karpoora pommai onru Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 38

   38

ஈர வாழையிலை மல்லிகை சரத்தினுள்
எளிமையாய் வாழ்த்தை சொல்லி போகிறாய் 
முடிந்து வைத்த வாழ்த்தொன்றுடன் 
முந்தானை பாரமிழுக்க 
நெடுங்காலமாய் 
விழித்தபடி நான் .

இன்று ஒரு பார்ட்டி இருக்கிறது அம்மா …அவளை கிளம்ப சொல்லுங்கள் ….”

” எனக்கு மூட் இல்லை .என்னால் வர முடியாதுன்னு சொல்லுங்க …”

” மூட் பார்த்து போக வேண்டிய பார்ட்டி இல்லை இது .அவசியம் போயே ஆகவேண்டும்மா .அவள் கிளம்பியே ஆகவேண்டும் ….” 

” சும்மா இந்த அவசியம் , ஆத்திரமெல்லாம் என்கிட்ட சொல்லாது ்நான் வரமாட்டேன்னு சொல்லுங்க …”

தன்னை நடுவில் வைத்துக்கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்த கணவன் , மனைவியை கவலையாய் பார்த்தாள் சந்திரிகா .

” வீரா என்ன ஆச்சு ….? “

” ஒண்ணும் ஆகலைம்மா. இது முக்கியமான பார்ட்டி . புதிதாக  திருமணம் முடித்த மனமொத்த தம்பதிகள்னு நினைத்து ஒரு மரியாதையான மனிதர் இந்த பார்ட்டியை ஏற்பாடு செய்திருக்கிறார் .நிச்சயம் இதனை தவிர்க்க முடியாது அதனால் ….” கிளம்ப சொல்லுமாறு தாயிடம் அவன் அவளை சைகை காட்ட , அந்த அலட்சிய சைகையில் ஆத்திரமான சாத்விகா …

” முடியாதுன்னா ….முடியாது …” எனக் கத்திவிட்டு மாடியேறினாள் .

” உங்களுக்கும் ,சாப்க்கும் ஏதாவது பிரச்சனையா திதீ..? ” கோபத்தில் அவள் குடிக்காமல் பாதியில் வைத்து விட்டு வந்த ஜூஸை மாடிக்கு கொண்டு வந்திருந்தாள் சாந்தினி .மிக கவலை தெரிந்த்து அவள் குரலில் .




” உன்னை யார் இப்போது கொண்டு வர சென்னது ….? ” எரிந்து விழுந்தாள் சாத்விகா .அவளுக்கு தெரியும் .அவள் பாதியில் வைத்து போனதை சாப்பிடாமல் போகிறாளே என்ற கவலையில் அம்மாவும் , மகனும்தான் சேர்ந்து கொடுத்து விட்டிருப்பார்கள் .இதில் ஒன்றும் குறைச்சலில்லை …

” அவள் குணம் உனக்கு தெரியும்தானே வீரா .நீ கொஞ்சம் பொறுத்து போயேன் ….”  மாடியேறும் போது சந்திரிகா வீரேந்தரிடம் தாழ்ந்த குரலில் கூறிக்கொண்டிருந்த்து அவள் காதில் விழுந்த்து .சை …புரிந்து கொள்ள முடியாத ஜென்மங்கள் இந்த வீட்டில் இருக்கும் எல்லோரும் .வெறுப்போடு ஜூஸ் தம்ளரை எடுத்தவள் சோர்ந்திருந்த சாந்துனியின் முகத்தை பார்த்ததும் தன்னை தானே நொந்து கொண்டாள் .

” சாரி சாந்தினி .எனக்கு ஏதோ மனக்குழப்பம் .அதுதான் உன்னிடம் கொஞ்சம் கடுமையாக பேசிவிட்டேன் ….”

” ஐய்யோ என்னங்க திதீ …நீங்க போய் நானுக்கு மன்னிப்பு கேட்டுட்டு ….ரொம்ப கவலை தெரிந்தீர்கள் .அதுதான் கேட்டேன் ….”

