Serial Stories முள்ளில் ரோஜா

முள்ளில் ரோஜா- 30 (நிறைவு )

 30

விரல் மடக்கி அமைதியாய் இருந்த
உன் சமர்த்து பொழுதுகளில்
விழிகளின் சாகசங்களில்
தவித்துத்தான் போனேன் ,
கொட்டும் மழையளித்த
ஜலதோச மூக்கு நுனி பருவிற்கு ,
தொட்டு சந்தனம் குழைத்த
பார்வை இம்சைக்கு  பதில் ,
தோளமர்ந்து கன்னம் கொத்தும்
மென்மை புறாவின்
சடசட இறகுகளாய் உள்நுழைந்து
பட்டுக் கொண்டேனும் போய்விடு ,
தித்திக்கும் தீ தின்று
வாழ்ந்துவிட்டு போகிறேன் ஓர் ஒரம் .




கரு நீல நீரையும் ஒரு நிமிடம் செங்குருதியாக்கிய படி மேலெழும்பிய சூரியனை விழி விரித்து பார்த்தபடி …மாடியில் நின்றிருந்தாள் சாம்பவி .

” எவ்வளவு அழகு ….!!!! ” இரண்டு கைகளையும் கன்னத்தில் தாங்கி விழிகளை விரித்துக்கொண்டாள் .

அவ்வளவு பெரிய கடல் .அவ்வளவு நீர் .அதனையே ஐந்து நிமிடங்களேனும் தனது கதிர்களால் ஆக்ரமித்து நிறம்  மாற்றி அழகாக்கிய சூரியனை வியப்புடன் பார்த்தாள் .இந்த ஆக்ரமிப்பு அவளுக்கு முன்தின கணவனின் ஆளுமையை நினைவிற்கு கொண்டு வந்த்து .தயங்கங்களையும் , பயங்களையும் எளிதில் உடைத்து தனக்குள் கரையவைத்த , தனதாக கரைந்துவிட்ட கணவனை …உலகை உற்சாகமாக்கும் ஆதவனுடன் ஒப்பிட்டவளின்  கன்னங்கள் சிவந்தன.

அவள் தோள்களில் ஒரு கரம் படிந்த்து .”இவ்வளவு அதிகாலை எழுந்த்தே தப்பு .இதில் உதிக்கிற சூரியன் கூட நின்னு அப்படி என்ன பேச்சு …? நீ திருந்தவே மாட்டியாடி …? ” கேட்டபடி எதிரே நின்றாள் சஹானா.

புன்னகையோடு தோழியை பார்த்தாள் சாம்பவி .சிவந்திருந்த விழிகளும் , வெளுத்திருந்த இதழ்களும் , களைத்திருந்த தோற்றமுமாக எதிரே நின்றவளை பார்த்து விழிகளை சிமிட்டினாள் .

” என்னடி ..ரொம்ப டயர்டாக தெரிகிறாய் …? கண்்ணெல்லாம் சொக்கி போய் தெரிகிறதே …நைட்டெல்லாம் சரியான தூக்கமில்லை போல ….” கேலி பேசினாள் .

நிமிர்ந்த பார்வையுடன் நின்றிருந்த சஹானாவை வெட்கம் போர்த்திக் கொள்ள ” யேய் நான் உன்னைக் கேட்டால் …நீ என்னை கேட்கிறாயா …? ” சிணுங்கினாள் .

” நீ ஏன்டி இவ்வளவு சீக்கிரம் எழுந்து வந்து நிற்கிறாய் …? இது உன்னுடைய ஹனிமூன் ட்ரிப் .அது நினைவிருக்கிறதா …? இங்கே பகல் …இரவு என்ற வித்தியாசமே பார்க்க கூடாது தெரியுமா …? ” குறும்பாக கேட்டாள் .

” அதையேதான்டி நானும் கேட்கிறேன் .எனக்கு மட்டுமல்ல …உனக்கும் இது ஹனிமூன்தான் …நினைவில் வைத்துக் கொள் .”

” போன வாரம் புதிதாக கல்யாணம் பண்ணின ஜோடிங்கதான் ஹனிமூன் கொண்டாடுவாங்க .மூணு வருடம் பழைய ஜோடிங்களுக்கு என்ன ஹனிமூன் …அதுவும் கையில் இரண்டு வயது குழந்தையை வைத்துக்கொண்டு ….? “

” அப்படியா சொல்கிறாய் ….? நான் இது விபரம் ரிஷியிடம் கேட்டு வந்து சொல்கிறேனே …” என்றபடி உள்ளே நடக்க முயன்ற சஹானாவின் கைகளை பிடித்து தடுத்தாள் சாம்பவி .




” ஏய் ..சும்மா இருடி ….” வெட்கத்துடன் தடுத்தாள் .

“ரிஷி ரொம்ப அக்கறையாக எங்க இரண்டு பேருக்கும் ஹனி மூன் ட்ரிப்ஏற்பாடு பண்ணும்போதே , இதில் ஏதோ விசயம் இருக்குதுன்னு ஷ்ரத் சொன்னார் .அது சரியாயிடுச்சு பார்த்தியா …? உங்களுக்கு மட்டுமில்லை ..எங்களுக்கும் இதுதான் ஹனிமூன் ங்கிறான் .நீ என்னடான்னா இப்படி சொல்கிறாய் ..? இதை ரிஷிகிட்டதானே பேசி தீர்க்கனும் ….”

