Serial Stories தேர் கொண்டு வந்தவன்

தேர் கொண்டு வந்தவன் – 16

16

 

 

 

” உன்கிட்ட பேசணும்னு வந்தேன் தாயி ” சடையாண்டியின் குரலை கேட்டு முன் வாசலில் வேப்பமரத்தடியில் சோர்ந்து அமர்ந்திருந்தவள் நேராக நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

 

” என்ன விஷயம் சொல்லுங்க ? ” 

 




” நான் உனக்கு சின்ன மாமனார். என்னை சின்ன மாமா என்று கூப்பிடு ” உத்தரவாக ஒலித்தது சடையாண்டியின் குரல்.

 

” இதற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை ” மனதிற்குள் சலித்தபடி ” சொல்லுங்க சின்ன மாமா”  என்றாள்.

 

” நீ நேற்று அண்ணனிடம் கொஞ்சம் கடுப்பாக பேசி விட்டாய் .பெரியவர்களிடம் மிகவும் யோசித்துதான் பேசவேண்டும் .அவர்கள் சொல்வதற்கு தலையாட்டி விடுவது ரொம்பவே நல்லது ” 

 

ஆஹா அண்ணனுக்கு எதிர்நின்று பேசியதற்கு தம்பி வக்காலத்து வாங்கிக் கொண்டு வருகிறாராக்கும் மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் ” அப்படித்தான் நீங்கள் தலையாட்டிக் கொண்டு இருக்கிறீர்களோ ? ” என்றாள் .

 

” நிச்சயமாக எனக்கு 58 வயது ஆகிறது .இத்தனை வருடங்களில் அண்ணனின் எந்தச் சொல்லுக்கும் மறுவார்த்தை நான் சொன்னது கிடையாது” 

 

ஆஹா என்ன ஒரு சகோதர விசுவாசம் .மகளை விட அண்ணனுக்கு மரியாதை .அதனால்தான் சுமித்ரா இன்னமும் இங்கேயே இருக்கிறாள் தன் மனதில் ஓடியதை மறைக்காமல் சொல்லி விட்டாள் நர்மதா.

 




தான் மறைமுகமாக சொன்னது சடையாண்டியின் மனதிற்குள் ஏறியதோ  இல்லையோ என்ற சந்தேகத்தோடு அவரை பார்த்திருக்க சடையாண்டி மௌனமாக இருந்தார் .அந்த மௌனம் அவருக்கு நர்மதாவின் வாதங்கள் புரிந்து விட்டது என காட்டியது.

 

” என்னோட அண்ணன் மகனுக்கு ஒரு பெண் பார்த்து சொல் என்று மாதீரனின் போட்டோவை நான் உன் அப்பா சுப்பையாவிடம் காட்டியபோதுஎன் மகளை பார் என்று அவன் உன்  போட்டோ காட்டினான் .சரி இரு குடும்பமும் பேசிக்கொள்வோம் என்று நமக்குள் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதுதான் ஒரு நாள் உன்னை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் பார்த்தேன் .கையில் பெட்டியோடு பரபரப்பாக நின்றிருந்தாய் ” 

 

” உடனே சந்தேகப்படும் நிலைமைதான் .ஆனால் உன்னுடைய பால் போன்ற முகம் உன்மேல் எனக்கு சந்தேகத்தை கொடுக்கவில்லை .உன்னை பாதுகாக்க வேண்டும் என்ற வேகம் மட்டுமே அப்போது வந்தது .அப்படியே உன்னை அழைத்து வந்து உன் அப்பாவிடம் ஒப்படைத்தேன் .அந்த நிமிடத்திலிருந்து இதோ இந்த நிமிடம் வரை உன்னை பற்றி தப்பாக எந்த விஷயத்தையும் ஒரு கணம் கூட நான் நினைத்ததில்லை ” 

 

” என் நண்பன் சுப்புவின் மகள்அண்ணி விசாலாட்சியின் வளர்ப்பு என்பதே உன் மீது பூரண நம்பிக்கை வைப்பதற்கு எனக்கு போதுமானதாக இருந்தது. ஆனால் அந்த நம்பிக்கையை ஒரே ஒரு நாள் இரவில் சிதைத்து விட்டாய். ஏன் தாயி கண்ணுக்கு கண்ணான என் மகளை எதிரி குடும்பத்தினரிடம் காவு கொடுத்து விட்டாயேஇந்த வேதனையை நான் எப்படி தாங்குவேன் ? ” 

