kana kanum kangal Serial Stories கனா காணும் கண்கள்

கனா காணும் கண்கள் – 19

19

 

மிருதுளா மறுநாளும் அவளது விசாரணையை தொடர்வதற்கு அங்கே வந்திருந்தாள் .இன்று மகிபாலன் அறியாமல் வந்திருந்தாள் .கோயம்புத்தூரில் ஒரு வேலையாக அவன் அதிகாலை ப்ளைட்டில் சென்றுவிட ஷாப்பிங் என்ற போர்வையில் தாயை சமாளித்து விட்டு இங்கே வந்து விட்டிருந்தாள் . இன்று வேறு  யாரிடமும் போகாமல் நேரடியாக ரோசலினிடமே வந்துவிட்டாள்

 




” உங்கள் அக்காவிடமும் தான் பாலா சார் இப்படி பழகிக் கொண்டிருந்தார் .நாங்கள் அவர்கள் இருவரும் தான் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக நினைத்திருந்தோம்

 

விழட்டுமா என்று கேட்டபடி தலைக்கு மேல் ஆடிக்கொண்டிருந்த இரும்புக் குண்டை உச்சந்தலை மேல் உணர்ந்தாள் மிருதுளா.

 

” எப்படி பழகிக் கொண்டிருந்தார் ? ” அவள் நாவு உணர்ந்தது.

 

நேற்று உங்களுடன் அங்கே இருந்தாரே அதுபோல்முன்தினம் அவர்கள் இருவரும் அணைத்தபடி நின்ற இடத்தை விரலால் சுட்டிக்காட்டினாள். அது போலவா இத்தனை பேர் பார்க்க மதுராவிடமும் அவன் அப்படித்தான் நடந்து கொண்டானா ? மிருதுளா மனம் கொதித்தது

 

” பாலா சார் எங்களுடனேயே தங்கி கொண்டார். அவரை பார்ப்பதற்கு என்று மதுரா மேடம் அடிக்கடி வருவார்கள் .இருவருமாக சேர்ந்து இந்த கடற்கரையில் பேசி சிரித்தபடி நடந்து கொண்டிருப்பார்கள் .அப்போதுதான் …” கையை உயர்த்தி அவள் பேச்சை நிறுத்தினாள் மிருதுளா.

 

” போதும் அப்புறம் சொல்லு ” 




 

” இன்னும் சொல்ல என்ன இருக்கிறதுசில நேரம் ஒட்டிக் கொண்டும் உரசிக் கொண்டும் சந்தோசமாக பேசிக் கொள்வார்கள் .சில நேரம் சண்டையிட்டுக் கொள்வார்கள் .எல்லாம் அதோ அங்கே தள்ளி நின்று நாங்கள் பார்த்துக் கொண்டு இருப்போம் .சொந்தக்காரர்களின் சண்டையில் வேலைக்காரர்கள் எங்களால் தலையிட முடியுமா ? “

 

” பாலா சார் எங்களுடன் சேர்ந்து வேலை பார்க்கும்போது என் மாமாவிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லுவார். இந்த பிரச்சனையை தீர்த்து கோட்டியா கட்டி முடித்து மாமாவிற்கு காட்ட வேண்டும் என்பார் .அப்போதுதானே மாமனார் மனம்கவர்ந்த மருமகன் ஆகி அவருடைய மாப்பிள்ளை ஆகலாம் என்று நாங்கள் கிண்டல் பேசுவோம் .அதற்கு சிரித்துக்கொண்டே தலையாட்டிக் கொள்வார் ” 

 

அந்த தலையாட்டல் எனக்காகவாமிருதுளாவின் மனம் பட படத்துக்கொண்டது.

 

” பாலா சாரும் மதுரா மேடமும் பழகும் விதத்தை வைத்து இந்த ப்ராஜக்ட் முடிந்ததும் நிச்சயம் அவர்கள் திருமணம் நடந்து விடும் என்றுதான் நாங்கள் நினைத்திருந்தோம் .அடுத்து இப்படி கூறி மிருதுளாவின் மன நப்பாசையை தகர்த்தாள் ரோசலின்.

