Serial Stories அதோ அந்த நதியோரம்

அதோ அந்த நதியோரம் – 25 ( FINAL )

25

 

” வாயை மூடுங்க சித்தி ” கத்தியபடி வந்தாள் ஜீவிதா .

” ஜீவா அமைதியாக இரு …” சிவபாலனின் பற்றிய கையை உதறினாள் .

” இன்னமும் எத்தனை நாட்கள் பாலா …?இதோ இப்போது ஆர்டர் கூட வந்துவிட்டதே …இனியும் என்ன …? இங்கே பாருங்கள் நம் வீட்டினரின் வேதனையை …தேவையில்லாத இந்த வேதனை எதற்கு …? “

சிவபாலன் தலையசைத்து ஒதுங்கிக் கொண்டான் .




” சித்தி …நம் சுகன்யா அந்த தீ விபத்தில் சாகவில்லை அவளும் குழந்தையும் உயிரோடுதான் இருக்கிறார்கள் .அவளும் , கிஷோரும் திருமணம் செய்து கொண்டு தங்கள் குழந்தையோடு மிக சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள் .இங்கே இல்லை .அமெரிக்கவில் இருக்கிறார்கள் .இன்னும் கொஞ்சம் இருட்டட்டும். அவர்களோடு வீடியோவில் பேசலாம் ….”

சேதுபதி பறந்து அவளிடம் வந்துவிட்டார் .” பாப்பு நீ …சொல்வதெல்லாம் உண்மையா …? “

சசிகலா பேசும் நிலைமையில் கூட இல்லை .விழி விரித்து, திறந்த வாயோடு  ஜீவிதாவையும் , சிவபாலனையும் மாற்றி மாற்றி பார்த்தபடி இருந்தாள் .

சபாபதியும் , சௌதாமினியும் , நீலவேணியும்கூட விக்கித்து போய்தான் நின்றிருந்தனர் .அவர்கள் அனைவரின் சந்தேகத்தையும் அன்று இரவு ஜீவிதாவும் , சிவபாலனும் போக்கினர் .

இரவு வீடியோ சாட்டிங்கில் வந்த சுகன்யாவும் , கிஷோரும் அவர்கள் சந்தேகத்தை முழுதாக தீர்த்தனர் .

” அம்மா , அப்பா நான் அவரோடும் , குழந்தையோடும் இங்கே மிகவும் சந்தோசமாக இருக்கிறேன் ….” மத்தாப்பூக்கள் முகத்தில் ஒளிர பேசிய சுகன்யாவை கேமராவிலேயே அணைத்து கொண்டாள் சசிகலா .

” நான் , ஜீவிதா , கிஷோர் மூவருமாக சேர்ந்து போட்ட திட்டம் அத்தை இது . கிஷோரும் , சுகன்யாவும் மனதளவில் ஒன்றி விட்டனர் .கணவன் , மனைவியாக மாற துடித்துக் கொண்டிருந்தனர் .அதற்கு ஒரே ஒரு தடைதான் இருந்த்து .சுகன்யாவின் மேல் ஒட்டிக் கொண்டிருந்த எனது மனைவி என்கிற வேசம் .அது ஊராருக்காக போட்டது என்றாலும் எளிதில் உதற முடியாதே ….என்ன செய்வதென நாங்கள் குழம்பிக் கொண்டிருந்த போதுதான் …நானே இல்லாமல் போய் விடுகிறேனே ….என்றாள் சுகன்யா .




அப்போது எங்களுக்கும் வேறு வழி தெரியவில்லை .கிஷோர் இதனை தனது போராட்டத்திற்கும் உபயோகப்படுத்திக் கொண்டார் .அன்று அந்த பந்தல் முழுவதும் எரிந்து பக்கத்து பந்தலுக்குள் தீ பரவிய போதுதான் நாங்கள் விழித்தது போல் எழுந்து பந்தலோடு கிஷோரும் , அவன் நண்பர்களும் , சுகன்யாவும் , குழந்தையும் இறந்து விட்டதாக பரப்பினோம் .அதையே இந்த போராட்ட வெற்றிக்கும் பயன்படுத்திக் கொண்டோம் .இதில் நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய வெற்றி கிடைத்து விட்டது .”

