Serial Stories Thereri vantha nila தேரேறி வந்த நிலா

தேரேறி வந்த நிலா – 9

9

” இதோ வருகிறேன் ..அதோ வருகிறேன்…என சொல்லி சொல்லி இரண்டு  மாதங்களை  பேசியே கடத்தி விட்டீர்கள் …” குறைபட்டாள் .

” சாலி எனக்கிருக்கும் வேகத்திற்கு இப்போதே உன் எதிரில் வந்து நிற்க வேண்டும் போல் உள்ளது .ஆனால் அன்று கிடைத்த ஆர்டரின் தொடர்ச்சியாக இன்னும் சில ஆர்டர்கள் வந்தபடியே இருக்கின்றன. எல்லாமே தொடர்ச்சியான லாபத்தை தருபவை .உடனே அவற்றை உதறிவிட்டு வர முடியாதுடா செல்லம் .இல்லை …நீ சொல்லு …நீ சம்பாதித்தது போதும்டா முட்டாள் .உடனே கிளம்பி வா என்று சொல்லு .அடுத்த ப்ளைட்டை பிடித்து வந்துவிடுகிறேன் “

” ஐயோ …வேண்டாம் நான் சும்மா சொன்னேன் ….நீங்கள் வேலையை முடித்துவிட்டே வாருங்கள் …”




” சரி …இப்போது உன் பிரச்சினையை சொல்லு …”

” மனு எனக்கு இங்கே வேலை செய்ய பிடிக்கவில்லைப்பா …” அன்னையிடம் புகார் கூறும் மழலையாய் மாறி சிணுங்கினாள் வைசாலி .

” என்னடா சாலி …? என்ன பிரச்சினை …? ” என்றபோது மனோகரனின் குரலில் ஆழ்ந்த கவனம் இருந்த்து .

ஏற்கெனவே இந்த வேலை வேண்டாமென அவன் கூறிக்கொண்டேதான் இருக்கிறான் .”உனது கேரக்டருக்கு நீ எப்படி இங்கே வேலைக்கு சேர்ந்தாய் வைசாலி …? “என ஆச்சரியமாக கேட்பான் .

” எனக்கு வேறு வழியில்லை மனு .அப்பா இறந்த பிறகுதான் நிறைய கடன் இருப்பது தெரிந்த்து .அதற்கு வட்டியாகவே மாதம் பெரிய தொகை எடுக்க வேண்டியிருந்த்து .எனது ப்யூட்டிபார்லர் வருமானம் வீட்டு செலவிற்கு மட்டும்தான் போதுமானதாக இருந்த்து . என்ன செய்வதென தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த போதுதான் அம்ருதா என் பார்லர் இருந்த ரோடு வழியாக வந்தார்கள் .கலைந்துவிட்ட அவர்கள் மேக்கப்பை ஐந்து நிமிடத்தில் நான் சரி பண்ணிய விதத்தில் மகிழ்ந்து என்னை அவர்களிடம் வேலை செய்ய அழைத்தார்கள் .எனக்கும் அப்போது வேறு வழியிருக்கவில்லை .அத்தோடு அந்த ப்யூட்டிபார்லரை விற்றால் கொஞ்சம் கடன் அடைய வாய்ப்பிருப்பதால் , அதனை விற்று கொஞ்சம் கடனை அடைத்துவிட்டு அம்ருதாவிடமே வேலைக்கு சேர்ந்துவிட்டேன் ” தனது நிலைமையை அவனிடம் விளக்கினாள் .

” இப்போது வேறு இடத்தில் வேறு நல்ல வேலை பார்க்கலாமே வைசாலி “

” பார்க்கலாம்தான் .ஆனால் உடனடியாக வேறு வேலை எங்கே கிடைக்கும் …?  அதுவும் இவ்வளவு அதிக சம்பளத்தில் ….? “

” நான் உனக்கு ….” என ஆரம்பித்தவனை …

” இல்லை வேண்டாம் …அது சரி வராது …”

” என்ன …எது …சரி வராது …? “

” உங்களிடமிருந்து பணமெல்லாம் நான் வாங்கிக் கொள்ள மாட்டேன். …” மெல்லிய குரலில் கூறினாள்.




” உனக்கு பணம் தருவதாக நான் எப்போது கூறினேன் ….? “

வைசாலி மௌனமானாள் .

