Kodiyile Malligai poo Serial Stories கொடியிலே மல்லிகை பூ

கொடியிலே மல்லிகை பூ – 14

14

உச்சந்தலையில் மின்னல் இறக்கிவிட்டு 
உள்ளங்கால்களால் எனை அளக்கிறாய் .

” என்ன தைத்து வைத்திருக்கிறாய் மஞ்சுளா …? நீ எழுந்திரு .நான் தைக்கிறேன் ….” மஞ்சுளாவின் தோள் பற்றி எழுப்பிவிட்டு அந்த மிஷினில் உட்கார்ந்த வேதிகாஙின் கால்களில் அவள் மன கோபம் தெரிந்த்து .இடை நிற்காமல் ஙேகமாக ஓடத் தொடங்கியது அவள் மிஷின. மஞ்சுளா பயத்துடன் பக்கத்தில் நின்றிருந்தாள் .தள்ளியிருந்த டேபிளில் நின்று கட்டிங் வேலை பார்த்து கொண்டிருந்த கௌரி , கத்தரிக்கோலை வைத்துவிட்டு வந்தாள் .மிஷினை பிடித்து நிறுத்தினாள் .கோபமாக நிமிர்ந்து பார்த்த தோழியை ” எழுந்திரிடி …” என்றாள் .




மஞ்சுளாவை மீண்டும் உட்கார்ந்து தைக்கும்படி ஜாடை காட்டிவிட்டு , வேதிகாவை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள் .அந்த காம்ப்ளக்ஸின் கீழே
இருந்த ஐஸ்க்ரீம் கடைக்கு அழைத்து சென்றாள் .ஆளுக்கு ஒரு கப் ஐஸ் சொல்லிவிட்டு ,” சொல்லுடி ….என்ன கோபம் ? ” என்றாள .

” எனக்கு கோபமனு உன்கிட்ட சொன்னேனா …? “

” இதோ …இப்போ …காட்டிட்டே இருக்கியே …என்னடி …இடையில் கொஞ்ச நாள் நல்ல மூடில் இருந்தாய் .இப்போது திரும்பவும் அப்செட்டாகி தெரிகிறாயே …”

” ஒரு பிரச்சினையும் இல்லைடி .  உன் கணிப்புபடி   என் அப்பாவும் , புருசனும்தான் என்னை தாங்கி கொண்டாடுறாங்களே …பிறகென்ன …” ஐஸ்க்ரீமை ஸ்பூனால் குத்தினாள் .

கௌரி மௌனமாக அவளை பார்த்தபடி ஐஸ்க்ரீம் சாப்பிட ,” ஏன்டி ஒரு சின்ன பொண்ணை பக்கத்தில் வைத்துக் கொண்டு மனைவியை அறிவிருக்கான்னு யாராவது கேட்பாங்களாடி …? பதிலுக்கு இதையே திருப்பி கேட்க எனக்கு எவ்வளவு நேரமாகும் …? ” எல்லா பெண்களுக்கும் வரும் தன்மான உணர்வு .அதை வெளிக்காட்ட முடியாத தவிப்பு .

” விடுடி …கோபத்தில் சொல்லியிருப்பார்  .   ஆனாலும் நீயும் சரளாவுக்காக ஸ்டேசன் போய் அவள் அண்ணனுக்கு ஜாமீனெல்லாம் கேட்டிருக்க கூடாது “

” சரளாவை பார்த்தால் பாவமாக இருந்த்தே .என்னால் முடிந்த்தை செய்வோமென்று நினைத்தேன் .அந்த இன்ஸ்பெக்டர் இப்படி உடனே இவரிடம் போட்டுக் கொடுப்பாரென்று நினைத்தேனா …? “

” தங்கள் வீட்டு பெண் போலீஸ் ஸ்டேசனுக்கு போவதை எந்த ஆண்களும் விரும்ப மாட்டார்கள் வேதா …”

உணமைதான் ஆஸ்பத்திரியுலிருந்து வந்த சாமிநாதன் கூட விசயம் கேட்டதும் வேதிகாவை எரிப்பது போல் பார்த்தார் .கைளை உயர்த்திக் கொண்டு அறையும் எண்ணத்தில் கூட நெருங்கினார் .அமரேசன் தான் அவர் கைகளை பிடித்து தடுத்தான் .” இங்கே நிற்காதே .எந்திரிச்சு போடி …” பற்களை கடித்தான் .அழுகையை மறைத்தபடி வேதிகா மாடிக்கு வந்துவிட்டாள் .




” என்ன செய்து என்ன பலன் …? சரளா அண்ணனுக்கு ஜாமீன் கிடைக்கவில்லையே …” உருகிவிட்ட ஐஸ்க்ரீமை குப்பைக் கூடையில் போட்டுவிட்டு எழுந்தாள் வேதிகா .

