Serial Stories Thereri vantha nila தேரேறி வந்த நிலா

தேரேறி வந்த நிலா – 10

                                                              10

அந்த பிரம்மாண்டமான பில்டிங்கை விழிகளை விரித்து ஆச்சரியமாக பார்த்தபடி இருந்தாள் வைசாலி .
இந்த இடத்திலா நான் வேலை செய்ய போகிறேன் .என்னால் முடியுமா …? அந்த தகுதி எனக்கு இருக்கிறதா …? எப்படி என் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார் ..? மனோகரனை பெருமையாக நினைத்துக் கொண்டாள் .

அது ஒரு கார் கேர் சென்டர் .மிக அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகிக் கொண்டிருந்த்து . இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை .வேலைகள் நடந்துகொண்டிருந்தன.காரை மேலே ஏற்றி வாட்டர வாஷ் செய்வதற்குரிய மேடை ..ஒரே நேரத்தில் பத்து கார்களை மேலேற்றி சர்வீஸ் செய்ய வசதியாக பெரியதாக கட்டப்பட்டுக்கொண்டிருந்த்து .

கார் டயர்களை சுழட்டி பார்க்க வசதியாக , சுரங்கம். போன்ற அமைப்பு …படிகளுடன் ..அதுவும் ஒரே நேரத்தில் பத்து கார்களை அதில் பொருத்தி நிறுத்த வசதியாக …பெரிதாக தயாராகிக் கொண்டிருந்த்து .




டயர் ஏர் செக் பண்ணுவது , வீல் அலைன்மென்ட் பார்ப்பது ..டிங்கரிங் பார்ப்பது , பெயிண்ட் பண்ணுவது …என எல்லாமே ஒரே நேரத்தில் பத்து கார்களுக்கு மொத்தமாக பண்ணுவது போல பெரியதாக இருந்த்து .நிறைய தொழிலாளர்கள்  அதற்கான வேலைகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்தனர் .

” டெப்லான் கோட்டிங் ….” என்ற வைசாலிக்கு ” அது அந்தப்பக்கம் இருக்கிறது சிஸ்டர் .வாருங்கள் … ” என அழைத்து சென்றான் சுரேஷ் .இவனும் அன்று வைசாலியிடம் மன்னிப்பு கேட்க வந்தவன்தான் .

ஆனால் அன்று அது போல் கேவலமாக நடந்து கொண்டவர்களென்ற அறிகுறி இருவரிடமும் சிறிது கூட இல்லை .மிக சகஜமாகவும் , மரியாதையாகவும் , நட்புடனும் பேசினார்கள் .

” வாட்டர் வாஷுக்கு பதிலாக ஸ்டீம் வாஷ் யூஸ் பண்ணலாமே .இதனால் தண்ணீர் செலவு நமக்கு குறையும் .சுத்தமும் நன்றாக இருக்கும் ..” சொன்ன வைசாலியை சிரிப்புடன் பார்த்தான் சுரேஷ் .

” உங்களை பற்றி மனோ சார் சொன்னது சரிதான் சிஸ்டர் …இந்தாங்க குடிங்க …” ஒரு தட்டில் டீ கிளாஸ்களை கொண்டு வந்த கரணிடமிருந்து ஒரு கிளாஸை எடுத்து வைசாலிக்கு கொடுத்தபடி சொன்னான் சுரேஷ் .

” என்ன ..என்ன சொன்னார் …? “

” இந்த தொழிலில் உங்களுக்கு இருக்கும் இன்ட்ரெஸ்டை சொன்னார் .இந்த தொழிலை பற்றி நீங்கள் அறிந்து வைத்திருக்கும் விபரங்கள் பற்றி சொன்னார் … ” என்றான் கரண் தனக்கொரு டீ கிளாஸை எடுத்துக்கொண்டு .

” அவருக்கென்ன எதையாவது சொல்வார் ….” முணுமுணுத்தபடி அந்த பேப்பர் கப்பின் விளிம்புகளை தடவி வட்டமிட்டாள் வைசாலி .

” இல்லைங்க சிஸ்டர் ..அவர் சொன்னது எதுவும் அதிகமாக தெரியவில்லை .ஒவ்வொரு இடத்தையும் நீங்கள் ஆர்வத்துடன் பார்த்த விதம் , சொன்ன விபரங்கள் ..எல்லாமே இந்த தொழிலில் உங்களுக்கு இருக்கும் அனுபவத்தை




அனுபவமா …? இதில் அவளுக்குன்ன அனுபவம் இருக்கிறது …? மனதிற்குள் தவித்தாள் .

