Serial Stories Thereri vantha nila தேரேறி வந்த நிலா

தேரேறி வந்த நிலா – 19

19

” வைசாலி எழுந்திரும்மா ..இந்தா காபி …” தனலட்சுமி அவளை எழுப்பினாள் .

கண் விழிக்கவும் வெயில் முகத்தில் சுளீரென்று அடித்தது .” ராதாவும் , ரவீந்தரும் ஸ்கூலுக்கு போயிட்டாங்களாம்மா …? ” முகம் கழுவிவிட்டு காபியை வாங்கினாள் .

” ஆமாம். நீ சாப்பிட வருகிறாயா …? நான் துணி ஊற வைத்திருக்கிறேன் .துவைக்கனும் “




” குளிச்சிட்டு வர்றேம்மா ….” குளிக்கும் போது ஊற வைத்த துணிகளை துவைத்து கொண்டே  , தட்டிலிருந்த சாப்பாட்டை  கிளறிக்கொண்டே  யோசித்தாள் .பிறகு படுத்துக்கொண்டே ,.உட்கார்ந்து கொண்டே . நடந்து கொண்டே யோசித்துக்கொண்டே பேச வேண்டிய வார்த்தைகளை மனதிற்குள் வரிசைப்படுத்த முயன்றாள் .

எவ்வளவோ வரிசைப்படுத்தனாலும் முதலில் வரிசையில வைத்த வார்த்தை மறந்து போனது .யோசிப்பதற்குள் அடுத்த வார்த்தை நினைவுகளிலிருந்து நழுவியது .எப்படி எல்லாவற்றையும் சேர்த்து யோசித்து அவனிடம் பேச போகிறேன் .தம்பியும் , தங்கையும் பள்ளியிலிருந்து வரும் வரை வைசாலி மனதில் ஒன்றும் தங்கவில்லை .சரி நாளை ஒருநாள் இருக்கிறதே …யோசிப்போம் என நினைத்தபடி ராதாவிற்கும் ,ரவீந்தருக்கும் டிபன் எடுத்து வைத்தாள் .

ஏதோ பாட சம்பந்தமான அவர்களின் கேள்விக்கு பதிலை சொல்லியபடி , ஒலித்த காலிங்பெல்லிற்காக கதவை திறந்தவள் , அங்கே நின்ற மனோகரனை கண்டு திகைத்தாள் .இ..இவனை நாளை மறுநாள்தானே ..சந்திக்கவேண்டும் .அதற்குள் வந்து நிற்கிறானே …ஐய்யய்யோ …இவனிடம் என்ன பேச ..? நான் எதுவும் யோசித்து வைக்கவில்லையே ..பதட்டத்துடன் அவனை பார்க்க …அவன் ..

” இன்னமும் ஒரு முழு நாள் …உன்னைப் பார்க்காமல் …முடியலைடா சாலி …” என அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் முணுமுணுத்தவன் , இயல்பாக அவள் தோள்களை தொட்டு  நகர்த்திவிட்டு உள்ளே வந்தான் .

” ஹாய் ….” என அவள் தம்பி , தங்கைகளுக்கு கை கொடுத்தவன் இயல்பாக அமர்ந்து அவர்களுடன் பேச தொடங்கினான் .தனலட்சுமி வெளியே வந்து பார்த்துவிட்டு , விழித்துக்கொண்டு நிற்கும் மகளிடம் கண்ணால் கேள்வி கேட்டாள் .சமாளித்துக்கொண்ட வைசாலி ” காபி கொண்டு வாங்கம்மா …” என கூறிவிட்டு சோபாவில் அமர்ந்தாள் .

கார் கேர் செனடர் வேலைக்கு போக போவதாக தனலட்சுமியிடம் கூறிவிட்டாள் .அந்த வேலை சம்பந்தமாக வைசாலியே இன்னமும் ஒரு முடிவிற்கு வரவில்லை .மனோகரனிடம் பேசிவிட்டுத்தான் அம்மாவிடம் பேச வேண்டும் ..நினைத்தபடி நிமிர்ந்த வைசாலி முகம் சிவந்தாள் .எதிரில் அமர்ந்தபடி அப்படி அவளை பார்வையிட்டுக் கொண்டிருந்தான் மனோகரன் .

ஏதோ ஒரு பழைய சுடிதாரை போட்டுக்கொண்டு , தலையை பின்னிக்கொள்ள கூட செய்யாமல் விரித்து போட்டபடி துளி மேக்கப் இல்லாத அவளது எளிய தோற்றத்தை அப்படி ஒரு காதலோடு பார்த்துக் கொண்டிருந்தான் .கொஞ்சம் கூச்சத்தோடு அவனது பார்வையை சந்திக்காமல் இவனிடம் எப்படி பேச ..? நகம் கடித்தாள் .