சை …இவளெல்லாம் கவனிக்கும் அளவு மூஞ்சியை  வைத்துக் கொண்டிருந்திருக்கிறோமே ….எண்ணியவள் முகத்தை மென்மையாக்கியபடி ” ஒன்றுமில்லை சாந்தினி .நீ போ …” என அவளை அனுப்பினாள் .

கை நிறைய சாமான்களோடு உள்ளே வந்து கட்டிலில் பரப்பிய சந்திரிகா ” கிளம்பு …” என்று உத்தரவாக சொல்லவிட்டு போனாள் .

முடியாது என்று அவள் வைத்து சென்ற சாமான்களை வீசி எறிய துடித்த கைகளை அடக்கிக்கொண்டாள் .வீரேந்தருக்கும் , அவளுக்கும் பிரச்சினை வந்த்திலிருந து அவன் அவளை எங்கேயும் கூட்டி செல்வதில்லை .இப்படி வீட்டினுள்ளேயே இருந்தால் அவள் லட்சியம் நிறைவேறுவது எப்படி …? இரண்டு நாட்களாகக அவள் இப்படித்தான் யோசித்து கொண்டிருந்தாள் .வீரேந்தருக்கும் , அவன் வீட்டினருக்கும் அவள் பிறப்பில் பெரும் பங்கிருப்பது நன்கு தெரிகிறது .அதனை அவர்களுடன்  ஒட்டிக்கொண்டே இருந்தால்தான் கண்டுபிடிக்க முடியும் .இதில் சந்திரிகா பெரும்பாலும் வெளியே போவதில்லை . வீரேந்தர் பெரும்பாலும் வீட்டில் இருப்பதில்லை .

வீட்டிலேயே இருப்பவளால் அவளுக்கு எந்த பயனும் இல்லை .வீரேந்தர் அவனாகவே இவளை தவிர்த்து விடுவதால் …என்ன செய்வது …எந்த வழி போவதென சாத்விகா தவித்துக் கொண்டிருந்தாள் .இப்போது இந்த பார்ட்டி கிளம்பும் வாய்ப்பு .முதலில் வீம்பிற்கு மறுத்தாலும் இதனை கைவிட சாத்விகா தயாரில்லை .எனவே சந்திரிகா கொண்டு வந்து வைத்த சேலையை பிரித்து கட்ட தொடங்கினாள் .

” இன்னும் என்ன செய்கிறாய் …? ” கேட்டபடி வந்து நின்ற சந்திரிகா …அரை குறையாக கட்டிய சேலையோடு ஐ பாடில் முன் கொசுவத்திற்கு வீடியோ பார்த்து கொண்டிருந்தவளை பார்த்து நோகாமல் தலையிலடித்து கொண்டாள் .

” சேலை கூட கட்ட  தெரியாமல் …நல்லா வளர்த்து வைத்திருக்கிறார்கள் ….” அவளருகே வந்தவள் …” இது இப்படி லூஸா இருந்தால் சேலை இடுப்பில் நிற்காது ….” என்று அவள் பாவாடையை இழுத்து காண்பித்தவள் நாடாவை அவிழ்த்து மீண்டும் இழுத்து இறுக்கி முடிச்சிட்டாள் .இடுப்பை இறுக்கிய அவள் முடிச்சில் அவளது கோபம் தெரிய ஆ என கத்தியவளை …

” சத்தம் போட்ட …கொன்னுடுவேன் …” என மிரட்டினாள் .