” மனோ சார்  இந்த கார் சென்டருக்கு  நீங்கள்தான் மேனேஜர் என  முதலில் கூறியபோது நாங்கள் இருவரும் மிகவும் தயங்கினோம் .ஒரு பெண்ணான உங்களுக்கு என்ன தெரியுமென்ற எண்ணம் எங்களுக்கு …? ஆனால் இந்த இரண்டு மணி நேரத்தில் இந்த தொழிலை ஆணிவேர் வரை அலசிவிட்டீர்கள் போங்கள் .எப்போதும் போல் மனோ சார் சரியாகத்தான் கணித்திருக்கிறார் ..” கரண் .

” ஏதோ தெரிந்த விபரங்களை சொன்னேன் .மற்றபடி பெரிதாக இந்த தொழிலை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது …” அடக்கமாக சொன்னவளை ஆச்சரியமாக  பார்த்தனர் இருவரும் .

கொஞ்சம் விபரம் தெரிந்தாலே அனைத்தும் அறிந்தவர்கள் போல் அலட்டும் மனிதர்கள் நிறைந்திருக்கும் இன்றைய உலகில் இந்த பெண்ணிற்கு எவ்வளவு அடக்கம் .

” இதையும் மனோ சார் சொன்னார் .எனக்கு ஒன்றும் தெரியாது என்பாள் .ஆனால் எல்லாம் தெரிந்து வைத்திருப்பாள் .பேசி பாருங்கள் என்றார் .அது சரியாகத்தான் இருக்கிறது ” சிரித்தார்கள் இருவரும் .

கூச்சத்தில் முகம் சிவந்த்து வைசாலிக்கு .

” உங்கள் இருவருக்கும் எத்தனை நாட்கள் பழக்கம் சிஸ்டர் ..? ஒரு வருடம் இருக்குமா …? ” அவனை திகைப்புடன் பார்த்தாள் .

” இல்லை இருவரும் ஒருவரையொருவர் நன்றாக அறிந்து வைத்திருக்கிறீர்களே .அதனால் கேட்டேன்” என்றவன் சற்று தயங்கி  .”அன்று ..உங்களை கேலி செய்த அன்று …எங்கள் இருவரையும் நேரிலேயே வந்து பார்த்து எச்சரித்தவர் எவ்வளவு கோபமாக இருந்தார் தெரியுமா ..? இரண்டு அறை கூட விட்டுவிட்டார் ” கன்னத்தை பிடித்துக் கொண்டனர இருவரும் .

அந்த பாவனையில் சிரித்த வைசாலி அன்றுதான் உங்கள் சாரை முதன்முதலில் பார்த்தேன் என்றால் , இவர்கள் முகம் எப்படி மாறும் ..என நினைத்துக் கொண்டாள் .நிச்சயம் நம்ப மாட்டார்கள் .அவர்களென்ன ..அவளாலேயே மனோகரனை அன்றுதான் முதன் முதலில் சந்தித்தாளென்பதை நம்ப முடியவில்லையே …




வைசாலிக்கு உடனே மனோகரனுடன் பேச வேண்டும் போலிருந்த்து . இதோ இந்த வேலைக்கு நன்றி சொல்லவேண்டும் .கூடவே நேற்றைய அவனது கோபத்திற்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும் .பிறகு அவனை சமாதானப்படுத்த வேண்டும்.

இந்த நினைவு வந்த பிறகு சுரேஷும் , கரணும் பேசிய எதுவும் வைசாலியின் மண்டைக்குள் ஏறவில்லை .விழிகளை அகற்றி வைத்துக்கொண்டு வெறுமனே அவர்கள் பேச்சுக்கு தலையாட்டிக கொண்டிருந்தாள் .

ஏதேதோ பேச வேண்டும் என ஒத்திகை பார்த்துக்கொண்டு போனை எடுத்தவளுக்கு ” மனு …” என்றதற்கு மேல் எந்த வார்த்தையும் வரவில்லை .

எப்போதும் கலகலவென பேசும் அவனும் ” ம் ” என்ற வார்த்தையை தவிர மேலே பேசவில்லை .

” மனு …” என்றாள் மீண்டும் .

இப்போது ” ம் ” கூட இல்லாமல் மௌனமாகவே இருந்தான் அவன் .

” மனு ..ப்ளீஸ் …” என்றாள் கொஞ்சலாக .

ம்ஹூம் ..அவன் அசைவதாக இல்லை .அதே மௌனம் .இவன் வேண்டுமென்றே வதைக்கிறான் .

” சாரி மனு …நன்றி மனு “

” எதற்கு ..? ” ஹப்பா ..பேசிவிட்டான் .

” எல்லாவற்றிற்கும் .நன்றி … இந்த வேலைக்கு “

” ஹப்பா …”என இப்போது பெருமூச்சு விட்டான் அவன் .