 




” நம்பிக்கை வைத்த என் நண்பனின் மகள்  செய்த துரோகம் எனக்கு ஜீரணிக்க கூடியதாக இல்லை .இரண்டு மாதங்களாக என் மனதிற்குள் உழன்று கொண்டிருக்கிறேன் நான் ” 

 

சடையாண்டி பக்கத்தின் நியாயம் இதுவாகத்தான் இருக்கும் என்று நர்மதா ஊகித்து வைத்திருந்தாள் . இந்த கோபத்துடனேயே சடையாண்டி சுப்பையாவை வந்து சந்திக்காமல் இருந்தார் .சுப்பையாவிற்கு ஒன்றாக கலந்து பழகிய உயிர் நண்பன் கூட அங்கே நடந்த விஷயங்களை தன்னிடம்  வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளவில்லையே என்ற மனக்கவலை.

 

திடுமென்று ஒருநாள் மகளை கையில் பெட்டியோடு தனியாக அங்கிருந்து திருப்பி அனுப்பிவிட்ட ஆத்திரம் சுப்பையாவிற்கு. எந்த விபரங்களும் தெரியாமல் ஒருமாதிரி அதிர்ச்சியில் சில நாட்கள் இருந்த மகளிடமும் எதுவும் பேச முடியாமல் அவர் தவித்த நாட்கள் சில .பிறகே நர்மதாவிடமிருந்து சிறிதுசிறிதாக விபரங்களை தெரிந்து கொண்டார். மகளின் பக்கம் தவறு இருந்தாலும் அதனை வெளிப்படையாக தன்னிடம் பேசாத நண்பனின் மீது சுப்பையாவிற்கு மிகுந்த கோபம் இருந்தது.

 

அவன் வந்து பேசட்டும் என்று இவரும்இவன் வந்து பேசட்டும் என்று அவரும்இரண்டு மாதங்களாக முறுக்கிக் கொண்டு இருக்கிறார்கள். இதோ இப்போதும் நேரடியாக வந்து பேசாமல் போன் மூலமாக நண்பனிடம் மகளை அனுப்பி வைக்குமாறு சடையாண்டி சொல்லசுப்பையாவும் அனுப்பி வைத்துவிட்டார் மகளை மட்டும் .தனது நண்பனும்  மகளுடன் வருவான்  என்று எதிர்பார்த்திருந்த சடையாண்டிக்கு  ஏமாற்றம்.

 




” இப்போது இந்த பழைய கதையை எல்லாம் எதற்கு பேசிக் கொண்டு வருகிறீர்கள் சின்ன மாமா ? ” 

 

” பழைய கதையாஎன்னுடைய மகள் வாழ்க்கையை இழந்து இங்கே வந்து உட்கார்ந்து கொண்டு இருக்கிறாள். நீ அது பழங்கதை என்கிறாயே ? ” கோபம் இருந்தது சடையாண்டியின் குரலில்.

 

” அவள் வாழ்க்கை அவ்வளவுதான் என்று அண்ணனும் தம்பியுமாக முடிவெடுத்து விட்டீர்களேபிறகு அதையே பேசிக் கொண்டிருப்பதில் என்ன லாபம் ?” 

 

” யார்  இப்படி உளறிசீறினார்.சடையாண்டி சீறினார்

 

” நீங்கள்தான் .இதோ சற்று முன்னர்தான் சொன்னீர்கள் .அண்ணனை எந்த சந்தர்ப்பத்திலும் எதிர்த்துப் பேசக்கூடாது என்று சொல்லவில்லையாஉங்கள் அண்ணன் கீழ செக்காரக்குடி பக்கமே போகக் கூடாது என்று வீம்பு பிடித்து கொண்டு இருக்கிறார் .நீங்கள் அவருக்கு குடை பிடித்துக் கொண்டு இருக்கிறீர்கள் .இடையில் சுமித்ராவின் வாழ்வு அவ்வளவுதான் ” 

 




” இப்படித்தான் பெரியவர்களை பற்றி பேசாதே என்றேன் .அண்ணன் அங்கே போகக் கூடாது என்றால் அதில் ஒரு நியாயம் இருக்கும் .இனி இதைப்பற்றி நம் வீட்டிற்குள் பேசாதே .உன்னை எச்சரித்து விட்டுப் போகத்தான் வந்தேன் ” என்றுவிட்டு சடையாண்டி எழுந்து போய்விட்டார்.

