கும் இல்லை கோமாவுக்கு போயிருக்கலாம். இவங்க வயசுக்கு இப்படி பிபி எகிறுவானேன்? அத்தோடு இவங்க ரொம்பவே இன் செக்யூர்டா ஃபீல் பண்றாப்போல இருக்கு. ஒரு விரக்தி! ஏன் உயிர் வாழனும் கிறாப்போல…”




“டேய்! என்னடா சொல்றே! “

“ஆமாம்டா! நீ நேற்று இவங்களை அட்மிட் பண்ணதுமே ட்ரீட் மெண்ட் ஆரம்பிச்சப்போ இவங்க ஏதோ பிதற்றலா உளறினாங்க. நான் சாதாரணமா என் பேஷண்ட்ஸ் சொல்றதை மட்டும் தான் ட்ரிட்மெண்ட்டுக்காக. ரெகார்டு பண்றது வழக்கம். இவங்க…. வந்து நீ இவங்களைத் தூக்கிகிட்டு வந்த விதமும் பரபரப்பும் உன்னோட ஃபியான்ஸின்னு நெனச்சுட்டேன். எதற்கும் இருக்கட்டுனு தான் ரெகார்டு பண்ணினேன் மொத்தமா கேட்டதுலே எனக்கென்னமோ அவங்க ரொம்ப டிப்ரெஷனாயிருக்கிறாங்கன்னு தோணுது.

கொஞ்சம் செகண்ட் ஸ்டேஜ் மாதிரி!

இதிலிருந்து அவங்களை மீட்கலைன்னா ரொம்பவே நிலைமை க்ரிட்டிக்கலாகிடும். “

டாக்டர் அஷோக் திரிபாதி சைக்யாரிஸ்ட் மனநல மருத்துவ நிபுணன்.

மனைவி சுனிதா ரெட்டி கைனகாலஜிஸ்ட்.

திருமணம் முடிந்து எதிர்ப்பு மேகங்கள் இடி மின்னல் மழையைக்கொட்டித் தீர்த்த பிறகு இரு குடும்பமும் இருவரையும் அரை மனதாய் ஏற்றுக்கொண்டது. எல்லாமும் சுனிதா கருவுறும் வரைதான்! பிறகு எல்லாமே மாறிப்போய் விட்டது.

இருவருமே வேறுவேறு மருத்துவமனைகளில் வேலை செய்ய இரு குடும்பமுமே பேசி இருவருக்காகவும் மருத்துவ மனையை கட்டித்தந்தது.

             இப்போது

சுனிதா ரெட்டி பேசினாள்.

“அண்ணா! இன்னோர் விஷயம். இவங்க இன்னமும் தாய்மையடையாத பெண் அப்படின்னு ஒரு கைனகாலஜிஸ்ட்டா என்னாலே உறுதியா சொல்ல முடியும். “

விஷ்ணு குழம்பிப் போனான். அவனுக்கு கிடைத்த விவரங்கள் அவளைத்தாயாகவும் கணவனிழந்த பெண்ணாகவும் உடனுக்குடனே இன்னொருவனை மணம் புரிந்தாவளாகவுமே சொல்லியது. இவள் தாயாகவில்லையெனில் அந்தப் பெண் குழந்தை யார்?

‘அய்யோ! தலையை பிய்ச்சுக்கிடலாம் போலிருக்கே ஏண்டா? விஷ்ணு? உனக்கா இந்த நிலைமை? பெரிய பெரிய பிஸினஸ் பிரச்னைகளை யெல்லாம் ‘ப்பூ ‘ன்னு அசால்ட்டா ஊதித்தள்ளிட்டு போவியேடா? இவ என்னடா இப்படிப் படுத்தி வைக்கிறா? ‘

விஷ்ணு தலையைக் குலுக்கிக் கொண்டான்.