” நாளை அகல்யா கல்யாணத்திற்கு கிளம்ப வேண்டும் வேதா…” விசாலாட்சி அவள் வீட்டிற்குள் நுழையும் போதே ஞாபகப்படுத்தினாள் .அம்மாவின் பேச்சை காதில் வாங்காமல் மாடியேறினாள் வேதிகா .மனதின் அலுப்பால் உடல் அயர படுக்கையில் விழுந்தாள் .கதவு தட்டப்படும் சத்தம் .என்ன தொல்லைடா இது …கொஞ்சம் நிம்மதியாக படுக்க விடாமல் .சும்மா வீட்டிற்குள் கதவை தட்டுவது யார் …யோசிக்கும் போதே அமரேசனின் நினைவு வர , அவனாகத்தான் இருக்கும் .கதவை தட்டி அனுமதி வாங்கி கொண்டுதான் வருகிறானான் .பெரிய ஒழுக்க சீலன் .வரட்டும் அவனை …

சண்டை ஒன்றுக்கு தயாராகி எழுந்து அமர்ந்து கொண்டு ” உள்ளே வாங்க ” என்றாள் .கதவை தள்ளிக்கொண்டு உள்ளே வந்த்து மங்கையர்கரசி .

” அத்தை …” என்றவள் உடனேயே அவளுக்கு பின்னால் பார்த்தாள் .”  தனியாகவா வந்தீங்க ,  உங்க நாத்தனார் வரலை …? அவுங்க துணை இல்லாமல் நீங்க மாடி வரை வருவீங்களா …? ” கிண்டலாக கேட்டாள் .

ஏனென்றால் அன்று இவர்கள் மூவரும் சிரித்து பேசிக் கொண்டிருப்பதை திலகவதி   பார்த்த பிறகு , மங்கையர்கரசி இன்னமும் தன் கூட்டுக்குள் சுருங்கி கொண்டிருப்பதை வேதிகா உணர்ந்தாள் .மருமகள் பக்கம் திரும்புவது கூட இல்லை அவள் .ஏதோ தவறு செய்து விட்ட பாவனையுடன் வலம் வந்து கொண்டிருந்தாள் .அப்படி எதற்காக அத்தை தன் நாத்தனாருக்கு பயப்படுகிறார்கள் …? நிறைய யோசித்து ஒன்றும் புரியாமல் அந்த விசயத்தை நினைப்பதையே விட்டிருந்தாள் ஙேதிகா .

ஙேநிகாவின் நக்கல் கேள்வியில் இடுப்பில் கை தாங்கி அவளை முறைத்தாள் மங்கையர்கரசி .” கிண்டல் பண்றியாக்கும் ….? “

மாமியாரின் இந்த இயல்பு நடவடிக்கையில் ஆச்சரியமாகி தலையசைத்தாள் வேதிகா .” என்ன அத்தை …என்ன விசயம்..? “

” உனக்கும் …அமருக்கும் என்ன பிரச்சினை …? “

” நான் எங்கள் விசயம் கேட்கவில்லை .உங்கள் விசயம் கேட்கிறேன் …”

” என் விசயமென்று ஒன்று இல்லை .உங்கள் பிரச்சினையை பற்றி கூறு “

” இது போலவே நானும் சொல்லாமில்லையா …? ” தலை சாய்த்து வேதிகா கேட்க மங்கயர்கரசி முகம் கறுத்தது .

” நான் உன் மாமியார் .நினைவில் வைத்துக் கொண்டு மரியாதையாக பேசு .முதலில் நான் கேட்டதற்கு பதில் சொல்லு ” மங்கையர்கரசியின் குரலில் மாமியார்தனம் இருந்த்து . ஏனோ அது வேதிகாவிற்கு சொந்த வீட்டிற்கு வந்த்து போல்  இதமாக இருந்த்து .




” அவரை நீங்க அமர் னுதான் கூப்பிடுவீங்களா அத்தை …? ” நிதானமாக கேட்டாள் .

” வேதா …அன்று நீங்கள் இருவரும் பிரிந்த போது நான் கொஞ்சம் அலட்சியமாக இருந்துவிட்டேன் .அதனால் என் மகன் பாவம் ஆறு மாதங்கள் பொண்டாட்டி இல்லாமல் கஷ்டப்பட்டு விட்டான் .இனி அது போலொரு விசயம் நடக்க நான் விடமாட்டேன் .சும்மா நொய் நொய்னு ஆயிரம் சொல்லாமல் ஒழுங்காக என் மகனுடன் குடும்பம் நடத்த பாரு ‘ அதிகாரமாக பேசினாள் .

