Serial Stories தேர் கொண்டு வந்தவன்

தேர் கொண்டு வந்தவன் – 15

15

 

 

” எனக்கு சாப்பிட பிடிக்கவில்லை ” சொல்லிவிட்டு உள்ளறையில் போய் பாயில் சுருண்டு கொண்டாள் நர்மதா .அவளுக்கு அப்போது மாதீரன் மேல் நிறைய கோபம் இருந்தது .மெல்ல பேசி விவரங்கள் வாங்கியிருப்பேன் இடையில் வந்து கெடுத்து விட்டான் மனதிற்குள் திட்டியபடி இருந்தாள்.

 

நர்மதாவை பார்த்ததும் சந்திரனின் முகம் மலர்ந்தது”  நர்மதா எப்போது வந்தாய்எப்படி இருக்கிறாய் ? ” 

 

” நான் நன்றாக இருக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்உங்களோடு நிறையப் பேச வேண்டுமே ? ” 

 




” ஆஹா பேசலாமேஎங்கள் வீட்டிற்கு வாயேன் ” 

 

” உங்கள் வீட்டிற்கு…”  இப்போதைய நிலைமையில் அவள் கணவன் வீட்டினரின் எதிரிகள் வீடு சந்திரனுடையது அங்கே போகலாமாயோசித்தாள் அவள்.

 

மௌனமாக நின்றவளை பார்த்த சந்திரன் மெல்ல கேட்டான் ” உன் நாத்தனார் எப்படி இருக்கிறாள் .? ” 

 

” என் நாத்தனாரா ?அவள் உங்களுடைய மனைவி கிடையாதா ? ” 

 

” ம் அதுவும்தான் ”  சலிப்பாய் சொன்னவனை கோபமாய் பார்த்தாள் .” எதற்கு இவ்வளவு சலிப்பு ? ” 

 

” நீ எங்கள் வீட்டிற்கு வா நர்மதா .நாம் பேசவேண்டும் ” 

 

” ஏன் நீங்கள் எங்கள் வீட்டிற்கு வர மாட்டீர்களாஅங்கே  வாருங்களேன் பேசலாம் ” 

 

” இல்லை .அது சரிவராது ” 

 




” ஏன் சரிவராது ? ”  முகம் சிவக்க கோபம் மூச்சுடன் நின்றிருந்தவளை ஏறிட்டுப் பார்த்த சந்திரன் புன்னகைத்தான்.

 

” ஏனென்றால் உங்கள் வீட்டில்  வரது

இருக்க மாட்டான் ” சிரித்தபடி சொன்னான்.

 

” வரதாஅது யார்  ? ” 

 

” வரதனை மறந்துவிட்டாயாநியாயமா நர்மதா ? நம்மோடு படித்தானே வயலின் வரதராஜன் ”  சந்திரன் வயலின் போல் கையை வைத்து காட்ட நர்மதா பக்கென்று சிரித்துவிட்டாள். வயலின் படிக்கப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டு அந்த வயலினை கொடுமையாக வாசித்துக்கொண்டிருந்த வரதராஜனுக்கு அந்தப் பெயர் வைத்திருந்தனர்.

 

  வயலின் வரதராஜன் . அவன் எங்கே இங்கே ? ” 

 

எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறான் .உன்னை பார்க்க ரொம்பவே ஆசைப்படுவான் .வந்தாயானால் அவனையும் பார்க்கலாம் ” 

 

” யாரைப் பார்க்க எங்கே போக வேண்டும் ? ” இவ்வளவு நேரமாக தள்ளி நின்று இவர்களை கவனித்துக் கொண்டிருந்த மாதீரன் இப்போது இவர்கள் அருகில் வந்து கேட்டான்.

 




உற்சாகம் பொங்க பேசிக்கொண்டிருந்த சந்திரன் அமைதியாகி விட்டான் .மாதீரன் பக்கம் திரும்பாமல் ” பிறகு வீட்டிற்கு வா நர்மதா .வரதனும் உன்னை எதிர்பார்த்து இருப்பான்”  என்றுவிட்டு பைக்கை ஸ்டார்ட் பண்ணி கொண்டு போய்விட்டான்.