‘நான் ஏன் கண்டதை யோசிக்கனும்? இவ யாராயிருந்தால் என்ன?  எப்படித்தான் போனால் என்ன? ஐ டோன்ட் கேர்? ‘

என்று எண்ணமிட்டவன்

“சரிடா! இவள் என்னோட ஆபிஸ்ல வேலை செய்றவ! இப்போதைக்கு ட்ரிட் மெண்ட் கொடு.  அவளை ஊரில் கொண்டு போய் விட்டுடுறேன். அப்புறம் அவளாச்சுது! அவ டிப்ரஷன்னாச்சுது! “

“என்னடா இப்படி சொல்றே அவங்களுக்கு கவுன்சிலிங் அவசியம்”

“அதோடு அவங்க பிபி நார்மலாக டூ டேஸ் ஆகும். உடனடியா ட்ராவல் வேண்டாம். அவங்க மனசாலும் உடம்பாலும் ரொம்பவே பலவீனமாயிருக்கிறாங்க அண்ணா! “

“மை காட்!  இன்னும் டூ டேஸ்!

எல்லா புரோகிராமும் கொலாப்ஸ் ஆகும்டா! “

விஷ்ணு தலையில் கை வைத்துக் கொண்டான்.

“ஒரு நாள் மட்டுமாவது இருக்கட்டுமே!”

“ஓகே ! சுனிதா அவள் ரிப்போர்ட்டை கொடுங்க அங்க வச்சு ட்ரீட் மெண்ட்டை கண்ட்டினியூ பண்ணட்டும். “

“நீங்க இன்னும் அவங்களைப்பார்க்கலை! ரூம்லே போய் பாருங்க! என்னுடைய அட்வைசபிள் இதுதான். போஸ்ட் போன்ட் தி ட்ராவல் “




சுனிதா ரெட்டிக்கு அழைப்பு வர அவள் கிளம்பி விட்டாள்

நண்பர்களிருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொணடனர்.  நண்பனுக்கு அந்தப்பெண்ணின் மேல் காதல் வந்து விட்டது ஆனால் அதைப்புரிந்து கொள்ளத்தானில்லை என்று அஷோக் திரிபாதிக்கு தோன்றியது. விஷ்ணுவின் பதட்டமும் கண்ணில் தெறித்த மின்னலும் அவன் காதலை நண்பனுக்கு பறை கொட்டி தெரிவித்தது. காதலித்து போராடி ஜெயித்த அந்த மனோதத்துவ டாக்டருக்கு விஷ்ணு கண்டிப்பாக ஒருநாள் மதுமதியிடம் மதியிழந்து காதலை யாசிக்கப்போகிற நாள் தொலைவில் இல்லை என்ற நினைப்பில் வாய் விட்டு சிரித்தான்.

“என்னடா சிரிப்பு “

“சிங்கம் சிங்கிளா நின்னு சீற்றது எல்லாம் புஸ்வாணமாகப் போகப் போகுது டீ… அப்ப தெரியும் இந்த அஷோக் திரிபாதி யாருன்னு. “

“என்னடா உளர்றே “

“மதுமதி மேலயிருக்கிற காதல் உன் காதல் கண்ணுல தெரியுதுடா …கூலர்ஸ் போட்டாலும் மின்னலாத் தெறிக்குதுடா! “

“டேய்! அவ இன்னொருத்தன் பொண்டாட்டி! காதலாம் காதல் போடாங்…”

“அவ கல்யாணமனவளா என்னன்னு தெரியாது.  ஆனா …காதல் வந்துருச்சு என் விஷ்ணுக்கு காதல் வந்திருச்சு “

“ச்சீச்சீ! நீயெல்லாம் டாக்டராடா…?”

என்று தோளில் அடித்தவன்…

“டேய் அந்த ரெகார்ட் பண்ணினதை ஒரு முறை போடு! என்னதான் பிரச்னை அவளுக்கு…”

இன்டர் காமில் தன்னை காண  யாரையும் ஒருமணி நேரத்திற்கு அனுமதிக்க வேண்டாம் என்று உத்திரவிட்ட அஷோக் திரிபாதி  ரெகார்டரை ஆன் செய்தான்.