” இதையே நீங்கள் உங்கள் அமரிடம் சொல்லலாமே அத்தை .அதென்ன எல்லோரும் அவரை அமரன் என்கிறார்கள் .நீங்கள் மட்டும் அமர் .அது உங்கள் மகனுக்கான உங்களின் செல்ல பெயரா …? ரொம்ப அழகாக இருக்கிறது அத்தை .நானும் அப்படியே கூப்பிடலாமான்னு பார்க்கிறேன் …” சொன்னவளின் கன்னத்தை கிள்ளி உலுக்கினாள் மங்கையர்கரசி .

” புருசனை பெயர் சொல்லி கூப்பிடுவாயா நீ …? “

” ம்…டா  கூட சொல்வேனே .பார்க்கிறீர்களா …டேய் அமர் …”

” ஏய் கொழுப்புடி உனக்கு .உன்னை …” தலையணையை எடுத்து ஙேதிகாவின் தலையில் அடிக்க தொடங்கிய மங்கையர்கரசியின் முகத்தில் கோபம் தாண்டிய புன்னகை இருந்த்து .கொஞ்ச நேரம் மாமியாரின் செல்ல அடிகளை வாங்கிக் கொண்ட வேதிகா பிறகு தலையணையை பிடுங்கிபோட்டு விட்டு அவளின் கைகளை பிடித்திழுத்து தன்னருகில் அமர்த்திக் கொண்டாள் .

” அவரை நேரிடையாக நீங்க  அமர்னு கூப்பிட்டு நான் பார்த்ததில்லையே அத்தை …இப்போது வருவார் .கூப்பிடுகிறீர்களா …? ” மங்கையர்கரசியின் கைகளில் சிறு நடுக்கம் ஓடியது .

” நான் அமரோடு சண்டை போடாதேன்னு சொல்லத்தான் வந்தேன் .அதை விட்டு வேறெதுவும் பேச போவதில்லை …”

” நான் இல்லை அத்தை .உங்கள் அமர்தான் வம்பு சண்டை இழுக்கிறார் …”

” நீ அட்ஜஸ் செய்து கொண்டு போ …”

” அத்தை இது அநியாயம் .பெண்ணுக்கு பெண்ணே இந்த மாதிரி செய்ய கூடாது .உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் தான் ஒத்து வராதே .அப்படித்தான் எனக்கும் , அமருக்கும் ஒத்து போவதேயில்லை .   நீங்கள் பேசாமல் என் பக்கம் சேர்ந்துவிடுங்கள் …”

” கொன்னுடுவேன் …” ஒற்றை விரலை ஆட்டி எச்சரித்தாள் .திரும்ப திரும்ப அமர் கூட சண்டை போட்டால் உன்னை கொன்னுடுவேன் .உன் அப்பாவிற்கு கால் சரியாகி விட்டது .இன்னமும் ஒரு வாரம்தான் .அவரது கடைசி செக்கப் முடிந்த்தும் ஒழுங்காக நம் வீட்டிற்கு கிளம்பும் வழியை பார் .அங்கே வந்து உன் திமிர் தனத்தை காட்டு .அப்போது உன்னை ஒரு வழி பண்ணுகிறேன் பார் …” அதிகாரமும் , ஆணவமுமாக பேசி விட்டு கீழே இறங்கி போனாள் மங்கையர்கரசி .

ஆச்சரயம் தாங்காமல் சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள் வேதிகா ்எவ்வளவு தெளிவாக இயல்பாக பேசிகிறார்கள் …? சிலசமயம் மட்டும் ஏன் ஊமையாகி வடுகிறார்கள் …?சரி …அடுத்த வாரம் நம் வீட்டிற்கு போனதும் , அங்கே வைத்தே கண்டுபிடிக்கலாம். தன் போக்கில் நினைத்தவள் திடுக்கிட்டாள் .நான் அவர் வீட்டிற்கு….  என் புகுந்த வீட்டிற்கு போக போகிறேனா…? இனி அங்கே போகப் போவதில்லை என்ற உறுதியோடுதானே இங்கே வந்தேன் .இப்போது தானாக எனக்கு போகத் தோன்றுகிறதே .     என் அடிமனதில் அப்படி ஒரு எண்ணம் படிந்திருக்கிறதோ …?அதனால்தான் இப்படி ஒரு நினைப்பு வந்த்தோ …?குழப்ப மனத்துடனேயே அன்றைய இரவின் பெரும் பகுதியை தள்ளினாள் . 