 

இந்த முரட்டு முட்டாள்தனத்தை எப்படி சமாளிப்பது யோசனையில் இன்னமும் அதிகமாக தலை சுற்றுவது போல் இருந்தது நர்மதாவிற்கு .

 

” இந்தா இதை குடி. அவள் முன் பெரிய பித்தளை டம்ளர் நீண்டது .” எலுமிச்சை ஜூஸ் .வாய்க்கும் நன்றாக இருக்கும் .இதுபோல் தொண்டை வறளுவதற்கும் உதவும் ” என்றபடி நின்றான் மாதீரன்.

 

” இது யார் செய்தது ? ” கேட்டபடி ஜூசை ஆவலுடன் வாங்கி அருந்த தொடங்கினாள் நர்மதா.

 

” அம்மாவிற்குபித்தம் போல் தலை சுற்றிக் கொண்டு இருந்ததாம் . அதற்காக இந்த ஜூஸ் செய்தார்கள். குடிக்க நன்றாக இருக்கிறது தானே…? ” 

 

” ஆமாம் ” என்றபடி மசக்கை வாய்க்கு ருசியாக தெரிந்த அந்த பானத்தை சொட்டு விடாமல் குடித்து முடித்தாள்.

 

” கொடுப்பதை சாப்பிட்டு உடம்பில் தெம்பு ஏற்றிக்கொள் நர்மதா .இப்போது பேசியது போல் உனக்கு நிறைய வேலை இருக்கும் ” என்றவனை ஆச்சரியமாக பார்த்தாள்.

 




” உங்களுக்கு நான் இப்படி உங்கள் அப்பாவை சித்தப்பாவை பேசுவதில் எதுவும் வருத்தம் இல்லையா ? ” 

 

” வருத்தம்…?  நிச்சயம் இல்லை .உன்னால் தவறாக போன ஒன்றை நீயே தான் சரி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் ” 

 

அதாவது நீதானே இந்த திருமணத்தை நடத்தினாய் . அதற்கான தண்டனையாக இதனை சரி செய்தும் கொடுஎன தன்னை பிரச்சனையினுள் தள்ளி விட்டி மாதீரன் எட்டி நின்று வேடிக்கை பார்ப்பதாக உணர்ந்தாள் நர்மதா .அவளது நாக்கின் கசப்பு தொண்டை வழி இறங்கி உடல் முழுவதும் பரவியது .

 

இப்போதே வீட்டை விட்டு வெளியே போ என்று விபரம் கேட்காமலேயே போனில் குரைத்தவன் தானே இவன்வேதனையுடன் அவனைப் பார்த்தாள்.

 

வீட்டிற்கு பிடிக்காத  ஒரு காரியம் செய்து விட்டாய் .நான் இல்லாத  நேரத்தில் நம் வீட்டிற்குள் உன்னால் சமாளிக்க முடியாது நர்மதா. அதனால்தான் அன்று அப்படி பேசினேன் ” 

 

நியாயம்தானேஎன்று மாதீரன் பக்கம் பாய்ந்த மனதை அதட்டி அடக்கினாள். இவன் நேரத்திற்கு ஏற்றாற்போல் பேசுபவன்முகத்தை உர்ரென்றே வைத்துக் கொண்டாள் .