தொடர்ச்சியாக இல்லாமல் விட்டுவிட்டுத்தான்  அவள் குரல் கேட்டது.

“நீங்க. எப்படி சொல்லலாம் வினு.என்ன தெரியும் உங்களுக்கு? என்னைப்பத்தி என்ன தெரியும் “

“நான் கல்யாணமானவளா … ஏன் நீங்கதான்  சாட்சி கையெழுத்துப்போட்டீங்களா? ஆதரவில்லாதவள்ன்னா என்ன வேணாலும் பேசுவீங்க இல்லே “

“அம்மா…அம்மா! “

“ம்மா ஏம்மா என்னை விட்டுட்டு போனீங்க? “

“எனக்கு செத்துப்போயிடனும் போலிருக்குப்பா “

“என்னாலே சமாளிக்க முடியலைப்பா “

“ம்மா!  தாங்க முடியலைம்மா? “

இதே மாதிரியான கதறல்களே …விட்டுவிட்டுக் கேட்டது.

விம்மிவிம்மி அழுதாள். அந்தக்குரலில் அத்தனை வேதனை விளிம்பு கட்டி நின்றது.

விஷ்ணுப்ரியன் இதயத்தை யாரோ கூரிய நகங்களால் பிராண்டுவது போலிருந்தது அந்த அழுகை.

“என்னடா இது! “

“நீதான் சொல்லனும். உன்னுடைய எம்ப்ளாயீ… இதே தொடர்ந்தால் இந்தப் பெண்ணுக்கு ஆபத்துடா. . தூக்கமின்மை மன உளைச்சல் மன அழுத்தம். டென்ஷன் சரியான உணவு எடுக்காதது இப்படி பலதும் கொலாப்ஸ்ஸாகியிருக்கு. பாவம்டா….என்னவோ மனசுலேயிருக்கு. ரொம்ப நாளாகவே மன அழுத்தம் இருக்கு. அது அவுட் ஆகனும். இல்லைன்னா….”

.




“ஓ கே டா! நான் பார்த்துக்கிறேன். பேசுறேன்.  ஆனால்….யாருடா இந்த விணு…. இப்படிப் போட்டுக் காய்ச்சுறா? “

விஷ்ணு அதெல்லாம் தான் பேசியவையே என்பதை சுலபமாக மறந்து விட்டிருந்தான்.

விஷ்ணு எழுந்து கொண்டான் பெரும் பாரமாய் மனசுக்குள் எதுவோ அழுத்தியது.

அவளைப் பார்த்து க் கொண்டே அறையிலிருந்த. சோபாவில் அமர்ந்தான் விஷ்ணுப்ரியன்.

அவனுடைய செல் அழைத்தது.

“வாங்க! வாங்க அரவிந்தன் ! ஆ…ஆமாம் ஏ எஸ் வி ஹாஸ்பிடலில் தானிருக்கேன். ஃப்ரீதான் வாங்க! “

உள்ளே நுழைந்த அந்த சிவந்த நிறமான உயரமான  மனிதன்  பேசி  முடித்த போது

கோபம், எரிச்சல் ,ஏமாற்றம், என்று பல்வேறு உணர்வுக்கலவையில் தடுமாறியவன் எதிரிலிருந்தவனை கிழித்துப் போட்டுவிடும் வெறியில் குமுறி க் கொண்டிருந்தான்.

கழுத்தைப் பிடிக்காத குறையாக. தன் முழு  உயரத்துக்கும் நிமிர்ந்து நின்று ஆக்ரோஷமாய் முறைத்தான்.

ஆஹா…விதி சிரிக்கிறதோ கைகொட்டி…

(தேடல்  தொடரும்.)




What’s your Reaction?
+1
12
+1
10
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!