” நான் உனக்கு வேறு வேலை ஏற்பாடு செய்வது பற்றி பேசிக்கொண்டிருந்தேன் …”

” இந்த மேக்கப் வேலைக்கு இது போல் அதிக சம்பளம் வேறு எங்கும் தர மாட்டார்கள் மனோகர் …”

” ஓஹோ …”

” அம்ருதா ..திரைத்துறையை சேர்ந்தவர்களென்பதால்தான் அவர்களால் இவ்வளவு சம்பளம் தர முடிகிறது .மற்றவர்களால் முடியாது …”

” ஓஹோ …” என்றான் மீண்டும் .

அவனது குரலில் அடக்கப்பட்ட கோபம் தெரிய , பேசாமல் மௌனமானாள் வைசாலி .

” ஏன் பேச்சை நிறுத்திவிட்டாய் .அதுதான் எல்லா விபரங்களும் உனக்கே தெரிகிறதே .நீயே சொல்லு .நான் கேட்டுக் கொள்கிறேன் …”

” நான் உண்மையை சொன்னேன் ….” முணுமுணுத்தாள் .
” சரிதானம்மா உண்மைவிளம்பி ..இப்போது இந்த மேக்கப் வேலை தவிர வேறு என்ன வேலை உங்களுக்கு தெரியும் …? “

வேறு என்ன தெரியும் அவளுக்கு ..?உடன் பயின்ற தோழிகளெல்லாம் ஏதேதோ தொழில்நுட்ப படிப்பை எடுத்து படிக்க , எனக்கு அலங்கார கலையில்தான் இன்ட்ரெஸ்ட் என அப்பாவிடம் கூறி அடம்பிடித்து இந்த படிப்பில் சேர்ந்த்து நினைவு வந்த்து .இதை தவிர வேறு ஒன்றும் தெரியாதே அவளுக்கு …கொஞ்சம் அவமானமாக உணர்ந்தாள் .

” வே…வேறு ..ஒன்றும் ..தெரியாது …” அவளது குரல் சிறிது தடுமாறியது .

” ஓஹோ …வேறு ஒன்றுமே தெரியாதா …? இவ்வளவு அறிவு ஜீவியாக நீ இருப்பாயென்று நான் நினைக்கவில்லை .ம் …சரி ..நானே பார்த்துக் கொள்கிறேன் …” சட்டென போனை வைத்துவிட்டான் .

வைசாலிக்கு அழுகை வந்த்து .இப்போது எதற்கு இவ்வளவு கோபம் …? இப்படி ஒன்றும் தெரியாத மக்கு பெண்ணின் மீது மனதினை விட்டு விட்டோமென்றா …?

உன்னிடம் மனதை விட்டு விட்டேனென்று அவன் சொன்னானா …? அவளது மனசாட்சி அவளை சீண்டி சிரித்தது .இல்லையா …? அப்படி இதுவரை சொன்னதேயில்லையா ….? வைசாலியின் மனதினுள் பயப்பந்துகள் உருள தொடங்கின .




அவனது ” சாலி ” நினைவு வர , அன்போ …ஆசையோ இலலாதவனின் அழைப்பா அது ….!!!சீச்சி அப்படி எதுவும் இருக்காது என தன்னைத்தானே சமாதானம செய்து கொண்டாள் .

இந்த வேலையை விட்டுவிடுமாறு மனோகரன்தான் சிலமுறை வைசாலியை வற்புறுத்தியிருக்கிறான் .அதற்கு சரியான பதில் சொல்லாது மழுப்பி வந்திருக்கிறாள் வைசாலி .இப்போது அவளே வேலை பிடிக்கவில்லை என சொல்லும்போதும் பார்த்தாயா நான் அப்போதே சொன்னேனே …? என அவளை குத்திக்காட்டாமல் என்னம்மா விசயம் …? என ஆதரவாக கேட்டானே …மனதில் அன்பில்லாமல் இப்படி கேட்க முடியுமா …?

ஆனால் பிறகு ஏன் இந்த எரிச்சல் …? ஒரு வேளை பணம் வாங்கமாட்டேன் என்றதாலா …? இருக்கலாம் .ஆனாலும் அதற்காக அவனின் கோபத்தை போக்குவதற்கேனும் பணம் கேட்க வைசாலியின் தன்மானம் இடம் தரவில்லை .அது தனது குடும்பத்திறகு செய்யும் அநீதி என நினைத்தாள் .