சஹானா சொல்வது உண்மைதான் .திருமணம் முடிந்த்தும் ஹனிமூன் என சஹானா- ஷ்ராவத்திற்கு ஏற்பாடு பண்ணிய ரிஷிதரன் ., கூடவே எங்களுக்கும் இப்போதுதான்பா ஹனிமூன் என அவர்களையும் சேர்த்துக்கொண்டான் .அதிலும் கண்டிப்பாக கோவாவிற்கேதான் போக வேண்டுமென்ற ஏற்பாடு வேறு ….

” அம்மா தாயே தெரியாமல் சொல்லிட்டேன் ்நீ வாயை மூடு .இங்கே வந்து உட்கார் ” சிவந்து விட்ட கன்னங்களுடன் தன்னை இழுத்த தோழியை பாசமாக பார்த்தாள் சஹானா .

” ரொம்ப கஷ்டப்பட்டு விட்டாயாடி …? நான் வேறு உனக்கு நிறைய துன்பங்களை கொடுத்துவிட்டேன் ….ப்ளீஸ்டி அதையெல்லாம் மறந்துவிடு …” சாம்பவியின் கைகளை வருடியபடி துயரத்துடன் கேட்டாள் .

” என்ன கஷ டம் ….? என்ன துன்பம் ….? எனக்கு ஷ்ராவத்தை திருமணம் செய்து கொள்ள சம்மதம் என்று நீ எப்போது வந்து சொன்னாயோ …அந்த நிமிடத்திலேயே எனது துன்பங்களெல்லாம் புகையாக மாறி மறைந்து விட்டதே ….”

உடனே சஹானாவின் முகத்தில் நெகிழ்ச்சி மாறி பரவசம் வந்து அமர்ந்து கொண்டது .

” யு நோ சம்பா …ஹி இஸ் மை மேன் ..இரண்டு வருடங்களாக அடிக்கடி அவரை சந்தித்தும் மடச்சி மாதிரி அவரை அறியாமல் நான் இருந்திருக்கிருக்கிறேன் …..” பெருமித்த்தோடு காதலும் அவள் குரலில் .

” இது இப்போதுதான் தெரிந்த்தா …? எனக்கு முன்பே தெரியுமே …”

” எது …? “

” நீ மடச்சி என்பது….” என்றுவிட்டு தோழியின் கைகளால் தலையில் இரண்டு கொட்டுக்கள் வாங்கிக் கொண்டாள் .

” சம்பா …அன்று அவரிடம் நான் அன்று …ஏற்கெனவே நான் ஒருவரை உயுருக்குயிராய் விரும்பியிருக்கறேன் தெரியுமா … என  கேட்கிறேன் ….” சஹானா முடிக்கும் முன் அவள் தலையில் கொட்டினாள் சாம்பவி .

” ஏன்டி அறிவு கெட்டவளே .இதையெல்லாம் அவரிடம் உளறி வைத்தாயா …? உன் மூளை கெட்ட நினைப்பையெல்லாம் அவரிடம. சொல்ல வேண்டுமென்று என்னடி கட்டாயம் …? ” படபடத்தாள் .

” சொல்ல வேண்டும் சம்பா .நிச்சயம் சொல்ல வேண்டும் .அது மூளை கெட்ட நினைப்புதான் .ஆனாலும் அப்படி ஒரு நினைப்பு எனக்குள் இருந்த்து அவருக்கு தெரிய வேண்டாமா …? அதன்பிறகும் அவர் என்னை விரும்ப வேண்டுமல்லவா …? அதனால் அதனை சொன்னேன் …அதற்கு அவர் சிரித்துக் கொண்டே ஸோ வாட் …? என்கிறார். எனக்கு ஆச்சரியம் .”

” ஹி இஸ் எ கிரேட் மேன் …”

” யெஸ் .நான் ஆச்சரியத்துடன் கண்களை விரித்து அவரை பார்த்து இதில் உங்களுக்கு ஒன்றுமில்லையா என்கிறேன் ….அவர் சாவதானமாக …

” நான் லவ் பண்ணிய பெண்களின் பட்டியலை சொல்லவா என்கிறார் …”

நான் முறைக்க …

” ரிலாக்ஸ் சஹி .எனது அந்த காதல்களும் நீ சொன்ன உனது குற்றமாக நீ கருதிக்கொண்டிருக்கும் அந்த காதல் போலத்தான் .சும்மா பொழுது போக்கிற்காக  காதல் என்று என்னால் நினைக்கப்பட்டது .அது வயதுக்கோளாறு .இப்போது நான் அந்த பலவீனமான காலகட்டங்களை கடந்துவிட்டேன் ்நீயும் அந்த கட்டங்களை கடந்துவிட்டாய் .ஆனாலும். …..” தொடர்ந்து பேசிய சஹானா சிறிது நிறுத்த….

” ஏதோ குற்றமிழைத்தவள் போல் …தப்பு பண்ணியவள் போல் மூன்று வருடங்களாக தவித்துக் கொண்டிருக்கிறாய் .ஏனென்றால் நீ நிறைய படித்த…மிக மாடர்ன் பெண்ணை போல் உன்னை காட்டிக்கொள்ள நினைத்தாலும் …உண்மையில் நீ அப்படியில்லை .உன் மனம் முழுவதும் பலவீனம் மண்டிக்கிடக்கிறது .முற்காலத்திற்கும் …இக்காலத்திற்கும் இடையே ஊசலாடிக்கொண்டிருக்கும் சாதாரண இந்தக் கால பெண்களில் நீயும் ஒருத்தி ….” இதைத்தான் கூறினேன் சாம்பவி என்றபடி சஹி நிறுத்தியதை முடித்தபடி  வந்து நின்றான் ஷ்ராவத் .