” கொலைகார குடும்பம்னுதான் தெரியுமே ….” என்ற சாத்விகாவின் முனகலின் பலன்  , அவளது தலையை ப்ரஷ் செய்த போது சந்திரிகாவின் கைகளில் தெரிந்த்து .கோபமாக அவளை ரெடி செய்நாலும் சாத்விகாவின் தோற்றத்தில் அது எதிரொலிக்கவில்லை .அரை மணிநேரத்தில் கிளிப்பச்சை நிற சேலையில் மயில் கழுத்து ஊதா நிற கற்கள் மின்னிய டிசைனர் சேலையில் கிளியோ , மயிலோ என சந்தேகப்படும்படி நளினமாக தோற்றமளித்து சாத்விகாவிற்கு , பொருத்தமென சந்திரிகா அவளது நகை ஒன்றை கொண்டு வந்து போட்டுவிட்டாள் .அந்த நகை தீப வடிவு போல் நடுவில் ஒரு பெரிய வைரமும் அதை சுற்றி பொடி வைரங்களுமாக அமைந்த நெக்லஸ் , பொருத்தமான தீப  வடிவ   கம்மலுமாக சாத்விகா ஜொலித்தாள் .மறக்காமல் நெற்றி வகிட்டில் குங்கும்மிட்டு தனது அலங்காரத்தை முடித்தாள் சாந்திரிகா .

படியிறங்கி வந்தவளை பார்த்து ” ப்யூட்டி புல் …” என முணுமுணுத்து விழி விரித்தான் வீரேந்தர் .அன்று இரவு நடந்த பிரச்சினைக்கு பின்பு கொஞ்ச நாட்களாக அவள் பக்கமே பார்க்காமல் , ஏதோ அந்த வீட்டில் கிடக்கும் ஒரு ஜடப்பொருள் போல் அவளை பார்த்து கொண்டிருந்தவன் .ரசனை சொட்டிய கணவனின் பார்வையில் உடல் சிலிர்த்த சாத்விகா அவன் கண்களை சந்திக்காமல் ” போகலாம் ….” என்றாள் .

” இன்றைய பார்ட்டி நம் ராணுவ ஜெனரல் கொடுக்கிறார் .நமக்காக …புது மணத்தம்பதிகளுக்காக …நிறைய ராணுவ உயரதிகாரிகள் , அரசியல் தலைவர்கள் வருவார்கள் .நாம் இருவரும் காதலித்து மணம் புரிந்து கொண்டதாக அவர்களிடம் சொல்லி வைத்திருக்கிறேன் .கொஞ்சம் அதற்குத்தக்க நீநடந்து கொண்டால் நன்றாக இருக்கும் …” சாலையை பார்த்தபடி பேசிக் கொண்டிருந்த வீரேந்தரின் குரல் இப்போது பழைய மாதிரி மரத்த தன்மைக்கு மாறியிருந்த்து .

” அப்போ அது பொய்யா ….? “

” எது …? “

” அந்த காதலித்தது …”

ஒரு பெருமூச்சுடன் அவளை பார்த்து விட்டு மீண்டும் சாலைக்கு பார்வையை திருப்பிக் கொண்டவன் ” எனக்கு முப்பத்து மூன்று வயதாகிறது .எனது இருபத்தியாறாம் வயதிலிருந்து என் திரமணத்திற்காக அம்மா என்னை வற்புறுத்தியபடி இருக்கிறார்கள் .என்னை பொறுத்த வரை திருமணமென்பது எனக்கு நானே போட்டுக் கொள்ளும் கைவிலங்கென எனக்கு தோன்றியது .நான் திருமணமே செய்து கொள்ளாமல. நாட்டுக்கு சேவை செய்வதிலேயே என் வாழ்க்கையை முடித்து விட வேண்டுமென்றுதான் நினைத்திருந்தேன் ்ஆனால் …என் உறுதியெல்லாம் நான் குன்னூர் போகும் வரைதான் இருந்த்து …. ” வீரேந்தர் பேச்சை நிறுத்தி மௌனமாகிவிட , ஆவலுடன் அடுத்த அவனது பேச்சை எதிர்பார்த்திருந்த சாத்விகா ஏமாற்றமானாள் .