 

ஆனால் கப்பல் கட்டி முடிக்கும் கடைசி நேரத்தில் ஒரு நாள் மதுரா மேடத்திற்கும் பாலா சாருக்கும் பெரிய சண்டை வந்தது .மதுரா மேடம் நீ ஏமாற்றுக்காரன்

இனி என் முகத்திலேயே விழிக்காதே. என் வீட்டிற்குள் நுழைய




முடியாது ” என்று கத்தியபடி ஓடிப் போய் காரில் ஏறினார் .அன்றுதான் மேடத்தை நாங்கள் கடைசியாக பார்த்தது. அதன் பிறகு அவர் படிப்பதற்காக வெளிநாடு போய் விட்டதாக கலிவரதன் சார் சொன்னார் ” 

 

பாலா சாரை கல்யாணம் செய்துகொள்ள முடியாது என்று மதுரா மேடம் சொல்லிவிட்டு ஃபாரின் போய்விட்டார் என்று நினைக்கிறேன் .பாலா சார் ஏதோ செய்து உங்களை கல்யாணம் முடித்துக்கொண்டு எப்படியோ அவருடைய ஆசை போல முதலாளி ஆகிவிட்டார்

 

 

இவ்வளவு கவனமாக ரோசலின் தங்கள் குடும்ப நிகழ்வுகளை கவனித்திருப்பதை திகைப்பாய் பார்த்தாள் மிருதுளா. இதன் காரணம் அவளுக்கு மகிபாலன் மேல் இருக்கும் ஈர்ப்பாக  இருக்கலாம் என்று நினைத்தாள்.

 

” உனக்கு ஜான்பீட்டரை தெரியுமா ? ” 

 

இந்தக் கேள்விக்கு ரோசலின் திடுக்கிட்டாள். அவரைப் பற்றி உங்களுக்கு எப்படி தெரியும் ? ” 

 

” தெரியும். சொல்லு அவர் யார்இப்போது எங்கே இருக்கிறார் ? ” 

 

” அவரும் எங்கள் கூட்டத்து ஆள்தான் .எங்களோடு சேர்ந்து வேலை பார்த்தவர் .மதுரா மேடத்திற்கு மிகவும் வேண்டியவர் ” 

 

” மிகவும் வேண்டியவர்இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் ரோசலின் ? ” 

 

” அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க மேடம் .இங்கே எங்களுக்குள் பேசிக் கொள்வதைதான் சொல்கிறேன். நாங்கள் அப்படித்தான் ஜான் பீட்டரை சொல்லுவோம் .உன்னுடைய ஆள் என்று ” 

 

” உன்னை எல்லோரும் பாலா சாருடைய ஆள் என்று சொல்வது போலா ?”  மிருதுளா யூகித்து கேட்க ரோசலின் உதடு கடித்து நின்றாள். ஏக்கம் ஒன்று அவள் கண்களில் தெரிந்தது.

 




ஆக எல்லா இடங்களிலும் தொழிலாளர்களிடையே தங்களுக்கு நம்பிக்கையான ஒருவரை முதலாளிகள் வைத்திருப்பது உண்டு. அப்படி மகிபாலன் ரோசலினையும் மதுரா ஜான்பீட்டரையும் வைத்திருந்திருக்கிறார்கள் என புரிந்து கொண்டாள் மிருதுளா.

 

” அந்த ஜான் பீட்டர் இப்போது எங்கே இருக்கிறார் ? ” 

 

” தெரியலையே மேடம் .திடீரென்று காணாமல் போய்விட்டார் .அவருக்கு அப்பா அம்மா கிடையாது .சித்தி சித்தப்பாவிடம் தான் வளர்ந்தார் .அவர்களும் அவரை தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள் .எங்கேயும் வெளியூருக்குப் பிழைப்புத் தேடி போய் விட்டாரோ என்னவோ ? ” 

 

இனி அங்கே தனக்கு வேலை இல்லை என்று எண்ணிய மிருதுளா கிளம்பினாள்

 

மிருதுளா மேடம் பாலா சாரை முழுவதும் நம்பிவிட வேண்டாம் ” கடல் காற்றுடன் பெரு நெருப்பாய் இணைந்தது ரோசலினின் குரல்.

