karpoora pommai onru Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 40

  40

உன் தந்திர பின்னணியில்

என்னை துரத்திய தனிமையில்

உள் தொண்டைக்குள் இன்னமும் ஊர்கிறது

என்னை தீண்டிய

உன் கால் பெருவிரல்

” இப்போ சாப்பிட வரப்போகிறாயா இல்லையா …? “

” இல்லை ….,” சந்திரிகாவிறகு மேல் குரலுயர்த்தினாள் சாத்விகா .

” அப்படியே கிட ….” பின்வாசலில் அமர்ந்து வெளித்தோட்டத்தை வெறித்தபடி இருந்த சாத்விகாவை அலட்சியம் செய்துவிட்டு உள்ளே போனாள் சந்திரிகா .

” நீங்க வாங்க. சாப்பிடலாம்  …” கணவரையும் , மகனையும் அவள் அழைக்கும் சத்தம் கேட்டது .தொடர்ந்து அவர்கள் மூவருமாக டேபிளில் அமர்ந்து உணவுண்ணும் சத்தம் மெல்லிய புரியாத பேச்சுக்களிடையே கேட்டது .வீட்டுக்கு வந்த மருமகள் சாப்பிடாமல் வெறும் வயிற்றுடன் உட்கார்ந்திருக்கிறாள் .இவர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து இப்படி வயிற்றை ரொப்புகிறார்களே .இது அவர்கள் உடம்போடு சேருமா …? இந்த குடும்பம் உருப்படுமா …? தனக்குள் பொருமியபடி அமர்ந்திருந்தாள் சாத்விகா .




அவள் அமர்ந்திருத்த பின்வாசல் பக்கம் யாரும் எட்டி கூட பார்க்காமல் எல்லோரும் சாப்பிட்டு முடித்துவிட்டு அவரவர் வேலையை பார்க்க போய்விட்டனர் .சாந்தினி கெஞ்சலுடன் சாப்பிட கொடுத்த உணவை திரும்பியும் பாராமல் ஒதுக்கிவிட்டு வீட்டை விட்டு வெளுயேறினாள் .

நேராக பிரேமலதா கொடுத்திருந்த அட்ரஸுக்கு ஆட்டோ பிடித்தாள் .பிரேமலதா இப்போது டாக்டர் தொழிலில் இருந்து ஒய்வு பெற்று மகன் , மருமகளுடன் வீட்டில் வசித்து வந்தாள் .உடனேயே போய் நிற்கவேண்டுமா …என்ற நெருடலுடனேயே அவள் வீட்டு காலிங்பெல்லை அடித்தாள் சாத்விகா .

” ஆவோ …பேட்டி …ஆவோ …” ஆர்ப்பாட்டமாய் வரவேற்றாள் பிரேமலதா .

” உங்களுக்கு தொந்தரவில்லையே மேடம் …? ” சாத்விகா தயங்கி கேட்க …

” மகனும் , மருமகளும் வேலைக்கு போயாச்சு , பேரப்பள்ளைங்க காலேஜ் போயாச்சு .தனிமையில் போரடித்து இருந்தேன் .நீ வந்துவிட்டாய் ….” என பேச ஆரம்பித்த பிரேமலதாவை அவளது ஆரம்ப காலங்களிலிருந்து தனது தேவை காலத்திற்கிள் இழுத்து வருவதற்குள் சாத்விகா திணறி போனாள் .

ஒரு வழியாக அவளை மீண்டும் பஸ்ட்டி மருத்துவமனைக்கு இழுத்து வந்து நிறுத்திய பிறகு பிரேமலதா கொஞ்ச நேரம் மௌனமானாள் .

” நான் டாக்டர் .சந்தரிகா நர்ஸ் .அவளை விட பதவியில்  அனுபவத்தில் வயதில் பெரியவள் நான் .ஆனால் மனதில் சந்திரிகா மிக மிக உயர்ந்தவள் .அந்த பஸ்ட்டி மருத்நுவமனை இருந்த இடத்தை பார்த்திருப்பாயே …தாழ்ந்த சாதிக்கார்ர்கள் என ஒதுக்கப்பட்டவர்கள் அதிகம் இருக்கும் இடம் அது .மிக எளிய சமூகத்தை சேர்ந்தவர்கள் அவர்கள் .படிப்பறிவற்ற பாமர மக்கள் .இளவயது திருமணம் , பல தார மணம் , வீட்டு வேலை என்ற பெயரில் கொத்தடிமை தனம் என பல துன்பங்களை அங்கிருந்த ஆதிக்க சாதியினரால் எளிய சாதி மக்கள் அனுபவித்து வந்தனர் .எப்பொழுதும் துன்பம் தாங்கும் ஒரு சமூகத்தில் முதலில் அதிகம் பாதிக்கபடுவது அந்த இன பெண்கள்தான் .அதுவும் பாலியல் ரீதியாக .நம் சமூகத்தில்  பெண்ணென்றாலே முதலில் அனைவர்க்கும் நினைவு வருவது செக்ஸ்தான் . அவள் அதற்காக மட்டும்தான் படைக்கப்பட்டிருப்பதாக அனைவருமே நினைக்கின்றனர் .அப்படித்தான் அந்த இன பெண்களும் உயர்ந்த சாதியினரால் பாலியல் ரீதியாக மிக கொடுமை படுத்தப்பட்டனர் .