கொஞ்ச நேரம் அவனது தொடர் பேச்சிற்காக காத்திருந்து பார்த்தவள் ” ஏன் குன்னூரில் எதுவும் பிசாசு உங்களை அடித்து விட்டதா …? ” எரிச்சலாக கேட்டாள் .

” பிசாசு இல்லை . மோகினி .அறிவை கெடுக்கும் மாய மோகினி ஒன்றிடம் சிக்கிக் கொண்டேன் .இப்போது மதி கெட்டு அலைந்து கொண்டிருக்கிறேன் ….” வீரேந்தர் நிறுத்தவும் அவன் கைகளில் கிள்ளினாள் .

” நான் மோகினியா ….? அறிவை கெடுப்பவளா …? “

” நிச்சயமாக .இல்லாவிட்டால் உன்னை பற்றி எல்லாம் தெரிந்திருந்தும் உன்னையே திருமணம் முடித்திருப்பேனா …? அறிவுள்ளவன் செய்யும் காரியமா அது …? “

” அப்படி எந்த வகையில் உங்கள் அறிவை கெடுத்தேனாம் ….? ” சாத்விகா ஒரு தீவிரமான சண்டைக்கு தயாரானாள் .

ஆனால் அதற்கு தயாரில்லாத வீரேந்தர் ” நிறைய வகைகளில் ….எதனால் என்று தெரியாமலேயே என்னை தொலைத்து நின்ற நேரங்கள் எல்லாம் என் வாழ்வில் உன்னை சந்தித்த பறகுதான் நிகழ்ந்திருக்கறது .இதோ இப்போது சந்திக்க போகிறோமே ராணுவ  ஜெனரல் , அவருடன் ராணுவ மந்திரி , முப்படை தளபதிகளுடன் ஒரு அதி முக்கியமான மீட்டிங் .நாட்டையே காப்பாற்றும் அந்த வகை மீட்டிங் கில் முன்பெல்லாம் என் கவனத்தில் சிறு பிசிறு இருக்காது .ஆனால் அன்று உன்னுடன் சிறு பிள்ளைத்தனமாக போனில் ஸ்டிக்கர் அனுப்பி விளையாடிக் கொண்டிருந்தேன் .இதை …இந்த முட்டாள்தனத்தை எதோடு சம்பந்தப்படுத்துவது ….ம் ….? “

வீரேந்தரின் கேள்விக்கு சாத்விகாவிடம் பதிலில்லை .இது போல் சில பைத்தியக்கார தனங்களை சாத்விகாவும் அனுபவித்திருந்தாள் .வீரேந்தரை சந்தித்த பிறகு .எனவே பதிலின்றி வெளியே பார்க்க ஆரம்பித்தாள் .

பார்ட்டி நடக்கும் வீடு ராணுவ ஜெனரலுடையது .அவர் மற்றும் அவரது மனைவியோடு நிறைய வி.ஐ.பி க்கள் வாசல் வரை வந்து நின்று வீரேந்தர் – சாத்விகாவை வரவேற்றனர் .இந்தியும் , ஆங்கிலமும் கலந்த அந்த வரவேற்பு வார்த்தைகளில்  ஒரு அந்நியத்தன்மை தாக்க கணவன் அருகில் நெருங்கி அவன் கைகளுடன் கை கோர்த்து கொண்டாள் சாத்விகா .ஒருவரோடு ஒரவர் உரசியபடி இருந்த அவர்களின்  அந்நியோன்யம் எல்லோரையும் கிண்டல் செய்ய தூண்ட , புது மணமக்களெனும் நிலையும் அதற்கு துணை புரிய அனைவரும் அதனை சந்தோசமாக செய்தனர் .




பாதி புரிந்தும் புரியாத அவர்களின் கிண்டலை கணவனின் தோளை பற்றியபடியே சமாளித்தாள் சாத்விகா .