 

சரிதான் இப்போது நான் ஆரம்பித்து வைத்த குளறுபடியை நானே சரி செய்ய முயற்சிக்கிறேன். ஏதோ சொல்ல வந்தீர்களே .என்ன ? ” 

 

”  அவர்களுடன் பேசுவதில் அப்பாவிற்கு பிரச்சனை இல்லை நர்மதா .ஆனால் அந்தப் பேச்சினை முதலில் யார் ஆரம்பிப்பதென்பதுதான் பிரச்சனை

 




நர்மதாவிற்கு புரிந்த்து .நீ என் வீடு தேடி வாநீ வா ….என இரு பக்கத்தினரும் வீம்பு பிடித்துக் கொண்டு இருக்கின்றனர் .இது அவளும் அனுபவித்ததுதானேஉடனே ஊருக்கு கிளம்பி வா என போனில் அவளுக்கு அழைப்பு விடுத்த குடும்பம்தானே இவர்கள் .கசந்து வழிந்த நாக்கு இப்போது உமிழ்நீரை அதிகளவு சுரக்க கையால் வாயைப் பொத்திக் கொண்டு கிணற்றடிக்கு ஓடினாள்.

 

மனதின் கலக்கங்களும்குழப்பங்களும் இப்படி வெளியே வந்துவிட்டால் நன்றாக இருக்குமேஎன்று நினைத்தபடி கண்கள் கலங்க வாந்தி எடுத்தாள் .ஓங்கரிக்கும் வேகத்தில் தெறித்த நெற்றிப் பொட்டுகளை இதமாக இரு கைகள் பொத்திக்கொள்ள திரும்பிப் பார்த்து அருகே நின்ற மாதீரனில்  ஆச்சரியமானாள் .

 

” போதுமா வாய் கொப்பளிக்கிறாயா ? ”  அவளுக்கான பணிவிடைகளில்  மாதீரன் இறங்க இப்போது அவளுள்  பயம் உண்டானது .ஏன் வாந்தியெடுக்கிறாய் என்று கேட்பானோவயிற்றை புரட்டி மீண்டும் வாந்தி வந்தது .அவள் வாந்தி எடுத்து முடிக்கும் வரை பொறுமையாக தலையைத் தாங்கி இருந்தவன், பின்  வாய் கொப்பளிக்க வைத்து முகம் கழுவி துண்டினால் மென்மையாக முகத்தை துடைத்து விட்டு ஆதரவாய் தோள்  சேர்த்து  வீட்டிற்குள் அழைத்து போனான்.

 

” என்ன மாது ? ” பின் வாசல்படி ஏறுகையில் கேட்ட சர்வேஸ்வரிக்கு ”  வாந்தி எடுத்து விட்டாள்மா ” என்று பதில் சொன்னான் .

 

ஐயையோ இவர்களுக்கு என்ன பதில் சொல்வதுகவலையுடன் வீட்டிற்குள் நுழையும் போது நர்மதா திரும்பிப்பார்க்க சர்வேஸ்வரி கிணற்றடியில் அவள் எடுத்த வாந்தியை கழுவி தள்ளிக் கொண்டிருந்தாள்.

 




” பேசாமல் படுத்து தூங்கு ” பாயை விரித்து தலையணையை எடுத்து போட்டு அவளைப் படுக்க வைத்தான். இதோ இப்போது கேட்க போகிறான்பயந்தபடி கண்களை நர்மதா இறுக்க மூடிக்கொண்டாள் .எந்த கேள்வியும் இல்லாமல் அவள் கால்களை பற்றித் தூக்கி மற்றொரு தலையணையை கால்களுக்கடியில் வைத்துவிட்டு மெல்லிய போர்வையால் அவளை மூடிவிட்டு அறையிலிருந்து வெளியே போய்விட்டான். ஏனோ நர்மதாவின் கண்கள் கலங்கின.

 

” நான் சந்திரனை பார்க்கப் போகிறேன் ” இரண்டு மணி நேர தூக்கத்திற்கு பிறகு புத்துணர்ச்சியுடன் தன் முன் வந்து நின்ற மனைவியை யோசனையுடன் பார்த்தான் மாதீரன்.

 

” உங்களுக்கு பிடிக்கவில்லைதானே ? ”  கிண்டலாக கேட்டவளுக்கு தலையசைத்து மறுத்தான்.

 

” அப்படி இல்லை .கொஞ்சம் தயக்கம் அவ்வளவுதான். வா நானும் உன்னுடன் வருகிறேன் ” உடன் கிளம்பினான் .

 

” பாதுகாப்பாகண்காணிப்பா ? ”  குத்தலாக கேட்டாள்.