திரும்பி அவனை பார்த்த சஹானா ” ஷ்ரத் ….” என குழைய …பதிலை சாம்பவிக்கு சொன்னாலும் கண்களால் சஹானாவை விழுங்கியபடி அவளருகே வந்து உரசியபடி அமர்ந்தான் ஷ்ராவத் .

” சஹி டியர்  வார்த்தை மாறாமல் நான் சொன்னது சரிதானே ….? ” என்றான் .அவள் கைகளுடன் தன் கைகளை கோர்த்துக் கொண்டான் .

” ம் ….” என முணுமுணுத்தபடி அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள் சஹானா .

இரண்டு பேரின் அந்நியோன்னியத்தில் உள்ளம் நெகிழ கண் கலங்க அவர்களை பார்த்தபடி ” ஹலோ …நான் ஒருத்தி இங்கே இருக்கிறேன் .அதை கொஞ்சம்  நினைவில் வைத்துக் கொண்டீர்களானால் நன்றாக இருக்கும் ” என கிண்டல் செய்தாள் சாம்பவி .

” என்ன இன்னுமா இருக்கிறீர்கள் ….? ” ஷ்ராவத் அநியாயத்திற்கு ஆச்சரியப்பட , சஹானா அவன் தோள்களை வெட்கமாக குத்தினாள் .

” தப்புதான் இதோ …இதோ ..கிளம்பிவிட்டேன் …” என எழுந்த சாம்பவியை …

” அது யார் அது …என் பொண்டாட்டியை விரட்டுவது …? ” என்ற குரல் மீண்டும் அமர வைத்தது .

” ஆஹா …நம்ம தலை வந்துட்டாருய்யா .இனி நாமெல்லாம் கப்சிப்னு வாயை மூடிட வேண்டியதுதான் .வணக்கம் தலை ….” என வரவேற்றான் ஷ்ராவத் .

கையில் சாஹித்யாவை தூக்கிக் கொண்டு வந்தான் ரிஷிதரன் .

” விழித்து விட்டாள் பவி .இதோ பிஸ்கட் …இதை கொடு ” என்றபடி குழந்தையையும் , பிஸ்கட்டையும் சாம்பவியிடம் கொடுத்தான் .

” ம் …இப்போது சொல்லுங்க .இங்கே என்ன பஞ்சாயத்து ….? ” தோரணையாக மீசையை தடவிக்கொண்டான் .

,” டேய் போதும்டா .ரொம்ப அலட்டாதே .எல்லாவற்றையும் வித்தியாசமாக யோசிப்பவன் நீ .அதை நான் ஒத்துக்கொள்கிறேன் .அதனால் சும்மா பெயருக்கு ஒரு தலையை போட்டு வைத்தால் …நீ உடனேயே பஞ்சாயத்து தலைவர் போஸ் கொடுக்கிறாயே …கொஞ்சம் விட்டால் ஆலமரத்தடியும் , தண்ணீர் சொம்பும் கேட்பாய் போல ….”

” அட அப்படியா …நான் எதிலும் வித்தியாசமாக யோசிக்கிறேனா …அப்படியா பவி …? ” சாதாரணம் போல் கேட்டுக்கொண்டு சாம்பவி மட்டும் அறியும் வகையில் கண்சிமிட்டினான் குறும்புடன் .

கணவனின் குறும்பில் வெட்கத்தில் சிவந்த கன்னங்களை கோப சிவப்பாக மாற்றிக் காட்ட சாம்பவி முயன்று , அவனை முறைத்தாள் .

” பின்னே இல்லையா …? எவனாவது கையில் குழந்தையோடு ஹனிமூன் வருவானா …உன் ஒருவனுக்குத்தான்டா அந்த மாதிரி ஐடியாவெல்லாம் வரும் …”

சாம்பவியின் வெட்கத்தை மறைக்கும் முயற்சியை வேண்டாம் விட்டுவிடு ..உன்னால் முடியவில்லை என ஜாடை காட்டியபடி ” எனக்கு எங்கேடா ஹனிமூன் நடந்த்து …? நான் என் பொண்டாட்டி மூஞ்சியை கூட சரியாக பார்க்கவில்லை .திரும்பி பார்த்தால் அவள் கையில் குழந்தையோடு நிற்கிறாள் .சூரியனை வேண்டிய குந்தி தேவி போல.பிறகு நான் என்ன செய்ய … அதனால் இந்த ஐடியா ….”

ரிஷியின் பதிலில் இப்போது சற்று முன் அவனை அந்த எழு ஞாயிறுடன் தான் ஒப்பிட்டு பார்த்தது நினைவு வர , கூடவே முன்தினம் இரவு சூரிய தகிப்புடன் தன்னை ஆக்ரமித்த கணவனின் நெருக்கமும் நினைவு வர , சாம்பவியின் கன்னங்கள் மேலும் சிவந்தன. எதிரிலிருப்பவர்கள் அறியா வண்ணம் முகத்தை குழந்தையின் பிஸ்கட் கிண்ணத்தினுள் புதைத்துக்கொண்டாள் சாம்பவி .

” அதெல்லாம் சரிதான் ரிஷி. ஆனால் சாஹித்யாவை சாம்பவியின் அம்மாவிடம் விட்டு விட்டு வந்திருக்கலாமல்லவா …? நீங்கள் ப்ரீயாக இருந்திருக்கலாம் ….” சாம்பவியின் மடியிலிருந்த குழந்தையை தன் மடிக்கு மாற்றி கொஞ்சியபடி கேட்டாள் சஹானா .




” இல்லை சஹி. நான் ஏற்கெனவே என் குழந்தை யுடனான எனது இரண்டு வருடங்களை இழந்துவிட்டேன் .இனி என் வாழ்வின் ஒரு நிமிடத்தை கூட அப்படி இழக்க தயாரில்லை ….”