 

நர்மதா மாதீரனை முறைத்தாள்”  நான்தான் பேசிக்கொண்டிருந்தேனே  ஏன் இடையில் வந்தீர்கள் ? ” 

 

” அவன் தான் போய் விட்டானே .எல்லாம் பிறகு பேசிக் கொள்ளலாம் .வா…”  என்று வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான். நர்மதா கோபத்துடன் உள்ளறைக்குள் வந்து படுத்துக் கொண்டாள்.

 

” ஏதாவது சாப்பிட்டு விட்டு படுத்துக் கொள்ளலாமே ” அவள் அருகே வந்து நின்று படி கேட்டான் மாதீரன்.

 

” வேண்டாம் ” அவனுக்கு முதுகு காட்டி திரும்பி படுத்துக் கொண்டாள் .நகர்ந்து செல்லும் அவனது காலடி ஓசை கேட்டதும் ” பொண்ணுங்களுக்கு தனி ரூமு ஒதுக்குற இந்த வீட்ல அந்தப்பக்கம் ஆம்பளைங்களுக்கு என்ன வேலையாம்இப்போ எதுக்கு என்னை தேடி வரணும்நான் சாப்பிட்டா என்னசாப்பிடாட்டி  உனக்கென்ன . போடா போ …” கொஞ்சம் சத்தமாகவே தனக்குள் புலம்பியபடி மீண்டும் மறுபக்கம் திரும்பியவள் திகைத்தாள் .அவன் போகவில்லை .அங்கேயேதான் சற்று தள்ளி நின்றிருந்தான் இவளுடைய புலம்பல்களை தெளிவாக .கேட்டுக் கொண்டிருந்தான்.

 

இப்போது கொஞ்சம் முன்பு இவனை ‘ டா ‘ சொன்னேனா …? அதனை இவன் கேட்டானாநர்மதாவிற்குள்  குழப்பம் ஊர்ந்தது .என்னை திட்டுவான் யோசித்தபடி எழுந்து அமர்ந்தாள் அவள்.

 

இதையாவது சாப்பிடு ” அவளுக்கு மாங்காய்களை நீட்டினான்.

 




” இதை குடித்து பார்க்கிறாயாவாய்க்கு நல்லா இருக்கும் ” என்றபடி உள்ளே வந்த சர்வேஸ்வரி கையில் மாங்காய்களுடன் நின்ற மகனை கேள்வியாக பார்த்தாள் .

 

” வரும் வழியில் தோப்பில் பார்த்து ஆசைப்பட்டு கேட்டாள் அம்மா. அதுதான் பறித்து கொண்டு வந்தேன் ” கொஞ்சம் தயக்கத்துடன் பதில் சொன்னான் மாவீரன்.

 

” ம் கொடு ” என்றபடி தன் கையிலிருந்த கிண்ணத்திற்குள் ஸ்பூனை போட்டு கலக்க ஆரம்பித்தாள்.”  இதையும் குடித்து விடு ” 

 

மாமியாரை நீட்டிய கிண்ணத்தில் இருந்து எழுந்த நறுமணம் நர்மதாவின் நா ஊறவைக்க ஆவலாக கிண்ணத்தை வாங்கினாள்.

 

ஷ் .. ..சுடுகிறது என்ன அத்தை இது ? ” 

 

” ஆட்டுக்கால் சூப்பு .மிளகு சீரகம் தட்டிப்போட்டு செய்திருக்கிறேன் .வாய்க்கு ருசியாக இருக்கும். உடம்பிற்கும் நல்லது ” 

 

ஸ்பூனால் கொஞ்சம் சூப்பை எடுத்து வாயால் ஊதி சுவைத்தவளின் முகம் மலர்ந்தது ” ரொம்ப நல்லா இருக்கு அத்தை ” வேகமாக சூப்பை குடிக்க தொடங்கினாள்.

 

” அப்படியே இந்த கறித் துண்டுகளையும் சேர்த்து சாப்பிடு ” மாதீரன் சொல்ல

 

” சூப் குடிக்கும் போதே இதனையும் எப்படி சாப்பிட முடியும் ? ” என்றாள்

 




” இதோ இப்படி…”  என்றவன் அவள் அருகே தரையில் சம்மணமிட்டு அமர்ந்து ஓரத்தில் இருந்த சிறிய முக்காலி  ஒன்றை எடுத்து அவள் முன் வைத்து ” இதில் கிண்ணத்தை வைத்துக்கொள் .இதோ இப்படி இடது கையால் ஒரு ஸ்பூன் சூப்பை குடித்துக்கொள். வலது கையால் இந்த கறித்துண்டுகளை எடுத்து கடித்து சாப்பிடு . இப்படி இரண்டையும் மாற்றி மாற்றி சாப்பிட வேண்டும் ” 

 

நர்மதா கிளி பிள்ளையாக உணவு உண்ணத் தொடங்க சர்வேஸ்வரி இருவரையும் புன்னகையோடு பார்த்தபடி நின்றாள் .அப்போது அறைக்குள் நுழைந்த முத்தாச்சி மூவரையும் கோபமாக பார்த்தாள்.