சசிகலா சிவபாலன் கைகளை பற்றி கண்ணில் ஒற்றிக் கொண்டாள் .” எனக்கு மகனில்லாத குறையை போக்க வந்தவன் சிவா நீ .என் மூத்த பையன் நீதான் ….”

” ஆமான்டா சிவா .நான் செத்த பிறகு நீதான்டா எனக்கு கொள்ளி வைக்கனும் …” சேதுபதி நெகிழ்ந்தார..

” ஏய் ஏன்டா அபசகுனமாக பேசுகிறாய் …? இப்போதுதான் ஒயின் பேக்டரி ஆரம்பித்திருக்கிறோம் .இன்னும் இரண்டு புதிய தொழில்கள் சிவா சொல்லியிருக்கிறான் ….அதையும் ஒரு கை பார்க்க வேண்டும் ்இப்போது போய் சாவை பேசிக் கொண்டிருக்கிறாயே ….? சபாபதி தம்பியை அதட்டினார் .

” ஆமாமில்ல ….டேய் சிவா நாளைக்கே அந்த ஏற்பாடெல்லாம் பண்ணுடா ….”

அண்ணனும் , தம்பியும் திரும்ப சேர்ந்து பிஸினெஸ் ஆரம்பிக்க தொடங்கிட்டாங்களே ….இனி பாசமலர்களாகி பாசம் பொங்க ஒருத்தர் தோளில் ஒருத்தர் கை போட்டு சுத்துவாங்களே ….ஐய்யய்யோ பார்க்க கண்றாவியால்ல இருக்கும் …என்ன செய்றது …?

” ஒன்றுமே செய்ய முடியாது அத்தை .எங்கள் குடும்பம் ஆலமரம் போல் ஊன்ற தொடங்கிவிட்டது . அதை யாராலும் தடுக்க முடியாது ….” சௌதாமினியின் மைன்ட் வாய்ஸுக்கு சிவபாலன் பதில் சொன்னான் .

இவன் குடும்பமாம் …  அடேய் ….அப்போ நான் யார் குடும்பம்டா …மனசுக்குள் அலறியபடி அவனை முறைத்தாள் சௌதாமினி .

” வாயை குறைத்து அடக்கமாக இருந்தால் , எல்லோரும் ஒரே குடும்பம்தான் ….” யாருக்கும் கேட்காமல் முணுமுணுத்தான் .




அடப்பாவி இவனை முன்பு பேசியதற்கெல்லாம் சேர்த்து வைத்து இப்போது என்னை செய்கிறானே ….இவனது அராஜகத்தையெல்லாம் யாரிடம் சொல்லலாம் …அவரிடம் ….ம்ஹூம் அவருக்கு தங்கையும் , தங்கை மகனும் உசத்தி .ஜீவிதாவிடம் …இப்போதெல்லாம் இவளும் அப்பாவை போலவே மாறி வருகிறாள் .அதோடு சிவ …சிவான்னு வேறு கிறங்கி போய் திரிகிறாள் .  இனி இவன் புருசனாகி விட்டான்னா ….கேட்கவே வேண்டாம் .சை போங்கடா இந்த வீட்டில் என் மனக்கிடக்கை சொல்ல ஆளே இல்லாமல் போய்விட்டது .

” ஆமாம் அத்தை .இனி உங்க பக்கம் பேச ஆளே இல்லை .ஒண்ணு பண்ணுங்க .பேசாமல் திருந்திடுங்களேன் ….” போகிற போக்கில் சொல்லி விட்டு சௌதாமினியின் பல் நறநறப்பை காதில் வாங்காமல்  போய் சோபாவில்கால் மேல் கால் போட்டு  அமர்ந்து கொண்டான் .

” உங்கள் கல்யாணத்தை பற்றி என்ன யோசனை வைத்திருக்கிறீர்கள் சிவா …? ” சேதுபதி கேட்க …சிவபாலனின் பார்வை ஜீவிதாவின் மேல் படிந்த்து .