சஹியும் , ஷ்ரத்தும் பெருமிதமாக ரிஷியை பார்க்க , சாம்பவி …நிரம்பி வழிந்த காதலோடு பார்த்தாள் .

” இதோ எங்கள் குழந்தையுடன் சேர்ந்து கொண்டாடப்படும் எங்கள் ஹனிமூன்தான் எங்களுக்கு மிகவும் இனிக்கிறது .அது ஒரு தனி டேஸ்ட் .உங்களுக்கெல்லாம் புரியாது…விடுங்க. உங்களுக்கும் ஒரு குழந்தை வந்த பிறகுதான் புரியும் ….”

” இவ்வளவு பாசத்தோடு இருப்பவன் .எப்படிடா இவ்வளவு நாள் மனைவியையும் , குழந்தையையும் பிரிந்து இருந்தாய் …? “

” அதற்கு நான்தான் காரணம் ஷ்ரத் .ரிஷி என்னை நினைத்துதான் சம்பாவையும் ,சாஹியையும் பிரிந்திருக்க நினைத்தான் ….” கவலையோடு சொன்னாள் சஹானா .

மனைவியின் கவலையை உணர்ந்து அவளருகே நெருங்கி அமர்ந்து அவளை லேசாக அணைத்து ஆறுதல் ்படுத்தியபடி அப்படியா …என்பது போல் நண்பனை பார்த்தான் ஷ்ராவத் .

” ம் …அது மட்டுமல்லடா …நிறைய காரணங்கள் இருக்கிறது ….” சொன்ன ரிஷியின் கண்கள் அவனது மனைவியை வருடியது .

” நானும் கூட ஒரு காரணம்தான் ஷ்ரத் ….” சாம்பவியின் குரலில் குற்றவுணர்ச்சி .

” என்னடா …சாம்பவி என்ன செய்தார்கள் …? அவர்கள் பாவம் …உன்னை விட்டு பிரிந்து குழந்தையோடு நிறைய கஷ்டப்பட்டிருப்பார்கள் …” என்ற ஷ்ரத்தின் குரலிலேயே சாம்பவியை பற்றிய குறைகளை அவன் நம்ப போவதில்லை என்ற செய்தியிருந்த்து .

” இல்லை ஷ்ரத் , அவர் கூறுவது சரிதான் .தெரிந்தோ தெரியாமலோ நானும் நிறைய தவறுகள் செய்திருக்கிறேன் ….” சாம்பவி மெல்லிய குரலில் சொன்னாள் .

” இவள் ஏதாவது சொல்வாள் .என் மீது கூட  நிறைய தப்பிருக்கும் .ஆனால் பாவம் சம்பா  ஒன்றுமறியாத அப்பாவி .அவளை எல்லோருமாக சேர்ந்து ரொம்ப படுத்திவிட்டோம் …” அண்ணன் மனைவியாகி விட்ட தோழிக்கு சப்போர்ட் பண்ணினாள் சஹானா .

” அட ஆம்ப்பா ..உங்க சாம்பவி எந்த தப்பும் பண்ணலை .தப்பெல்லாம் என் மேல்தான் …” நானுமிருக்கிறேன் என குரல் கொடுத்தான் ரிஷிதரன் .

” கிண்டல் பண்றீங்களா …? ” முழங்கையால் அவன் இடுப்பில் இடித்தாள் சாம்பவி .

” அடிப்பாவி …வெறும் பேச்சுக்கே இந்த இடி இடிக்கிறாயே ….உன் கூட நான் எப்படி காலம் தள்ள போகிறேன் …? ” போலியாய் அலுத்தான் ரிஷிதரன் .

” ரிஷி இதை நீ அன்று நான் என் தோழியை திருமணம் செய்து கொள்கிறாயே …எனக் கேட்டபோது சரி …சரியென்று பறக்காவெட்டி மாதிரி தலையாட்டினாயே அப்போதே யோசித்திருக்க வேண்டும் …”




ரிஷிதரன் அது போல் தலையாட்டும் காட்சி கண்ணில் தோன்ற சாம்பவிக்கு சிரிப்பு வந்த்து .

” சஹி யு வார் ஸ்பாயில் மை இமேஜ் …. ” கோபம் போல் முகத்தை வைத்துக் கொண்டான் ரிஷிதரன் .

” வாட் இஸ் தி மீனிங் ஆப் ” பறக்காவெட்டி ” சஹி ….” ஷ்ராவத் சின்சியராக சந்தேகம் கேட்டு வைக்க அனைவரும் சிரித்தனர் .

” ஏய் ..சம்பா நிஜம்தான்டி யார் அந்த மதுரை பெண்ணையா சொல்கிறாய் ….என என்றைக்கு  கேட்டு …எனக்கு சம்மதம் …சம்மதம் …என்று தலையாட்டினானோ  …அன்றிலிருந்து ஒரு மாதிரி பித்து பிடித்த மாதிரிதான் அலைந்து கொண்டிருந்தான் தெரியுமா …? “

அப்படியா …என கணவனிடம் கண்ணால் கேட்ட சாம்பவிக்கு …சீச்சி அப்படியொண்ணும் இல்லை என சைகையினால் எதிரமறை பதிலை தந்து கொண்டே …

” ஆமான்டா …அன்றிலிருந்தே கொஞ்சம் ஒரு மாதிரி பிரமை பிடித்த மாதிரிதான் இருந்தேன் ….” என கூசாமல் உண்மையை ஒப்புக்கொண்டான் ரிஷிதரன் .