” எ..என்ன ..? எதற்கு இப்போது இப்படி ஒரு மூச்சு …? “

” எனக்கு நீ எப்படி வேலை தரலாமென்று கேட்டுவிடுவாயோ என நினைத்தேன் “

” சே ..சே அதெப்படி அப்படி கேட்பேன் ..? “

” ஏன் உன்னிடம் பணமெல்லாம் வாங்க மாட்டெனென்றவள் .இதையும் சொல்ல மாட்டாயா …? “




” என்ன மனு ..இதுதான் உங்கள் கோபத்திற்கான காரணமா ..? என்னை புரிந்து கொள்ளவில்லையா நீங்கள் …? ” வருத்தமாக கேட்டாள் .

” நான் உன்னை சரியாகத்தான் கணித்திருக்கிறேன் .நீதான் என்னை புரிந்து கொள்ளவில்லை .உனது தன்மான த்தை நான் அறிவேன் .அந்த உணர்வினை மதிக்க வேண்டுமென்றுதான் உனக்கு பணம் கொடுக்க வேண்டுமென்று நான் ஒருநாளும் நினைத்ததில்லை .ஆனால் எனது உணர்வை நீ புரிந்து கொள்ளவில்லையே .பட்டென உங்களிடம் நான் பணம் வாங்க மாட்டேனென்றாயே …”

மனோகரனின் கோபத்தின் காரணம் புரிய , வைசாலி நெகிழ்ந்தாள் .எல்லாமே அவளுக்காகத்தான் யோசித்திருக்கிறான் . அவன் கோபத்தை சமாதானப்படுத்தும் வழி தெரியாமல் , அதேநேரம் அவனது கோபம் ஒரு வகையில் சந்தோசத்தையும் கொடுக்க தன்னையறியாமல் ” மை ஸ்வீட் மனு …” என்றாள் .

” நிஜம்மாகவா …? ” என்றான் அவன் ஆழ்ந்த குரலில் .

” என்ன நிஜம்மாகவா ..? “

” நான் ஸ்வீட்டா …? “

” ஆமாம் …நிச்சயமாக .தித்திக்கும் இனிமையான ஸ்வீட் நீங்கள் …” அவனது இனிய பேச்சை மனதில் வைத்துக்கொண்டு இதனை கூறினாள் வைசாலி .

” பிறகு ஸ்வீட்டை  சும்மா பார்த்துக்கொண்டே ஐ…மீன் கேட்டுக்கொண்டே மட்டும்  இருந்தால் எப்படி சாலி ..? ம் …” என்றவன் நிறுத்தி ” தின்னாமல் ..” என்றான் குழைவான குரலில் .

முகம் சிவக்க மௌனமானாள் வைசாலி .

” என்ன சாலி எப்போது தின்ன போகிறாய் …? ” மேலும்  சீண்டினான் .

” மனு நான் இப்போது லன்ஞ் டயமில் ஸ்டுடியோவில் வெளியே வந்து உட்கார்ந்து உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன் .இப்போது போய் இப்படி பேசினால் எப்படி …? “

” இப்படின்னா …எப்படி ..சாலி  …? அப்படி …எப்படி பேசுகிறேன. …? “

” அதெப்படி மனு எனக்கு கார்களின் மீது இன்ட்ரெஸ்ட் என்று கண்டுபிடித்து இந்த வேலையை எனக்காக ஏற்பாடு செய்தீர்கள் …? ” மனோகரனின் சீண்டலிலிருந்து தப்ப இந்த கேள்வியை கேட்டாள் வைசாலி .

ஒரு நிமிடம் பேசாமல் இருந்தான் .பின் ” ஒரு விசயம் பேசிக் கொண்டிருக்கும் போது , இப்படித்தான் உன் வசதிக்கு வேறு விசயம் மாற்றிக் கொள்வாயா ..? ” கிண்டலாக கேட்டான் .

” இதுவும் பேச வேண்டிய விசயம்தான். சொல்லுங்களேன் மனு …,”

” ஆமாம் இதுவும் பேச வேண்டிய விசயம்தான் . .உனக்கே உன்னை தெரியவில்லை .என்ன தெரியுமென்றால் மேக்கப்பை தவிர ஒன்றும் தெரியாது என்கிறாய் .குரலில் அவமானம் வேறு .எனக்கு அப்படியே உன்னை அறையலாம் போல் இருந்த்து .இப்படியா தந்நிலை உணராது இருப்பாய் …? “

” எனக்கே என்னை தெரியவில்லை .நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் மனு ..? ” ஆச்சரியமாக கேட்டாள் .