” ஒரு வருடம் போகட்டும் மாமா .”

” ஏன் சிவா …இன்னமும் அத்தனை நாட்கள் தள்ளி போடனுமா …? ” நீலவேணி கவலையாய் கேட்டாள் .

” ஆமாம் அம்மா .அப்போதுதான் ஊருக்குள் வித்தியாசமாக தோன்றாது .அத்தோடு எங்கள் இருவருக்கும் இந்த ஒரு வருடத்திற்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது ….” சிவபாலன் நகர்த்தாத பார்வையுடன் ஜிவிதாவை பார்த்தபடி சொல்ல …அவள் ஆமோதிப்பாய் விழி மூடி திறந்தாள் .

” அது என்ன ஒரு வருட வேலை …? ” சௌதாமினி அவசரமாக இடையில் புக …

” கோவில் கட்ட போகிறோம் வருகறீர்களா …? ” கேட்டபடி எழுந்து சிவபாலன் சௌதாமினி அருகில் அமர்ந்திருந்த ஜீவிதாவிற்கு கை நீட்டினான் .

” ஆமாம்மா …குட்டியா ஒரு கோவில் ….” சிவபாலனின் நீட்டிய கையை பற்றி எழுந்தவள் , தாயின் புறம் திரும்பி கண்ணை சிமிட்டி சொன்னாள் . ” சிவன் கோவில் …”




சௌதாமினி ” ஆ” வென பார்க்க ” நாம் ப்ளான் போடலாம்வாங்க  பாலா …” என உரிமையோடு சிவபாலனோடு உரசியபடி உள்ளறைக்கு போனாள் ஜீவிதா .

” ஒரு வருடத்திற்கு இவர்கள் இரண்டு பேரையும் காவல் காக்கிறதே எனக்கு பெரிய வேலையா இருக்கும் போலவே …அப்பனே முருகா …உதவி செய்யப்பா ” ஞாபகமாய் கடவுளை மாற்றி வேண்டினாள் சௌதாமினி .

——————–

                                             ஒரு வருடம் கழித்து ….

சிவபாலனுக்கும் , ஜீவிதாவிறகும் அவர்களே கட்டிய அந்த நதியின் நடுவே அமைந்திருந்த சிவன் கோவிலில் திருமணம் இனிதாக நடந்து முடிந்த்து .

திருமணத்திற்கு கைலாஷும் அவன் மனைவி ஜெயந்தியும் வந்து கலந்து கொண்டனர் .

” எப்போது லவ் பண்ண ஆரம்பித்தோம்னே தெரியலை ஜீவிதாவை பற்றி விசாரிக்கத்தான் நான் ஜெயந்திக்கு அடிக்கடி போன் செய்தேன் .கொஞ்ச நாட்கள் கழித்துதான் அதை உணர்ந்தோம. .ஜீவிதாவை விட்டு விட்டு எங்களை மட்டுமே போனில் பேசிக் கொண்டிருக்கறோமென . இந்தக் காதல் இருவருக்குமே மனநிறைவை கொடுக்க ,எங்கள் காதலை சொல்ல உன்னை பார்க்க வருவதாக ஜெயந்தியிடம் சொன னேன் .

அவள் அப்போதுதான் உன்னுடைய காதல் தோல்வி , உனது தவ வாழ்க்கை எல்லாவற்றையும் என்னிடம் சொன்னாள் .அன்றே நாங்கள் இருவரும் சபதம் எடுத்துக் கொண்டோம் …எங்கள் நெருங்கிய தோழியின் வாழ்வை சீரமைத்து விட்டுத்தான் நாங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென .இதோ …இப்போது எங்கள் சபதம் நிறைவேறிவிட்டது .’ கைலாஷ் சொல்ல ஜிவிதா நெகிழ்வாய் இருவரையும் பார்த்தாள் .

” நண்பர்கள் அமைந்தால் உங்கள் இருவரையும் போல அமைய வேண்டும் .ஐ ஆம் வெரி லக்கி …” கலங்கிய இமைகளை நாசூக்காய் துடைத்துக் கொண்டாள.