இந்த பிரமை …பித்து ..இதற்கெல்லாம் மீனிங் பைத்தியம்தானே என சந்தேகம் கேட்டு தெளிந்து கொண்டு ” என்னடா இப்படி கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் தலையாட்டுகிறாய் ….? ” என்றான் ஷ்ராவத் .

” அடப் போடா காதலில் என்ன வெட்கம் …? ஆனால் இப்போது நீ என்னை லூசு என்றாய் பார் அதுதான் கொஞ்சம் மனதை என்னவோ பண்ணுகிறது ….,” நெஞ்சை பிடித்துக் கொண்டான் .

” மானம் போகுது …சும்மா இருங்க ….” வெட்கத்துடன் கணவனிடம் முணுமுணுத்தாள் சாம்பவி .

” நீயும் ,ரிஷியும் மேட் பார் ஈச் அதர் கப்பிள்ஸ் என்று நினைத்தேன் சம்பா . நீங்கள் இருவரும் கல்யாண மேடையில் நின்றபோது ஒருவருக்காக ஒருவர் பிறந்திருக்கிறீர்கள் என்றே நினைத்தேன் ….”

” பிறகு ஏன்டி என்னை எங்கள் வீட்டிற்கு போ என விரட்டினாய் ….? ” சாம்பவி ஆதங்கத்துடன் கேட்டாள் .

” நானா …? நான் எங்கே விரட்டினேன் …? நீதான் போக வேண்டுமென்றாய் .நான் இனி அங்கே போக்க்கூடாது என்றுதான் சொன்னேன் ்நன்றாக யோசித்துபார் ….அப்படி எளிதாக உன்னை நான் விட்டுவிடுவேனா சம்பா …”

” ஆமாம் நீ சொல்லவில்லை ….” என்றபடி கணவனை பார்த்தவளின் பார்வையில் நீதான் சொன்னாய் என்ற குற்றச்சாட்டு இருந்த்து .

” ம்ஹூம் .என்னை குற்றவாளியாக்காதே சாம்பவி.அன்று உன் பிறந்தவீடு பெரிய இக்கட்டில் இருந்த்து .உன் மனம் அங்கே போக துடித்துக்கொண்டிருந்த்து .நீ விரும்பினாய் .நான் அனுப்பினேன் ….அங்கே போய் சத்தமில்லாமல் இருந்து கொண்டது நீதான் …” குற்றச்சாட்டை அவள்புறமே திருப்பினான் .

” ஆனால் நீ தாலியை சுழட்டி அனுப்பி வைத்தது நாங்கள் எதிர்பாராத்து .ஏன்டி அப்படி செய்தாய் …? ” சஹானா வருத்தமாக கேட்டாள் .

” அது அவள் தவறில்லை சஹி .ஏதோ வேகத்தில் அவளது தாய்மாமா செய்த வேலை அது .அதற்காக சாம்பவி இன்றுவரை அவரிடம் பேசுவதில்லை ” விளக்கம் சொன்னவன் ரிஷிதரன் .

” உங்களுக்கு எப்படி தெரியும் …? “

” நான் இங்கே வந்த கொஞ்ச நாட்களில் உன் மாமா என்னை வந்து சந்தித்தார் .மன்னிப்பு கேட்டார் …”




” ஓ…அதற்கு பிறகுதான் நீங்கள் …எங்களை பார்க்கவென்று கோவிலுக்கு வந்தீர்களா ….? ” சாம்பவியின் குரலில் லேசான அபஸ்வரம் .

அதனை நான் செய்திருக்க மாட்டேனென உணரவில்லையா நீ …அதற்கு விளக்கம் கொடுக்க உனக்கு ஒரு ஆள் தேவையாயிருந்த்தா ….? என கணவனை நோக்கினாள் .

அவன் விரல்களை மடக்கி அவள் தலையில் கொட்டினான் .” எப்போதும் ஒழுங்காக யோசிக்க மாட்டாயா ….? தப்பு தப்பாகத்தான் நினைப்பாயா ….? ” கோபம் காட்டினான் .

” ஆ” வென அலறிய சாம்பவியின் தலையை தடவியபடி ” இல்லை சம்பா .அது அம்மாவிற்காக ரிஷி கேட்டிருப்பான் .அவள்தான் இதையே எந்த நேரமும் குத்திக்காட்டிக் கொண்டிருந்தாள் .நானுமே நீ சுழட்டிக் கொடுத்து அனுப்பியதாக சொன்ன தாலியை பார்த்ததும் அதிர்ந்துவிட்டேன் . ஆனால் ரிஷி மட்டும்தான் ஏதோ நடந்திருக்கிறது என கூறிக்கொண்டே இருந்தான் ….”

” அட …என்னப்பா இது ..நடந்த்தை பற்றி இப்போது என்ன பேச்சு …? சாம்பவி …எவ்வளவுதான் நம் பெண்கள் மாடர்னாக மாறிவிட்டாலும் …உண்மையிலேயே தாலி இன்னமும் உங்களின் சென்டிமென்டாகத்தான் இருக்கிறது .உங்களை விடுங்கள் சஹியை பாருங்கள் .உங்களை பட்டிக்காடு என்று கேலி செய்யும் மாடர்ன் பொண்ணு அவள் .அவளே நேற்று இந்த தாலி ரொம்ப டிஸ்டர்ப்பாக இருக்கிறது டியர் .கொஞ்ச நேரம் சுழட்டி வைத்துவிடேன் ..என்று சொன்னால் , மாட்டவே மாட்டேனென இறுக பிடித்துக் கொள்கிறாள் …..” ஷ்ராவத்தின் கேலியில் முகம் சிவந்து அவனை முதுகில் மொத்தினாள் சஹானா .

