Serial Stories தேர் கொண்டு வந்தவன்

தேர் கொண்டு வந்தவன் – 17

17

 

 

 

” தென்னங்கன்றுகளை நட்டுவிட்டு, பலன் எடுக்க ஆண்டுக் கணக்கில் காத்திருப்பதெல்லாம் அந்தக்காலம். அரை காணி நிலமாக இருந்தாலும், குறுகிய காலத்தில் விளைச்சல் தரும் ரகங்களை நடுவதுகூடவே ஊடுபயிர், அடுக்குப்பயிர்போன்றவற்றை கடைபிடித்து தொடர் வருமானம் பார்ப்பதுஇவைகள்தான் இப்போதைய புதிய பாணிஅந்த வகையில், தென்னைக்கு இடையில், பப்பாளி மற்றும் வாழையை சாகுபடி செய்து இரட்டிப்பு லாபம் பெறலாம்சத்தமான குரலில் தெளிவாக விளக்கிக் கொண்டிருந்தவன் அன்று மாதீரனிடம் அடி வாங்கியவன் தான். பெயர் சங்கிலி கருப்பன்.




” இவைகளைப் பற்றி எல்லாம் நான் கோயம்புத்தூரில் ஒரு பெரிய பண்ணைகாரரிடம் போய்  கொஞ்ச நாட்கள் அவர் பண்ணையில் தங்கி இருந்து வேலை பார்த்து தெரிந்து கொண்டு வந்தேன் .இங்கே நம்மூரில் சிலரிடம் விவரங்கள் கூறி செயல்படுத்தி இருக்கிறேன் .அவர்கள் தோப்புகள் எல்லாம் மிகவும் அருமையாக வளர்ந்து கொண்டே இருக்கிறதுஇந்த விபரங்கள் பற்றி எல்லாம் உங்களிடம் பேசலாம் என்றுதான் அன்று வந்தேன் .ஆனால் நீங்கள்தான் கையை பின்னால் திருப்பி தன் முதுகை தடவிக் கொண்டான் அவன் .மாதீரனின் முகம் சங்கடமாய் சுருங்கியது.

” சாரி தம்பி நான் அன்று உங்களை தவறாக நினைத்து விட்டேன் ” அவன் கைகளைப் பற்றிக்கொண்டான்.

” பரவாயில்லை ஏதோ கோபத்தை மனதில் வைத்துக் கொண்டு நான் சொன்னதை செய்யாமல் இருந்து விடாதீர்கள் .நிச்சயம் செய்து விடுங்கள் .இப்போது இந்த விவசாய முறைகள் பற்றிய தெளிவான விளக்கங்களுக்கு உங்களை நேரடியாக தென்னந்தோப்பிற்கே  கூட்டிப்போய் காட்டுகிறேன் வருகிறீர்களா ? ” 




முனியாண்டிசடையாண்டிமாதீரன் மூவரும் தலையாட்டி உடனே கிளம்பி விட்டனர் .நாளுக்கு நாள் அழிந்து கொண்டே வரும் விவசாயத்தை மீண்டும் செழிக்க வைக்க படாதபாடு பட்டுக் கொண்டு இருப்பவர்கள் அவர்கள் .தங்களது தோப்பிற்கான வளர்ச்சிக்காக அவர்கள் எதற்கும்  தயாராக இருந்தனர் .ஆனால் சங்கிலி கருப்பன் கூட்டிக் கொண்டு போன இடம் சந்திரனின் தென்னந்தோப்பு….

இவன் சந்திரன் தூது அனுப்பிய ஆளோ என்ற சந்தேகம் அவர்களுக்குள் மீண்டும் வந்தது. ” வெளியிலேயே நின்றுவிட்டால் உள்ளிருக்கும் எந்த விவரங்களும் தெரியாது. இருமடி பாத்திவட்டப்பாத்தி என்று ஏராளமான விவரங்கள் இருக்கின்றன .அவற்றை எல்லாம் கண்ணுக்கு முன்னால் காட்டி சொன்னால் தான் உங்களுக்கு விளங்கும். உங்கள் தோப்பை சீர்படுத்தும் ஆவல் இருந்தால் உள்ளே வாருங்கள் ” சொல்லிவிட்டு சங்கிலி கருப்பன் தோப்பிற்குள் போக வேறு வழியின்றி அவனைப் பின் தொடர்ந்தனர் மூவரும்.