பத்தாவது பிரசவம் என எளிதாக ஆஸ்பத்திரிக்கு வரும் பெண்கள் அங்கே அதிகம் .உருவாக்கியவன் யாரென்றே தெரியாத கருவோடு விழிததபடி வரும் பெண்களும் அதிகம் .நாங்கள் எல்லோரும் இந்த வகை பெண்களிடம் எரிச்சலை காட்டும் போது சந்திரிகா அவர்களை மிக அழகாக இதமான பேச்சோடு பொறுமையாக கையாள்வாள் .முடிந்தவரை அவர்கள் புத்தியோடு பிழைக்க வழி சொல்வாள் .திருமணமான பெண்களுக்கு கருத்தடை முறைகளையும் , தவறான கருக்களை சுமந்து விழித்திருக்கும் பெண்களுக்கு மறு பரிசீலனையே இன்றி கருக்கலைப்பு முறைகளையும் விளக்கி சொல்வாள் .எத்தனையோ பெண்கள்  , அவர்களின் பெற்றோர்கள் சந்திரிகாவின் கால்களை தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்வதை பார்த்திருக்கிறேன் .

பிரேமலதாவின் பேச்சுக்கள் சாத்விகாவின்  மனதினுள் பாரங்களை ஏற்றியபடி இருந்தன. சந்திரிகா மீதிருந்த அலட்சிய பாவம் மாறி ஒரு மரியாதை வந்திருந்த்து .அப்படி ஏதோ ஒரு பெயர் தெரியா பெண்ணின் வயிற்றில் சுவடில்லாத ஒருவனால் வலுக்கட்டாயமாக விதைக்கப்பட்டவளா நான் ….? எத்தனை தேடினாலும் என் மூலத்தை தெரிந்து கொள்ள முடியாதா …? விருப்பமில்லா யோசனைகளின் விளைவால் அவளது மூளை சூடாகி தலை வெடிப்பது போல் வலித்தது .

” கடவுளென்ற ஒருவன் இருக்கிறானா என நான் சந்தேகப்பட்ட நேரங்கள் அவை ….” தன்னுள் மூழ்கியிருந்த சாத்விகா பிரேமலதாவின் வார்த்தைகளில் கலைந்து நிமிர்ந்தாள் .

” என்ன டாக்டர் …எதை பற்றி சொல்கிறீர்கள் …? “

” கேப்டன் சக்கரவர்த்தி பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன் . அவரது ராணுவ பணி 1990 களில் காஷ்மீர் பகுதிகளில் இருந்த்து .அடிக்கடி  வாலாட்டும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கும் நமது எல்லை பாதுகாப்பு வீர்ர்களுகளில் அவரும் ஒருவராக இருந்தார் . கணவரின அடித் தொடரும் மனைவியாக சந்திரிகாஙும் அவரை பின்பற்றி குடும்பத்துடன் காஷ்மீர் போனாள் .அங்கே தன்னால் முயன்றவரை கணவருக்கு உதவினாள் .”

” அங்கே …போர்க்களத்தில் பெண்களுக்கென்ன வேலை …? கணவர் சண்டையிட போய்விடுவார் …மனைவி அவருக்காக உணவு சமைத்து காத்திருக்க வேண்டுமா …? இதுதான் நாட்டு சேவையா …? இதற்காகத்தான் கணவர் பின் போனாரா …?”




” இல்லைம்மா .சந்திரிகா அது போல் கணவருக்கு துணி துவைத்து , சமைத்து போட்டு டிவி பார்த்து என வாழ்க்கை ஓட்டும் ஒரு சாதாரண பெண்ணில்லை .அவள் கணவனுக்கு சமைத்து போடுவதோடு அவனது வேலைகளிலும் உதவுபவள் .1990 – 91 வருடங்களில் காஷ்மீர் பகுதியில் அப்பாவி மக்களிடையே மதவாத்ததை விதைத்து அவர்கள் அறிவை மழுங்க செய்யும் முயற்சியாக ஒரு பிரிவினைவாத குழு பாகிஸ்தானிலிருந்து நம் நாட்டினுள் நுழைந்து விட்டதாகவும் அவர்களை கட்டுப்படுத்தும. பணி சக்கரவர்த்தக்கு தரப்பட்டிருப்பதாகவும் , அவருக்கு உதவ தானும் அங்கே போய்  அந்த கிராமத்தில் தங்க போவதாகவும் சந்திரிகா சொல்லி சென்றாள் .நாட்டு நலனை மட்டுமே எண்ணி சென்ற அந்த குடும்பத்தினர் மனம் முழுவதும் ரணத்தோடு திரும்ப வந்தனர் …