சாம்பவி சிரித்தபடி அவர்களை பார்க்க ரிஷிதரன் யோசனையுடன் சாம்பவியை பார்த்தபடி இருந்தான் .

” அடேய் பாதகா …இங்கே உன் தங்கை என்னை ஒரு வழி பண்ணிக்கொண்டிருக்கிறாள் .நீ இப்போதும் உன் கடமையிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறாயே …உயிர் நண்பனாடா நீயெல்லாம் …..? ” சஹானாவின் அடிகளுக்கு குனிந்து கொடுத்துக் கொண்டு ரிஷிதரன் மனைவியை நோட்டம் விட்டுக் கொண்டிருப்பதை கிண்டல் செய்தபடி  கேட்டான் ஷ்ராவத் .

” ஓவராக வாய் பேசினாயில்லையா ….? நன்றாக வாங்கி கட்டிக்கொள் …..நாங்கள் மூவரும் கொஞ்சம் வெளியே போகப் போகிறோம் .நீங்கள் வந்தீர்களானாலும் சரி .இல்லை இங்கேயே இருந்து வந்த வேலையை பெர்பெக்டாக செய்தாலும் சரி …..” என்று சாதாரண குரலில் கேலி பேசி விட்டு மனைவி , குழந்தையுடன் வெளியேறினான் ரிஷிதரன் .

மூவருமாக வெளியே சுற்றி பசித்து , உண்டு , களைத்து ஹோட்டலுக்கு திரும்பியபோது , சஹானா , ஷ்ராவத்தின் அறை உட்புறமாக பூட்டப்பட்டிருந்த்து .

” ம் …ஒரு தடவை கூட ரூமை விட்டு காலை வெளியே எடுத்து வைக்கவில்லை .இவனெல்லாம் எதற்கு கோவா வந்தான் ….? ” கிண்டல் செய்தபடி தங்கள் அறைக்கதவை திறந்தான் ரிஷிதரன் .

” எல்லாம் நீங்கள் சொல்லிக் கொடுத்த பாடமாகத்தான் இருக்கும் .உங்கள் நண்பருக்கு எப்போதும் நீங்கள்தானே தலை .தலை போகும் வழி வால் போகும் ….” சிணுங்கிய மகளை சமாதானம் செய்தபடி சொன்னாள் சாம்பவி .

” ஏய் …நான் காலையிலிருந்து நல்ல பிள்ளையாக உன்னையும் , பாப்பாவையையும் கூட்டிக்கொண்டு ஊர் சுற்றியிருக்கிறேனாக்கும் ….இப்போது மட்டுமல்ல …அப்போதும் , நம் திருமணம் முடிந்த புதிதிலும் நீ போனை தூக்கிக்கொண்டு உன் வீட்டாருடன் பேசவென்று வெளியே ஓடிவிடுவாய் .நானும் வேறு வழியின்றி  உன்னை கூட்டிக்கொண்டு ஊர் மட்டும்தான் சுற்றிக்கொண்டிருந்தேன் .எங்கே நமக்கு இந்த அதிர்ஷ்டமெல்லாம் அடித்தது …? ” ஏக்கத்துடன் பூட்டியிருந்த கதவை பார்த்தபடி சொன்னான் ரிஷிதரன் .

” ம் …ம் …அப்படி விட்டு விடுகிற ஆள்தான் நீங்கள் .இதை என்னிடமே சொல்கிறீர்களா …? ” தலை குனிந்தபடி கேட்டாள் சாம்பவி .

” ஆமாம் அப்படி விட்டுத்தான் மனைவியையும் , குழந்தையையும் மூன்று வருடங்களாக விட்டு இருந்தேன் ….” கணவனின் குரலில் வருத்தத்தின் சாயல் தெரிய கவலையாக அவனை ஏறிட்டாள் .

” போ ..பாப்பாவை தூங்க வைத்துவிட்டு வா பவி .நாம் கொஞ்சம் பேசலாம் …” என்றான் .

கட்டிலில் குழந்தையை தன் அருகில் படுக்க வைத்து சாம்பவி தட்டிக் கொடுக்க ஆரம்பிக்க பெட்ரூம் கதவை மூடிவிட்டு அறையின் பால்கனியில் வந்து நின்றான் .

குழந்தையை தூங்க வைத்துவிட்டு அறைக்கதவை திறந்தவுடன் குப்பென்று நாற்றம் சாம்பவியின் மூக்கை நெருடியது .

வேகமாக பால்கனிக்கு சென்றவள் ரிஷியின் வாயிலிருந்த சிகரெட்டை பிடுங்கி எறிந்தாள் .




” டென்சனாக இருக்கும் போதுதான் சிகரெட் என்பீர்கள் .இப்போது என்ன டென்சன் ….? ” கோபமாக நின்ற மனைவியை இழுத்து அணைத்து இதழ்களில் முத்தமிட்டான் .

” சை …போங்க …ஒரே நாற்றம் ….” அவனை தள்ளினாள்.

” விட்டுவிடுகிறேன் பவி .கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து விட்டுவிடுகிறேன் …” என்றவன் …

” நான் உன்னை ரொம்ப விரும்புகிறேன் பவி .மிகவும் காதலிக்கிறேன் .நீயும் அப்படித்தானென நினைத்தேன் ….ஆனால் …. .ஏன் சாம்பவி என்னை தேடி வரவில்லை …? ஒரு போன் கூட பண்ணவில்லையே ….? ” அவளை கூர்ந்து பார்த்தபடி கேட்டான் .