தனலட்சுமி கொடுத்த காபியை அவனுக்கு கொடுத்த போது , ” சோ..ப்யூட்டிபுல் ….” எனக் கூறி உதடு குவித்தான் .

” மைன்ட் யுவர் வேர்ட்ஸ் …” பதிலுக்கு சீறினாள் அவள் .சிந்தனை படர்ந்த்து அவன் முகத்தில் .

தனலட்சுமியிடம் திரும்பி ” ஆன்ட்டி கார் கேர் சென்டரில் ஒரு சின்ன வேலை இருக்கிறது .நான் வைசாலியை கூட்டிக்கொண்டு போய்விட்டு ஒரு மணி நேரத்தில் திரும்ப கொண்டு வந்து விட்டு விடுகறேன் ” என்றான் .

நீ கேட்டால் உடனே நான் வந்துவிடனுமா …? என முதலில் நினைத்தவள் ..இல்லை இப்போது போய் பேசிவிட வேண்டியதுதான் என நினைத்துக்கொண்டு , ” ஆமாம் அம்மா போய்விட்டு வரட்டுமா …? ” என தாயிடம் அனுமதி வாங்கிக் கொண்டு ” டிரஸ் மாற்றிவிட்டு வருகிறேன் ” அர்த்தத்தோடு அவனை பார்த்து விட்டு உள்ளே போனாள் .

காரில் ஏறி அமர்ந்த்தும் ” எங்கே போவோம் …? ” என்றான் மனோகரன் .

” பேச வேண்டும் . …” என்றாள் .

” சிட்டி தாண்டி போய்விடலாம் .காரில் உட்கார்ந்தே பேசலாம் .அதுதான் டிஸ்டர்ப் இல்லாமல் இருக்கும் .” சாலையை பார்த்தபடி கூறினான் .

கொஞ்சம் டிராபிக் குறைந்த்தும் ” நேற்றே அம்மா, அப்பாவிடம் பேசிவிட்டேன் வைசாலி .உன்னை பற்றி சொல்லிவிட்டேன் .அவர்களுக்கு ரொம்ப சந்தோசம் .எப்போது கல்யாணம் பேச வரட்டும் என கேட்கிறார்கள் .என்னடா செய்ய …? உடனே கல்யாணம் பண்ணிக்கொள்வோமா …இல்லை இன்னும் கொஞ்சநாள் காதலித்து விட்டு பிறகு பண்ணிக்கொள்ளலாமா …? ” மனோகரன் குரலில் சந்தோசம்  இருந்த்து .

இது பெரிய விசயமாக வைசாலிக்கு படவில்லை .அவர்கள் திருமணத்திற்கு மனோகரன் எப்படியும் தாய் , தந்தையிடம் சம்மதம் வாங்கி விடுவானென அவளுக்கு தெரியும் .அவன் ஆளுமை அவளுக்கு தெரியும் .யாரையும் …எதற்கும் தலையாட்ட வைக்கும் ஆளுமை .அதற்குத்தானே அவள் இவ்வளவு அஞ்சுகிறாள் .எனவே….




” இதில் சந்தோசப்பட எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை …” குரலில் அலட்சியத்தை சேர்த்துக்கொண்டு சொன்னாள் .

” எதில் ….? ” அவன் கேள்வியில் கவனம் இருந்த்து .

” இந்த காதல் …கல்யாணம் …இவற்றில்தான் ….இது சரி வருமென்று எனக்கு தோன்றவில்லை …”

” எது சரி வராது …? “

” சும்மா எதிராளி வாயிலிருந்து வார்த்தைகளை பிடுங்குவதை நிறுத்துங்கள் . இந்த காதல் , கல்யாணம் …எல்லாம் சரி வரும்னு எனக்கு தோணலை .நான் ..நிறைய யோசிக்கனும் ….,”

ஒரு ஐந்து நிமிடம் பேசாமல் காரை ஓட்டியவன் ” என்னாச்சு வைசாலி …? ” என்றான் .

பதில் சொல்லாது வெளியே வேடிக்கை பார்த்தாள் வைசாலி . ” சாலி …என்னடா ..என்ன விசயம் …? ” இடது கையால் அவள் தோள்களை தொட வந்தான் .

” தொடாதீர்கள் …” அவன் கைகளிலிருந்து விலகிக்கொண்டு கத்தினாள் .கைகளை எடுத்துக்கொண்டு காயம் பட்ட பார்வையுடன் அவளை பார்த்தான் .

