Serial Stories தேர் கொண்டு வந்தவன்

தேர் கொண்டு வந்தவன் – 18

18

 

 

 

” சுமி எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை .காய்ச்சல்  போல் இருக்கிறது .அம்மாவிடம் கசாயம் செய்ய சொல்கிறாயா ? ”  வீட்டிற்குள் மாதீனின் குரல் கேட்க ,நர்மதாவின் உள்ளம் படபடத்தது .காய்ச்சலா…?  அவன் அருகே சென்று உடல் நலம் விசாரிக்கும் உந்துதலை அடக்கிக்கொண்டு முற்றத்திற்கு வந்தாள்.

 




” இன்னமும் சில நாட்கள்தான் …” தனக்குள் பேசியபடி முற்றத்தில் நின்று வெளியே விழும் மழைத்துளிகளை பார்க்க  ஆரம்பித்தாள் .எத்தனை நாட்களாக இருக்கக்கூடும் என்று தன்னுடைய விரல் நீட்டி எண்ணினாள் ” 1… 2… 3…” 

 

” என்ன செய்கிறாய் ? ” கேட்டபடி அவள் பின் வந்து நின்றான் மாதீரன்.

 

” மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன் ” 

 

” ஏதோ எண்ணினாயேஅதைக் கேட்டேன் ” 

 

” அது…” கொஞ்சம் நிறுத்தி யோசித்து ” நான்

இன்னமும் இந்த வீட்டில் இருக்கப் போகும் நாட்களை எண்ணினேன் ”  சொல்லிவிட்டு அவன் முகத்தை கவனித்தாள்.

 

கறுத்து சுருங்கி இருந்தது மாதீரனின் முகம் .காய்ச்சல் ரொம்பவும் அதிகமாக இருக்கிறதோ …? கவலைப் பட்டாள்  அவள் .சொட்டு சொட்டாய் விழும்  மழையை வெறித்துக் கொண்டு நின்றிருந்தான் அவன் .

 




”  சுமித்ரா அவள் புகுந்த வீட்டிற்கு போவதற்கு எத்தனை நாட்கள் இருக்கலாம் என்று கணித்து எண்ணினேன் .ஏழு அல்லது பத்து நாட்கள் ஆகலாமா? ” மெல்லிய குரலில் அவனிடமே கேட்டாள்.

 

” ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் கூட நீட்டிக்கலாம் ” இலகுவாக சொன்னவனை முறைத்தாள்.

 

” ஏன் அப்படி சொல்கிறீர்கள் ? ” 

 

” ஒரு வாரமாக இரு வீட்டினரும் தொடர்ந்து சந்தித்து பேசிக் கொண்டேதான் இருக்கின்றனர். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை .ஒரு கட்டத்திற்கு வரவும் இருவருமே பேச்சை நிறுத்தி விடுகிறார்கள் .எதுவும் பிரச்சனை வந்துவிடுமோ என கொஞ்சம் அதிகம் பேச இரு பக்கமுமே பயம்இனி நாம் வேறுதான் யோசிக்க வேண்டும்

 

” இதற்குமேல் என்ன செய்வது ? ” நர்மதாவிற்கு புரியவில்லை.

 

” சொல்கிறேன் .நான் சொல்வதே நிச்சயம் பலன் கொடுக்கும். ஆனால் …” மாதீரன் தயங்கி நிறுத்த நர்மதா பரபரத்தாள் ” சீக்கிரம் சொல்லுங்கள். எதுவானாலும் செய்துவிடலாம் ” 

 

அவனுக்கு இப்போது சொல்லும் மூடு போய்விட்டது .கைகளை கட்டிக் கொண்டு மழையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான் .பெரிய இவன் ..இவனிடம் சொல்லு சொல்லு என்று கெஞ்சிக் கொண்டே இருக்க வேண்டுமென்று நினைக்கிறான் போல .நர்மதாவும் முகத்தை திருப்பிக்கொண்டு மறுபக்கம் நின்று மழையை பார்க்கலானாள் .

 




கொட்டும் மழையில் நனைந்து கொண்டிருந்த தோட்டத்து செடிகளை பார்த்ததும் அவளுக்கு இங்கே இருக்கும் தனது பிறந்த வீட்டின் பால்கனி செடிகள் ஞாபகம் வந்தன.