” இதே கேள்வியை நானும் கேட்கலாமில்லையா …? “

” ஆனால் நான் போய்விட்டு… வா …என்று சொல்லித்தானே அனுப்பினேன் …”

” போனவள் என்ன ஆனாளென்று பார்க்க மாட்டீர்களா …? ஒரு போன் பண்ண மாட்டீர்களா …? “

” என் தங்கைக்கென பேசிய உன் அண்ணன் வேறொரு திருமணம் முடித்து வந்து நிற்கிறான் .நம் வீட்டில் எல்லோரும் உன்னை உன் பிறந்தவீட்டிற்கு அனுப்பக்கூடாது என்று கூறுகின்றனர் .இந்த நிலையில்  நான் எப்படி உன்னை தேடி வருவேன் …? “

” எனக்காக ….வருவீர்களென ….” தலைகுனிந்து முணுமுணுத்தாள் .

” வந்திருப்பேன் பவி ்நீ ஒரே ஒரு போன் செய்து வாங்க என்றிருந்தால் ..உடனே ஓடி வந்திருப்பேன் .அன்று உன் அண்ணனின் ஒட்டாத வாழ்வை அறிந்தபோது என்னை தேடி வந்தாயே ..அது போல …அன்றும் வந்திருக்கலாமே …அதைத்தான் நான் உன்னிடம் எதிர்பார்த்தேன் ….”

” ஆனால் இதில் என் அண்ணனும் , உங்கள் தங்கையும் சம்பந்தப்பட்டிருக்கிறார்களே …நான் மட்டும் எப்படி வருமுடியும் …? அதிலும் அப்போது எங்கள் குடும்பமே குற்றவாளிகளாக நின்று கொண்டிருந்தோம் ….”

” ம் …நீ வருவாயென எதிர்பார்த்திருக்க உன் தாலி செயின் வருகிறது .அதுவும் நீயே மனம் கசந்து சுழட்டி கொடுத்ததாய் ….சொன்னபடி …”

” அதனை நம்பிவிட்டீர்களா …? ” தன் கழுத்து தாலியை வருடியபடி கேட்டாள் சாம்பவி.

” நான் நம்பவில்லை .ஆனால் சஹி …அதிர்ந்துவிட்டாள் .சம்பா உன்னை என் சொல்லுக்காக திருமணம் முடித்தாளோ …என சந்தேகமாக இருக்கிறது என்றாள் அவள் .நீ என்னுடன் ஹனிமூன் வருவதற்கு தயங்கினாயாமே …அதை காரணமாக சொன்னாள் அவள் …”

” அதற்கு காரணம் ….” என வேகமாக ஆரம்பித்துவிட்டு கணவனின் பார்வையில் சிவந்து …” உங்களுக்குத்தான் தெரியுமே …” என்றாள் .

” உனது விலகலுக்கு காரணம் உனது அதிகமான கூச்சத்தான் என்றுதான் நான் நினைத்தேன் பவி .மற்றபடி உன்னை எனக்கு பிடித்திருக்கிறது என்பதை நான் அறியமாட்டேனா ….” என்றபடி சாம்பவியின் இடையை இரு கைகளாலும் பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்துக்கொண்டான் .

தொடர்ந்து ரிஷிதரனின் கைகளின் ஆராயும் வேகத்தினை கண்டவள் , அதனை தடுக்கும் மனமோ , திடமோ இல்லாது ” பேச வேண்டுமென்று சொன்னீர்களே …” அவன் தோள்களில் சரிந்தபடி சிணுங்கினாள் .

” பேசலாம் நிறைய பேசலாம் ….” என்றபடி காதருகே சரிந்து ரிஷி பேச்சிய பேச்சுகளில் சிவந்தவள் , வெட்கி அவனை தள்ளினாள் .




” சை ….என்ன பேச்சு இது …நான் இதையா சொன்னேன் …? “

” குழந்தை உண்டானதை என்னிடம் ஏன் சொல்லவில்லை பவி ….” தன்னை தள்ளிய மனைவியை விடாது தன்னருகில் இழுத்துக் கொண்டு கேட்டான் .

“முதலில்  எனக்கே தெரியவில்லை .தெரிந்த உடனேயே  உங்களை போனில் தொடர்பு கொள்ள முயன்றேன் .ஆனால் நீங்கள் …அப்போது அமெரிக்கா ….” சொல்லமுடியாமல் நிறுத்தினாள் .

” நான் அமெரிக்கா போன பிறகுதான் உனக்கே தெரியுமா …? உன் மாமா தாலியுடன் வந்த மறுநாளே நான் அமெரிக்கா கிளம்பிவிட்டேன் பவி ்இங்கே அம்மாவின் தொல்லை தாங்கமுடியவில்லை .உடனே என்னுடன் வந்து அவளை இரண்டில் ஒன்று கேளு என்றார்கள் .அந்த நேரம் உன்னை பார்க்க வந்தால் என்னை அறியாமல் எதுவும் பேசிவிடுவோமே என பயந்துதான் நான் அமெரக்கா போய்விட்டேன் .பிறகு பாப்பா பிறந்த பிறகுதான் எனக்கு குழந்தை விசயமே தெரியும் .உண்மையிலேயே உன் மனதில் நான் இல்லையோ ….என்றே நான் நினைக்க ஆரம்பித்துவிட்டேன் …”

” ஒவ்வொரு நாளும் நீங்கள் வருவீரகள் என்ற நம்பிக்கையோடு கழுத்தில் தாலி இல்லாமல் கையில் குழந்தையோடு …என் நிலையை யோசித்து பாருங்கள் ….” விம்மிய சாம்பவியை இறுக அணைத்துக்கொண்டான் .