 

” அவரை என் கணவர் இடத்திலிருந்து இறக்கி விட்டால் மீண்டும் தொழிலாளி ஆகி இங்கே உங்களுடன் வந்து சேர்ந்து கொள்வார் என்று நினைக்கிறாயா ரோசலின் ? ” போகிற போக்கில் கேட்டு விட்டு போன

 மிருதுளாவின் கேள்விக்கு ரோசலின் முகம் பேயறைந்தது போல் ஆனது.

 

” பகல் முழுவதும் எங்கே போனாய் ? ” மகிபாலனின் கேள்விக்கு அலட்சியமாய் பார்த்தாள்.

 

” ஜான் பீட்டரை தேடி போனேன் ” சொல்லிவிட்டு அவன் முகத்தை கூர்ந்து பார்க்க அங்கே அதிர்ச்சி தெளிவாக தெரிந்தது.

 

” ஜான்பீட்டர் என்ன செய்தீர்கள்  மகி

 கொன்று விட்டீர்களா   ? அக்காவை என்ன செய்தீர்கள்அவளையும்  …”  கேட்டு முடிக்கும் முன்பே விம்மல் வந்துவிட முகத்தை மூடிக்கொண்டாள். மெத்தென்ற  தலையணை  போலொரு அணைப்பை உணர்ந்தாள் .மென்மையாய் அவளை தன் மார்போடு அணைத்து இருந்தான் மகிபாலன்.

 




” வேண்டாம்டா குட்டி எதையாவது நினைத்து மனதை குழப்பிக் கொண்டே இருக்காதே .” அவனுடைய ஆறுதல் அந்த நேரத்தில் தனக்கு மிகவும் தேவையாய் இருப்பதை குழப்பமாய்  உணர்ந்தாள்

 

” என்னை விடுங்கள் நீங்கள் இப்படி என்னிடம் தப்பு தப்பாக நடந்து கொண்டு என் கவனத்தை திசை திருப்ப பார்க்கிறீர்கள் ” 

 

” தப்பு தப்பாக வாகணவன் மனைவியை அணைத்தால் அது தவறா ”  அவனுக்கு கோபம் வந்திருந்தது.

 

” அவளை ஏமாற்றி சொத்துக்களை பிடுங்குவதற்கு வேஷம் போட்டால் அது தவறுதான் ” பேச்சின் முடிவில் அவன் கைகளுக்குள் சிக்கி கொண்டு திணறினாள் .

 

” என்னடி சொன்னாய்என்னை பார்த்தால் உனக்கு வேஷதாரி போல் தெரிகிறதா ? ” ஆத்திரத்துடன் அவள் தலை முடியைப் பிடித்து உலுக்கியவனை நிமிர்ந்து கண்களுக்குள் பார்த்து ”  ஆமாம்டா ” என்றாள்.

 

அவனது ‘ டி ‘ க்கு பதிலளிக்கத்தான்  ‘ டா ” சொன்னது. ஆனால் அதன் விளைவாக மிருதுளா மகிபாலனுடைய அந்த முத்தத்தை மீண்டும் எதிர்கொள்ள வேண்டி இருந்தது .ஒரு முறை அல்ல மீண்டும்மீண்டும்மீண்டும்

 

” டேய் போதும் விடுடா .என் உயிரே போவது போல் இருக்கிறது .இப்படித்தான் மதுராவின்  உயிரையும் எடுத்தாயா  ?  இதழ் அசைக்க கிடைத்த சிறு இடைவெளியில் பேசிவிட்டு முன்னிலும் அதிகமான ஆக்ரோஷ முத்தத்தை அவனிடம் வாங்கினாள்.

 

போய் விடப்போவதாக அவள் நிச்சயித்து விட்ட உயிரை காப்பாற்றவென்று அவனது போன் ஒலித்தது .அதனை அலட்சியம் செய்து மகிபாலன் அவளுள் மூழ்கியிருக்க மிருதுளா கையசைத்து அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த போனை எடுத்த போது அது நின்று போயிருந்தது. யார் என அவள் பார்க்க முனைந்த போது மீண்டும் அடித்தது. ஏதோ ஒரு நம்பர் திரையில் மின்னியது .




 

ப்ச்கொஞ்சநேரம் கையைக் காலை வச்சிக்கிட்டு சும்மா இரு குட்டிகரகரத்த குரலில் அதட்டலோடு அவள் கை போனை பிடுங்கி எறியப் போனவன் கடைசி நிமிடத்தில் அந்த நம்பரை பார்த்ததும் மனம் மாறினான் .சட்டென மிருதுளாவை உதறிவிட்டு போனுடன் அறைக்கு வெளியே போனான்.