 

அந்த செடிகள் எல்லாம் என்னவாயிருக்கும்அவற்றை யாரும் கவனிக்க மாட்டார்கள் .எல்லாம் வாடிப்போய் இருக்கும் .அவள் மனம் வருந்தியது .அந்தச் செடிகள் அவளது திருமண நாள் பரிசாக அவளுக்கு கிடைத்தவை .அவை வாடிப்போவதை அவள் மனம் விரும்பவில்லை .ஆனால்பெருமூச்சு ஒன்றை விட்டுக்கொண்டாள்.

 

” வெள்ளைபூண்டும் , குச்சிக்கருவாடும் போட்டு காரசாரமாக குழம்பு வைத்திருக்கிறேன் .சாப்பிட வருகிறாயா …? கேட்டபடி வந்தாள சர்வேஸ்வரி .இப்போதெல்லாம் எந்நேரமும் அவளுக்கு எதையாவது கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறாள் அவள் .இடையில் பழங்கள்இளநீர் என்று மாதீரனின் உபச்சாரம் வேறு.

 

” இப்போதுதானே அத்தை பால் கொடுத்தீர்கள்அதுவே நெஞ்சுக்குள்ளேயே  நிற்கிறது .கொஞ்ச நேரம் போகட்டும்.” 

 

” சரி .ஆனால் உள்ளே போய் படுத்து விடாதே .கொஞ்ச நேரம் இப்படியும் அப்படியுமாக நட .ஜீரணமாகும் ” சொல்லிவிட்டு சர்வேஸ்வரி உள்ளே போக

 

” கொஞ்சம் வெளியே போய் விட்டு வரலாமா நர்மதா ? ” அழைத்தான் மாதீரன்.

 

” இந்த மழைக்குள்ளா ? ” 

 




” சாதாரண சாரல் தானே ,?  குடையைப் பிடித்துக்கொண்டு மெல்ல நடந்து விட்டு வரலாம். உன்னை அம்மா நடக்க  சொன்னார்களே. வா …” சொன்னபடி முற்றத்தின் ஓரம் விரித்து வைத்திருந்த அந்த பெரிய கறுப்பு குடையை கையில் எடுத்துக் கொண்டான்.

 

மழையினுள் நடக்கும் ஆவல் நர்மதாவிற்கு வர அவளும் மாதீரனுடன் குடையினுள்  இணைந்து கொண்டாள் .குடையினுள் இருந்தாலும் லேசான சாரல் பனித்துளியாய் அவ்வப்போது உடம்பில் தெறிக்க குளிரில் சிலிர்த்த உடலை குவித்துக்கொண்டு கணவனுடன் மெல்ல நடந்தாள் .அடிக்கடி அவளது தோள் உரசிய வலிய புஜங்கள் ஏதோ ஒரு உன்னத உணர்வை அவளுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தன.

 

” வேறு யோசிக்க வேண்டும் என்று சொன்னேனே ” மாதீரன் சொல்ல ” ஆமாம் அது என்ன யோசனை ? ” ஆவலாக கேட்டாள்.

 

” பெரியவர்கள் ஒரு எல்லைக்கு மேல் போகமுடியாது நர்மதா .எல்லை தாண்டும் தைரியமும் , திடமும் எப்போதும் சிறியவர்களுக்குத்தான் இருக்கும். துடிப்பான அவர்கள் வயது எதையும் செய்ய வைக்கும் .ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டார்களே அதுபோல…” 

 

” எனக்கு ஒன்றும் புரியவில்லை .அலுத்தாள் நர்மதா.

 

” பிரிந்திருக்கும் கணவன் மனைவியை நேரில் சந்திக்க வைக்க வேண்டும் என்கிறேன் ” 

 




நர்மதாவின் விழிகள் விரிந்தன.”  சரிதான் இது ஏன் எனக்கு தோன்றவில்லை ? ” 

 

” இதெல்லாம் உனக்கு தோன்றியிருந்தால் நமக்குள்எல்லாம் எப்போதோ சரியாகி இருக்குமே ” ஏக்கமாக வெளிப்பட்டது மாதீரனின் மூச்சு.

 

நர்மதா கம்பியாய் விழுந்த மழைக்கு பார்வையை திருப்பிக்கொண்டாள். இப்போது எதற்கு இந்த பேச்சுஅதைவிட முக்கியமாக இப்படி ஒரு பெருமூச்சுகுளிர் மழைக்குள் குடைக்குள் அனல் அடித்தது அவளுக்கு.