மறுநாள் காலை எழுந்து கிளம்பி அந்த சேலையையும் , ஜாக்கெட்டையும் அணிந்தாள் .மங்கையர்கரசியின் நகைகளை திறந்து ஆராய்ந்து கல் ஜிமிக்கி , காசு மாலை , சிவப்பு கல் அட்டிகை , நெளி மோதிரம் , நெளி வளையல்கள் என போட்டுக் கொண்டு கண்ணாடி முன் நின்று பார்த்த போது …எழுபதுகளில் வாழ்ந்த பெண்ணின் தோற்றம் தெரிந்த்து .தனக்கு தானே சிரித்தபடி கீழே இற்ங்கியவளை ஆவலுடன் பார்த்தபடி இருந்தாள் மங்கையர்கரசி .

வேதிகாவின் அலங்காரத்தில் அவளுக்கு பூரண திருப்தி தெரிந்த்து . ” வங்கி , ஒட்டியாணமெல்லாம் போட்டுக்கலையா …? ” கிசுகிசுப்பான குரலில் கேட்டாள் .

சரிதான் இப்போதே அரை பாட்டியாக தெரிகிறேன் .இன்னமும் அதையும் போட்டால் , கையோடு ஒரு குச்சியையும் ஊன்றி விட வேண்டியதுதான் என நினைத்தபடி ” என்ன அத்தை கேட்டீர்கள் …சரியாக காதில் விழலை …? ” சத்தமாக கேட்டாள் .மங்கையர்கரசி அவளை முறைத்தபடி டிவி பக்கம் திரும்பிக் கொண்டாள் .

” கேட்க நினைப்பதை , தைரியமாக சத்தமாக கேட்கனும் .யாருக்கோ பயந்து முணுமுணுத்து வச்சா ….எனக்கெப்படி காது கேட்குமாம் ….? “

சுற்றுமுற்றும் பார்த்து விட்டு உதைப்பேன்டி என கை சைகை செய்தாள் மங்கையர்கரசி .எங்கே பார்க்கலாம் …இடுப்பில் கை வைத்து போஸ் கொடுத்தாள.வேகமாக எழுந்து கொள்ள போன மங்கையர்கரசி என்னவோ நினைத்தபடி முகத்தில் அமைதி பூசி அமர்ந்து கொண்டாள் .

” ம்க்கும் ….எல்லாம் வெட்டி பேச்சு …” மாமியார் காது படவே முணுமுணுத்து விட்டு அப்பாவின் அறைக்குள் போனாள் வேதிகா.

அங்கே கை , கால்களில் லேசான நடுக்கத்துடன் விசாலாட்சியின் துணையோடு பிஸயோதெரபி பயிற்சிகளை செய்து கொண்டிருந்த அப்பாவை கண்டதும் அவள் உள்ளம் உருகியது .அப்பாவிற்கு கொஞ்சம் வயதாகிவிட்டது .தளர்ந்து தெரிகிறார் .அந்த கணத்தில் வேதிகாவின் மனம் லேசாக வலித்தது .

வேதிகாவின் அலங்காரத்தை பார்த்த சாமிநாதனும் , விசாலாட்சியும்  விழி விரித்தனர்  .” அப்படியே எங்க அம்மாவை பார்த்த மாதிரி இருக்கு …” சாமிநாதன் நெகிழ்ந்தார் .இது போல் தந்தை நெகிழ்ந்து பார்த்திராத வேதிகா , மனம் உருக அவர்ருகே அமர்ந்து அவர் தோள்களில் சாய்ந்து கொண்டாள் . ஏனோ அவளுக்கு அழுகை வரும் போலிருந்த்து அந்த நிமிடம் தான் தந்தையை நிறைய படுத்தி விட்டதாக தோன்ற …..




” உங்களுக்கு நான் நிறைய கஷ்டம் கொடுத்திட்டேன் இல்லையாப்பா …? ” எனக் கேட்டாள் .

” இல்லடாம்மா .நீ என் செல்ல பொண்ணில்லையா …? நீ பிறந்த்திலிருந்து எங்களுக்கு சந்தோசத்தை மட்டும்தானே கொடுத்து கொண்டிருக்கிறாய் …” தந்தையின் கனிவு கண்களை கலங்க வைக்க ,பொங்கிய அன்பை வெளிப்படுத்தும் வழி தெரியாமல் சட்டென நிமிர்ந்து அப்பாவின் கன்னத்தில் மென்மையாக இதழுரசி எடுத்தாள் .” ஐ லவ் யூப்பா ” என்றாள் .

” சீ …கழுதை .என்ன இது …? சின்னப்பிள்ளைங்கிறது சரியாத்தானே இருக்கு …” கன்னத்தை துடைத்து மகளை கண்டித்தார் சாமிநாதன் .

அப்பாவின் தர்மசங்கடத்தில் சிரிப்பு வர வாசல் பக்கம் திரும்பிய வளின் பார்வையில் கணிக்க முடியாத உணர்வு தாங்கிய முகத்துடன் நின்றிருந்த அமரேசன் தென்பட்டான் .

What’s your Reaction?
+1
4
+1
7
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!