 

அவனின்றி தடுமாறிய தனது உடலை நிலைப்படுத்திக் கொண்ட மிருதுளா வேகமாக கதவருகே போய் அவன் பேச்சை கவனித்தாள்.

 

” கடலுக்குள்ள நம் தளத்திற்கு வா பேசிக்கலாம் ”  யாரிடம் சொல்லிக்கொண்டிருக்கிறான் .

 

யாராக இருக்கும் யோசித்தபடி இருந்தபோதே அறைக்குள் வந்தவன் யார் என்ற அவளுடைய கேள்வியை கண்டுகொள்ளாமல் உடைமாற்றிக்கொண்டு காரை எடுத்துக்கொண்டு உடனே வெளியேறி விட்டான்.

 

இந்த ராத்திரி நேரம் எங்கே செல்கிறான் ?/மிருதுளாவின் மனம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்தது. அவள்  தன்னுடைய அலமாரியை திறந்து உடைமாற்றி கொண்டாள் . எப்போதாவது உபயோகிக்கும் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வீட்டின் பின்வாசல் வழியாக யாரும் அறியாமல் வெளியேறி அவர்களுடைய கடற்கரை பேக்டரிக்கு  சென்றாள்.

 

மகிபாலன் காரை நிறுத்திவிட்டு அந்த சிறு பாலத்தின் வழியாக கடலுக்குள் நடப்பதை பார்த்தாள் .அன்று இந்த பாலத்தில் ஏற மகிபாலன் தன்னை அனுமதிக்காத்து நினைவு வந்த்து. அப்படியானால் இங்கே ஏதோ இருக்கிறதோ…?

 

மிருதுளா நடுங்கும் உடலுடன் பாலத்தின் முதல் படியில் கால் வைக்க பாலம் கிடுகிடுவென ஆடியது .பதட்டத்துடன் நிமிர்ந்து பார்த்தவள் அதிர்ந்தாள் .அங்கே…. பாலத்தின் மேல் ….மதுரா நின்றிருந்தாள்.

 

 




அன்று பார்த்த அதே சிகப்பு சேலை கட்டிக்கொண்டு விரிந்த தலைமுடி காற்றில் தலையைச் சுற்றி சக்கரமாக பறக்க விழிகளில் ஒருவித ஒளி பிரகாசிக்க அவளை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தாள்.

 

” வாஇங்கே வர உனக்கு இவ்வளவு நாட்களா ? ” அதட்டலாக  கேட்டாள் .அரூபமாக இருக்கையில் 

 முதன் முதலாக பேசுகிறாள்

மிருதுளா அப்படியே அதிர்ந்து நிற்க ” வா என்றேன் ” உறுமும் குரலில் அழைத்தாள் மதுரா.

 

மிருதுளா மயக்கத்திற்கு உட்படுத்தப்பட்டவளை போல அவளை நோக்கி நடக்கமதுராவும்  இவளை நோக்கி நடந்துவந்தாள். நெருங்க நெருங்க மதுராவின் உடல் ஒளி தன்னுள் ஊடுருவியது போல் உணர்ந்தாள் மிருதுளா. ஒரு இடத்தில் இருவரும் நெருக்கமாக சந்தித்துக் கொள்ள மதுரா இரு கைகளையும் விரித்து அழைக்க ,மிருதுளா அப்படியே மதுராவின் உடலுடன் ஊடுருவி இணைந்து கொண்டாள். பின்  ஒரு மாதிரி பொம்மை போல் கை கால்களை அசைத்து கொண்டு பாலத்தில்  நடக்க துவங்கினாள்.

 




அங்கேஅந்த கப்பல் கட்டும் இடத்தில்இனியும் உன்னை ஒளித்து வைக்க முடியாது  . என் மனைவிக்கு சந்தேகம் வந்துவிட்டது . நீ கேட்ட பணத்தை கொடுத்துவிடுகிறேன் .ஊரைவிட்டு ஓடிப்போய் விடுகிறாயா ஜான் பீட்டர் ? ”  என்ற மகிபாலனின் குரல் கேட்டது

What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!