 

” நான் சுமித்ராவிடம் பேசுகிறேன் .அவர்கள் இருவரையும் ஏதாவது கோவிலில் பேசிக்கொள்ள வைக்கலாம் .வரும் வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மன் கோவிலில்….” 

 

” இருவரையும் அழைத்து போய் எலுமிச்சம்பழ விளக்கு போடலாம் என்று சொல்கிறாயா ? ” கிண்டலாக கேட்டவனை முறைத்தாள்.

 

” கணவனும் மனைவியும் சந்திக்க வெள்ளிக்கிழமைதுர்க்கை அம்மன்எலுமிச்சம்பழ விளக்குஇன்னும் வேறு என்ன ஐடியா வைத்திருக்கிறாய் ? ” புன்னகையுடன் கிண்டலை தொடர அவன் கையில் இருந்த குடையை தான் பிடுங்கிக் கொண்டு அவனை மழைக்குள் தள்ளினாள் .

 

போங்கநல்லா மழையில் நனையுங்ககுடை தரமாட்டேன்…” 

 

” அடிப்பாவி புருசனைஅதுவும் உடம்பு சரியில்லாத புருசனை மழையில் தள்ளும் ராட்சசியை  எல்லாம் என்ன சொல்வது ? “

 




அவனது புலம்பலுக்கு கவலைப்பட்டு வேகமாக அவனருகே போய் மீண்டும் குடை பிடித்தாள் . ” காய்ச்சலா உங்களுக்கு ? ” கவலையாக அவன் நெற்றியில் கை வைத்து பார்த்தாள் .அந்த கையை எடுத்து தனது கழுத்தில் வைத்துக் கொண்டவன் ” ஆமாம் பாரேன் எவ்வளவு சூடு  ” என்றான்.

 

கழுத்துச் சூட்டிற்கு நர்மதாவின் உடல்முழுவதும் தகித்தது.

 

குடைபிடித்து இருந்த அவள் கை மேல் தன் மற்றொரு  கையை வைத்து அழுத்தி பொத்திக் கொண்டவன்”  கருப்பண்ணசாமி கோவில் எப்படி நர்மதா ஓகேவாக  இருக்குமா ? ” மென் குரலில் அபிப்ராயம் கேட்டு கண்களை சிமிட்டினான் .

 

நர்மதாவின் முகம் சிவந்தது .அவள் உதடுகள் குறுகுறுத்தனஉதடுகளின் துடிப்பை மடித்துக் கடித்து மறைத்துக்கொண்டு ” செய்தது பொறுக்கித்தனம் .அதிலென்ன பெருமிதமான நினைவூட்டல் ”  முணுமுணுத்தாள்.

 

” ஏற்பாடுகளை நான் செய்துவிட்டேன் ” மாதீரன் புன்னகைத்தான்.

 

” என்ன …? என்றைக்கு …? எப்போது….? ” 

 

” இன்றைக்குஇப்போதுசெய்த ஏற்பாடுகள் சரியா என்று பார்ப்பதற்காகத்தான் இப்போது இங்கே வந்திருக்கிறோம் ” உல்லாசம் வழியும் குரலில் மாதீரன் பேசிக்கொண்டிருந்தபோது அவர்கள் ஒரு வாழைத்தோப்பின் முன்னால் நின்று கொண்டிருந்தனர்.

 




” நம் தோப்பு தான்முக்கோண நடவு முறையில் இரண்டு மரங்களுக்கு நடுவே ஒரு பப்பாளி என்ற புதிய முறையை நேற்றுத்தான் சந்திரன் சொல்லிக் கொடுத்தான் .புதிதாக நட்டிருக்கும் நாற்றுக்கள் இந்த திடீர் மழையில் சாய்ந்து விட்டனவா என்று பார்த்துவிட்டு வாயேன் என்று சுமித்ராவை அனுப்பியிருக்கிறேன் .எனக்கு காய்ச்சல் என்று அவளிடம் பொய் சொல்லி வைத்தேன் .இதே காரணத்தை சந்திரனிடம் போனில் சொல்லி நேற்று நட்ட நடவை ஒரு பார்வை பாருங்கள் என்று இங்கே வர வைத்திருக்கிறேன் .இதோ இப்போது இருவரும் இந்த தோப்பிற்குள் தான் இருக்கிறார்கள் .பார்க்கலாம்….” 