” உங்கள் கணவர் எங்கும் போய்விட மாட்டார் .கொஞ்சம் எங்களுடனும் தான் வாருங்களேன் மிஸ்ஸ் .வீரேந்தர் …” என அழைத்த தோள் மறைக்காத ப்ளவுஸும் , மார்பு மூடாத சேலையும் அணிந்த அடர் லிப்ஸ்டிக் ஹை கிளாஸ் பெண்களின் அழைப்பை ” ம்ஹூம் …” என தலையசைத்து நிராகரித்தாள் சாத்விகா .

” இது போல் நிறைய பேர்களுடன் . பழகி உன் ரகசியங்களை தெரிந்து கொள்ள முடிகறதா என பார்க்கத்தானே  என்னுடன் வந்தாய் .அவர்களுடன. போகாமல் ஏன் என் தோள்களையே பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறாய் ….? அவளை உதற முயன்ற வீரேந்தரை விடாமல் பற்றினாள் .

இது போன்ற நாகரீக பெண்கள் கூட்டத்தில் அவளை பெற்றவள் இருப்பாளென அவளுக்கு தோன்றவில்லை .அறியாத அவள் மிரட்சி பார்வையும் , குழந்தை பேச்சும் ஒரு மிக அப்பாவி பெண்ணாக அவளை உருவகப்படுத்த ” உங்களுக்கு எவ்வளவு அருமையான மனைவி .நீங்கள் கிழித்த கோட்டை தாண்ட மாட்டார்கள் போலவே …” இதே வார்த்தைகளை ஒவ்வொருவரும்  வகை மாற்றி அவரவர் பாணியில் வீரேந்தரிடம் கூற , அவன் யாரும் அறியாமல் குனிந்து சாத்விகாவிடம் முணுமுணுத்தான் .

” அப்பாவியாம் …குழந்தையாம் .இந்த அப்பாவி குழந்தையிடம் மாட்டிக்கொண்டு நான் படும் அவஸ்தை எனக்குத்தான் தெரியும் ….” என்றுவிட்டு பிறரறியாமல் அவளிடம் கிள்ளு வாங்கிக்கொண்டான் .

சாத்விகாவின் அப்பாவித்தனம் விமர்சிக்கப்பட்ட அளவு வீரேந்தரின் ஆளுமைத்தனமும் புகழப்பட்டது .அங்கிருந்தோர் அனைவரும் பெரும் ராணுவ பதவியிலோ , அரசியல் பதவியிலோ இருப்பவர்களாக இருந்தனர் .அவர்களிடையே வீரேந்தருக்கு இருந்த மரியாதை சாத்வகாவை ஆச்சரியப்படுத்தியது .

மூன்று முறை பாகிஸ்தான் எல்லைக்குள் தைரியமாக நுழைந்து அவன் கொன்ற பாகிஸ்தான் வீர்ர்களின் எண்ணிக்கையை ராணுவ ஜெனரல் சொல்லிக் கொண்டிருந்தார் .” அதெப்படி பக்கத்து நாட்டுக்குள் அவர்களறியாமல் நுழைவீர்கள் …? ” ராணுவ ஜெனரலிடம் ஆங்கிலத்தில் பேசினாள் .

” இதை ஏன்மா என்னிடம் கேட்கிறாய் …? இந்த கில்லாடித்தனமெல்லாம் உன் கணவன் மட்டுமே அறிந்த விசயம் .எனக்கு எதுவும் தெரியாது …” வெடிச்சிரிப்புடன் அவர் கூற , கணவனை பார்த்தாள் சாத்விகா .

” இரு நாட்டு எல்லைகளுக்குமிடையே சில குறிப்பிட்ட பலவீனமான பகுதி உண்டு ்அதன் வழியாக போவோம் …” பதிலளித்தான் வீரேந்தர் .