” சொல்லு …என்ன சொல்லனுமோ …சொல்லு ….” தொண்டையை லேசாக செருமிக்கொண்டான் .

” உங்கள் குடும்ப நிலைமை வேறு .என் குடும்ப நிலைமை வேறு . நம் இருவருக்குள்ளும் ஒரு காதலோ …கல்யாணமோ ..சாத்தியமாகப்படவில்லை எனக்கு …”

” புரியவில்லை …”

” நீங்கள் வசதி படைத்த பணக்கார குடும்பம். நாங்கள் சாதாரண நடுத்தரவர்க்கம் .உங்கள் வாழ்க்கையில் நிறைய பணக்கார பெண்கள் , நடிகைகள் என வந்து கொண்டே இருப்பார்கள் .அதெல்லாம் உங்களுக்கு ஒரு கௌரவமாக கூட இருக்கலாம் .ஆனால் அப்படி இதையெல்லாம் என்னால்  சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது ….”

” ஓஹோ …” என்றான் கதை கேட்பது போல் ….

அவனது அந்த பாவனை ஆத்திரமூட்ட , ”  நம் இருவருக்குமிடையே ஒரு உறவென்பது எனக்கு சாத்தியமற்றதாய் தோன்றுகிறது .அதனால் நாம் ….” என்றவளை ..

” போதும் நிறுத்து …” என அதட்டினான் .

சிறிதுநேரம் காருக்குள் எந்த சத்தமுமில்லை .கார் இப்போது அவுட்டருக்கு வந்திருந்த்து .மழையால் குழிகளாய் மாறிப்போயிருந்த  சாலையில் , அந்த குழிகளை கவனிக்காமல் அதில் வண்டியை விட்டுக்கொண்டிருந்தான் மனோகரன் .

அதனால் கார் குலுங்கிக்கொண்டிருந்த்து .” பார்த்து மெல்ல போங்க .இப்படி குழியில் விட்டால் கார் பாழாகிடும் …கவனமாக ஓட்டுங்கள் …”

” கார் மேல் இருக்கிற அக்கறை கூட என் மேல் கிடையாது …ம் …”




மௌனமாய் வெளியே வெறித்தாள் .பிறகு ” இந்த குழியெல்லாம் சரி பண்ணலாமில்லையா …இப்படியே விட்டு வைத்திருக்கின்றனரே ….” என்றாள் .

அவளை விநோதமாக பார்த்தான் .எந்த நேரத்தில் என்ன பேசுகிறாய் என்பது போல் .பிறகு தொண்டையை கனைத்துக்கொண்டான் .என்ன சொல்ல போகிறானோ ..என வைசாலி படபடப்பாய் எதிர்பார்த்திருக்க …

” கொஞ்சம் கொஞ்சமாக சரி பண்ணிக்கொண்டுதான் இருக்கின்றனர் .இதோ ..மணலை குவித்து வைத்திருக்கின்றனரே ….” என்றான் நிதானமாக .

ம் …என்றபடி வெளியே கொட்டியிருந்த மணலை பார்க்க ஆரம்பித்தாள் வைசாலி .

சிறிதுநேரம் கழித்து ” சாலி …என்னடா …? ” என்றான் .

இவன் இது போன்ற குரலில் பரிவாக பேசுவதற்கு பதில் , சத்தத்தை உயர்த்தி நாலு வார்த்தை என்னை திட்டியேனும் விடலாம் என நினைத்தாள் வைசாலி .இதைத்தான் இந்த பரிவினைத்தான் அவளால் தாங்கமுடியவில்லை .

உதட்டை கடித்தபடி ” வேண்டாம் மனோகர் .மனைவி என்ற பெயரில் ஒப்புக்கு ஒரு வாழ்வு அமைந்து விடுமானால் அதை என்னால் தாங்கமுடியாது …..”

” இதை நான் உனக்கு எப்படி நிரூபிக்கட்டும் வைசாலி …? “

உயிரை விட்டாழொழிய இதை நிரூபிக்க வழி கிடையாது .அப்படி உயிர் போய்விட்டால் பிறகு வாழ்வதேது ….எனவே …

” இதையெல்லாம் நிரூபிக்கமுடியாது .அதனால் அவரவர் வழியை அவரவரே பார்த்துக்கொள்வோம் …”

முகத்தை நிதானம் போல் வைத்துக்கொண்டு வேகத்தை காரிடம் காட்டினான் மனோகர் .கார் கட்டுப்பாடற்று பறந்த்து .இரண்டு முறை ஸ்பீட் ப்ரேக்கில் தட்டி எழுந்த்து .மூன்று முறை சாலை நடுவே இருந்த தடுப்புச்சுவரில் உராய்ந்து வந்த்து .