 

முகத்தை உரசிய அகல வாழை இலைகளை கைகளால் ஒதுக்கியபடி இருவரும் தோப்பிற்குள் நடந்தனர் .” எட்டாவது பாத்தியில் நட்டிருக்கிறோம்.தோப்பிற்கு நடுவில் இருக்கும்மாதீரன் சொன்ன இடத்தில் சிறிய நாற்றுக்கள் நடப்பட்டிருக்க  , மழையில் சரிந்திருந்த அவற்றில் சிலவற்றை சரி செய்தபடி இருந்தாள் சுமித்ரா . அவளை பார்த்தபடி நின்றிருந்தான் சந்திரன் .

 

ஏதோ பேசியபடி இருந்தனர் இருவரும் .வாக்குவாதம் போல் தெரியசண்டை போடுகிறார்களா ? ” நர்மதா கவலையுடன் மாதீரனிடம் கேட்டாள். அவன் உதட்டில் கை வைத்து அவளை அமைதி காக்க சொல்லிவிட்டு பெரிதாக இருந்த ஒரு வாழையின் பின் அவளை இழுததுக்

 கொண்டான்

 




கொஞ்சம்  கொஞ்சமாக விழுந்தாலும் சிறிது நேரத்திலேயே உடல் முழுவதையும் நனைத்துவிட்ட மழைக்காக எரிச்சல்பட்டபடி எழுந்து நின்றாள் சுமித்ரா .” உங்களோடு் சண்டை போட உடம்பில் தெம்பு இல்லை .நன்றாக நனைந்துவிட்டேன் .வீட்டிற்கு போகிறேன்ஈரத்தில் நனைந்து உடலோடு ஒட்டிக் கொண்ட சேலையை லேசாக உயர்த்தி பிடித்துக் கொண்டு மெல்ல திரும்பி நடந்தாள் .

 

நீரில் நனைந்த தாமரையாய் மலர்ந்து நின்ற மனைவியின் அழகை சந்திரனின் கண்கள் தாகத்துடன் அள்ளிப் பருகின .நான்கெட்டில் நடந்து கொண்டிருந்தவளின் தோள் தொட்டவன்சுமிஇன்னமும் எத்தனை நாட்களுக்கு இந்த மாதிரி உப்பு பெறாத விசயங்களுக்கெல்லாம் சண்டையிட்டு நாம் பிரிந்திருக்க போகிறோம் ? ” ஏக்கமாக கேட்டான் .

 

நீங்கள்தானே உங்கள் வீட்டினர் பக்கமே பேசி எப்போதும் என்னையே குற்றம் சொன்னீர்கள் .அது தாங்க முடியாமல்தானே நான் என் பிறந்தவீட்டிற்கு ஓடிப் போனேன் ” 

 

அது தவறுதான் .அப்பாவும் , அம்மாவும் கூட இப்போது இதனை உணர்ந்து விட்டனர் .நீநம் வீட்டிற்கு வந்து விடு சுமி ” 

 

போ என்றால் போவதற்கும்வா என்றால் வருவதற்கும் நான் என்ன உங்கள் கை பொம்மையா ? எனக்கு பிறந்தவீடு இருக்கிறது .அப்பா , அம்மா , அண்ணன் இருக்கிறார்கள். அங்கே வந்து பேசுங்கள் …” 

 

நாளையே வருகிறேன் …” சுமித்ரா வாய் மூடும் முன் வேகமாக தன் ஒப்புதலை கொடுத்த சந்திரனை பார்த்த சுமித்ரா மெல்ல புன்னகைத்தாள் .

 




 

சுமி …” சந்திரன் சுமித்ராவை இழுத்து இறுக்கி அணைத்துக் கொள்ள , நர்மதா பதறி திரும்பி மரங்களுக்கிடையே ஓடி அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் .

 

நர்மதா சகதிஜாக்கிரதைஎச்சரிப்போடு அவளை பாதுகாத்தபடி பின்னால் வந்தான் மாதீரன் .

 

வீட்டிற்கு திரும்பும் வழி முழுவதும் அவர்கள் குடைக்குள் கதிராய் காதலும் , குளிராய் மோகமும் சதிராடிக் கொண்டிருந்தன.

 

 

 

What’s your Reaction?
+1
4
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!