 

” என்ன மாது பொண்ணுங்க அறைப் பக்கம் வரவே மாட்டாயேஇப்போதெல்லாம் அடிக்கடி இந்தப் பக்கம் தலை தெரிகிறது ? ” நக்கலாக கேட்டாள்.

 

சிறு தயக்கத்தின் பின் மாதீரன் எழுந்துகொண்டான் ” நர்மதாவிற்கு ஆட்டுக்கால் சூப்பு சாப்பிடும் முறை சொல்லிக்கொண்டிருந்தேன் சித்தி ” 

 

கிண்ணத்தை எட்டிப்பார்த்த முத்தாச்சி ” இதை எப்போது செய்தீர்கள் அக்கா ? “;என்று கேட்டாள்

 

” அதுவந்துஇப்போதுதான் .மாது அப்பாவிற்கு சளிப் பிடித்துக்கொண்டு தொண்டை எரிகிறது என்றார். அதற்காகத்தான் ” என்றுவிட்டு சர்வேஸ்வரி வேகமாக வெளியே போய்விட்டாள்.

 

தங்களது உபசாரங்களை மறைத்துக்கொண்டு போன தாய் மகனின் செயல் நர்மதாவிற்கு புரியவில்லை.

 




” என் மகளின் வாழ்க்கையை கெடுத்து விட்டாய் .இங்கே உனக்கு சூப்பும் கரியுமாக உபச்சாரம் நடக்கிறது ” பொருமினாள் முத்தாச்சி.

 

இவர்களது அதிருப்தியை பெறக்கூடாது என்று சர்வேஸ்வரியும் , மாதீரனும் ஒதுங்கிப்போனதாக உணர்ந்தாள் நர்மதா.

 

” இது என்ன அத்தை அநியாயமாக இருக்கிறது .உங்கள் மகளுக்கு வாழ்வதற்கு கல்யாணம் தானே நான் செய்து வைத்தேன் ?/வாழாமல் இங்கே கூட்டி வந்தது நானா ? ” 

 

” உன் சினேகிதனென  கண்டவனுக்கும் கண்ணாலம் பண்ணி வச்சியே அதனால தானே இப்போ என் மகள்  வாழாம வந்து நிற்கிறா ” 

 

” அந்த சினேகிதனை  உங்க மகளுக்கு பிடித்திருந்ததுங்கறத மறந்துட்டு நீங்க பேசுறீங்க அத்தை ” 

 

முத்தாச்சியின்   கண்கள் கலங்க துவங்கின. ”  நீ அவளிடம்  வேண்டாம் என்று சொல்லி இந்த திருமணத்தை நிறுத்தி இருக்கலாமே. வேறு இடத்தில் அவளை திருமணம் முடித்துக் கொடுத்து சந்தோஷமாக வைத்திருந்திருப்போமே ” ஆற்றாமையுடன் கேட்டாள்

 

” வேறு இடத்தில் திருமணம் பேசி சுமித்ரா மனம் வெறுத்து தன்னையே முடித்துக்கொள்ளும் அளவு ஏதாவது தவறான முடிவுக்கு போயிருந்தால் …”  சொல்லிவிட்டு நர்மதா நிறுத்த முத்தாச்சியின் கண்கள் பயத்தில் விரிந்தன.

