Entertainment serial

எதிர்நீச்சல் நடிகர்கள்




விசாலாட்சியாக (சத்யபிரியா)

எதிர்நீச்சல் சீரியலில் நான்கு மகன்களுக்கு தாயாக முக்கிய கதாபாத்திரத்தில், மாமியாருக்கே உண்டான சிறந்த பாணியில் நடித்து ரசிகர்களையும், மருமகள்களையும்  மிரட்டி வருகிறார் சத்யபிரியா.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சினிமா துறையில் இருக்கும் ஒரு சிறந்த நடிகை சத்யப்ரியா. திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நல்ல வேடங்களில் நடித்தார். இவர் கோலிவுட் சூப்பர் ஸ்டார்களான ரஜினி மற்றும் கமல் ஆகியோருடன் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் பணக்காரன் படத்தில் அவர் நடித்த பாத்திரம் மிகச் சிறப்பானது. வித்தியாசமான வேடங்களில் நடிப்பதில் விருப்பம் கொண்டவர். அம்மா கலைஞர்களில், அவர் முதலிடம் வகிக்கிறார். கோலங்கள் சீரியலில் தேவயானியின் அம்மாவாக நடித்து நல்ல பெயரைப் பெற்றார். அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். அவரது நடிப்பு வாழ்க்கை 1979 ஆம் ஆண்டு முதல் கன்னட திரைப்படமான தர்மசேரே மூலம் தொடங்கியது. இவரது சமீபத்திய படம் வாயை மூடி பேசவும் வினு சக்கரவர்த்திக்கு எதிரில், கிரிஷ் படத்தின் தமிழ் டப்பிங்கில் ஹிந்தி நடிகை ரேகாவுக்கும் டப்பிங் பேசியுள்ளார். கோலங்கள் படத்தில் கற்பகம் என்ற அவரது பாத்திரம் இன்னும் சீரியல் பார்வையாளர்களால் பாராட்டப்படுகிறது. முத்தாரம் சீரியலில் தேவயானியின் மாமியார் வேடத்தில் நடித்தார். இவர் அம்மாவாக நடித்த சீரியல் தான் “வம்சம்”.  அந்த சீரியலில் அவரது பாத்திரம் விரைவில் முடிவடைந்தது, ஆனால் அவர் செய்தவரை, அவர் கச்சிதமாக பாத்திரத்தை முடித்தார்.சித்திரம் பேசுதடி, கோலங்கள்  நடித்ததற்காக 2010 ஆம் ஆண்டு சன் குடும்பம் விருதுகளில் சிறந்த தாயாக விருது பெற்றார். ரோஜா, பாஷா மற்றும் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் ஆகிய படங்களில் நடித்து அவர் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 மகன்களின் வரிசையை பார்க்கலாம்




 

குணசேகரன் (மாரிமுத்து)

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டரில் நடிக்கும் மாரிமுத்து தன்னுடைய நிஜ வாழ்க்கையில் தனக்கு நடக்கும் நிகழ்வுகளை பற்றி கூறியிருக்கிறார். குடும்பத்தின் மூத்த அண்ணனாகவும் சீரியலின் வில்லனாகவும் மிரட்டும் கதாபாத்திரத்தில் கடுகடுவென இருக்கும் குணசேகரன் ஆக மாரிமுத்து நடித்து வருகிறார். கேரக்டர் செலக்ட் செய்தால் இப்படி செய்ய வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு தற்போது மாரிமுத்து அனைவரையும் மிரட்டி வருகிறார். இந்த சீரியலில் தற்போது கதைக்களம் சூடு பிடித்திருக்கிறது. இதுவரைக்கும் அவ்வளவாக எதிர்த்து பேசாமல் அமைதியாக இருந்து வந்த ஜனனி தற்போது குணசேகரனையே வெளுத்து வாங்குகிறார் என்றே சொல்லலாம். இதை பார்த்த ரசிகர்கள் இந்த சீரியல் தற்போது ரசிகர்கள் எதிர்பார்த்த அளவில் இருந்து வருவதாக கூறி வருகிறார்கள். சீரியலில் கடுகடுவென இருக்கும் மாரிமுத்து நிஜ வாழ்க்கையில் அப்படியெல்லாம் இல்லை. ரொம்பவே சகஜமாகவும் ஜாலியான கேரக்டராக தான் இருந்து வருகிறார் என்று அவருடன் நடிக்கும் நடிகர்கள் கூறியிருக்கின்றனர். அதுபோலத்தான் இவர் சக நடிகர்களுடன் எடுக்கும் ரீல்ஸ் வீடியோக்களும் சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.  ஜாலியாக இவர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் வீடியோக்களை பார்த்து பலர் இப்படிப்பட்ட மனுசரா அப்படியெல்லாம் நடிக்கிறார் என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். திரைப்படங்களில் நடித்த அனுபவமா..!! இவருக்கு இப்படி பின்னி பெடல் எடுக்கிறார் என்று இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. சீரியலில் மிரட்டும் கதாபாத்திரமாக நடிப்பதால் நிஜத்திலும் இப்படித்தான் இருப்பார் என்று ரசிகர்கள் முத்திரை குத்தி விடுகிறார்கள் என்று வருத்தமாக மாரிமுத்து கூறியிருக்கிறார்.