” ஏனென்றால் நான் உன்னை …உன்னை விட அறிவேன் . நீ என்னுடன. பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் என் மனதிற்குள் பூட்டி வைத்திருக்கிறேன் .உன்னையே அறியாமல் நீ என்னுடன் பேசியதெல்லாம் இந்த கார்களைப் பற்றிதான் .அதன் சின்ன சின்ன நுணுக்கங்கள் கூட தெரிந்து வைத்திருந்தாய் .எவ்வளவு விபரங்கள் தெரிந்திருக்கிறாய் என ஆச்சரியப்பட்டேன் “

” இதெல்லாம் எனக்கு அப்பா எனது விபரம் தெரிந்த வயதிலிருந்து கூறி வந்த விசயங்கள் மனு .அது அப்படியே பசுமரத்தாணி போல் மனதில் பதிந்துவிட்டது “

” ஆமாம் அதை நான் உணர்ந்து கொண்டேன் .உனக்குரிய வழி இதுதான் என முடிவெடுத்தேன் .கரணும் , சுரேஸும் அவர்கள் அப்பா தொழில் போக தனியாக தங்களுக்கென செய்ய என இந்த தொழிலை தேர்ந்தெடுத்து விட்டு , பைனான்ஸுக்காக என்னை அணுகியிருந்தார்கள் .”




” ஓ…இதை சொல்லி மிரட்டிதான் அன்று அவர்களை மன்னிப்பு கேட்க வைத்தீர்களா …? “

” இது மட்டுமல்ல , அவர்கள் தந்தையின் தொழில் நம் தொழிலோடு பிணைந்துள ளது. என்னை பகைத்துக் கொண்டால் அவர்கள் தந்தையோ, அவர்களோ தொழில் செய்யமுடியாது .இப்போது அவர்களால் உனக்கு ஏதாவது ….”

” சே..சே …மிகவும் நல்ல பிள்ளைகளாகி விட்டார்கள்பா …”

” எனக்கும் வேறு தொழில்கள் உண்டு .அவர்கள். இருவருக்கும் வேறு தொழில்கள் உண்டு .நாங்கள் எப்போதாவதுதான் வருவோம் .நீதான் முழு பொறுப்பேற்று இந்த சென்டரை நடத்த வேண்டும் சாலி ..”

” என்னால் முடியுமா மனு..? ” வைசாலிக்கு மீண்டும் பிரமிப்பு உண்டானது .

” முடியனும்.உன்னோட சம்பளம் எவ்வளவுன்னு தெரியுமா ..? அதற்கேற்ற வேலை செய்ய வேண்டாம் …? ” செல்லமாக அதட்டினான் .

இவன்தான் எவ்வளவு ஆதரவானவன் .அனுகூலமானவன் .வைசாலிக்கு பேச்சு வரவில்லை .

” இதற்கெல்லாம் நான் எப்படி நன்றி சொல்ல போகிறேன் மனு …? ” குரல் தழுதழுக்க கேட்டாள் .

” வாய் வழியாகத்தான் ….” கிண்டல் செய்தான் .

” அது எனக்கு தெரியும் .கேட்டுக் கொள்ளுங்கள் .உங்களுக்கு எனது ஆயிரமாயிரம் நன்றிகள் ….”

” ம்ஹூம் இது அழுகுணி ஆட்டம் .இந்த நன்றியை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் …”

” ஏன் …? “

” நான் வாய் வழியாக கேட்டால் ….? “

” வாய் வழியாகத்தானே …” என ஆரம்பித்தவள் சட.டென மௌனமானாள் .

” என்னடா சாலி …பாதியில் நிறுத்தி விட்டாய் …? “

” மனு ..நான் இங்கே …”

” சரி ..சரி வெளியில் இருக்கிறாய் அதுதானே…? உன்னுடைய இந்த பிரச்சினைக்கும் பதில் நானே தருகிறேன் “




நெஞ்சம் படபடக்க எதிர்பார்ப்போடிருந்த வைசாலியின் காதுகளில் அழுத்தமாக விழுந்த்து ” இச் ” என்ற சத்தத்துடன் ஒரு முத்தம் .

கன்னங்கள் ஈரம் உணர ,சூடான மூச்சுக் காற்றுடன் கண்களை இறுக மூடி அந்த முத்தத்தை உள் வாங்கினாள் வைசாலி .

” இதிலும் நான்தான் பர்ஸ்ட் செல்லம் …கொடுப்பதில் …அப்போ …வாங்குவதில் …. ” என அவன் குறும்பாய் நிறுத்த …

” கொடுப்பதை விட வாங்குவது எளிதானது .ஆனால் எளிதில் வாங்கி விட முடிவதில்லை …” உதடு நடுங்க தன் நிலையை  கூறிவிட்டு , அவனது ஆழ்ந்த சிரிப்பை கேட்கும் முன்பே போனை கட் செய்தாள் .கன்னங்களை இரு கைகளிலும் தாங்கி சுகமான பெருமூச்சு ஒன்றுடன் மரத்தில் சாய்ந்து கண் மூடிக்கொண்டாள் .

விநோதமாக அவளை பார்த்தபடி தள்ளி நின்று கொண்டிருந்தாள் வேதா .

What’s your Reaction?
+1
5
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!