” எவ்வளவு இலகுவாக சொல்கிறார் பாருங்கள் ,இந்த ட்ரிங்க்ஸை குடிப்பது போல் அவ்வளவு எளிது உங்கள்  கணவருக்கு  நம் எதிரி நாட்டுக்குள் நுழைவது ….” சொன்னபடி ஜெனரலின் மனைவி ட்ரிங்ஸ் கிளாஸ் ஒன்றை வீரேந்தரிடம் எடுத்து கொடுத்தாள் .அதனை வாங்கிய வீரேந்தரை முறைத்தாள் சாத்விகா .

மனைவியின் முகத்தை பாராமல் ஒரு சிப் பருகிய வீரேந்தர் இன்னொரு க்ளாஸை எடுத்து அவளிடம் நீட்ட , இவனை அடித்து இங்கிருந்து இழுத்து போனால் என்ன …என யோசிக்க தொடங்பினாள் சாத்விகா ்அவளது முகத்திலிருந்தே அவள் எண்ண ஒட்டத்தை உணர்ந்தவன் ….

” ஒரு டீச்ன்ஸிக்காகவேனும் கையில் சும்மா வாங்கி வைத்துக் கொள் பேபி .இல்லாவிட்டால் நன்றாயிராது …” என்றவனை சரிதான் போடா பார்வை பார்த்துவிட்டு

” சாரி …ஐ டோன்ட் ….” நிர்தாட்சண்யமாக மறுத்தாள் .ஆச்சரிய பார்வையுடன் நகர்ந்தாள் ஜெனரலின. மனைவி .

” யோவ் இடுப்பில் துப்பாக்கி சொருகி வைத்திருக்கிறாய் .அது எனக்கு தெரியும் .லிமிட்டோடு நிறுத்தி விட்டு காலாகாலத்தில் இங்கிருந்து கிளம்பவில்லையென்றால் புருசன்னு பார்க்காமல் அந்த துப்பாக்கியை உருவி உன்னை சுட தயங்கமாட்டேன் …” அடிக்குரலில் கணவன் மேல் காதலாக சாய்வது போல் சரிந்து எச்சரித்தாள் .

விஸ்கி புரையேற ” அடிப்பாவி கொலைகாரி …உனக்கு போய் பச்சை புள்ள பட்டம் கொடுத்தாங்களே எல்லோரும் …” புலம்பினான் .

” புலம்பாமல் டக்குன்னு கிளம்புய்யா …” மிரட்டிக் கொண்டிருந்தவளின் தோள்களில் ஒரு கை பற்றியது .திரும்பி பார்த்தாள் .புன்னகையோடு நிரஞ்சனா நின்றிருந்தாள் .

” எப்படி இருக்கிறாய் சாத்விகா …? “

” அம்மா …நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் …? கல்யாணத்தின் போது உங்களை பார்த்தது .அதன் பிறகு ஒருநாள் கூட என்னை பார்க்க வரவில்லையே ….” குறைபட்டாள் .

” வாங்க மேடம் , கொஞ்ச நேரம் இவளை அந்த பக்கம் இழுத்து போங்களேன் .என்னை சுதந்திரமாக மூச்சு கூட விட மாட்டேனென்கிறாள் …” வீரேந்தரின் குற்றப்பத்திரிக்கைக்கு நிரஞ்சனா சிரிக்க சாத்விகா முறைத்தாள் .

” நான் பார்த்து கொள்கிறேன் கேப்டன் .என்னுடன் வா சாத்வி .நான் சில முக்கியமானவர்களை அறிமுகம் செய்கிறேன் …” சாத்விகாவின் கையை பிடித்து இழுத்து போனாள் நிரஞ்சனா .

நிரஞ்சனாவை தொடர்ந்து சாத்விகா மெல்ல பெண்கள் கூட்டத்திற்குள் இணைய ஆரம்பிக்க , அங்கேதான் அவள் பிரேமலதாவை சந்தித்தாள் .

தன்னை டாக்டரென அறிமுகப்படுத்தி கொண்ட  அந்த பிரேமலதா சாத்விகாவை நிறைய குழப்பினாள் .

What’s your Reaction?
+1
19
+1
10
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!