 

” அன்று சுமித்ரா அந்த முடிவில்தான் இருந்தாள் அத்தை .நீங்கள் எல்லோரும் வேறு ஒரு மாப்பிள்ளையை அவளுக்கு பார்த்து அவன்தான் என நிச்சயமாக பேசிவிட்டு போய் படுத்து விட்டீர்கள்இரவு எல்லோரும் தூங்கியதும் எழுந்து கிணற்றடிக்குப் போய் தயாராக எடுத்து வைத்திருந்த அரளி விதைகளை அரைத்துக் கொண்டிருந்தாள் .நான் சந்தேகப்பட்டு அவளை கவனித்துக்கொண்டே இருந்ததனால் விஷத்தை பிடுங்கிப் போட்டு அவளை காப்பாற்றி விட்டேன் ” 

 




” என்ன …? ” முத்தாச்சி அதிர்ந்து அப்படியே தரையில் இடிந்துபோய் அமர்ந்துவிட்டாள்.

 

” வேறு வழியே இல்லாமல்தான் அவர்களுடைய திருட்டு கல்யாணத்திற்கு நான் சம்மதித்தேன் அத்தை .அங்கே சந்திரன் வீட்டிலும் கிட்டத்தட்ட இதே நிலைமைதான் .இருவரது வீட்டு திருமணத்தையும் நிறுத்த வழியின்றி இவர்கள் திருமணத்தை நடத்திவிட முடிவெடுத்து நடத்தி வைத்தேன்.

இதனால் ஊருக்குள் பிரச்சனையாகி இவர்களது திருமணம் பஞ்சாயத்து வரை போனாலும் கடைசியாக தாலி கட்டி விட்டதால் வேறு வழியில்லை என்று பேசி முடிவாகி சுமித்ரா சந்திரன் வீட்டிற்கே வாழ அனுப்பி வைக்கப்பட்டாள் . இனி எல்லாம் சரியாகிவிடும் என்றுதான் நான் நினைத்திருந்தேன் .இப்படி அவள் உடனே திரும்பி வருவாள் என்று நினைக்கவில்லை ” 

 

” என் மகள் தற்கொலைக்கு முயன்றாளா ? ” முனுமுணுத்தபடி அப்படியே அமர்ந்திருந்தாள் முத்தாச்சி.

 

” அதெல்லாம் நடந்து முடிந்த கதை .அதை இப்போது மனதிற்குள் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள் .சுமித்ரா இங்கே வந்த பிறகு நீங்கள் எல்லோரும் ஏன் அவளை இப்படியே விட்டு விட்டீர்கள்சந்திரன் வீட்டினருடன் பேசி அங்கே அனுப்பி வைக்கலாமே ” 

 

” பேச வேண்டுமேஅனுப்ப வேண்டுமே ….அதற்கு இந்த வீட்டில் யாரும் தயாராக இல்லையே ” ஆதங்கத்துடன் அழுதாள முத்தாச்சி.

 

” என்ன சொல்கிறீர்கள் அத்தை ? ” 

 




” இந்த வீட்டு ஆண்பிள்ளைகளுக்கு உச்சந் தலையில் கொம்பு ஒன்று முளைத்திருக்கும் .அது நம் கண்களுக்கு தெரியாது .ஆனால் அந்த கொம்பை வைத்து அடிக்கடி தங்கள் ஆம்பளைதனத்தை காட்டுவார்கள் .அப்படித்தான் என் மகள் வாழ்க்கையிலும் வீம்பு பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள் .கோபித்துக்கொண்டு வந்தவளை அவர்களாகவே வந்து மன்னிப்பு கேட்டு அழைத்து போக வேண்டுமாம். இவர்களாக அனுப்பி வைக்க மாட்டார்களாம் .உன் இரண்டு மாமனாரும் இப்படித்தான் பேசி முடிவெடுத்து வைத்துள்ளார்கள் ” 

 

நர்மதா எழுந்து நின்றாள் ”  வாருங்கள் அத்தை இதை என்னவென்று கேட்டு விடுவோம்”  முன் அறைக்கு நடந்தாள்.

 

” திடீரென்று இங்கிலீஷில் பேசுகிறாள் .பட்டென்று நிறுத்தி இந்தியில் கடகடவென்று பேசுகிறாள். இடையில் நிறுத்தி அதற்கு தமிழில் விளக்கங்கள் கொடுக்கிறாள் .அடடா என்ன அறிவு என் மருமகளுக்கு ….” சடையாண்டி அவளுடைய பாடம் சொல்லிக் கொடுத்தலை வீட்டில் உள்ளோருக்கு விவரித்துக் கொண்டிருக்க முனியாண்டி அதை ஒத்துக் கொண்டு பெருமையாக தலையை அசைத்துக் கொண்டிருந்தார்.