ஞானசேகரன் (கமலேஷ்)




இந்த சீரியலில் ஞானசேகரன் கேரக்டரில் நடிக்கும் கமலேஷ் இரண்டாவது மகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இவர் தென்னிந்தியாவைச் சேர்ந்த பிரபல பாடகர் மற்றும் தொலைக்காட்சி தொடர் கலைஞர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட சீரியல் துறையில் பல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கமலேஷ் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். அவர் தனது குழந்தைப் பருவத்திலிருந்தே கிளாசிக்கல் இசையைக் கற்றவர். பல போட்டிகளில் கலந்து கொண்டு கைதட்டல் பெற்றார். மினி திரையில் அவரது குறிப்பிடத்தக்க தோற்றம் தமிழ் சீரியலில் “செல்லமாய் ”. சன் டிவியில் சிறந்த மற்றும் அதிகம் பார்க்கப்பட்ட தொடர்களில் இதுவும் ஒன்று. பிரபல கலைஞர் பொன் குமார் எழுதி, சுலைமான் கே பாபு இயக்கிய இவரின் கதாபாத்திரம் மிகவும் கவனிக்கப்பட்டது. இது ஒரு குடும்பக் கதை, இன்றும் சன் டிவியில் வெற்றிகரமாக ஓடியது.  கமலேஷ் ஜீ டிவியில் “சூப்பர் சிங்கர் செலிபிரிட்டி” என்ற பிரபலமான பாடல் போட்டியிலும் பங்கேற்றார். உடன் அவரது பாடல் நிகழ்ச்சி மிகவும் பாராட்டப்பட்டது. நிகழ்ச்சியின் மற்றொரு பிரபலமான கலைஞரான சிந்துஜாவை அவர் தனது வாழ்க்கைத் துணையாக கண்டுபிடித்தார். அவர்கள் 2007 செப்டம்பர் 6 ஆம் தேதி சென்னையில் திருமணம் செய்து கொண்டனர்.

 கதிர்வேல் (விபு ராமன்) 




இந்த சீரியலில் (3 வது மகனாக) மூலமாக அனைவருடைய திட்டல்களையும் வாங்கி வரும் கதிரை அனைவரும் விபு என்று தான் அழைப்பார்களாம். சீரியலில் கதிர் கேரக்டர் எப்படி இருக்கிறதோ அதுதான் நிஜ வாழ்க்கையிலும் விபு கேரக்டராம்.

    எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு இடத்தை பிடித்து விட்டது. இந்த சீரியல் ஒளிபரப்பாக தொடங்கி ஒரு சில மாதங்கள் ஆன நிலையில் தற்போது இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அந்த கேரக்டராகவே ரசிகர்களின் மனதில் பதிந்து விடுகின்றனர். அந்த வகையில் ரசிகர்கள் அதிகமாக திட்டி தீர்க்கும் ஒரு கேரக்டராக இருக்கும் கதிர் நிஜப் பெயர் ஜெகதீஸ்தானால். ஆனால் இவரை எல்லோரும் விபு என்று தான் கூப்பிடுவர்களாம். இவருடைய சொந்த ஊர் ஊட்டி தானாம். இவர் சீரியலில் மட்டும் தான் கோபக்காரராகவும், பாசக்காரராகவும் இருப்பவர் இல்லையாம். நிஜ வாழ்க்கைகளும் இப்படித்தான் இருந்து வருகிறாராம். விபு சீரியலில் மட்டுமல்லாமல் சினிமாவிலும் நடித்திருக்கிறார் குறிப்பாக ஹன்சிகாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறாராம்.

சக்திவேல் (சபரி பிரசாந்த்)




நான்காவது மகனாக இந்த சீரியலில் சக்திவேல் கேரக்டரில் சபரி பிரசாந்த் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதையை அடுத்த கட்டத்திற்கு தள்ள சீரியலில் அவரது கதாபாத்திரம் முக்கியமானதாக  இருக்கிறது.  பல்வேறு சீரியல்களிலும் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.சபரி 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி பிறந்தார். அவர் தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தார். அவர் எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப இளங்கலை பட்டம் பெற்றார். பொறியியல் படிப்பிற்குப் பிறகு, பிஎஸ்ஜி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் நிறுவனத்திற்கு சென்று வணிக நிர்வாகத்தில் முதுகலை படிப்பை தொடர்ந்தார்.நடிப்பில் அவருக்கு இருந்த அதீத ஆர்வம் அவரை தொலைக்காட்சித் துறையில் கொண்டு வந்தது. பிரசாந்த், கலர்ஸ் தமிழின் தாரி என்ற சீரியலின் மூலம் தொலைக்காட்சித் துறையில் அறிமுகமானார். இந்த சீரியலில் அவர் துருவ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருகிறாராம்.

நாளை மருமகள்களின் வரிசையை பார்க்கலாம்.. 




What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!