” மனோகர் ப்ளீஸ் .கொஞ்சம் நிதானமாக இருங்கள் …” வைசாலி கத்தினாள் .

” நிதானிக்கும்படியான வார்த்தைகளையா நீ உதிர்த்துக் கொண்டிருக்கிறாய் …? ஒரு வேளை உன் சந்தேகத்திற்கு என் உயிரைத்தான் பணயமாக வைக்க வேண்டுமோ …? “

” அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை .நீங்கள் காரை நிறுத்துங்கள் .நகருங்கள் காரை நான் ஓட்டுகிறேன் …”

வைசாலியின் பேச்சை காதில் வாங்காமல் காரின் வேகத்தை மனோகரன் மேலும் கூட்டிக்கொண்டே போக , வைசாலி ஸ்டியரிங்கில் கையை வைத்து தடுத்து அவன் வேகத்தை குறைக்க முயற்சித்தாள் .முடியவில்லை …

சட்டென்று ஒன்று தோன்ற , தனது சீட் பெல்ட்டை சுழற்றியவள் மனோகரனின் அருகில் அவன் மேல் சாய்ந்தாற் போல் அமர்ந்து ” மனு ப்ளீஸ் …கன்ட்ரோல் யுவர் செல்ப் ….” என்றபடி அவன் கன்னங்களை மெதுவாக வருடினாள் .

இது மனோகரனின் பாணிதான் .மிக கோபமாக அல்லது மிக வருத்தமாக வைசாலி இருந்தாளானால் இது போல் குரலை குழைத்து பேசி அவளை சாமாதானப்படுத்த முயல்வான .அதையே இப்போது வைசாலி செய்தாள் .அதற்கு பலனிருந்த்து .

தன்னருகில் நெருங்கி தன் கன்னம் வருடிய வைசாலியை மெல்ல திரும்பி பார்த்தான் மனோகரன் .

” காரை நிறுத்துங்க ப்ளீஸ் …” என்றவளுக்காக காரின் ப்ரேக்கை மிதித்தவனின் முகம் மாறியது .

” வைசாலி ப்ரேக் பிடிக்கவில்லை  ….”

” முருகா …” பயத்தில் அலறி கடவுளை அழைத்தாள் வைசாலி .




” பயப்படாதே …நான் வேகம் குறைத்து நிறுத்த முயற்சிக்கிறேன் “

” அந்த மணல் குவியல்களில் மோதி நிறுத்த பாருங்கள் ” என்றபடி அவனை ஒட்டி அமர முயன்ற வைசாலியை உதறினான் .

” தள்ளி உட்கார் . இல்லை பெல்ட் போடாதே .சாலி இங்கே பாருடா …மணல் குவியல் சிறியதாக இருக்கிறது .இதில் மோதி கார் நிற்பதற்கு ஐம்பது பர்சென்ட்தான் சான்ஸ் இருக்கிறது .நான் வேகத்தை குறைத்துக் கொண்டே வருகிறேன் .நாம் அந்த மணலில் குதித்து விடலாம் ….” சொன்னவன் , அடுத்து வந்த மணல் குவியலில் கார் கதவை திறந்து வைசாலியை தள்ளிவிட்டான் .

அந்த மணலில் விழுந்து உருண்டு , புரண்டு …உடலில் சிறு சிறு சிராய்ப்புகளுடன் , மனோகரனும் அடுத்த மணல்குவியலில் குதித்திருப்பான் என்ற நம்பிக்கையுடன் வைசாலி எழுந்து பார்த்த போது ,  சாலையின் பக்கவாட்டு பள்ளத்திற்குள் இறங்கிக் கொண்டிருந்த காரின் பின்புறத்தின் கடைசி ஓரத்தை லேசாக பார்த்தாள் .

அங்கேயிருந்த மணல் குவியல்கள் எதிலும் மனோகரன் குதித்ததற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை .

 

 

What’s your Reaction?
+1
8
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

3 Comments
Inline Feedbacks
View all comments
Rajalakshmi puducherry
Rajalakshmi puducherry
4 years ago

Thereto vantha nila novel super mam, 20th episode upload pizza mam,

Shyamala
Shyamala
4 years ago

தேரிறேறி வந்த நிலா 17 ம் upload ஆகவில்லை மேம்

Shyamala
Shyamala
4 years ago

Thereri vantha nila 18 upload ஆகவில்லையே மேம்

3
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!