 

நர்மதா நேராக அவர்கள் முன் போய் நின்றாள் ” சுமித்ராவை என்ன செய்யப் போகிறீர்கள் மாமா ? ” இருவரும் திகைத்து நின்றனர்.

 

” நர்மதா ” மாதீரன் அதட்ட அவன் பக்கம் திரும்பவில்லை இவள்.

 

” அவள் அடுத்த வீட்டுப் பெண் மாமா .எத்தனை நாட்கள்தான் அவளை நம் வீட்டிலேயே வைத்துக் கொண்டிருப்பது ? ”  தனது கேள்வியை தொடர்ந்தாள்.

 




” அனுப்பி வைத்தது அவர்கள்தானே ….திரும்பவும் வந்து கூப்பிட்டுக்கொண்டு போகட்டுமேயார் வேண்டாம் என்றது ? ” முனியாண்டி தன் மீசையை முறுக்கினார் .

 

” ஏன் நாமாகப் போனால் என்ன தப்பு ? ” 

 

” நமக்கென்று மானம் ரோசம் இருக்கிறது அல்லவாமதியார் வாசலை எப்படி மிதிப்பது ? ” முனியாண்டி கர்ஜித்தார்.

 

” இங்கே கூட வெளியே போ என்று நீங்கள்தான் அனுப்பி வைத்தீர்கள் .இதோ கொஞ்சம் கூட மான ரோசம் இல்லாமல் நீங்கள் கூப்பிட்ட உடனே ஓடி வந்து இங்கே கிடக்கிறேன் .உங்களுக்கு மருமகளுக்கு ஒரு நியாயம் மகளுக்கு ஒரு நியாயமா ? ” 

 

நர்மதா கேட்ட நியாயத்தில் எல்லோரும் வாயடைத்துப் போயினர்.

 

” நன்றாக யோசித்து முடிவை சொல்லுங்கள் ” நர்மதா மீண்டும் உள்ளறைக்கு போய் சோர்வுடன் பாயில் படுத்துக் கொண்டாள் . சூப் ஆறு ஆடைகட்டி போய் கிடந்தது.

 

 ” அது எப்படி என் அப்பாபெரியப்பாஅண்ணாவை நீங்கள் அங்கே போய் நிற்கச் சொல்லலாம் ? ” கத்தியபடி அறைக்குள் வந்தாள் சுமித்ரா.

 

இப்போது அவளோடு வாதாட முடியாதென்று நர்மதாவின் உடல்நிலை தெரிவிக்க ” ஏய் வெளியே போடி ” என்று கத்தினாள்.

 

” என்ன ? ” அவள் அதிர்ந்து நிற்க”  உன்னை வெளியே போகச் சொன்னேன் .நான் தூங்க வேண்டும் ” நர்மதா மீண்டும் அழுத்தி கத்த சுமித்ரா வேகமாக வெளியே போய்விட்டாள்.

 




அடுத்த 5 நிமிடங்களிலேயே காலடி ஓசை கேட்க மூடியிருந்த கண்களை திறக்காமலேயே நர்மதா பேசினாள்”  யாரும் என்னிடம் கேள்வி கேட்ட வர வேண்டாம் .நான் செய்தது சரிதான் .எனக்கு சப்போர்ட் செய்யாவிட்டாலும் எதிர்க்காமலாவது இருங்கள் ” தலை சுற்றி வந்த மயக்கத்தில் திறக்க வராத கண்களுடன் தளர்வாய் பேசினாள்.

 

” இல்லை எதுவும் பேசவில்லை .நீ தூங்கு ” என்றபடி அவள் தலையை மென்மையாக வருடிக் கொடுத்தது மாதீரன் என ஆச்சரியமாக உணர்ந்தாள் .அப்பாவை எதிர்த்துப் பேசியதற்காக அவளை மீண்டும் அம்மா வீட்டிற்கு போ என்று அனுப்பி விடுவான் என்று நினைத்துக் கொண்டிருந்தாள் ஆனால் இது எப்படி….

 




 

மேலே யோசிக்க முடியாமல் அவள் விழிகள் சோர்வில் சொருகிக் கொள்ளமாதீரன் ஆழ்ந்த உறக்கத்திற்கு போகும்வரை அவள் தலையை வருடியபடியே அருகே அமர்ந்திருந்தான்.

 

 

What’s your Reaction?
+1
3
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!