” தென்னந்தோப்புல ரெண்டு முறை பல தானிய விதைப்பு செஞ்சு, மண்ணை வளமா மாத்தி, ஊடுபயிரா, ரெண்டு வருஷத்துக்கு காய்கறி சாகுபடி செய்தேன். இப்போது சோதனை முயற்சியாக  மூன்று அடுக்குப் பயிரா தென்னைக்கு இடையில இருமடிப்பாத்தி, வட்டப்பாத்தி எடுத்து பப்பாளிச் செடிகளையும், வாழைக் கன்றுகளையும் நட்டிருக்கேன்.தென்னைக்கு இடையில அரை ஏக்கர்ல 500 மொந்தன் வாழை போட்டுருக் கேன். வாழைக்கு இடையில 30 சென்ட்ல 200 ‘ரெட் லேடிபப்பாளி கன்னுகளை நட்டிருக்கேன். இயற்கை விவசாயத்துக்கு மாறி, நாலு வருஷம் ஆகிடுச்சு. முன்ன சராசரியா100 தேங்காய் காய்ச்ச மரங்கள்ல, இப்போ 150 காய்கள் கிடைக்குது. தேங்காயை உரிச்சு வித்துடறேன். அதில்லாம, நெத்துக்காய்களை நாத்தா வளத்தும் விற்பனை செய்றேன்விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்த சந்திரனுக்கு முன்னால் பிரமித்த விழிகளுடன் பவ்யமான முகத்துடனும்  நின்றிருந்த தனது குடும்பத்தினரை ஆச்சரியமாக பார்த்தபடி தோப்பிற்குள் வந்தாள் நர்மதா.




” நான்கு வருடங்களாக இப்படித்தான் விவசாயம் பார்க்கிறீர்களா ? ” முனியாண்டி கேட்க சந்திரன் தலையசைத்தான்.

” ஆமாம் இப்போது இந்த தோப்பு எனக்கு  பணபூமி .தென்னை மரங்களுக்கு இடையே வாழை மரங்களையும்பப்பாளி மரங்களையும் நட்டு இருக்கிறேன் .வரப்புகளில் தேக்கு மரங்கள் நட்டு இருக்கிறேன். எல்லா செலவுகளும் போக வருடத்திற்கு பத்து லட்சத்திற்கும்  அதிகமாகவே கைகளில் நிற்கிறது ” 

சந்திரனின் விளக்கத்தில் அனைவரும் வாய் பிளக்காத  குறைதான் .விவசாயத்தில் இவ்வளவு லாபம் பார்த்து பல  வருடங்கள் ஆகின்றதே

” இதையெல்லாம் எப்படி செய்தீர்கள் …? ” என்று சடையாண்டி மெல்ல இழுக்க ” நானே உங்கள் தோப்பிற்கு வந்து சொல்லித் தருகிறேன் ” சந்திரன் ஒத்துக்கொண்டான்.

சங்கிலி கருப்பனும் நர்மதாவும் கட்டை விரல் உயர்த்திக் கொள்வதை கவனித்து விட்டான் மாதீரன்.




” இதெல்லாம் உன் ஏற்பாடா ? ” திரும்ப நடந்து வரும்போது கேட்டான்.

” விவசாயம் எங்களுடைய பூர்வீகத் தொழில் என்பீர்கள் .அதனை காலத்திற்கு ஏற்றபடி எப்படி மாற்றி செய்வது என்று யோசிக்க மாட்டீர்கள். அப்படி சொல்லிக் கொடுக்க யாராவது முன்வந்தாலும் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள் .காய்ந்து போய் கிடக்கும் உங்கள் தென்னந்தோப்பு மீண்டும் வளமாக மாறுவதற்காக சந்திரனிடம் பேசி கஷ்டப்பட்டு சம்மதிக்க வைத்திருக்கிறேன் ” 

” இல்லை அவர்களே அறியாமல் அப்பாவையும்சித்தப்பாவையும் சந்திரனை தேடிப்போய் பேச வைத்திருக்கிறாய் ” 

இதற்கு நர்மதா பதில் சொல்லவில்லை .சாலையோர மரங்களை வேடிக்கை பார்த்தபடி நடந்தாள்.

முதல் நாள் சந்திரன் வீட்டில் அவளை விட்டுவிட்டு ஒரு மணி நேரம்வரை மாதீரன் வெளியே காத்திருந்தான் ” வழி தெரியாதா எனக்குநானே வருவேனே ” வெளியே வந்ததும் சிடுசிடுத்தாள் நர்மதா.

” பரவாயில்லை எனக்கு பெரிதாக எந்த வேலையும் இல்லை .வா போகலாம் ” முன்னால் நடந்தவனின் முதுகை  வெறித்தாள்.




” வேவு பார்க்கிறீர்களா ? ” அவளுடைய குற்றச்சாட்டிற்கு திரும்பி பார்த்தவனின் கண்கள் கோபத்தில் சிறுத்தன.

” அதற்கு என்ன காரணம் இருக்கலாம் என்று நினைக்கிறாய் ? ” 

” அது உங்களது பழக்கம் என்று நினைக்கிறேன் ”  நர்மதாவின் பதிலில் விறுவிறுவென்று முன்னால் நடக்கத் துவங்கினான் மாதீரன் .சாலையில் கிடந்த கல் ஒன்றை அவன் ஓங்கி மிதித்த வேகத்தில் அவனது கோபம் தெரிந்தது .சாலையோரம் இருந்த மரம் ஒன்றில் மோதி மண் துகள்களை உதிர்த்தது அந்த கல்.