ஆதரவாய் அவள் தோளணைத்த சிவபாலன் ” என்ன ஜீவா …உன் ப்ரெண்ட் பொய் பொய்யாக சொல்லிக் கொண்டிருக்கிறார் .நீயும் அதற்கு தலையசைத்துக் கொண்டிருக்கிறாயே …? ” என்றான் .

” என்ன …? பொய்யா ..? “

” ஆமாம் .நம்மை சேர்த்து வைத்துவிட்டுத்தான் இவர்கள திருமணமென்று பேசி விட டு ,நமக்கு முன்னரேயே இவர்கள் திருமணத்தை முடித்து விட்டனரே …அதை சொன்னேன் …”




” ஹலோ சார் , என்றைக்கு நீங்கள் தாடியை ஷேவ் பண்ணி தேவதாஸ் வேசத்தை கலைத்துவிட்டு பளபளன்னு வந்து நின்னீங்களோ …அன்னைக்கே எங்கள் சபதம் நிறைவேறிடுச்சு .அப்புறம் நீங்க ரெண்டு பேரும் அகப்பட்ட நேரத்திலெல்லாம் பண்ணின ரொமான்ஸ் இருக்கே .ஐய்யோ தாங்கலை சாமி .இத்தனைக்கு மேல் கோவில் கட்டனும்னு பொறுமையாய் ஒரு வருடம் கல்யாணத்தை தள்ளி போடுறீங்க …அந்த அளவு பொறுமை எங்களுக்கில்லப்பா .அதுதான் நாங்க கல்யாணத்தை முடிச்சுட்டோம் ….” கைலாஷ் விளக்கமாக சொல்ல சிவபாலன் வாய் விட்டு சிரிக்க , ஜீவிதா அவனது கன்னக் குழியை காதலாய் விழி  வருட ஆரம்பிக்க ….

” அட …டா …ஆரம்பிச்சுட்டாங்கய்யா .ஜெய் …வா நாம் ஓடிடலாம் …” கைலாஷ் ஜெயந்தியின் கையை பிடித்துக் கொண்டு நிஜமாகவே ஓடினான் .

திருமணத்திற்கு வந்திருந்த அனைவரையும் அனுப்பி விட்டு தங்கள் கோவிலை நிறைவாய் சுற்றி வந்தனர் சிவபாலனும் , ஜிவிதாவும் .வெண் பளிங்கில் இளைக்கப்பட்டிருந்த அச்சிறு கோவிலின்  நான்கு புறமும் வெளிப்புறமாக படிகள் அமைக்கப்பட்டிருந்த்து .கீழ்படிகள் நதி நீரை  தொட்டபடி இருந்தன .இருவரும் அந்த படியில் அமர்ந்து நீரினுள் கால்களை வைத்துக் கொண்டனர் .

ஜீவிதா , சிவபாலன் தோள்களில் சாய்ந்து கொண்டாள் .அவள் தோள்களை அணைத்து தன்னோடு சேர்த்துக் கொண்டான் அவன் . இருவரும் ஒருவரையொருவர் பார்க்கவில்லை , பேசவில்லை .அவர்பள்  பார்வை  அந்த நதியின் மீது இருந்த்து . இருவருமாக தங்கள் குழந்தை பருவத்திற்கு பயணமாக ஆரம்பித்தனர் .




குழந்தை பருவத்தில் ஆரம்பித்த அவர்களின் நட்பு …அன்பாகி …காதலாகி …இப்போது திருமணமெனும் நிறைவில் வந்து நிற்கிறது .அதனை ஆழ்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தனர் இருவரும் .

அந்த நட்பை உணர்ந்து கொண்டது போல் சலசலவென சலங்கையாய் சிணுங்கியபடி ஓடிக் கொண்டிருந்த்து அந்த நதி நீர் .

                                                                 – நிறைவு –

What’s your Reaction?
+1
12
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
M kalpana
M kalpana
3 years ago

Mam episode 22 is missing

5
1
1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!