பேசிக் கொண்டிருந்த பிரேமலதா ஏதோ யோசனையில் ஆழ்ந்து நிறுத்தி விட , சாத்விகாவின் மனதில் சக்கரவர்த்தி , சந்திரிகா மேல் மிகுந்த மரியாதை தோன்றியது .நாட்டை காப்பாற்றியவர்கள் …எல்லோருக்கும் கிடைப்பதில்லை இந்த வாய்ப்பு .அப்படி கிடைத்ததில் எத்தனை பேர் இதனை நாட்டிற்கென முழுக்க முழுக்க உபயோகப்படுத்துகின்றனர் .அவர்கள் வீட்டிற்கு வாழ வந்த பெண் என்பதில் ஒரு பெருமிதம் தோன்றியது சாத்விகாவினுள் .

” பஸ்ட்டியில் இருந்து காஷ்மீர் பகுதிக்கு இதற்காகவே மேடம் போனார்களா …? “

சாத்விகாவின் கேள்வியில் பிரேமலதா ஆச்சரியமானாள் .” மேடம் …சந்திரிகாவையா சொன்னாய் …? அவள். உனக்கு மாமியாரில்லையா …? அத்தை என்று சொல்ல மாட்டாயா …? “

நாக்கை கடித்து கொண்டாள் சாத்விகா .மேடமென்று கூப்பிடு என்று சந்திரிகா சொன்ன நாளிலிருந்து அவளை மேடமென்றே அழைக்கிறாள் சாத்விகா .வீரேந்தர் – சாத்விகா திருமணம் முடிந்து பறகும் வேண்டுமென்றே அப்படியே அழைக்க , அந்த வீட்டில் யாரும் அதனை கண்டுகொள்ளவே இல்லை .இப்போதும் அப்படியே வாயில் வந்து விட ” அ…அது ..உங்களுக்காக …ஒரு மரியாதைக்காக …” என சமாளித்து கொண்டிருந்த போது காலிங்பெல் ஒலித்து அவளுக்கு ஆசுவாசமளித்தது .

பிரேமலதா எழுந்து செல்ல ஒரு பெருமூச்சுடன் பின்னால் சாய்ந்தமர்ந்தவளின் காதில் விழுந்த குரலில் விதிர்த்து எட்டி பார்த்தாள் .பிரேமலதாவுடன் தாழ்ந்த குரலில் பேசியபடி வந்து கொண்டிருந்தவன் வீரேந்தரேதான் .அடப்பாவி …இவன் எங்கே ..இங்கே வந்தான் …? நான் இங்கே இருப்பது இவனுக்கு எப்படி …யோசித்தவளுக்கு முன்தினம் அவனிடம் பிரேமலதா பற்றி சொன்ன நினைவு வர , .முட்டாள் இப்படியா உளறி வைப்பாய் … தன் தலையில் தானே தட்டி கொண்டு நிமிர்ந்தவள் அவளது அந்த செய்கையை பார்த்தபடி வாசலில் நின்ற வீரேந்தரை பார்த்ததும் கைகளை இறக்கி கொண்டு பின்னால் சாய்ந்து கொண்டு என்ன எனபது போல் ஒரு பார்வை பார்த்து வைத்தாள் .

உணரச்சியற்ற பார்வை ஒன்றை அவள்புறம் வீசியவன் பிரேமலதா கொண்டு வந்த டீயை மரியாதைக்காக இரண்டு மிடறு அருந்தி வைத்துவிட்டு ” வருகிறோம் …” என இவளுக்கும் சேர்த்து விடைபெற்றான் .நான் பேசிக்கொண்டிருக்கிறேனே ..உன்னை யார் எனக்கும் சேர்த்து வணக்கம் வைக்க சொன்னது ..என எண்ணியபடி திரும்பிய சாத்விகா ,பிரேமலதாவை பார்க்க  அவள் முகத்தில்  சாத்விகா கிளம்பாவிட்டால் அவளை இழுத்து போய் வாசலில் விடும் பாவனையை கண்டு  , பேசாமல் வாலை சுருட்டிக்கொண்டு போய் ஙீரேந்தருடன் காரில் ஏறிக்கொண்டாள் .