இப்போது இந்த பவுடர் பூசுவதை தவிர வேறு ஒன்றுமே தெரியாதவளை வைத்துக்கொண்டு அவன் என்ன செய்வான் …? வைசாலி தன்னிரக்கத்திற்கும் , தன்மானத்திற்கும் இடையில் அல்லாடியபடி இருந்தாள் .
தனது போனை கையில் வைத்தபடி எப்போது அழைப்பானென  பார்த்துக்கொண்டே இருந்தாள் .
அன்று முழுவதும் அவளை தவிக்க விட்டுவிட்டு மறுநாள்தான் அவளை அழைத்தான் மனோகரன் .

” சாரிம்மா நேற்று பகல் முழுவதும் இங்கே எனக்கு ஹெவி ஒர்க் .அத்தோடு அங்கே இந்தியாவில் உன் வேலை சம்பந்தமாக நிறைய ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருந்ததால் …அதனை இங்கே இரவில்தானே செய்ய முடிகிறது . அதற்கே நேற்றைய இரவு சரியாக போய்விட்டது .இப்போது நான் தூங்கி ஒரு முழுநாள் ஆயிற்று …,” சொல்லும்போதே கொட்டாவி வந்த்து அவனுக்கு .

” மனு …சாரிப்பா முதலில் நீங்கள் தூங்குங்கள் மற்ற விபரங்கள் பிறகு பேசிக்கொள்வோம் …” கவலையாக கூறினாள்.

” ஆமாம் காலை பதினோரு மணிக்கு எனக்கு இங்கே ஒரு மீட்டிங் இருக்கிறது .அதற்குள் ஒரு இரண்டு மணி நேரமாவது தூங்கியே ஆகவேண்டும் .அதனால் இப்போது தூங்க போகிறேன் .உனது வேலை சம்பந்தமாக இன்று ஸ்டுடியோவிற்கு ஒருவரை …பெயர் கரண் … உன்னை சந்திக்க வரச்சொல்லியிருக்கிறேன் .அவர் உனக்கு எல்லா விபரங்களும் சொல்லுவார் …” பேசும்போதே மீண்டும் கொட்டாவி வந்த்து .

” சரி ..சரி …நான் பார்த்துக்கொள்கிறேன் .நீங்கள் தூங்குங்கள் …” மேலே பேசிக்கொண்டேயிருப்பானென போனை கட் செய்தாள் .

போன் மீண்டும் ஒலித்தது .மனோகரன்தான் …

” வைசாலி …அந்த கரணை பற்றி நீ எந்த கவலையும் பட தேவையில்லை .அவன் நம்பிக்கையானவன்தான் …” என்றான் .

” ஓ.கே..ஓ.கே …நான் பார்த்துக்கொள்கிறேன்.நீங்கள் தூங்குங்கள் …” எனவும் போனை வைத்தான் .

அன்று ..




” என்னக்கா ..மாட்டினானென்று பார்த்தால் திரும்பவும் நழுவிக் கொண்டே இருக்கிறானே ….” அம்ருதா வேதாவிடம் புலம்பினாள் .

” ஹா…ஹா…உன் ராசி அப்படி ….” என சிரித்தாள் வேதா .
ஒரு குடும்பத்தை கலைக்காமல் விட்டு விடேன் என மனதிற்குள் பேசியபடி அவளுக்கு க்ரீமை தடவிக்கொண்டிருந்தாள் வைசாலி .விரைவாகவே இந்த வேலையை விட்டு விட்டு போக வேண்டும் என நினைத்துக் கொண்டாள் .

அவள் மனம் அந்த கரணை சந்திக்கும் நேரத்தை எதிர்பார்க்க துவங்கியது .மீண்டும் போன் செய்து அந்த கரணுக்காக கான்டாக்ட் சர்ட்டிபிகேட் வழங்கினானே ..ஏன் …? என யோசித்தாள் .

மனோகரனின் அந்த செய்கைக்கான காரணம் அந்த கரணை பார்த்ததும் வைசாலிக்கு விளங்கியது .

” ஹாய் சிஸ்டர் …” என சிரித்தபடி வந்து நின்றவன் அன்று வைசாலியிடம் வம்பிழுத்து , அவளால் கார் டயர் கிழிக்கப்பட்டு , பிறகு அதிகாலை அவள் வீடு தேடி வந்து மன்னிப்பு கேட்டவர்களில் ஒருவன் .

What’s your Reaction?
+1
6
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!