 

” பாதுகாப்பிற்காக மனைவியை கண்காணிப்பதில் தவறொன்றும் இல்லை என்றே நினைக்கிறேன் ” அழுத்தமாக சொன்னவன் ” எனது தயக்கத்திற்கு காரணம் வேறுஎன தொடர்ந்தான்

 

” தவறு ஒன்று செய்துவிட்டேன் அதனால் சந்திரனை பார்க்க தயக்கமாக இருக்கிறது ” 

 

”  என்ன தவறு ? ” 

 




” நீ இங்கே வந்தாயே அன்றுவேப்ப மரத்தடியில் வைத்து ஒருவனை ”  மாதீரன்திணறி நிறுத்த.

 

” மாட்டு  சாட்டை கம்பால் நன்றாக வெளுத்து வாங்கிக் கொண்டு இருந்தீர்கள் .என் மீது இருந்த கோபத்தை அவர்மீது காட்டிக் கொண்டிருந்தீர்கள்

 

” உன் மீது எனக்கு என்ன கோபம் ? ” 

 

” ஆஹா கோபமே இல்லாமல் தான் வீட்டை விட்டு வெளியே போ என்றீர்களோ ? ” 

 

இதற்கு நான் முன்பே பதில் சொல்லிவிட்டேன் .அத்தோடுஒருவேளை உனக்கு இங்கேயே இருக்க பிடிக்கவில்லையோ என்றும்  நினைத்தேன் ” 

 

” நல்ல சமாளிப்பு ” நர்மதா நடந்தபடி மெல்ல கைதட்டிக் கொண்டாள்.

 

” நான் சொல்லும் நிஜங்கள் இந்த சூழ்நிலையில் எடுபட போவதில்லை .அதைவிடு . அன்று கீழச்செக்காரக்குடியில் சந்திரன் வீட்டில் இருந்து வந்தவன்தான் அந்த ஆள். தென்னந்தோப்பு இருக்கிறதாஉரம் வைக்க வேண்டுமாஎன்பதுபோல் ஏதோ சொல்லிக் கொண்டு வந்தான். எனக்கு சந்திரன் மேல் இருந்த கோபத்திற்கு இங்கே நோட்டம் பார்க்க வந்தாயா என்று கேட்டு அடித்துவிட்டேன் .இப்போது யோசித்துப் பார்த்தால் சமாதானமாகப் போக ஒரு முன்னேற்பாடு போல் சந்திரன் அவனை அனுப்பி இருக்கலாமோ என்று தோன்றுகிறது .அதன்பிறகு சந்திரன் என்னை வெளியே எங்கே பார்த்தாலும் பேசுவதில்லை .நானாக எப்படி அவனை தொடர்பு கொள்வது என்று எனக்கும் தெரியவில்லை ” 

 




 

விளக்கம் கொடுத்து முடித்தவனை  கோபமாக பார்த்தாள் நர்மதா ” செய்வதெல்லாம்  வீட்டு ஆண்கள் நீங்கள் செய்துவிடுவீர்கள் .அதற்கு பலிகடா ஆவதென்னவோ வீட்டு பெண்களாகிய நாங்கள்தான் ” வெறுப்பை உமிழ்ந்தாள்.

 

” நான் செய்த தவறை  நானே சரி செய்து விடுகிறேன் ” என்றவனின் குறுக்கே கையை நீட்டி தடுத்தாள்.

 

” எங்கே வருகிறீர்கள்இங்கேயே நில்லுங்கள் .தான் நல்ல காரணத்திற்காக அனுப்பிய ஆளை சாட்டையால் அடித்து அனுப்பும் மனிதரை வரவேற்கும் அளவு இந்த வீட்டில் இருப்பவர்கள் பரோபகாரிகள் கிடையாது  .” முன்னால் இருந்த சந்திரனின் வீட்டை காட்டியபடி சொல்லிவிட்டு தான் மட்டும் உள்ளே நுழைந்தாள் நர்மதா.

 

முதலில் திகைத்த மாதீரன் பிறகு ஒரு மெல்லிய புன்னகையுடன் அங்கேயே சந்திரன் வீட்டு சுற்றுச் சுவரின் மேல் சாய்ந்தபடி நின்றுகொண்டு நர்மதாவிற்காக காத்திருக்க துவங்கினான்.

 

 

 

What’s your Reaction?
+1
3
+1
3
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!