ஒரு வார்த்தை கூட அவளிடம் பேசாமல் வீரேந்தர் கார் ஓட்ட , சாத்வகாவினுள் அவளது பறப்பு இது போல் ஒன்றாக இருக்கலாமோ …என்ற பிரேமலாதா சொன்ன விபரங்கள. மூலம் கணித்தது மனம் முழுவதும் இம்சித்தபடி இருந்த்து . அவள் குறைகளை அவள் வீரேந்தரை தவிர யாரிடம் சொல்வாள் …? அம்மா , அப்பா , அண்ணன் என அவள் சொல்லை வேதவாக்காக எடுத்துக் கொள்ளும் சொந்தங்கள் சுற்றி இருந்த போதே  , ,ஏதோ உந்துதலில் தன்  மனக்குறையை சொல்ல அவள் வீரேந்தரைத்தான் தேர்ந்தெடுத்தாள் .கட்டாயங்கள் இல்லாதபோதும் அவனும் அவளை செவிமடுத்தான் .இப்போதோ அவள் வாழ்வின் முக்கிய அங்கமாய் அவன் ஆனபோதோ காதில் பஞ்சடைத்தது போல் அமர்ந்திருக்கிறான் .

” உங்கள் அம்மாவும் , அப்பாவும் காஷ்மீரில் இருந்த விபரங்களை டாக்டர் சொல்லிக்கொண்டி்ருந்தார் …” ஒரு ம் கூட சொல்லாமல் ரோட்டிலேயே இருந்த்து வீரேந்தரின் பார்வை .முகம் மிக இறுகி இருந்த்து .

” என்ன சொன்னார் …? ” உயிரற்ற வறண்ட குரலில் கேட்டான் .

” பாகிஸ்தானிலிருந்து நம் நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள மக்களின் மனதில் மத்த்தின. பெயரால் பிரிவினையை தூண்டிவிட்ட பிரிவினைவாத குழுவை பற்றி சொன்னார்.அவர்களால் பாதிப்படைந்த அந்த பகுதி கராம மக்களுக்கு உதவிய உங்கள் அம்மாவை பற்றி சொன்னார் .இது பற்றி உங்களுக்கு என்ன விபரங்கள் தெரியும் …? “

“அப் போது நான்சின்ன பையன் .அந்த  விபரங்களை நீ கேப்டனிடமே கேட்டுக் கொள் .உள்ளேதான் இருக்கிறார் …” காரை வீட்டின் முன் நிறுத்தினான் .அவனை முறைத்தபடி இறங்கி உள்ளே போக திரும்பினாள் சாத்விகா .




” ஒரு நிமிடம் .இனி டாக்டர் பிரேமலதாவை சந்திக்க  போகாதே .அவர் உனக்கு உபயோகப்பட மாட்டார் ….” என்றுவிட்டு விருட்டென காரை எடுத்துக் கொண்டு  போய்விட்டான் .அவன் சொன்னதன் பொருள் இரண்டு நிமிடம் கழித்ழு மூளையில் உறைக்க , தன்னிரக்கத்தினால் அழுகை வந்த்து சாத்விகாவிற்கு .

தளும்பி நின்ற கண்களுடன் உள்ளே வந்தவள் அப்படியே ஹாலில் இருந்த சோபாவில் சரிந்தாள் .பிரேமலதாவுடன் பேசியதிலிருந்து தனது பிறப்பு இழி பிறப்போ எனும் சந்தேகம் அவள் நெஞ்சை அறுக்க தவித்து கொண்டிருந்தாள் .அந்த நேர ஆறுதலுக்காக அவள் வீரேந்தரின் தோள்களையே மிகஙும் எதிர்பார்த்தாள் .அவனோ அவளை திரும்பியும் பாராது இங்கே கொண்டு வந்து தள்ளியதோடு , அவளது ஒரே நம்பிக்கையையும் சிதைத்துவிட்டு போய்விட்டான் .

அப்பாவிடம் போனிலாவது இரண்டு வார்த்தைகள் பேசலாமா ….கண்களை மூடி உள்ளுக்குள் ஆறாத்துயரோடு சிந்தித்து சரிந்திருந்தவளின் தலை ஆறுதலாய் வருடப்பட்டது .விழிகளை திறந்து பார்த்தவள் வியப்பால் மெலிதாய் அதிர்ந்தாள் .

பார்த்த நாளிலிருந்து இன்று வரை அவளிடம் ஒரு வார்த்தை  பேசாதவர் ,ஒரு பார்வை பார்க்காதாவர் .கேப்டன் சக்கரவர்த்தி .மென்மையான பார்வையுடன் ” அழறியா என்ன …? எதற்கு …? ம் …” என செல்ல அதட்டலோடு அவளருகே அமர்ந்திருந்தார் .சாத்விகாவின் மனதில் சண்முகபாண்டியன் ஞாபகம் வர , தன்னை மீறி விம்மல். எழ அப்படியே அவர் தோள்களில் சாய்ந்து கொண்டாள் .

What’s your Reaction?
+1
20
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!