” சாரிடா ….நான் இந்த நிலையிலிருந்து யோசிக்கவில்லை .ஆனால் குழந்தை பிறந்த்து தெரிந்த்திலிருந்து எப்போது உன்னை பார்க்கலாமென்று ஒவ்வொரு நாளாக எண்ணிக்கொண்டிருந்தேன் .எந்த காரணத்திற்காகவும் என் குழந்தையை நான் விட்டுக்கொடுக்க மாட்டேனென சொல்லிக்கொண்டேன் ….,சரியான நேரம் அமைந்த்தும் ..உன்னையும் அதில் சிக்கவைத்து நானும் உன் பக்கத்தில் வந்தேன் ….”

” ஆனால் வந்த்திலிருந்து என்னை பயமுறுத்திக்கொண்டே இருந்தீர்களே …ஒரு தடவையாவது ஆறுதலாக பார்த்தீர்களா …? “

” என்ன செய்வது பவி …என் நிலை அப்படி …அன்று ஹோட்டலில் வைத்து உன்னை பார்க்க காத்தருந்த நிமிடங்கள் …நீ என் பின்னால் வருகிறாயென தெரிந்துவிட்டது .ஆனால் திரும்ப முடியாது .மூன்று வருடங்களுக்கு பிறகு உன்னை நேரில் சந்திக்கும் டென்சனுடன் சிகரெட்டை பிடித்தபடி இருந்தால் …வந்து நிற்கவும் சிகரெட்டை கீழே போடுங்கள் என்கிறாய் அதிகாரமாக .எனக்கு அப்போது என் மனைவி மட்டும்தான் கண்ணுக்கு தெரிந்தாள் .உடனே எழுந்து உன்னை அப்படியே இறுக அணைத்து ……”

” ஏய் …சீ …புத்தி போவதை பார் ….”

” அதே போலத்தான் அன்று குடோனில் வைத்தும் …ஆசையாக உனை அணைத்தபடி நான் பாப்பாவை பற்றி பேசலாமென்று வந்தால் …நீ உடல் …தேவை …அது ..இதுவென்று உளறினாய் .ஓங்கி உன் கன்னத்தில் ஒன்று வைக்கலாமென்று இருந்தேன் .அடக்கிக் கொண்டு வந்துவிட்டேன் ….”

” நீங்கள் அப்போது வந்த வேகத்தை பார்த்தால் அப்படித்தான் தெரிந்த்து …..” வெட்கத்துடன் கூறினாள் .

” அப்படியே இருக்கட்டும் .என் மனைவியிடம் நான் அப்படி நினைப்பதில் என்ன தவறு ….? “நியாயம் பேசினான் ரிஷிதரன் .

” அதுதான் உங்கள் நியாயங்களையெல்லாம் …அங்கே நமது வீட்டில் வைத்து நிறைவேற்றிவிட்டீர்களே ….” கணவனின் முகம் பார்க்கும் தெம்பன்றி அவன் மார்பில் புதைந்தபடி சொன்னாள் .

” ஏய் …உண்மையை சொல் அந்த ஊஞ்சலாட்டத்திற்கு பிறகுதானே ..நம் மனதிலிருந்த சந்தேகங்கள் எல்லாம் மறைந்து  ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டோம் ….”

” உண்மைதான் …அதன்பிறகுதான் நீங்கள் எனக்கே எனக்கு மட்டும்தான் என உணர்ந்து கொண்டேன் நான் …” உணர்ச்சியுடன் கூறிய சாம்பவி எட்டி ரிஷிதரனின் கன்னத்தை கடித்தாள் .

” ஏய் …என்னடி பண்ற …? “

” நீங்கதானே அன்னைக்கு கடித்து காட்ட சொன்னீங்க .அதான் …” கடித்து விட்டு ஓடிய மனைவியை விரட்டி அணைத்து தூக்கியவன் …

” அன்று ஊஞ்சலில் …இன்று சோபாவில் …வா …புதிதாக சொல்லித்தருகிறேன் ….” என்றபடி தன் மேல் பாரமாக விழுந்த கணவனை சாம்பவி அணைத்தபோது ….




” அப்பா …” என அறையினுள்ளிருந்து சாஹித்யாவின் குரல் கேட்டது .நேற்று வரை அம்மா …இன்று தூங்கி எழுந்த உடனே அப்பாவை தேடுவதை பார் …சிறிது பொறாமையோடு பெருமையும் கலந்து நினைத்தபடி கணவனை தள்ளினாள் அவள் .

” போங்க உங்க பொண்ணு தேடுறா ….” வேகமாக எழுந்த ரிஷிதரன் …

” பவி டியர் நீ இப்படியே  இரு .நான் போய் பாப்பாவை தூங்க வைத்துவிட்டு வருகிறேன் ….” என போனான் .

உள்ளே அப்பா , மகளின் கொஞ்சல் குரல்கள் சிறிதுநேரத்திற்கு கேட்க , மகளை தோளில் போட்டு தட்டிக் கொடுத்தபடி நடந்து கொண்டிருந்த கணவனை சோபாவில் வசதியாக படுத்துக்கொண்டு மகிழ்ச்சியோடு பார்த்தாள் சாம்பவி .

வாழ்க்கை மிக …மிக அழகாக அமைந்துவிட்டதாக தோன்றியது அவளுக்கு .கண்களை மூடிக்கொண்டு தனக்கான தங்க வாழ்வொன்றினை மனதில் எண்ணிக் கொண்டு ரோஜாவாய் மலர தொடங்கினாள் அவள் .

-நிறைவு –




What’s your Reaction?
+1
57
+1
10
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!