” தென்னந்தோப்புகளை  பராமரிப்பதற்கு சொல்லிக் கொடுக்க சந்திரன் வருகிறார் ” என்ற தகவலை நர்மதா முனியாண்டியிடம் சொன்னபோது எங்கே எது நடந்தால் எனக்கென்ன என்ற பாவத்துடன் தள்ளி நின்றிருந்தான்  மாதீரன் .

முதல் நாள் கோபத்தின்  பிறகு அவளுடன் எதுவும் பேச முயலவில்லை .உனக்கு கோபம் வந்தால் எனக்கென்னமுகத்தை நொடித்து கொண்டாள் நர்மதா.

” இளநீர் குடி ” மாதீரன் நீட்டிய இளநீரை வாங்கிக் கொண்டவள் ” கோபம் சரியாகி விட்டது போல ” முணுமுணுத்து விட்டு மறுபுறம் திரும்பிக்கொண்டாள்.




” கோபம் வருமா …? அதுவும் உன் மீது …” அவன் கேட்டதும்தான் வாய் விட்டுச் சொல்லி விட்டதை உணர்ந்து நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

 

” இதோ இதனை சாதித்திருக்கின்றாயேஇதற்கு மேலும் கோபம் இருக்குமா ? ” 

சந்திரனுடன் அப்பாவும் சித்தப்பாவும் சாதாரணமாக பேசிக் கொண்டிருப்பதை காட்டி கேட்டான். ” மாமனாரும் மருமகனும் பேசிக் கொள்ளட்டும் என்று தான் நான் சற்று ஒதுங்கி நிற்கிறேன் ” மேலும் விளக்கங்கள் கொடுத்தான்.

ம் .சரிதான் .ஆனால் நான் என்ன செய்தேன்அவர்கள் விவசாய தேவைக்காக ஏதோ பேசிக் கொள்கின்றனர் ” 

” ஓஹோ உனக்கும் சங்கிலி கருப்பனுக்கும் கூட இது விஷயத்தில் எந்த சம்பந்தமும் கிடையாதா ? ” 

” சங்கிலி கருப்பனாஅது யார் ? ” 

” ஒன்றும் தெரியாத பாப்பா ” கிண்டலாகச் சொன்னபடி இரண்டு விரலால் அவள் கன்னத்தை பற்றி செல்லமாக நிமிண்டினான்.

” நேற்று சந்திரனிடம் இதைத்தான் பேசினாயா  ? ” நர்மதா தலையை திருப்பிக் கொண்டாள் இதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை.

” இன்று உங்கள் வீட்டினர் சந்திரனை தேடி வந்திருக்கிறார்கள் .நாளை இவர்களைத் தேடி சந்திரன் வீட்டினர் வருவர் ” சொல்லிவிட்டு நடக்கத் துவங்கினாள்.

 




என் வீட்டினராஇங்கே உனக்கு உரிமை இல்லையா நர்மதா ? ” வறண்டு ஒலித்தது மாதீரனின் குரல்.

 

” நிச்சயம் இல்லை .சந்திரன் – சுமித்ரா சேர்ந்ததும் இங்கே என் வேலை முடிந்துவிடும் .நான் போய்விடுவேன் ” இப்போது நர்மதா நடந்து கொண்டிருக்க மாதீரன் அப்படியே நின்று விட்டான்.

 

நர்மதா சொன்னதுபோலவே மறுநாளே சந்திரனின் அப்பா அவர்களை தேடி வந்தார் .வந்த காரணம் கீழ செக்காரக்குடி இளைஞர்களுக்கு அவள் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பது.

 

” இதனை நீங்கள் என் மாமனாரிடம்தான் கேட்கவேண்டும் ” நர்மதா கை காட்டிவிட தான் அழைத்து வந்த 12 இளைஞர்களுடன் சடையாண்டியிடம் போய் நின்றார் அவர் .அவர் உடனடியாக அவர்களை நர்மதாவின் பாடத்தில் சேர்த்துவிட சந்திரன் அப்பா பூதலிங்கம்  நன்றி சொல்லஅவர் கொஞ்ச நேரம் தான்மகன் மருமகள் என்று பேச அவரவர் தொழில் தாண்டி குடும்பங்களைப் பற்றிய பேச்சும் வரத்துவங்கியது.

 




 

இருமடி பாத்தி முறையை விளக்கமாகச் சொல்ல சந்திரன் இவர்களது தோப்பை தேடிவர ,கீழசெக்காரக்குடி பசங்களின் படிப்பு விஷயம் பேச சடையாண்டி பூதலிங்கத்தை தேடிப்போக இரு குடும்பத்தினருக்கும் வர போக என்ற போக்குவரத்தும் பேச்சுவார்த்தையும் தொடர்ந்தது.

 

 

What’s your Reaction?
+1
4
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!